Karim74's Weblog

my articles

நாசமாப் போன தமிழ்நாடு!

நாசமாப் போன தமிழ்நாடு!

அம்மா… அம்மா…. அம்மா…. எதற்கெடுத்தாலும் அம்மா… அவர் செய்த தவறுகளால் தமிழ்நாடே கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அம்மா உடைத்து சென்றார். பல திட்டங்கள் இலவசமாக அளித்து 28% ஓட்டு போட்டவர்களுக்காக 72% பேரின் பணம் வீணாகக் கரைக்கப் பட்டது.

கோபம், ரோஷம், வைராக்கியம், பழி தீர்த்தலே அரசாளும் முறையாக இருந்தது.

ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று வாக்குறுதி கொடுத்து ஒருபடி கூடப் போடாமல் போன அண்ணாவிலிருந்து, திராவிட இயக்கங்களால் தமிழனை அழித்தொழிக்கும் தொழில் தொடங்கி விட்டது.

சர்க்காரியா ஊழல் தொடங்கி, இன்றைய தாது மணல் வரை கொள்ளையர்களே மீண்டும் மீண்டும் அரியணை ஏறி சாமானியனின் எதிர்காலம் கழகங்களால் ஏப்பம் விடப்பட்டது.

இதே காலகட்டங்களில் பரம ஏழை மாநிலமாக இருந்த கேரளா முன்னேறி இன்று இந்தியாவின் பணக்கார மாநிலமாக முன்னேறி விட்டது. த.நாட்டில் ஊழல் அதிகமாகி ஐடி தொழில் கர்நாடகாவில் கொடிகட்டி பறக்கிறது.

தமிழனுக்கு எச்சில் இலைகளே பசியாற போடப் படுகிறது.

கூலித்தொழிலாளிகள் மட்டுமே இருந்த ஆந்திராவை பில் கேட்ஸ் வரவழைத்து ஹைதராபாத்தை ஒரு சிலிகான் வேலி ஆக்கிக் காட்டினார் சந்திரபாபு நாயுடு.

அதையும் பொறுக்க இயலாத சந்திர சேகர் ராவ் நாசமாய்ப் போன காங்கிரஸுடன் சேர்ந்து வளமான பகுதிகளை பிரித்தெடுத்துக் கொண்டு தெலுங்கானா மாநிலத்தை மகன், மகள், உறவினர்களோடு நாளொரு ஊழலும் பொழுதொரு கூத்துமாக ஆடிக் கொண்டு இருக்கிறார்.

நாயுடு எனக்கு எது கிடைத்தாலும் மக்கள் பணி செய்வேன் என்று அமராவதியை தலைநகராக்கி, நான்கு ஆறுகளை ஒரே வருடத்தில் யாரிடமும் கை ஏந்தாமல் தன் கஜானா பணத்தில் இணைத்து வறண்ட மாவட்டங்களை வளமாக்கி உள்ளார்.

மேலே சொன்ன எந்த மாநிலமும் சைக்கிளோ, மடிக் கணினியோ, இருசக்கர வாகனமோ, கேஸ் அடுப்போ, மின்விசிறி, மிக்ஸி கொடுத்து மக்களிடம் ஆட்சி உரிமையைக் கோரவில்லை.

ஏன் தமிழ்நாடு மட்டும் இத்தனை இலவசங்கள் தருகிறது? 63% வரிப்பணம் இலவச திட்டங்களுக்காம்! பணத்தை விவசாயிக்கு ஏன் செலவிடவில்லை? உள்ளூர் நதிகளை ஏன் இணைக்கவில்லை?

நாளைக்கு குழாயில் தண்ணீர் வராது என்றால் இருக்கும் காலி பாத்திரங்களில் நீர் சேமிக்கும் தமிழனின் அதே புத்தி ஆளும் அரசுக்குத் தோன்றாதது ஏன்?

ஏரி குளங்கள் தூர் வாருவதை விட பொங்கலுக்கு ரெண்டு துண்டு கரும்பை ரேஷன் கடையில் கொடுப்பதை ஏன் பெருமை பீற்றிக் கொண்டார்கள்?

ராஜபக்‌ஷே இலங்கையில் தமிழ் இனத்தை அழித்தார்.

தமிழ்நாட்டை தமிழனை அழித்த திராவிடக் கட்சிகளை நாளை சரித்திரம் சொல்லும்போது குடித்து சீரழிந்த தமிழன் பிணத்தின் மேல் இலவச வேட்டி போர்த்தி, மின்சாரம் இல்லாமல் இயங்க மறுக்கும் இலவச மின் விசிறி அருகில் பசியோடு குழந்தைகள் இழவை கவனிக்காமல் தட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளியில் இலவச மதிய உணவு உண்டு விட்டு கொள்ளி போட வரும் அவல நாள் தூரத்தில் இல்லை!

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: