Karim74's Weblog

my articles

New income tax rules

வரும் *01-04-2017* முதல், வருமான வரிச் சட்டத்தின் கீழ், சட்டப் பிரிவு *269ST* ன்படி, நடைமுறைக்கு வரவுள்ள கட்டுப்பாடுகள் குறித்த விளக்கம் கீழே…

*சட்டவிதி 269ST(a):*

ரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு பில்லுக்கோ (அ) பல பில்களுக்கோ ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.

*உதாரணம்:*

ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு பில்லுக்கோ அல்லது பல பில்களுக்காகவோ, ரூ.4,50,000/- ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.

*சட்டவிதி 269ST(b):*

ரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு பில்லுக்காக, ஒரே நபரிடமிருந்து, பல தவணைகளாக, பல நாட்களில், ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.

*உதாரணம்:*

ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒருவருக்கு ரூ.4,00,000/- ற்கு ஒரே பில்லாகப் போட்டு, ஒரு நாளுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வீதம் பல தேதிகளில், ரூ.4,00,000/-  ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.

*சட்டவிதி 269ST(c):*

ரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், பல பிரிவுகளில் பல்வேறு வகையிலான தொடர் பில்களுக்கு, ஒரே நபரிடமிருந்து, ஒரே தவணையாகவோ அல்லது பல தவணைகளாகவோ, ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.

*உதாரணம்:*

ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நபருக்கு, ரூ.1,50,000/- ற்கு சீலை/துணி விற்பனை பில்லாகவும், ரூ.1,30,000/-ற்கு தறிக்கூலி பில்லாகவும், ரூ.1,20,000/- ற்கு துணியில் கல் பதித்த கூலி பில்லாகவும் போட்டு, மொத்தமாகவோ அல்லது பல தவணைகளாகவோ ரூ.4,00,000/- ஐயும் ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.

*மிகமுக்கியகுறிப்பு*:

மேற்படி விதியின்படி, கட்டவேண்டிய தண்டத்தொகை எவ்வளவு தெரியுமா…?

*100%*.

அதாவது, நீங்கள் ரொக்கமாகப் பெற்ற தொகை *முழுவதையும்* அப்படியே அரசுக்கு செலுத்திவிட்டு, தலையில் துண்டைப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: