Karim74's Weblog

my articles

Abdul kavan

சினிமாவை வெறுக்கும் என்னையே விமர்சனங்கள் எழுத வைத்து விட்டது “கவண்”சினிமா.!

– காரணம், அப்துல் கதாபாத்திரம்.!

-அப்துல்- இதில் அடிமை இல்லை, அவனே மனித உரிமை போராளி …!

ஆயிரமாயிரம் நன்றிகள் இயக்குனர் கே.வி.ஆனந்த் சார்..!

1992 – பாபர் மசூதி இடிப்பிற்கு பின்…..

மணிரத்தினம், விஜயகாந்த், கமலஹாசன், விஜய், ஏ ஆர் முருகதாஸ்,பிரகாஷ்ராஜ், பிரித்விராஜ், அர்ஜூன் போன்றவர்களால் எடுக்கப்பட்ட சினிமா படங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை தீவிரவாத சக்திகள் என அவதூறுகள் செய்தது . முஸ்லிம்களின் மீது தீவிரவாத அவதூறு செய்து,அவர்களை பொது சமூகத்திற்கு மத்தியில் கூனி குறுகி அவமானம் கொள்ள வைத்தன .மனுஷ்ய புத்திரன் போன்ற இறைமறுப்பு கொள்கை கொண்டவருக்களுக்கே வாடகைக்கு வீடு கிடைக்காமல் போனதற்கு மிக முக்கிய காரணமே சினிமாக்கள் முஸ்லிம் கள் மீது ஏற்படுத்திய அச்சம் தான்.

மணிரத்தினம், கமலஹாசன், விஜயகாந்த் போன்ற இழிபிறவிகளால் எடுக்கப்பட்ட சினிமாக்களின் முகத்தில் ‘மூத்திரம்’ பெய்கிறது கவண் சினிமா .!

கவண் – 

* புகைப்பட ஜர்னலிஸ்ட்டாக தான் வேலை பார்த்த அனுபவங்களை வைத்துக்கொண்டு, ‘மீடியா’வில் நடக்கும் அத்தனை பித்தலாட்டங்களையும் ‘கவண்’ மூலம் தோலுரிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். தங்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக சேனல்கள் எத்தனை தகிடுதத்தம் செய்கின்றன என்பதை படம் நெடுக ‘பொட்டில்’ அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார். 

* ஊர் உலகத்தையே கேள்வி கேட்கும் மீடியாஉலகின் இன்னொரு முகம் கோரமானது. லஞ்சம், தில்லு முல்லு, ஒரு சார்புத் தன்மை, சிறுபான்மை விரோதம் என இருக்கிற அத்தனை எதிர் நிழல்கள் உலாவும் அந்த முகத்தை, 

சதை கிழியும் அளவுக்குத் தோலுரித்துவிட்டார் கே வி ஆனந்த்.!

* அரசியல்வாதி ஒருவரின் தொழிற்சாலை கழிவு அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கலந்து குடிநீரை விஷமாக்க, அதற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துகிறார்கள் அப்பகுதி முஸ்லிம் -இந்து சமூக மக்கள். 

அந்த ஊரின் தலைவர் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தலைவருக்கு அனைத்து சமுதாய மக்களும் கரம் கோர்க்கிறார்கள் .

இதுதானே தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் உள்ள நிலை . இந்த எதார்த்த உண்மையை உலகறியச் செய்துள்ளார் கே வி ஆனந்த். பொதுப் பிரச்சினை களுக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமே இல்லை என கட்டமைக்கப்பட்ட அனைத்து பிம்பங்களையும் உடைத்து எறிந்துள்ளார் இயக்குனர் கே வி ஆனந்த்.!

* அப்துல்- கல்பனா இணையர்:

அப்துல் என்ற துடிப்புமிக்க இளைஞர்

மற்றும் அவர் தோழி. தொழிற்சாலை கழிவு அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கலந்து குடிநீரை விஷமாக்க, குழந்தைகளை முடமாக்க அதற்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் மனித உரிமை போராளிகள்.

ஃபேக்டரி ஒன்றால் ஒரு ஊரும், அதைச் சார்ந்த ஒரு ஏரியும் பெரிதாக பாதிக்கப்பட்டதை எப்படியாவது மீடியாவின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என நினைக்கும் முஸ்லிம் இளைஞனான அப்துல் தலைமையிலான இளைஞர் அமைப்பு போராடத் துவங்குகிறது. அதற்காக தன் உயிரையும் தியாகம் செய்ய தயாகிறாகிறது.

கல்பாக்கம், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ, கெயில்,மீத்தேன் என 

தமிழகத்தை காவு கொள்ள துடிக்கும் அனைத்து நாசகார திட்டங்களையும் உள்ளூர் மக்களோடு இணைந்து பல போராட்டங்களை நடத்தி எதிர்த்து வருபவர்கள் தமிழக முஸ்லிம்கள். சிலநேரங்களில் அந்த போராட்டங்களை தலைமையேற்று நடத்துபவர்களும் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்கள் பொது பிரச்சினை க்காக போராடும் போர்குணம் கொண்டவர்கள் என்ற உண்மையை அழகான வரலாறாக “அப்துல்” என்ற இறைவழிபாடு கொண்ட இளைஞர் கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்திய இயக்குனர் கே வி ஆனந்த் அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.!

* குண்டு வெடிப்பும் – தீவிரவாத பட்டமும் :

பொதுப்பிரச்சினைக்கு களமாடும் முஸ்லிம் இளைஞர்களை முறியடிக்க, குண்டு வெடிப்புகள் நடத்தி அரசியல்வாதிகளும், 

மீடியாவும், காவல்துறையும் சேர்ந்து எப்படியெல்லாம் தீவிரவாத பட்டம் சுமத்துகிறார்கள், அவனை எப்படியெல்லாம் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களோடு முடிச்சு போடுகிறார்கள், அதற்கு முஸ்லிம் பெயர்தாங்கி ஒருவனை கொண்டு எப்படியெல்லாம் வாக்குமூலம் பெறுகிறார்கள் , இறுதியாக அவர்களை எப்படியெல்லாம் கொலை செய்கிறார்கள். இறுதியாக பொது சமூகத்தை எப்படியெல்லாம் நம்ப வைக்கிறார்கள் என்பதை அழகான முறையில் பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குனர்.

( நினைவு கொள்க :1993 சென்னை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு, 1998கோவை குண்டு வெடிப்புகள் மற்றும் சமீபத்திய சென்னை மெரினா கடற்கரை போராட்டம்+உசாமா படம்+ முஸ்லிம்கள் தீவிரவாதிகள்+ பன்னீர் செல்வத்தின் அறிக்கை)

அதோடு விடவில்லை நமது தோழர் கே வி ஆனந்த் ……!

அப்துல் நண்பர்களில் நால்வரில் ஒருவர் பெயர் முருகன்.அந்த முருகனை பார்த்து அப்துல் சொல்வார், முருகா நாங்கதான் தீவிரவாதி பட்டத்துடன் ஒட்டிக்கிட்டு இருக்கோம்.எப்ப சாவுனு தெரியல நீபோய்டு முருகன்,என்றதும் முருகன் சொல்வார் அந்த பிரச்சனைய எல்லாரும் சேர்ந்துதான் துவங்கினோம் இப்போம் உனக்கு பிரச்சனைன்னு வந்ததும் என்னை போக சொல்ற.இங்க நம்ம அண்ணன் தம்பியாகத்தான் நாம வாழுறோம் உனக்கு பிரச்சினு வந்தா நா போகமாட்டான் என்பார் முருகன். 

இது தானே தமிழகத்தில் உள்ள எதார்த்தம்.இந்த எதார்த்தத்தை அழகான முறையில் சொல்லியுள்ளார் இயக்குநர்.

மீடியாவால் தீவிரவாத பட்டம் கிடைத்த அப்பாவி முஸ்லிம் இளைஞன் அப்துல் பேசுவான்,

“பாகிஸ்தானும்,இந்தியாவும் பிரிகிற நேரத்தில் முஸ்லிம்களுக்கு என்று தனி நாடு என்று எங்களுக்கு அழைப்பு கொடுத்த போது இந்தியா எங்கள் தாய் நாடு என்ற முழக்கத்தோடு இங்கேயே இருந்தோம்.தேசப்பற்றை நிரூபித்தோம்”

இன்னும் பல காட்சிகளை உதாரணங்களாக விவரித்துக் கொண்டே போகலாம் .

ஒரு சில படங்களில் ஒரு சில காட்சிகளில், ஒரு சில வசனங்களில் மட்டுமே முஸ்லிம் ஆதரவு வசனங்கள் இடம்பெறும் அதற்கே முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் உற்சாகம் அடையும். ஆனால்….

கவண் சினிமா -100 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம் முழுவதும்

முஸ்லிம்களை கண்ணியப்படுத்தவே எடுக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது.

1992 – பாபர் மசூதி இடிப்பிற்கு பின்…..

மணிரத்தினம், கமலஹாசன், விஜய், 

ஏ ஆர் முருகதாஸ்,பிரகாஷ்ராஜ், பிரித்விராஜ், அர்ஜூன் போன்றவர்களால் எடுக்கப்பட்ட சினிமா படங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை தீவிரவாத சக்திகள் என அவதூறுகள் செய்தது . முஸ்லிம்களின் மீது தீவிரவாத அவதூறு செய்து,அவர்களை பொது சமூகத்திற்கு மத்தியில் கூனி குறுகி அவமானம் கொள்ள வைத்தன .மணிரத்தினம்,, விஜயகாந்த், கமலஹாசன், விஜய், 

ஏ ஆர் முருகதாஸ்,பிரகாஷ்ராஜ், பிரித்விராஜ், அர்ஜூன் போன்ற இழிபிறவிகளால் எடுக்கப்பட்ட சினிமாக்களின் முகத்தில் ‘மூத்திரம்’ பெய்கிறது கவண் சினிமா .!

– புளியங்குடி சே செய்யது அலி

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: