Karim74's Weblog

my articles

திப்புவின் வரலாற்றிலிருந்து சில:-

வீரசிவாஜியை விட திப்பு பிடுங்கியது என்ன என வினவினார் ஒரு சகோதரர். திப்பு பிடுங்கியதை நான் நடுகிறேன். சிவாஜி நட்டதை நீங்கள் பிடுங்கிக்கொள்கிறீர்களா..?

250 வருட ஆசிய வரலாற்றில் வாளேந்தி அப்போா்கலத்திலேயே வீரமரணம் அடைந்த ஒரே மாமன்னன் “ஷஹித் திப்பு சுல்தான்”. நினைவு நாள் (மே-4)

திப்புவின் வரலாற்றிலிருந்து சில:-
பிறப்பு:- 20 : 4 : 1750
இறப்பு: – 4 : 5 : 1799

போா்களங்களில்: –
உலக வரலாற்றில் ஏவுகனையை முதன் முதலில், நான்காம் மைசூர் போாில் பயன்படுத்தினாா்,
அதன் உதிாிப்பாகங்கள் இன்றும் லண்டனில் ஹூல்விச் கிராமத்தில் ராக்கெட் ஏவுகனை பயிற்சியாளா்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

திப்புவின் ராணுவம் : –
3,20,000 போா்வீரா்களும், தனிப்பட்ட இராணுவமும், போலீசும், 9,00 யானைகளும், 6,000 ஒட்டகங்களும், 25,000அரபிக்குதிரைகளும், 4,00000 மாடுகளும், 3,00000 துப்பாக்கிகளும், 2,20,400 வாட்களும், 929 பீரங்கிகளும் ஏராளமான வெடிமருந்து குவியல்களும் இருந்தன.

திப்புவின் கப்பற்படை: –
60 பீரங்கிகள் ஏற்றககூடிய ஒருகப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒருகப்பல், 2 பீரங்கிகள் ஏற்றககூடிய 20 கப்பலகள், அணிவகுத்து போராடும் 72 கப்பல்கள், 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24ராத்தல் பீரங்கிகள் 30ம், 18ராத்தல் பீரங்கிகள் 30ம், 9ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன. 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரா்கள் இருந்தனா்.

“இன்றைய நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்புசுல்தான்.”

“சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம்” என்று கொக்காித்த ஆங்கிலேயா்களை, கி.பி.1769ல் நிபந்தனையற்ற சரணாகதி அடையச்செய்து “மதராஸ் உடன்படிக்கையில்” கையெழுத்திடவைத்து முதன் முதல் வரலாற்று தோல்வியை ஆங்கிலேயா்களுக்கு கொடுத்தார்.
கி.பி. 1780 ல் ஆங்கிலேய படைத்தளபதி கா்னல் பெய்லியையும்,
கி.பி.1782 ல் பிரிட்டிஷ் தளபதி கா்னல் பிரெய்த் வெயிட்டையும் கைதிசெய்த முதல் இந்திய மன்னன் திப்பு சுல்தான்.
கி.பி. 1783 ல் “பேடனூா்” கோட்டைப்போாில் ஆங்கிலத் தளபதி ஜெனரல் மாத்யூஸ் கொல்லப்பட்டான்.

மதச்சார்பற்ற திப்பு : –
கி.பி. 1771-1772 க்கிடையில் “பரசுராம் பாகுவே” தலைமையில் மராட்டியா்கள் “அன்னை சாராதாதேவி சிலையை” கொள்ளையடித்துச் சென்றதை மீட்டு திரும்பவும் சிருங்கோியில் நிறுவச் செய்தார்.
*சிருங்கோிமடத்தில் ஹைதா் அலியின் சனதுகள் (Grand) மூன்றும் திப்புவின் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சம நீதி மான்யம் : –
மைசூர் ராஜ்ஜியத்தில் 90% இந்துக்கள், 10% முஸ்லீம்கள்.ஒரே ஆண்டில் இந்து கோவில்களுக்கும், தேவஸ்தானங்களுககும் = 1,93,959 வராகன்களும், பிராமண மடங்களுக்கு = 20,000 வராகன்களும், ஆனால் முஸ்லீம்களுக்கு = 20,000 வராகன்கள் மட்டுமே. மொத்தம் 2,33,959 வராகன்கள் அரசு கஜானாவிலிருந்து சமசதவீத அடிப்படையில் வழங்கப்டுள்ளது. ஆதாரம் : -கி.பி.1798. mysore gezeter பக்கம் 38. vol. IV 1929.

=> கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோவிலுக்கு 12யானைகள், தங்க வெள்ளி ஆராதனை பாத்திரம், பாரசீக பட்டயம்.
=> நஞ்சான்கூடு நஞ்சுண்டடஸ்வரா் கோவிலுக்கு மரகதலிங்கம் , இன்றும் “பாஷா லிங்கம்” என்றழைக்கப்படுகின்றது.
=> குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சுற்றியுள்ள நிலங்களில் வாி வசூல் செய்யும் உரிமை
=>காஞ்சிபுரம் கோவிலுக்கு 10,000 வராகன் நன்கொடை.
=> மைசூர் தென்னூாில் இராமானுச குளம் தூா்வார
=> பாபாபுதன்கிாி தத்தாத்ாீய பீடம் 20 சிற்றூா்கள்.
=>புஷ்பகிாி மடத்திற்கு 2 கிராமங்கள்.
இவையாவும் மானியமாக கொடுகௌப்பட்டுள்ளது.

” மைசூர் நூலகத்தில் கோவில்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தின் அரசாணைகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.”

சீர்திருத்தம் : –
மலபாா் பகுதில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தையும்.
ஒரே பெண்ணை பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தையும் தடுத்தாா்,
நரபலியையும் தேவதாசி முறையும் ஒழித்தாா்.
மதஒற்றுமையையும், மதுவிலக்கையும் இருகண்ணாக பாவித்தார்.

“துரோகத்தால் வீழ்ந்த வீரமும் தேசபக்தியும்”
ஆஞ்சி சாமய்யா, திருமால் ராவ் இவர்களின் துரோகத்தால் “பெங்களூர்” கைநழுப்போனது.
கி.பி. 1799 மேமாதம் 4ல் நடுப்பகலில் சாதாரண சிப்பாய் உடையில் 50 வீரா்களுடன் சுட்டுக்கொண்டே முன்னோினாா் அந்நிலையிலேயே நெற்றிப்பொட்டில் குண்டுபாய்ந்து தன் வீரவாளை250 வருட ஆசிய வரலாற்றில் வாளேந்தி அப்போா்கலத்திலேயே வீரமரணம் அடைந்த ஒரே மாமன்னன் “ஷஹித் திப்பு சுல்தான்”. நினைவு நாள் (மே-4) இன்று. நினைவு கூறுவோம்

திப்புவின் வரலாற்றிலிருந்து

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: