Karim74's Weblog

my articles

Slipper == body

*குட்டி கதை*

____________

*ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.*
*ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.*
*அப்போது*

*செருப்பு பிஞ்சுபோச்சு..*

*அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.* 
*அந்த வீட்டுக்காரரை அழைத்து…*
*ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு.*
*புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்…*
*காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.*
*அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.*
*அதற்கு அந்த வீட்டுக்காரர்* 

*அந்த செல்வந்தரைப் பார்த்து…*
*ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.*
*நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.*
*அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்*
*சில ஆண்டுகள் கடந்தன…*
*ஒருநாள் அந்த* *செல்வந்தரே இறந்து போனார்.*
 *அவரின் இறுதி ஊர்வலம்  செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.*
*அப்போது நல்ல மழை.⛈*
*பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று…*
*ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.*
*அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.*

*பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.*
*அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..*
*ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? “மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..*
*[ அவ்வளவுதாங்க வாழ்க்கை ]*

_________________________________
*ஒரு செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது*
*வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்…*
*(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை)*
              👡⚰👟

              —————–

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: