Karim74's Weblog

my articles

Archive for the category “Uncategorized”

Nanban

என் சொந்த பைக்ல் முதல் பயணம் அம்மா- நான் உக்கார மாட்டேன் பயமா இருக்கு தங்கை _ஒட்ட தெரியுமா டா அப்பா _உன் கூட மனுஷன் வருவானா காதலி _ஆக்ஸிடெண்ட் பண்ணிருவியாடா நண்பன் _நீ ஒட்டு டா மச்சான் செத்தா ஒண்ணாக சாகலாம் அம்மா _எழும்பு அப்பா _முளை சீஸ்டர் _கண் பிரதர் _கை சொந்தக்கார்கள் _விரல்கள் காதலி _இதயம் நண்பர்கள் _ரத்தம் #இனிய_மாலை_வணக்கம்_all_my_friends

பஞ்ச ரோடு …..

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா… ???

பஞ்ச ரோடு …..
என்று சொல்லுவார்கள் …!!!

பஞ்ச ரோடு – என பெயர் வர காரணம் என்ன தெரியுமா .?

1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான பஞ்சத்தின் போது அப்போதைய வெள்ளைக்காரன் தோராய கணக்குப்படி சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் …

அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக் கொண்டானாம் …

வெளிநாடுகளில் இருந்து கப்பல்
கப்பலாய் உணவு தானியங்களை கொண்டுவந்து
இறக்கியும் பஞ்சம் தீரவில்லை

எங்கு பார்த்தாலும் பசி பட்டினி …
மரண ஓலங்கள் …

அந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரன், உணவு தானியங்களை விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும் மக்களை வைத்தே அந்த சாலையை அமைத்தானாம்.

ரோடு போட போறவங்களுக்கு கூலியாக ஒரு குவளை அரிசி கஞ்சி குடுப்பானாம் ….

அதனாலதான் அந்த
(திருச்சி – சென்னை) ரோட்டுக்கு…. பஞ்ச ரோடு…. அப்புடின்னு பேரு வந்துச்சாம் ….

அப்போதைய மக்கள் தொகை பதினேழு கோடி மட்டுமே … இப்போ நூத்தி இருபது கோடிக்குமேல் …

அதே பஞ்சம் இப்போ வந்தா என்ன ஆகும் … ???

அப்போ இருந்த வெள்ளைக்காரன் வெளிநாடுகளில் இருந்து தானியங்களை கொண்டு வந்து இறக்கினான் …

இப்போ நமக்கு எந்த நாட்டுக்காரன் தானியம் குடுப்பான்

சீனா காரன் காசு வாங்கிகிட்டு பிளாஸ்டிக் சாமான் குடுப்பான்.

அமேரிக்கா காரன் காசு வாங்கிகிட்டு கோகோ கோலா குடுப்பான்.

யாராவது அரிசி
குடுப்பானுங்களா …. ???

முகநூலில் நண்பர்கள் எல்லாரும் பசி பட்டினி பஞ்சம் என்றால் சோமாலியாவைதான் சுட்டி காட்டுகின்றனர்…..

வெளிநாட்டுகாரன்…. பசி, பட்டினி, ஏழை, பஞ்சம் …. இவைகளுக்கு இந்தியாவை மட்டுமே உதாரணமாக சொல்கிறான்… என்பது உங்களுக்கு தெரியுமா… ???

இப்போது உங்கள் கண்களுக்கு கோமாளிகளாக தெரியும் விவசாயிகள் ஒவ்வொருவரும் அப்போது தெய்வமாக தெரிவார்கள்.

நம் நாட்டில் பசுமை அழிக்கப்படுகிறது என்று சொல்வதை விட….

நம் நாடு அழிக்கப்படுகிறது என்றே சொல்லலாம் ….

அரசு விதி முறைகளின்படி குறிப்பாக தஞ்சை மாவட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படக்கூடாது.

அப்படியே மாற்றினாலும், வீட்டு மனைகளாக மாற்றப்படும் நிலங்கள் ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலங்களாக பல வருடங்கள் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படாமல் இருந்திருக்க வேண்டும்….

அப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்கு முன் நெல், கரும்பு, எள், வாழை, உளுந்து முதலியன சாகுபடி செய்யப்பட விவசாய நிலங்கள் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள …

தஞ்சை மாவட்டம், திருவையாறு, திரு அய்யாறு அப்பர் கோவிலுக்கு வடக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் விலாங்குடிக்கு அருகில், தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் சாலையை ஒட்டி, நெல், கரும்பு சாகுபடி செய்யும் விவசாய விளை நிலங்களில் திடீரென தோன்றியுள்ளது …..ஹாஜீரா நகர்…..

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம், தஞ்சை மாவட்டத்தில் அதுவும் ஐந்து ஆறுகள் பாய்ந்து முப்போகம் நெல் விளைச்சலில் முதலிடமாக இருக்கும் திருவையாறு பகுதியில், பொன் விளையும் பூமியில் வீட்டுமனை போட வேண்டிய அவசியம் என்ன …. ???

முக்கிய அரசியல் பிரமுகரின் பினாமி ஒருவரால், ஒரு ஏக்கர் ஒரு கோடி ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டு சுமார் இருநூறு ஏக்கருக்கு மேல் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.

திருவையாறு தாலுக்கா ஆபீசில் உள்ள அரசு அதிகாரிகள் கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு
அரசு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியுள்ளனர்…

இது போன்ற நிகழ்வுகள் உடனடியாக தடுக்கபடவில்லை எனில் அடுத்த பஞ்சத்தின்போது பசி பட்டினியால் சாகும் மக்களின் எண்ணிக்கை பத்து கோடியாக இருக்கும் …

பஞ்சம் என்று ஒன்று வந்துவிட்டால் நம் பிள்ளைகள் நம் முன்னே பசியால் செத்து மடியும் கோரக்காட்சிகள் அரங்கேறும் என்பதை மறவாதீர்….

நாட்டையே கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்து
வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், அவர்களுடைய பினாமிகளும் அப்பொழுது வெளிநாட்டில் செட்டில் ஆகி ஒய்யாரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ….

அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை மனதில் வைக்கவும் …

இதை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தயவுசெய்து யோசித்து உங்களால் முடிந்த செய்தி பரிமாற்றத்தை(SHARE) நமது சமூகத்திற்கு செய்யலாமே….

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செய்தி பரிமாற்றமும் (SHARE) நம் நாட்டையும், நம் நாட்டு விவசாயத்தையும் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..
—Be Feel positive…..

குறைந்தபட்சமாவது செயல்படு என் இனமே!

Is a woman

W*Who is a woman?????*
*When she is quiet, millions of things are running through her mind. When she stares at you, she is wondering why she loves you so much in  spite of being taken for granted. When she says I will stand by you, she will stand by you like a solid rock. Never hurt her or take her for granted. A very heart touching message by a woman. Someone asked her, Are you a working woman or a housewife? She replied: Yes, I am a full-time working housewife. I work 24 hours a day. I’m a Mum. I’m a Wife. I’m a Daughter. I’m a Daughter-in-law. I’m an Alarm clock. I’m a Cook. I’m a Maid. I’m a Teacher. I’m a Waitress. I’m a Nanny. I’m a Nurse. I’m a Handywoman. I’m a Security officer. I’m a Counsellor. I’m a Comforter. I don’t get holidays. I don’t get sick leave. I don’t get day off. I work through day and night. I’m on call all hours and get paid with a sentence. “What Do U Do All Day??”*    

 

*This Is Dedicated to all women*
 *A Woman has the most unique character like salt! Her presence is never remembered, but her absence makes all the things tasteless. Pass it to all the lovely ladies…Ur Mother. Ur Wife. Ur daughter. Ur sister & Ur friend. Forward to every woman to make her smile and to every man to make him realize a woman’s Worth.*

குட்டிக்கதை.

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை…..!

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை
கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் ஆண்டு திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
“நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது.
அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம். அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, “இது தான் உனக்கு முதல் முறை” என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு “இது தான் உனக்கு இரண்டாம் முறை” என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். “ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா?” என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, “இது தான் உங்களுக்கு முதல் முறை” என்றாள். அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.

நீதி:

இப்படிதான் பல ஆண்களின் வாழ்க்கை அமைதியாக செல்கிறது இக்கதை அனைத்து ஆண்களுக்கும் சமா்ப்பணம்.

640769a8-6142-4ba5-a2f4-99ace60cc12c.jpg

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை…..!

குட்டிக்கதை.

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை…..!

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை
கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் ஆண்டு திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
“நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது.
அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம். அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, “இது தான் உனக்கு முதல் முறை” என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு “இது தான் உனக்கு இரண்டாம் முறை” என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். “ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா?” என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, “இது தான் உங்களுக்கு முதல் முறை” என்றாள். அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.

நீதி:

இப்படிதான் பல ஆண்களின் வாழ்க்கை அமைதியாக செல்கிறது இக்கதை அனைத்து ஆண்களுக்கும் சமா்ப்பணம்.

தேவாம்ருதம்.

A touching story in today’s Dinamani magazine

தேவாம்ருதம்.
********
அவசியம் படிக்க வேண்டிய பாசக்கதை👍👍

காய்ச்சிய பாலில் புத்தம் புதிதாக இறக்கிய டிக்காஷனையும் சுகர் ஃப்ரீயையும் கலந்து ஆவி பறக்க, மணக்க மணக்க காபியை மாமனார் எதிரே இருக்கும் டீப்பாயில் கொண்டு வந்து வைத்தாள் காயத்ரி.
ஆவி பறக்கும் அந்தக் காபியை ரசித்துச் சுவைத்தபடியே அன்றைய செய்தித் தாளில் மூழ்கி விடுவார், எழுபத்து ஐந்து வயதைக் கடந்துவிட்ட வெங்கட்ரமண தீட்சிதர்.

அதன் பிறகு அவரது மருமகளான காயத்ரியின் கைக்காரியங்கள் அத்தனையும் சாட்டையிலிருந்து விடுபட்ட பம்பரம்தான்!

விஷ்ணு சகஸ்ரநாமத்தையோ, கந்த சஷ்டி கவசத்தையோ ஜெபித்தபடி, முதல் நாள் மாமனார் கொடுத்த லிஸ்ட் பிரகாரம் சாம்பார், ரசம், பதார்த்தங்களை மணக்க மணக்கச் செய்து, பத்து அல்லது பதினோரு மணி அளவில் மாமனார் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு, சாப்பிடக்கூடிய அளவிற்கு ஹாட் பேக்கில் எடுத்து வைத்துவிட்டு, அதேபோன்று இன்னொரு ஹாட் பேக்கில், அடுத்த தெருவில் குடியிருக்கும் கிட்டத்தட்ட எழுபது வயது நிரம்பிய தனது தாயார் மீனாட்சியம்மாளுக்கும் எடுத்து வைத்துக்கொண்டு, தானும் ஒரு கவளம் வாயில் போட்டுக்கொண்டு, மதியம் சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு டிபனையும் டப்பாவில் போட்டுக்கொண்டு அலுவலகம் கிளம்பும்போது காலை மணி சரியாக ஒன்பது ஆகிவிடும்!

இதற்கிடையே ஐந்து வயது நிரம்பிய தனது குழந்தை பவித்ராவை எழுப்பி அவள் காலைக் கடன்களை முடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, அன்றைய பாடத்தைப் படிக்க வைத்து, சீருடையை அணிய வைத்து எட்டரை மணிக்கு வரும் பள்ளிப் பேருந்தில் அனுப்பி வைத்தாக வேண்டும்!

இடையில் அம்மாவிற்காக தயார் செய்த உணவை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, அவசர அவசரமாக, அலுவலகம் நோக்கிப் பறந்தாக வேண்டும்!

மனைவியை இழந்த வெங்கட்ரமண தீட்சிதர் ஒருபுறம், கணவனை இழந்த மீனாட்சியம்மாள் ஒருபுறம்! அமெரிக்காவில் வேலை பார்க்கும் காயத்ரியின் கணவனும், வெங்கட்ரமண தீட்சிதரின் மகனுமாகிய பாலசுப்ரமணியன் ஒருபுறம், காயத்ரியின் ஒரே மகள் பவித்ரா ஒருபுறம், இவர்களுக்கு மத்தியில் எந்தவித சலனமோ சலிப்போ இல்லாமல் சந்தோஷமாகவே தனது வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி!
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எப்போதும்போல, அன்றும் காயத்ரி தன் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டாள்.

அவள் விடை பெற்றுச் சென்ற அடுத்த கணமே வெங்கட் ரமண தீட்சிதர் தன் இருக்கையை விட்டு எழுந்தார். ஸ்நானம் செய்தார். அன்றாட அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டார். காயத்ரி மந்திரத்தை ஜெபித்தபடி வெகுநேரம் இறைவன் முன்னால் இரு கரங்களையும் கூப்பியபடி தியானித்தார். பிறகு தன்னையும் அறியாமல் இறைவனிடம் இறைஞ்சினார்!

“இறைவா நான் உன்னிடம் பெரிதாக என்ன வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விட்டேன்? வீடு வாசல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா? நிலம் நீச்சு வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா? காசு பணம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா? எதுவுமே பெரிதாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவில்லையே இறைவா! நான் பெற்ற என் மகனுக்கு சரஸ்வதி கடாஷத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய். நல்ல உத்யோகத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய்! நல்ல சம்பாத்யத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய்! நல்ல புத்தியைக் கொடு என்று கேட்டேன். கொடுக்காமல் போய் விட்டாயே இறைவா! நான் என்ன பாவம் செய்தேன் இறைவா? ஸ்ரீவித்யா உபாசகனான எனக்குப் போய் ஏன் இந்த சோதனை இறைவா?

முதல் நாள் அமெரிக்காவிலிருந்து அவரது மகன் அனுப்பிய ஓர் இ.மெயிலைப் பார்த்துத்தான் அவர் இறைவனிடம் அந்தக் கதறு கதறினார்!

அன்புள்ள அப்பாவிற்கு,

நமஸ்காரம். இன்னும் மூன்று மாதத்தில் நான் சென்னை வர உள்ளேன். அதற்கு முன்னால் சில காகிதங்களை அனுப்பி வைக்கிறேன். அதில் காயத்ரியைக் கையெழுத்துப் போட்டுத் தயாராக வைத்து இருக்கச் சொல்லவும். அது வேறொன்றும் இல்லை. எங்களது விவாகரத்துப் பத்திரம்தான்! ஆம். இனிமேலும் அவளோடு சேர்ந்து வாழ என்னால் இயலாது. நான் எத்தனையோ முறை அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லிவிட்டேன். குழந்தையை அழைத்துக்கொண்டு நீயும் அமெரிக்காவிற்கு வந்து விடு. நாம் இருவரும் சேர்ந்தே இங்கு குடும்பம் நடத்தலாம். என் அப்பாவையும் உன் அம்மாவையும் ஏதாவது ஓர் உயர்தர முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால் அவள் பிடி கொடுத்து பேசவே மாட்டேன் என்கிறாள். இனிமேலும் என்னால் இங்கே தனியாக வாழ முடியாது. ஒன்று அவள் இங்கே வர வேண்டும். இல்லை அவள் என்னை விவாகரத்து செய்துவிட வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தே ஆக வேண்டும். அவள் அங்கு இருக்கும்பட்சத்தில் அவள் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அநேகமாக அவள் அதைத்தான் விரும்புகிறாள்போலும். குழந்தையை அவள் இஷ்டப்படி அவளே வைத்துக்கொண்டாலும் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. நானும் இங்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகிறேன்! இதை அவளிடம் கறாராகச் சொல்லி விடுங்கள். நான் அங்கு வரும்போது இரண்டில் ஒன்று முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இப்படிக்கு
பாலு.

இப்படிப்பட்ட செய்தியைப் படித்துவிட்டுத்தான் மனம் பதைபதைத்துப் போனார் வெங்கட்ரமண தீட்சிதர்.
அதனால்தான் இறைவனிடம் கத்தினார்; கதறினார். நேரம் போவதே தெரியாமல் இறைவன் முன் அமர்ந்து அழுதார், புலம்பினார்!

உணவை மறந்தார். உறக்கத்தை மறந்தார். தன்னை மறந்தார். அமர்ந்தது அமர்ந்தபடி அங்கேயே இறைவனோடு இறைவனாக லயித்துவிட்டார்!

மாலை காயத்ரி வீடு திரும்பினாள். மாமனார் பூஜை அறையிலேயே அமர்ந்து இருப்பதைக் கண்டு திடுகிட்டாள். சாப்பாடு வைத்தது வைத்தபடி இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள்!

“என்னப்பா, உடம்பு சரியில்லையா? சாப்பிடக்கூட இல்லையே!” எனக் கூறியபடியே, அவர் அருகில் சென்றாள்.

“ஒன்றுமில்லையம்மா” எனக் கூறியபடியே மெல்லத் தடுமாறியபடியே எழுந்தார்!

அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்தாள் காயத்ரி. உடம்பு லேசாகச் சுட்டது!

“அப்பா, ஜுரம் இருக்கிறது அப்பா! டாக்டரிடம் அழைத்துச் செல்லட்டுமா?”

“அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. கொஞ்சம் படுத்தால் சரியாகிவிடும்!”

“சரி… படுங்கள். இப்போது சூடாக ஒரு காப்பி போட்டுத் தருகிறேன். சாப்பிடுங்கள். ராத்திரி கண்ட திப்பிலி ரஸமும் சுட்ட அப்பளமும் செய்து தருகிறேன் சாப்பிடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்” எனக் கூறியபடியே அவரை மெதுவாக சாய்வு நாற்காலியில் அமர வைத்தாள்.

“ஐயோ, பெற்றெடுத்த மகள்கூட இப்படி தாங்கு தாங்கு என்று தாங்க மாட்டேளே! இந்த மஹாலஷ்மியைப்போய் விவாகரத்து செய்யப் போகிறேன் என்கிறானே! பாவி.. மஹாபாவி” எனத் துடித்துத்தான் போய்விட்டார் தீட்சிதர்!

இரவு சாப்பிட்டுவிட்டு நன்றாகத் தூங்கிவிட்டார்.

மாமனார் மனதை ஏதோ ஒரு விஷயம் சஞ்சலப்படுத்துகிறது என்பதை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டாள் காயத்ரி!

நாள்கள் வேகமாக ஓடின. மூன்று மாதங்கள் ஓட்டமாய் ஓடிவிட்டது! பாலசுப்பிரமணியன் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தான்.

இரண்டு, மூன்று நாள்கள் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை!

நான்காவது நாள் இரவு நேரத்தில் காயத்ரிதான் வலியச் சென்று பாலுவிடம் பேசினாள்.

“பாலு உங்களிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும்”.

“உன்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை! எல்லாவற்றையும் அப்பாவிடம் சொல்லிவிட்டேன். அப்பா உன்னிடம் சொன்னாரா? இல்லையா?”

“அப்பா வாயைத் திறந்து என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், உங்கள் இ.மெயிலை நான் படித்துவிட்டேன்!”

“பிறகு என்ன? நான் அனுப்பிய பத்திரத்தில் கையெழுத்துப் போட வேண்டியதுதானே?”

“போடுகிறேன். ஆனால் அதற்கு முன்னால் ஒரு நிபந்தனை!”

“என்ன?”

“உங்களை விவாகரத்து செய்த பின்னால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதுகுறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால், நம் குழந்தையும் உங்கள் அப்பாவும் என்னோடுதான் இருக்க வேண்டும். உங்கள் அப்பாவை எக்காரணம் கொண்டும் முதியோர் இல்லத்தில் சேர்க்க நான் அனுமதிக்க மாட்டேன்! பத்திரத்தில் இந்த நிபந்தனையையும் சேர்த்து விடுங்கள். இதோ இப்போதே கையெழுத்துப் போட்டு விடுகிறேன். ஆனால், நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இது உறுதி! சம்மதமா?”

“என் அப்பாவைப் பற்றி உனக்கென்ன கவலை?”

“எப்போது உங்களைத் திருமணம் செய்து கொண்டேனோ, அப்போதே உங்கள் அப்பா என் அப்பா ஆகிவிட்டார், உங்கள் விருப்பப்படி உங்களைத்தான் என்னால் விவாகரத்து செய்ய முடியும். உங்கள் அப்பாவைப் போன்ற ஒரு மஹானை என்னால் இழக்க முடியாது! இந்த வயதான காலத்தில் அவருக்குத் துணையாக நான் இருந்துதான் ஆக வேண்டும். அதேசமயத்தில் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்க முடியாது! அதேநேரத்தில் இந்த முதிர்ந்த வயதில் அவர்களை நாம் வெளிநாட்டிற்கும் அழைத்துச் செல்ல முடியாது!

“அதான் அவரை ஓர் உயர்தர முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று சொன்னேனே!”

“பாதுகாப்பாக இருக்கட்டும் என எண்ணி உங்கள் இரு கண்களையும் ஏதாவது ஒரு பேங்க் சேப்டி லாக்கரில் வைத்துவிட்டு, உங்களால் வெளியில் செல்ல முடியுமா?”

“என்ன சொல்கிறாய் காயத்ரி?”

“ஆம். என் அம்மாவும் சரி, உங்கள் அப்பாவும் சரி, எனக்கு இரு கண்கள். அவர்களை வங்கி பேங்க் சேப்டி லாக்கரில் வைப்பதுபோல், ஒரு முதியோர் இல்லத்தில் வைத்துவிட்டு, நாம் வெளியூர் செல்வதை ஒருநாளும் நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் நம் வழிகாட்டிகள்! உயிர் உள்ள ஜீவன்கள்! அவர்கள் எப்போதும் நம் கூடவே இருந்து நம்மை வழிநடத்திச் செல்லக்கூடிய மஹான்கள்! அவர்களைப் போய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு நாம் மட்டும் வெளிநாடு சென்று சுகமாக வாழலாம் என்கிறீர்களே, உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? இந்த அளவுக்கா உங்கள் மனதில் ஒரு சுயநலம் புகுந்து விளையாட வேண்டும்? இப்படியும் ஒரு வெளிநாட்டு மோகமும் பணத்தாசையும் நமக்குத் தேவைதானா?”

காயத்ரி மேலும் தொடர்ந்தாள்…

“எப்பேர்ப்பட்ட மஹான் உங்கள் தந்தை? அப்படிப்பட்டவருக்குப் போய் இப்படி ஒரு இ.மெயிலா? அவர் மனம் என்ன பாடுபட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுநாள்வரை அந்த மஹான் அந்த இ.மெயிலை என்னிடம் காட்டக்கூட இல்லை! அது தெரியுமா உங்களுக்கு? நான்தான் அவர் மனம் படும்பாட்டைப் புரிந்துகொண்டு, அவர் இல்லாத நேரத்தில் அதைப் படித்துத் தெரிந்து கொண்டேன்! கடந்த மூன்று மாதகாலமாக அந்தப் பெரியவர் ஊன் உறக்கமின்றி தவியாய் தவித்துப் போய்விட்டார் பாலு!”

“போதும் காயத்ரி போதும், என்னை மன்னித்து விடு, நான் மகாபாவம் செய்துவிட்டேன்! அப்பாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடுகிறேன். உடனடியாக அமெரிக்கா வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, சென்னையிலேயே செட்டில் ஆக முயற்சி செய்கிறேன். நான், நீ, குழந்தை, என் அப்பா, உன் அம்மா எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கலாம். என்னை மன்னித்து விடு காயத்ரி என்னை மன்னித்து விடு!”

கதவின் ஓரத்தில் நின்று கொண்டு இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார் வெங்கட்ரமண தீட்சிதர்.

“கடவுளே கடந்த மூன்று மாத காலமாக இந்தப் பிரச்னையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தேனே! என் மருமகள் காயத்ரி மூன்றே நிமிடத்தில் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு விட்டாளே! தெய்வமே நான் உன்னிடம் அமுதத்தைத்தான் யாசித்தேன். ஆனால், நீ தேவாமிருதத்தையே கொடுத்துவிட்டாய்! உன் கருணையே கருணை!” உருகித்தான் போய்விட்டார் தீட்சிதர்!
===============
ஷிவ்ராம்

Great writer. Hats off to him.
நட்புடன்.
ச.கணேசன். மதுரை.🙏🏾🙏🏾

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.

கீரை

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான்

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு

அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

பீட்ரூட்
பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.

படித்து விட்டு பகிர்ந்து விட்டால் நலம்…. கடைப்பிடித்தால் மிக்க நலம்..×+®©

வாழ்க்கை வரலாறுகள்

📚📓📚📓📚📓📚📓📚📓📚

வாழ்க்கை வரலாறுகள்
(தமிழ் PDF மின்நூல்கள்)📕

 

1. முஹம்மது நபி ⬇
http://fahim.link/ProphetMuhammad

2. சே குவேரா ⬇
http://fahim.link/CheGuwera

3. தாமஸ் ஆல்வா எடிசன் ⬇
http://fahim.link/ThomasEdison

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ⬇
http://fahim.link/AlbertEinstein

5. பிரபாகரன் ⬇
http://fahim.link/Prabakaran

6. மாவீரன் அலெக்சாண்டர் ⬇
http://fahim.link/Alexander

7. மருதநாயகம் ⬇
http://fahim.link/Marudhanayagam

8. ராமானுஜம் ⬇
http://fahim.link/Ramanujam

9. சுனிதா வில்லியம்ஸ் ⬇
http://fahim.link/SunithaWilliams

10. சதாம் ஹுசைன் ⬇
http://fahim.link/SadhamHussain

11. அறிஞர் அண்ணா ⬇
http://fahim.link/ArignarAnna

12. பெரியார் ⬇
http://fahim.link/Periyar

13. திப்பு சுல்தான் ⬇
http://fahim.link/ThippuSulthan

14. நெப்போலியன் ⬇
http://fahim.link/Nepolien

15. கேனல் கடாபி ⬇
http://fahim.link/Gadafi

16. ஹிட்லர் ⬇
http://fahim.link/Hitler

17. காமராஜர் ⬇
http://fahim.link/Kamarajar

18. கார்ல் மாக்ஸ் ⬇
http://fahim.link/KarlMarks

19. பில் கேட்ஸ் ⬇
http://fahim.link/BillGates

20. பாரதியார் ⬇
http://fahim.link/Bharathiyar

21. பிடல் காஸ்ட்ரோ ⬇
http://fahim.link/FidalCastro

22. ஹெலன் கெல்லர் ⬇
http://fahim.link/HelanKeller

 

👍அறிவைப் பகிர்ந்து கொள்வோம்👍

வருமானம் இல்லை

🌺வருமானம் இல்லை ,இந்த வார்த்தையைச்சொல்லிச்சொல்லி இன்னும் காலத்தை ஓட்டுகின்ற இறைஇல்லத்தின் நிர்வாகிகள்
🌻பல இறைஇல்லத்தின் நிர்வாகிகள் பேசிவைத்தால் போல் எல்லோரும் பேசும் வார்த்தைகளாக மாறி விட்டன
🍀கால மாற்றங்கள் எதுவுமே தெரியாதவர்களும் கடைத்தெரு சென்று பொருள்களை வாங்கி விலைவாசி அறியாத வர்களும் தான் நிர்வாகிகளாக வருகிறார்கள்
🍁நிர்வாகிகளாக வரும் முன் நண்பர்கள் போல் நடந்து கொள்பவர்கள் நிர்வாகத்திற்கு வந்த பின் நடிப்பவர்களாக மாறிவிடுகின்றனர்
🌲பொறுப்பை மனதில் வைக்க வேண்டியவர்கள் தலையில் சுமக்க ஆரம்பித்து விடுவதால் கனம் பொருந்தியவர்களாக ஆகிவிடுகிறார்கள்
🌷பொது சொத்தை தன் சொந்த சொத்தைப்போல எண்ணுவதால் அதிலிருந்து எடுத்து நியாயமான ஊதியம் கொடுப்பதை கூட பாராமாக நினைக்கிறார்கள
🌳நூற்றாண்டு விழா கண்ட அரபிக் கல்லூரிகளில் மாணவர்கள் கம்மியாகி போனதற்கும் ,பல்வேறு அரபிக் கல்லூரிகள் மூடப்படுவதற்கும் முழுக்க முழுக்க காரணம் சமுதாயத்தலைவர்கள் தான்
🌻சமீப காலங்களில் தமிழ் நாட்டில் தமிழ் உலமாக்களை மோதினார்களை நேசிப்பதை விட வடமாநிலத்தவர்களை நேசிக்கும் நேசப்பிறவிகளாக மாறி விட்டனர்
🌹வள்ளலின் வாரிசுகளை வறுமை கோட்டின் கீழேயே வைத்து அழகு பார்ப்பதில் ஆனந்தம் அடையக்கூடியவர்களாக அன்றும் இன்றும் என்றும் மாறாதவர்களாக இருக்கிறார்கள்
🍉தனிநபர் வருமானத்தை பெருக்கத் தெரிந்த இம்மேதைகள் பள்ளிவாசல் வருமானத்தை பெருக்கத் தெரியாமல் பழைய பல்லவியை பாடுவதிலேயே நின்று விடுகிறார்கள்
🌸அடக்கி ஆள்வதிலேயே ஆனந்தம் கொள்கிறார்கள்
🌺கல்வி கற்றவர்களை கண்ணியப்படுத்த தெரியாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் பதவிக்கு வந்து விடுகிறார்கள்
💮சட்டப் பஞ்சாயத்து செய்து வைக்கும் நிலைகளெல்லாம் காணாமல் போய் கட்டப் பஞ்சாயத்து செய்து வைக்கும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு அதே அடாவடி தனத்தை ஆலிம்களிடமும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்
🕯தொழுகையற்றவர்களே பெரும்பாலும் பதவிக்கு வந்து விடுவதால் தீனைப்பற்றி தெரியாமல் மவ்லவிகளின் மகத்துவம் புரியாமல் மல்லுக்கு நிற்கிறார்கள்
📚ஊதியத்தை உயர்த்தி கொடு என்று இதுவரை உலமாக்கள் ஸ்டிரைக் தர்ணா உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் ஊர்வலம் மறியல் என எதுவுமே செய்ததில்லை போராட்டங்களில் நாட்டம் கொண்டதில்லை
🌺🌻🌳ஆனாலும் இனிவரும் காலங்களில்
ஒன்றை கையில் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளி விடுவார்களோ?????

Post Navigation

%d bloggers like this: