Karim74's Weblog

my articles

பெறுநர்
       உயர்திரு.ஆசிரியர் அவர்கள்,
 
 
பொருள்: இஸ்லாமிய சட்டங்களே எங்களுக்கு பாதுகாப்பானவை.
 
பத்திரிக்கைச் செய்தி
 
       நம் இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை எனும் சிறப்புக்கு பெயர்பெற்ற நாடு. இந்நாட்டில் பல்வேறு மத, இன, குலத்தை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இங்கு வாழக்கூடிய மக்களுக்கு அவர்களின் மதம், இனம், குலம் சார்ந்து சில சிறப்பு சட்டங்களை பின்பற்றுவதற்கு அனுமதியளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக முஸ்லிம்கள் அவர்களின் குடும்பவியல் சட்டங்களை பின்பற்றுவதற்கான அனுமதியினை இந்திய அரசிலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.
 
       திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை ஆகியவற்றை இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பின்பற்றுவதற்கான முழு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு முஸ்லிம்களின் விவாகரத்து சட்டத்தை பூதாகர பிரச்சனையாக மாற்றியுள்ளது. விவாகரத்து சட்டத்தின் மூலம் பெண்கள் மிகப்பெரும் அளவுக்கு பாதிக்கப்படுவதாக பொய்யான பரப்புரையை தேசம் முழுவதும் பரப்பி அதனை விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஜனநாயகத் தன்மைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சித்து வருகின்றது.
 
       இஸ்லாமிய சட்டங்கள் கூறுவதைப் போல் குடும்பவியல் சட்டங்களுக்கான சிறப்புகளை வேறெங்கும் காண முடியாது. குடும்பத்தை மிகச்சிறந்த அளவில் கட்டமைக்ககூடிய சட்டங்கள் இஸ்லாத்தில் காணப்படுகின்றன. அதற்கு உதாரணம் முஸ்லிம்களே. முஸ்லிகளின் திருமணங்களில் வரதட்சணைகள் வாங்கப்படுவதில்லை; மஹர் எனும் பெண்ணுக்கான மணக்கொடையை கொடுத்தே திருமணம் செய்யக்கூடிய சட்டங்களே உள்ளன. விவாகரத்துப் பற்றி இன்று பேசக்கூடிய விவாதங்களும் உண்மைக்குப் புறம்பானவை. முத்தலாக் என்பது மிக மிக இக்கட்டான சூழ்நிலையில், மிக அரிதாக நடைபெறக்கூடிய ஒன்று. முத்தலாக் விவாகரத்து விஷயத்தில் இது ஒரு அம்சமே தவிர, இதுமட்டும் சட்டமல்ல. விவாகரத்து என்பது நீண்ட, நெடிய செயல்பாடு. அதைப்பற்றிய சட்டம் மிகத்தெளிவாகவே உள்ளது. இன்று கூறப்படுவது போல் பெண்களாகிய எங்களுக்கு எதிரானதல்ல; இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கும் விவாகரத்து செய்வதற்கான அனுமதியினை இஸ்லாம் “குலா” எனும் வழிமுறையின் ஊடாக வழங்கியுள்ளது. இதைப் பற்றி ஏன் மோடி
 
 
 
 
பேசுவதில்லை. முஸ்லிம்களில் விவாகரத்துக்கள் மிக குறைவாகவே நடைபெறுகின்றன என்பதனை பிரதமர் மோடி நினைவில் கொள்ளட்டும்.
 
       எங்கோ சில இடங்களில் சட்டங்களை சரியாக பின்பற்றாமல் சில பிரச்சனைகள் எழுகின்றன. அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால் அது இஸ்லாமிய சட்டத்தின் நடைமுறையே அல்ல. அதனை நாங்களும் வன்மையாக கண்டிக்கின்றோம். சட்டங்கள் சிலபோது பின்பற்றப் படாமல் இருக்கின்றன என்பதற்காக சட்டங்களை மாற்ற நினைப்பது எவ்விதத்தில் நியாயம்? அப்படியானால் நாட்டின் பல தலைவர்கள் இந்திய சட்டங்களுக்கு முரணாக நடக்கின்றார்களே அதற்காக நம் நாட்டின் சட்டத்தை மாற்ற முடியுமா?
 
       முஸ்லிம் பெண்களின் விஷயத்தில் இவ்வளவு அக்கறையாக இருக்கும் மோடி அவர்கள் முஸ்லிம்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றி கவலைப்படட்டுமே பார்க்கலாம். எங்கு சென்றாலும் முஸ்லிம்களின் விவகாரத்து பாறிப் பேசும் மோடி அவர்கள் விவசாயிகளின் பிரச்சனையைப் பற்றி வாய்திறக்காததேன்? எங்கள் மீது கவலைப்படுவதற்கு முன்பாக ஜே.என்.யு மாணவர் நஜீப் அவர்களின் தாயார், ரோஹித் வெமுலாவின் தாயார் ஆகியோரின் கண்ணீருக்காக கொஞ்சம் கவலைப்படுங்கள் பிரதமர் மோடி அவர்களே! உங்களின் இந்துத்துவா கொள்கைகளை திணிக்கப் பார்க்கதீர்கள் பிரதமர் மோடி அவர்களே!!! எங்களுக்கு இஸ்லாமிய சட்டங்களே பாதுக்காப்பனவை. வேண்டாம் உங்களின் பொதுசிவில் சட்டம்.
      
       ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த ஒரு மாத காலமாக முஸ்லிம் தனியார் சட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தினை நடத்தி வருகின்றது. இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை குறிப்பாக பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக வருகின்ற மே20 (சனிக்கிழமை) அன்று பெண்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதனை உங்களது மேலான பத்திரிகையில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
நன்றி.
 
இப்படிக்கு,
 
 
 
பெண்கள் அணி பொறுப்பாளர்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
கோவை மாவட்டம்.
   

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: