Karim74's Weblog

my articles

lone ladies

👉… தனித்திருக்கும் பெண்களின் கவனத்திற்கு : 
இன்று பெரும்பாலும் ஆண்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாலும், குழந்தைகள் பள்ளிக்கு சென்று விடுவதாலும் பெண்கள் தனிமையில் இருப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
தனிமையில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளவேண்டும், நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற அலச்சியம் வரக்கூடாது. 
*எந்த நேரமும் உஷாராக இருக்க வேண்டும், 
*வீட்டு கதவுகளை திறந்து வைக்கக் கூடாது. இது சமூக விரோதிகள் எளிதில் உள்ளே வந்து ஒளிந்துகொள்ள வசதியாகி விடும்.
*ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கக் கூடாது, இது சமூக விரோதிகள் நோட்டமிடுவதற்கு காரணமாக அமையும்.
*பெயரில்லாத அழைப்புகள் போனில் வந்தால் ஆன்சர் பண்ணக்கூடாது, பெயரில்லாதவர்கள் வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோவை அனுப்பினால் கண்டிப்பாக பார்க்கக் கூடாது. இவைகள் உங்களை அவர்களுடைய வழியில் மடக்கி போடுவதற்கு காரணமாகி விடும்.  
* வீட்டில் உள்ள தொலைகாட்சியில் அதிகமான சப்தத்தை வைக்க வேண்டாம்.  இது வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியிலும் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாமல் போய்விடும். 
* அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால் கொடுக்க வேண்டாம்.
பேரூந்து நிலையம், ரயில் நிலையம், சந்தை கடைகள், இவற்றைத் தாண்டி ஒரு வெளிஊர் காரன் தெருவுக்குள் இருக்கும் வீட்டை தட்டி தண்ணீர் கேட்டால் அவன் கண்டிப்பாக சந்தேகத்திற்குரியவன் என்றுக் கருதி மறுத்து விட வேண்டும்.
*வெளிஊர் காரன் தெருவுக்குள் வியாபாரம் செய்ய வந்தால் எக்காரணம் கொண்டும் பெண்கள் வெளியே வந்து பொருட்களை வாங்கக் கூடாது. விலை குறைத்து விற்பது சின்னமீனை விட்டு பெரியமீனை பிடிக்கும் நோக்கம் என்பதை புரிந்துக்கொண்டு தவிர்த்து விடுங்கள்.
*கணக்கெடுப்பு என்றுக் கூறி யார் வந்தாலும் அனுமதிக்காதீர்கள், மிகவும் அவசியம் என்றுக் கூறினால் உங்கள் உறவுக்கார ஆண்களை போனில் அழைத்து அதன் பிறகு அவர்களை அனுமதியுங்கள்? அதுவரை கதவை திறக்க வேண்டாம்.
அநியாயமாக கூத்தாநல்லூர் தண்ணீர்குன்னம் என்ற ஊரில் நடந்த படுகொலை தனித்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் படிப்பினை.   
👉… மரணத்தை நினைவு கூறுவோம்.
அல்லாஹ் விதித்ததை தவிர வேறொன்றும் நம்மை அணுகாது என்பதிலே நாம் உறுதியாக இருக்கின்றோம்.
அதனால் வரவிருப்பதை எதிர்கொள்வோம் விரும்பியது நடந்தாலும், விரும்பாதது நடந்தாலும் அல்லாஹ்வை புகழ்வோம். இது தான் இறைநம்பிக்கையாளனின் இனிய பண்பாக இருக்கும்.
அந்த அடிப்படையில் இனிவர இருப்பதை எதிர்கொள்வதில் மரணம் ஒன்று.
இந்த மரணத்திற்காக நாம் நம்மை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
*மரணம் எந்த வடிவிலும் எந்த நேரத்திலும் வரலாம்.
*அது தண்ணீர்குன்னம் ஊரில் நடந்தது போன்றும் வரலாம்,
*அதனால் ஒரு தொழுகையிலிருந்து அடுத்த தொழுகையை எதிர்பாரத்தவர்களாக இருக்க வேண்டும், 
*இயன்றவரை ஒரு தொழுகையிலிருந்து அடுத்த தொழுகை வரை உளூவுடன் இருங்கள்.
*நாவுகளை திக்ருகளை மொழியச் செய்து கொண்டிருங்கள். 
காலை பொழுதை அடைந்தால் மாலை பொழுது நமக்கில்லை என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு என்று சொன்னார்கள்.
நீ மாலை நேரத்தை அடைந்துவிட்டால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப் படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்.: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்

ஆதாரம் புகாரி.6416

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: