Karim74's Weblog

my articles

Archive for the month “May, 2017”

அடப்பாவிகளா   #திருக்குறளையும்   விட்டு வைக்க வில்லையா? 

#அடப்பாவிகளா   #திருக்குறளையும்   விட்டு வைக்க வில்லையா? 
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் திருக்குறள்….!!! 

(MobiKural)
1. செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன், 

அப்போன்  செல்போனில் எல்லாம் தலை… 
2. தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில் 

ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்… 
3. மகன் தந்தைக்காற்றும் உதவி, அப்பாமுன் 

செல்போனை நோண்டாதிருத்தல்… 
4. 2G யினால் ஸ்லோவாகும் டேட்டா, ஆகாதே 3G யில் போட்ட டேட்டா… 
5. உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே 

இடுக்கண் களைவதாம் சார்ஜர்… 
6. பட்டனைத் தடவும் மணற்கேணி, மாந்தர்க்கு

டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு… 
7. முகநக நட்பது நட்பன்று, வாட்ஸப்பில்

அகநக நட்பது நட்பு… 
8. மிஸ்டு கால் செய்தாரை ஒருத்தல், அவர் நாண 

கால் செய்து பேசி விடல்… 
9. ரேட் கட்டரோடு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் 

பில் கட்டியே சாவார்
😀😁😆😅😂🤣

Advertisements

-“Enhance External Counter Pulsation”

🇨🇭MUST CIRCULATE🇨🇭
Recently, one person was admitted to a nursing home at Ahmedabad, due to severe chest pain. He had an earlier heart attack  in 2015 and was under treatment. The doctors now suggested Angiography. 

  

Upon undergoing Angiography at multi speciality Hospital  Doctors diagnosed multiple blockages for which Angioplasty was ruled out and instead,  suggested ‘Bypass Surgery’. 
That evening, he was brought home as  doctor suggested his heart being very weak,due to pumping loss bypass could be performed only after 10 – 15 days. 

  

Meanwhile, after discussing the matter with relatives and close friends, fresh  information came from a family friend. 

  

A new treatment known as-“Enhance External Counter Pulsation” has been introduced into the Indian medical scenario which has got US FDA approval and successfully opted in many country.

  

With this therapy, a patient who has to undergo by-pass need not to do so.
Instead, the patient is given EECP treatment for 35 days in which a machine opens  heart’s collateral so natural bypass done.

Cost per session is Rs.2500/-
Currently, only a few doctors in India specialise in this field
One of them is Dr.Anuraga and Dr Ramaswamy. They have a list of patients who had to undergo by-pass from major hospitals; but, instead after undergoing the new treatment, they are absolutely fine and are leading a normal life. 

Doctor’s details for your info are: 

  

SMART Revive Centre

New BEL Road, opp HP  petrol bunk,near Kanthi sweets

Bengaluru.
You may send your reports for free guidance and brochure to us through WhatsApp or Email.

anuraag42@gmail.com

9845685897/ 9845675178/9845671462
Please forward this message It Might Help!! Please, don’t delete this without forwarding. 

I am forwarding it to the maximum I can. Let it reach the 120 crore  Indians and the remaining if any Create Awareness!

It might help someone. Forward to as many as u can.
💐💐 Thank you 💐💐

பிரேம் கணபதி.

உண்மை நிகழ்ச்சி

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம் என்கிற கிராமத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் 1973ல் பிறந்தவர் பிரேம் கணபதி.

ஏழு குழந்தைகளில் ஒருவர் அவர். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த அவருக்கு பிரத்தியேகத் திறமைகள் எதுவும் கூட இருக்கவில்லை. வறுமை அந்தக் கிராமத்தில் இருந்து அவரைச் சென்னைக்குத் துரத்தியது.

மாத வருமானம் சுமார் ரூ 250/- மட்டுமே கிடைக்க முடிந்த சில்லறை எடுபிடி வேலைகள் செய்து பிழைத்து வந்தார். அதையும் முடிந்த வரை சேமித்து கிராமத்தில் இருக்கும் தன் பெற்றோருக்கு அனுப்பி வைப்பார்.

அப்போது பழக்கமான ஒருவன் மும்பையில் ரூ.1200/- மாத வருமானத்தில் வேலை தயாராக இருக்கிறது என்று சொல்ல வீட்டுக்குக் கூடத் தெரிவிக்காமல் அந்த ஆளுடன் ப்ரேம் கணபதி 1990ல் மும்பைக்கு ரயிலில் பயணமானார்.

மும்பையில் பாந்த்ரா ரயில்நிலையத்தில் அவருடைய சட்டைப்பையில் இருந்த முழு சேமிப்பான ரூ 200/-ஐ திருடிக் கொண்டு கூட வந்தவன் மாயமாய் மறைந்து விட்டான். அப்போது தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்கிற உண்மையை ப்ரேம் கணபதி உணர்ந்தார்.

17 வயதில் கையில் நயாபைசா இல்லாமல், பாஷையும் தெரியாமல், தெரிந்தவர்களும் யாருமில்லாமல் ஆனாதரவாய் நிற்பது கடுமையான துர்ப்பாக்கியம் அல்லவா?
ப்ரேம் கணபதி மேல் பரிதாபப்பட்ட ஒருவர் திரும்பி சென்னைக்குப் போக டிக்கெட் வாங்கிக் கொடுக்க முன் வந்தார்.

ஆனால் தோற்ற மனிதனாய் சென்னைக்குத் திரும்ப ப்ரேம் கணபதிக்கு மனம் வரவில்லை.

மும்பையில் மாஹிம் பகுதியில் ஒரு பேக்கரியில் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது. மாதம் ரூ150/- தான் சம்பளம் என்றாலும் இரவு அந்தப் பேக்கரியிலேயே தூங்க இடம் கொடுத்ததால் அந்த வேலைக்குச் சேர்ந்து கொண்டார் ப்ரேம் கணபதி.

சில மாதங்களில் டீக்கடையில் டீ விற்கிற பையனாய் முன்னேறினார்.

சுறுசுறுப்பும், முகமலர்ச்சியுடன் பழகுகிற தன்மையும் கொண்ட ப்ரேம் மற்ற டீ விற்கும் பையன்களை விட மூன்று மடங்கு அதிகமாக டீ விற்று வியாபாரத்தைப் பெருக்கினார். நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அளவு தான் ஒருவரே டீக்கடைக்குச் சம்பாதித்துக் கொடுத்தார்.

ஒரு வாடிக்கையாளர் அதைப் பார்த்து விட்டு ஒரு டீக்கடைக்குத் தான் முதல் போடத் தயார் என்றும் ப்ரேம் கணபதி டீக்கடையை நடத்தினால் வரும் இலாபத்தில் பாதி பாதி எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்.

ப்ரேம் கணபதி ஒத்துக் கொள்ளவே புதிய டீக்கடையைத் துவக்கினார்கள். ப்ரேமின் திறமையால் வியாபாரம் மிக நன்றாக நடந்தது.

இலாபம் அதிகமாகிக் கொண்டு வருவதைப் பார்த்தவுடன் இத்தனை பணத்தை இவனுக்குத் தர வேண்டுமா என்று முதல் போட்டவருக்கு பொறாமை ஏற்பட்டது. அவர் ப்ரேம் கணபதியை டீக்கடையில் இருந்து விலக்கி விட்டு சம்பளத்துக்கு இன்னொருவரை வைத்துக் கொண்டார்.

மறுபடியும் ஏமாற்றப்பட்டாலும் மனம் தளராத ப்ரேம் கணபதி ஒரு கைவண்டியை நாள் ஒன்றுக்கு ரூ150/- வாடகைக்கு எடுத்து அது வரை சேர்த்திருந்த ரூ 1000/-ல் ஸ்டவ்வும், பாத்திரங்களும் வாங்கி வாஷி ரயில் நிலையம் எதிரில் இட்லி தோசை விற்க ஆரம்பித்தார்.

மிக சுத்தமாக இடத்தை வைத்துக் கொண்டு மிக ருசியாக இட்லி தோசைகளை சமைத்துக் கொடுத்த அவருடைய அந்த சிறிய கைவண்டி தோசைக்கடை நாளடைவில் பிரபலமாகியது. பிறகு கைவண்டியை விட்டு ஒரு கடையையே வாடகைக்கு ப்ரேம் எடுத்துக் கொண்டார். அதற்கு தோசா ப்ளாசா என்று பெயரிட்டார்.

அவருடையை தோசா ப்ளாசாவைத் தேடி நாளடைவில் தூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களும் வர ஆரம்பித்தார்கள். மிக நல்ல வருமானம் வர ஆரம்பிக்கவே சைனீஷ் உணவு வகைகள் செய்யும் கடை ஒன்றையும் பக்கத்தில் வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அது தோல்வி அடைந்தது.

அதனால் அதை விட்டு விட்டு தோசையிலேயே பல பல வகைகளை அறிமுகப்படுத்தி கடையை விரிவுபடுத்தினார். அவருடைய மெனுவில் 108 வகை தோசைகள் இருந்தன.

வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் ருசி, சேவை, விதவிதமான தோசை வகைகள், சுத்தம் இருந்ததாலும் தரத்தை எப்போதும் உயர்வாகவே தக்க வைத்திருந்ததாலும் அவர் வியாபாரம் செழிக்க ஆரம்பித்தது.

இன்று இந்தியாவில் 45க்கும் மேலான தோசா ப்ளாசாக்கள் ப்ரேம் கணபதிக்கு உள்ளன. அதுமட்டுமல்லாமல் துபாய், நியூசிலாந்து முதலான பத்து வெளி நாடுகளில் கூட கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முப்பது கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகவும் ப்ரேம் கணபதி இருக்கிறார் என்ற செய்தியைப் படிக்கையில் முயற்சி திருவினை ஆக்கும் என்ற வள்ளுவன் சொன்னது முற்றிலும் உண்மை என்று தோன்றுகிறதல்லவா?

ப்ரேம் கணபதிக்கு துரதிர்ஷ்டம் ஆரம்பத்தில் குடும்ப வறுமையில் வந்தது. அடுத்தது மும்பைக்கு அழைத்துப் போனவனால் வந்தது. அடுத்தது லாபத்தில் பாதி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிய ஒரு வியாபாரியால் வந்தது. ஒவ்வொரு முறையும் எல்லாம் இழந்து போக நேர்ந்தது.

ஆனால்,

ஏமாற்றப் பட்டதையே வருவோர் போவோரிடம் சொல்லி அனுதாபம் தேடிக் கொண்டு நிற்காமல், புலம்பாமல், அடுத்ததாக என்ன செய்து மீள்வது என்று சிந்தித்து, அதற்கு ஏற்றபடி புத்திசாலித்தனத்தோடு சலிக்காமல் உழைத்து அதிர்ஷ்டத்தைப் பெரிய அளவில் ஏற்படுத்திக் கொண்ட ப்ரேம் கணபதியின் வாழ்க்கை பல பேருக்குப் படிப்பினை!

#WhatsApp

0131110f-2a01-4cbf-a7f4-1643668d976f.jpg

​ரமலான் மாதம் –  பெண்களுக்கு ஒரு ஆலோசனை 

ரமலான் மாதம் –  பெண்களுக்கு ஒரு ஆலோசனை ..
இரண்டு முக்கிய நேரம் ஸஹர் & இஃப்தார்… நம்  குடும்பத்துபெண்கள் பெரும்பாலும் இந்நேரத்தில்  சமையற்கட்டுகளில் (kitchen) இருப்பார்கள்.      பெரிய கொடுமை என்னவென்றால்சமயற்கட்டுகளில் நின்று  “பேரித்தம் பழத்தை”  கொண்டு நோன்பு  திறந்தவர்களாக,  சமையலையும்  தொடர்வார்கள்.இன்னும்  சில வீடுகளில் ஸஹர்  உணவு உண்டு கொண்டே,இஃப்தார் க்கு என்ன  செய்வது என்று கலந்து  பேசி முன்னரே திட்டமிடுவார்கள்.
நன்றாக நினைவில்  வைய்யுங்கள்.. ஸஹர்  நேரத்தில் ஏக இறைவன் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி ,  என்னிடம்  துஆ கேளுங்கள் , நான் கொடுப்பதற்கு  தயாராக இருக்கிறேன் என்கிறான். இதை நாம்  பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டால் – யாருக்கு கைசேதம்??
அது போல்,  நோன்பு  திறக்கும் நேரத்தில்  கேட்கப்படும்  துஆ மறுக்கபடுவதே இல்லை..  எனவே  நாம் kitchenல் நின்று  விதவிதமாக  சமைப்பதில் கவனம்  செலுத்தி அந்நேரத்தை பாழாக்கிவிட்டால் – நாம் எவ்வளவு பெரிய   வாய்ப்பை இழந்து விடுகிறோம்.?? கொஞ்சம்  சிந்தியுங்கள்…
நம் குடுத்பத்தினரை  மகிழ்விப்பதற்காக அவர்கள் விருப்பபடுவதை செய்து கொடுக்கும் நாம்………. 
” ……..  உண்மையான அவர்களுடைய நம்முடைய,   இவ்வுலக/மறுவுலக தேவைகளுக்காக ;  நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக ;  நம்முடைய நெருக்கடிகள்,  சோதனைகள், கவலைகள்  களையபட ;  நிம்மதி,  சந்தோசம் /மகிழ்ச்சி என்றும் நிலவ ;  நம் அணைத்து  ஆசைகளும் நிறைவேற ; நம் கடைசி  நேரத்தில் கலிமாவோடு  மரணிக்க ; நம்முடைய மற்றும் நம்  முன்சென்றவர்களின் மண்ணறைவாழ்வுக்காக ;  முழு  உம்மத்திற்காக ; எதிரிகளின் சதித்திட்டங்களிலிருந்து  பாதுகாப்பு பெற ;  நல்ல பயனுள்ளமழை  பொழிய ;  நம் குடும்பத்தினர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நெடு காலம் வாழ…….” 
இந்த இரண்டு முக்கிய  நேரத்தை பயன்படுத்தி  அல்லாஹ்விடம்கையேந்தி , மன்றாடி, அழுது ,  துஆ  கேட்டு பெற வேண்டாமா??   சிந்தியுங்கள்… செயல்படுங்கள்…
1. தயவு செய்து நேரத்தை  முன்கூட்டியே  திட்டமிடுங்கள்..

2. குறைந்தது 15 நிமிடம்  முன்பு நோன்பு திறக்க  உட்க்கார்ந்துவிடுங்கள்.

3. குடும்பத்துடன் அல்லாஹ்விடம் கையேந்துங்கள்.

4. வீட்டில் உள்ள ஆண்கள்  இதற்கு முக்கியத்துவமும் / ஒத்துழைப்பும் கொடுங்கள்.

Daily iftars delivered to Techparks

Daily iftars delivered to Techparks

Assalaamu Alaikum
Empowering Ummah Inc has always endeavoured to provide socially beneficial services.

After the huge success of the donation app Share an iftar, we’ve now come up with a beneficial service to those fasting and working during iftar time.

Bookmyiftar.com is a unique endeavour which provides hygienic food items in a box to the work locations of the person ordering the iftar box.

Whats more unique is that you can order your iftar via our app or through our website as well.

Booking options:
1. Website – http://www.bookmyiftar.com
2. Android app – Launching very soon.

We are currently delivering to the following locations:

1. ITPL
2. Embassy Golflinks
3. Manyata Techpark and
4. Bagmane Techpark ( C. V. Raman Nagar)

If you would like us to deliver bulk orders to your company/location, call +919986021214

Kindly share with all your contacts and help us reach maximum rozedars working during iftar time

Service available in Bangalore only.

Asia’s biggest Temple Car

அது ஒரு சைக்காலஜி வகுப்பு… ஆசிரியர் வந்து, “இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் …” என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, “இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்…” என்று பணித்தார்.
அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், “இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்” என்றார்… அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்… 
இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்… அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்….
இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்… இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்…
வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்…
மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்… அந்த பெண் அழுது கொண்டே… நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்…  ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, “ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்… உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?” என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது…
அதற்கு அந்த பெண்….”இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது… என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்…. ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்….” என்றார்…..
அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்…. இது தானே உண்மை …. உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்…… அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்…தோழமைகளே…

Uric vs Kidney

கவனமாக இருங்கள்.
சிறுநீரகத்துக்கு புதிய வில்லன்!*

 

ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருந்தால் சிறுநீரகத்துக்கு ஆபத்து
உங்கள் சிறுநீரகம் சரியாகச் செயல்படுகிறதா என்று தெரிந்துகொள்வதற்கு ரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் மற்றும் இஜிஎஃப்ஆர் (eGFR) அளவுகளைப் பரிசோதிப்பது வழக்கம். அடுத்தஇ முறை நீங்கள் மருத்துவரிடம் போகும்போது, புதிதாக ‘யூரிக் அமிலம்’ பரிசோதனையைப் பரிந்துரை செய்யலாம். அப்போது ‘இது என்ன புதுப் பரிசோதனை?’ என்று யோசிக்க வேண்டாம்.

 

‘ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருப்பவர்களுக்குச் சிறுநீரகங்கள் விரைவில் செயலிழக்கின்றன’ என்று உலக அளவில் நடந்த ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் உலகச் சிறுநீரக நல நிறுவனம் (World Kidney Foundation) 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யூரிக் அமிலப் பரிசோதனையைக் கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவைதான் சிறுநீரகத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று சொல்லிவந்த மருத்துவ உலகம், இந்தப் பட்டியலில் புதிய வில்லன் யூரிக் அமிலத்தையும் இப்போது சேர்த்துள்ளது.
யூரிக் அமிலம் என்றால் என்ன?
யூரிக் அமிலம் என்பது ஒரு கழிவுப்பொருள். உடலில் டி.என்.ஏ. எனும் மரபணுச்சரடு உற்பத்திக்குப் பியூரின் என்ற மூலக்கூறுகள் தேவை. இவை நாம் சாப்பிடும் அசைவ உணவில் அதிகம் இருக்கின்றன. சைவ உணவுகளில் தேவைக்கு இருக்கின்றன. குடலில் இவை உறிஞ்சப்பட்டு, உடல் செல்களில் வளர்சிதை மாற்றம் அடையும்போது, அதன் கடைசிப் பொருளாகவும் கழிவுப் பொருளாகவும் யூரிக் அமிலத்தை உற்பத்திசெய்கின்றன. ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இதை முறைப்படி சிறுநீரில் வெளியேற்றிவிடுகின்றன. மிச்சமிருக்கும் அமிலம் ரத்தத்தில் இருக்கிறது. பெரும்பாலான விலங்குகள் அசைவம்தான் சாப்பிடுகின்றன. அப்படியானால், அவற்றுக்கும் யூரிக் அமிலப் பிரச்சினை வரவேண்டும் அல்லவா? விலங்குகளுக்கு ‘யூரிகேஸ்’ எனும் என்சைம் இருக்கிறது. இது யூரிக் அமிலத்தை முழுவதுமாகச் செரித்துவிடுகிறது. இதனால் விலங்குகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. யூரிகேஸ் என்சைம் நமக்கு இல்லை என்பதால்தான் பிரச்சினை. அளவுக்கு மீறி பியூரின் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட்டால், யூரிக் அமிலம் உடலில் அதிகரித்துவிடும்.
சாதாரணமாக, ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 6 மிகி வரையிலும் ஆண்களுக்கு 7 மிகி வரையிலும் யூரிக் அமிலம் இருந்தால், அது இயல்புநிலை. இந்த அளவு அதிகரிக்கும்போதுதான் ஆபத்து. இது ரத்தத்தில் பயணிக்கும்போது எலும்பு மூட்டுகளில் படிமங்களாகப் படிகிறது. இதன் விளைவால், ‘கவுட்’(Gout) எனும் மூட்டுவலி வருகிறது. இது சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறும்போது சிறுநீரகக் கற்களாக மாறுகிறது. இதுவரை யூரிக் அமிலத்தால், இந்த இரண்டு பிரச்சினைகள் மட்டுமே ஏற்படுவதாக மருத்துவத் துறை சொல்லிவந்தது. இப்போது புதிதாக சிறுநீரகப் பாதிப்பு! என்ன காரணம்?
யூரிக் அமிலம் சிறுநீரகங்களைப் பாதிக்கும் என்பது முன்னரே தெரிந்த விஷயம்தான். ஆனாலும் எங்கோ, எப்போதோ ஒருவருக்கு என்ற அளவில்தான் இதன் பாதிப்பு இருந்தது. இப்போது மாறிவரும் உணவுப் பழக்கத்தால் யூரிக் அமிலப் பிரச்சினை உலகம் முழுவதிலும் சூடுபிடித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலும், இலங்கையிலும் கடற்கரையோரப் பகுதியில் வசித்தவர்களில் அநேகம் பேருக்கு யூரிக் அமிலப் பிரச்சினையால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியடைய வைத்தன. அந்தப் பகுதி மக்கள் அதிகம் விரும்பும் ஒரு வகை மீன் உணவில் பியூரின் அதிகமாக இருந்ததால், இந்தப் பாதிப்பு ஏற்பட்டதாக அப்போதைய ஆராய்ச்சி முடிவு சொன்னது. அதைத் தொடர்ந்து, உலகில் மற்ற நாடுகளிலும் சிறுநீரகம் செயலிழந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது என்பதால், உலக சுகாதார நிறுவனம் இது குறித்த எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.
சிறுநீரகம் கெடுவது எப்படி?
சிறுநீரகத்தின் முக்கியமான வேலை சிறுநீரை உண்டாக்குவது. இந்த வேலையைச் செய்யும் அமைப்புக்கு ‘நெஃப்ரான்கள்’ என்று பெயர். இவைதான் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டிச் சிறுநீராக வெளியேற்றுகின்றன. இவை எண்டோதீலியல் எனும் செல்களால் ஆனவை. ரத்தத்தில் அதிகரித்துவிட்ட யூரிக் அமிலம் சிறுநீரகத்துக்கு வரும்போது, எண்டோதீலியல் செல்களை அழித்துவிடுகின்றன. இதன் விளைவால் முதலில் நெஃப்ரான்கள் உள் அளவில் சுருங்குகின்றன. பிறகு, அதில் அழற்சி ஏற்பட்டு, புண்ணாகின்றன. இதனால் சிறுநீரகம் திடீரென்று வேலை நிறுத்தம் செய்கிறது. சிறுநீர் பிரிய மறுக்கிறது. சிறுநீரில் வெளியேற்றப்பட வேண்டிய யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவுகள் ரத்தத்தில் மிதக்கின்றன. இதன் காரணமாக முகம், கை, கால், வயிறு ஆகியவை வீங்குகின்றன. மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. உயிருக்கு ஆபத்து நெருங்குகிறது. இதை ஆரம்பத்தில் கவனித்தால் மருத்துவச் சிகிச்சை பலனளிக்கும். இல்லையென்றால், டயாலிசிஸ் செய்ய வேண்டும். சிறுநீரகத்தின் நிலைமை மிகவும் மோசமென்றால், மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதுதான் ஒரே வழி. மாற்றுச் சிறுநீரகம் நினைத்த நேரத்தில் கிடைத்து விடாது.
யாருக்கு வருகிறது?
பெரும்பாலும் ஆண்களுக்கே இந்தப் பாதிப்பு அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கிறது. பரம்பரைரீதியாகவும் இது ஏற்படலாம். மது அருந்துபவர்களுக்கு, உடல்பருமன் உள்ளவர்களுக்கு இது இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. அசைவ உணவை அதிகம் சாப்பிடுவோருக்கும், இரு சக்கர வாகனங்களில் வெயிலில் அதிக நேரம் அலைபவர்களுக்கும், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இப்போது சிறுநீரகப் பாதிப்புக்கும் உணவுமுறைதான் பிரதான காரணமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, 100 கிராம் கோழி ஈரல் சாப்பிட்டால் 313 மில்லி கிராம் அளவிலும், 100 மி.லி. சாராயம் குடித்தால் 1,810 மில்லி கிராம் வரையிலும் யூரிக் அமிலம் ரத்தத்தில் உற்பத்தியாகிறது. இந்த அளவு யூரிக் அமிலத்தைச் சிறுநீரில் வெளியேற்ற சிறுநீரகங்கள் எவ்வளவு சிரமப்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்வதில்லை. தெரிந்தே ஆபத்தை விலைக்கு வாங்குகிறோம்!

BENIFTS OF GARLIC WITH HONEY

Post Navigation

%d bloggers like this: