Karim74's Weblog

my articles

Master health checkup

*மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*
நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?

இல்லையா? 
எப்படி தெரிந்து கொள்வது?
“மாஸ்டர் செக்கப்” செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!
பரிசோதனை செய்வது என்பது 

“சொந்தக்காசில் சூனியம்” வைத்துக்கொள்வது போன்றது. 

நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை, 
“நீ நோயாளிதான்” என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும் 

“தந்திர வியாபார வலை” தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது. 
அல்லது,

“அப்படியிருக்கும், இப்படியிருக்கும்” 

என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது. 
நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.
இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்

(most affected victims)
நன்கு படித்தவர்கள்(?),

பணம் படைத்தவர்கள்(double income),

புகழடைந்தவர்கள்.
எப்படி?
ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.

*சர்க்கரை நோய் ரீடிங் 80/140, 

*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120, 

*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,

*கொழுப்பு அளவு,

*உப்பு அளவு

பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.
இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.
இத்தகைய “ரீடிங்குகள்” நவீன விஞ்ஞானத்தின் “நன்கொடைகள்”. 
Our Body mechanism is beyond சயின்ஸ். 
நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.

ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.
*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*

*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*
உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,

*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,

*வெவ்வேறு உணவு பழக்கம்*,

*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,

*வெவ்வேறு கலாச்சாரம்*,

*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன!
*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.
அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.
அப்படியானால், “உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்”, 

என்று ஆங்கில மருத்துவ உலகம், “அடம் பிடிப்பது” எப்பேற்பட்ட “முட்டாள் தனம்”. இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய “அறியாமை”.
எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும் 

“Master check-up”

என்பது இந்த நூற்றாண்டின் 

“மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி”.
அப்படியானால், 

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது, 

எப்படி தெரிந்துக் கொள்வது? 

வரும் முன் காப்பது எப்படி? 

இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?

என உறுதி செய்துகொள்ளுங்கள்.
1. தரமான பசி.

2. தரமான தாகம்.

3. தரமான தூக்கம்.
“தரம்” என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், “நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்” என உறுதி செய்து கொள்ளலாம்.
படித்தில் உணர்ந்தது 
சிந்திப்பவர் மட்டுமே…..

அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,

விடுதலை பெறுவர் … !!!

Kutti kadhai

🤔🤔🤔

குட்டி கதை..!!
ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..
அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..
ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்..
நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி..
மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்..
நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்..
வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!!
😜😜😜
கொய்யால!!
உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்..

இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!???

😱😱😱
மந்திரவாதி ஒரு டம்ளர் நீரை

கவிழ்த்து அதிலிருந்து ஒரு

கைக்குட்டை வர வைத்தான்….
கூட்டத்தில் இருந்த எல்லோரும்

அதிசயத்துடன் கைத்தட்டினர்…
ஒருவர் மட்டும் கைத்தட்டாமல்

உம்மென்று இருந்தார்…
அவரிடம் சென்று, “நீங்க ஏன் சிரிக்கல, உம்மென்று இருக்கீங்க” என்று கேட்டார்…
அதற்கு அவர், “இது ரொம்பவே சாதாரணம்… 
நீ ஒரு டம்ளர் தண்ணீல ஒரு கைக்குட்டை தானே எடுத்தாய்.. 
என் பொண்டாட்டி ரெண்டு சொட்டு கண்ணீருல 

*ஒரு பட்டு புடவையே*

எடுத்துடுவாடா.
புரிஞ்சுக்கடா…

‘பொண்டாட்டிடா’…”

Ooo

0

Kongu area words

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது.
1. பொழுதோட – மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)
2. கோழி கூப்பிட – அதிகாலை நேரம்
3. பொறகால – பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)
4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]
5. அம்மணி – பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை.
6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்)

வெடுக்குன்னு – விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்)
7. என்றது – என்னுடையது.
8. உன்றது – உன்னுடையது.
9. அப்பச்சி- தாய்வழி தாத்தா
10. அப்பாரு- தந்தை வழி தாத்தா.
11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி
12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி
13. விசுக்குன்னு – திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்)
14. நடவை – வெளிப்புறக் கதவு
15. வட்டல்- தட்டு
16. நருவசா- முழுவதுமாக
17. ஸோலி- பணி (கானங்காத்தால கடை கடையா என்ன ஸோலி உனக்கு?)
18. மடார் – உடனடியாக (ஒரு வேலையச் சொன்னா மடார்ன்னு முடிச்சுட்டு வேற ஸோலியப் பாரு)
19. மோந்துட்டு – மொண்டு (குடுவையில் நீர் மொண்டு வருதல்)
20. ஒட்டுக்கா – இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க – இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
21. மொளவு சாறு- மிளகு சாறு என்பதன் மாறுபாடு (அசைவக் குழம்பைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது)
22. எகத்தாளம் – திமிரு/ நக்கல் (பெரியவங்க கிட்ட எகத்தாளமா பேசாதே)
23. இட்டாரி/ இட்டேரி – தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை)
24. அவுறு – அவிழ்த்தல் (கயிற்றை அவிழ்த்து விடு)
25. அவத்தைக்கு – அங்கே
26. இவத்தைக்கு – இங்கே
27. சலவாதி – மலம்.
28. போச்சாது- “பரவாயில்லை விடு” என்பது போல (ஏதாவது பொருள் தொலைந்து விடும் பட்சத்தில் போச்சாது விடு என்று ஆறுதல் படுத்துவார்கள். போய்ச் சாகிறது என்ற சொல் இப்படி மாறி இருக்கலாம் என்பது என் தீர்மானம்)
29. போசி- பாத்திரம்
30. அலுங்காம -அசைக்காமல் (போசிய அலுங்காம எடுத்துட்டு வா – பாத்திரத்தை அசைக்காமல் எடுத்து வா)
31. சிந்திடாம – உதிராமல்/கீழே கொட்டாமல் (அரிசி சிந்தாம அள பார்க்கலாம்)
32. மலக்காகிதம் – மழைக்காகிதம் – பாலிதீன் காகிதம்
33. பொறவு – அப்புறம். (கடைக்கு பொறவு போறேன்)
34. வெசனம் – வருத்தம்/சோகம் (ஏண்டா அவன் வெசனம் புடிச்சு உக்காந்திருக்கான்?)
35, 36. கருமாந்திரம் – கருமாதி என்பதாக இருக்கலாம். பிடிக்காத ஒரு நிகழ்வில் கருமாந்திரம், கெரகம் என்ற இரண்டு சொற்களும் அடிக்கடி உபயோகிக்கப் படும். (கருமாந்திரம் புடிச்சது)
37. பொசுக்குனு – சடக்கென்று (இவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்)
38. பொக்குன்னு – வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை பொக்குன்னு போயிடும்)
39. பவுடு- கீழ் அன்னம் (லோலாயம் பேசாதடா. பவுட பேத்துடுவேன்)
40. தாவாக்கட்டை- கீழ் அன்னம்.
41. சீவக்கட்டை- விளக்குமாறு
42. கூமாச்சி- கூர்மையாக
43. தொறப்பு – பூட்டு
44. தொறப்புக் குச்சி – சாவி
45. மண்டு விடுதல்- சிறுநீர் கழித்தல்
46. மொடக்கடி – மொடக்கடி பண்ணாதே – இடக்காகச் செய்யாதே
47. ரவுசு – ரகளை என்று பொருள் படும் சொல்
48. பண்ணாடி — கணவர்
49. பண்ணாட்டு — ruling , power / வெட்டிப் பண்ணாட்டு — useless show of power
50. வெருசா — சீக்கிரமாய்
51. சாளை (லை) — farmhouse usually in the middle of the farm
52. நடுவலவன் — brother in between
53. பண்ணாமை (பண்ணாம) – நிலத்தில் பயிரிட்டிருப்பது.
54. மறுக்கா – மறுபடியும்.
55. ஒறம்பற – உறவின் முறை
56. சீசா – பாட்டில்
57. எத்தாசோடு – எவ்வளவு பெரிசு
58. நங்கையா – நாத்தனார்
59. பொடனி – பின்கழுத்து
60. நோம்பி (நோன்பு என்பதன் மருஉ) – பண்டிகை
61. எசகடம் = நேர்த்திக்கடன்
62. அக்கப்போர் — தொந்தரவு / pestering
63. திருவாத்தான் — கோமாளி / Jocker
64. குரவளை – தொண்டை
65. எச்சு – அதிகம்
66. முக்கு – தெருமுனை

தண்ணீரை வீனாக்காமல் சேமிப்பதும் ஒரு பொதுசேவையே


பள்ளிகளின் ஒழூ செய்யும் நீரின் அளவு ஒரு பள்ளியில் வக்த்துக்கு – 200 முதல் 500 லிட்டர்கள் வரை ஒழூநீராக வெளியேறுகிறது. 5 வேளை ஒதுநீர் 2500 லிட்டர் வரை சாக்கடையில் கலக்கிறதை பாருங்கள்.

மொத்தம் – 20 பள்ளிகள் என கணக்கு வைப்போம். 20× 2500 – 50000 லிட்டர் அப்படியே சாக்கடையில் கலந்து வீனாகிறது…

உடனடியாக ஜமாஆத்தார்கள், பள்ளிநிர்வாகிகள் இனைந்து இதுபற்றி ஆலோசித்து – பொதுமக்களின் தொழூகைபள்ளியின் ஒது நீரை வீனாக்காமல். அந்தந்த பள்ளியில் சேமிப்பு தொட்டி அமைத்து #நிலத்தடி நீராக. பயன்படுத்த முயற்ச்சிக்க வேண்டுகிறோம்.

தண்ணீரை வீனாக்காமல் சேமிப்பதும் ஒரு பொதுசேவையே – அல்லாஹ் இந்த செயலுக்கும் நிறைய கூலியை தருவான்.

ஒது நீரை – நிலத்தடிநீராக சேமித்து அதன் அருகில் ஒரு மரத்தை நடுவோம். தண்ணீர் அப்படியே பள்ளிவாசலின் ஆழ்துளைக்கு செல்ல வழிவகை செய்வோம். இல்லையேல் ஒரு – சிறிய கிணற்றை உருவாக்க முயற்ச்சிப்போம்.

நமதூரில் #தண்ணீர் #பஞ்சம் மோசமாக உள்ளது. இன்னும் 3 மாதத்தை கடக்க வேண்டியுள்ளது.

எனவே நமதூர் ஜமாஅத்தார்கள் ஒன்றினைந்து ஆலோசித்து திட்டவடிவம் செய்து களம் இறங்கி பயன்கொடுங்கள்.

( இந்த முறையை தமிழகத்தின் அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைமுறைப்படுத்தலாம்…)

💧💧💧 தண்ணீரை பாதுகாப்பாய் சேமிக்க முயல்வோம் 💧💧💧

ஏழு விதமான ஆச்சரியங்கள்

✅ ஏழு விதமான ஆச்சரியங்கள்

1. மரணம்என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை
அறிந்த மனிதர்கள்,
கவலைப்படாமல்,
தன் கடமைகளச்
செய்யாமல்
சிரித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம்…

2. ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், உலகத்தின்மீது
மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்…

3. எந்த ஒரு செயலும்
இறைவன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன்,
கைநழுவிச் சென்றவற்றை
எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்…

4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை
நம்புகின்ற மனிதன்,
அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்…

5. நரக நெருப்பின் வேதனை பற்றி அறிந்த மனிதன்,
அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பாவம், தவறு செய்வது ஆச்சரியம்…

6. இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை
நிறை வேற்றுவது ஆச்சரியம்…

7. சுவர்க்கத்தைப் பற்றி அறிந்த மனிதன், உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது
ஆச்சரியம்…!

ஆச்சரியம்…!✅
ஆச்சரியம்…!✅
ஆச்சரியம்…!✅ 😳

#தர்மராஜா_தலைகுனிந்தார் !!!
பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள். தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.
எனவே அவர் தர்மருடன் மலைநாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அவ்விட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள். தர்மர் அவளிடம், “தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்துவிட்டீர்களே,” என ஆச்சரியமாகக் கேட்டார்.
அதற்கு அந்த பெண்மணி, “”எங்கள் நாட்டில் ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுமுறை பயன்படுத்துவதில்லை,” என அலட்சியமாக சொல்லிவிட்டு போய்விட்டாள். அந்நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன்.

அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர். கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி, “இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்,” என்றார்.
மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை. “கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை.

எல்லோரிடமும் செல்வம் குவிந்துகிடக்கிறது. எனவே “பிச்சை’ என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் “தர்மம்’ என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை.
எனவே அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை. இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவே தான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர். இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப்பார்க்க வெட்கப்படுகிறேன்,” என்றார்.
தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலைகுனிந்தார் தர்மராஜா. 
“தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலைகுனியத்தான் வேண்டும்.”
#படித்ததில்_பிடித்தது.

உண்மை காதல் ( I LOVE YOU ) – நகைச்சுவை கதை 2016

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, ” நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக “I LOVE YOU” என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.
ஒரு பெண்… இன்று என்று கூறினாள்

அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்
ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
நடுவர் : ” நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு “I LOVE YOU” என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது” என்றார்.
ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
மெசேஜ்க்கு வந்த பதில்கள்
நபர் 1 : அன்பே…. உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??
நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..
நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???
கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
நபர் 11 : யார் இது… என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
-படித்ததில் ரசித்தது.

Post Navigation

%d bloggers like this: