Karim74's Weblog

my articles

Why? 

நீங்கள் சின்னதா ஒரு இட்லி தட்டுக்கடை ஆரம்பியுங்கள், அதிக ஆடம்பரம் வேண்டாம், அங்கே ஒரு கடை இருப்பதை தெரிந்து கொண்டு நாலஞ்சி பேர் வருவாங்க, சில நாள் கழித்து உயர் ரக கார் ஒரு நாலைந்து கொண்டு வந்து, பத்து பைக்குகள் கொண்டு வந்து கடை அருகில் நிறுத்தி உங்கள் கடைகளில் கூட்டமாய் வந்து சாப்பிட ஆட்கள் இருப்பதை போல பிரமையை உருவாக்குங்கள், சுவை சுமாராக இருந்தாலே போதும்,

நீங்கள் தரமான உணவை விற்பதை போல, அதனால் தான் கூட்டம் கூடுவதை போல பேச்சுக்கள் அடிபடும், பெரிய பெரிய கார் காரன் லாம் வந்து சாப்பிட்டு போறான் ன்னு பேசிக்குவாங்க, மெல்ல மெல்லமாக அதை உயர்வாக பார்க்கிற சமூகம் தானும் அங்கே வர துடிக்கும், அதை விட ருசியான உணவுகள் எங்கும் கொட்டி கிடந்தாலும், Demand இருப்பதை போல கிரியேட் செய்து விற்கப்படும் பொருள் ஸ்பெஷல் ருசி இருப்பதை போல இருக்கும், இந்த தில்லாலங்கடியின் பாதி வேலையை உங்கள் மூளையே செய்யும்.

திருப்பதி தேவஸ்தானம் 24 மணி நேரமும் திறந்தே இருந்தால், எப்போ வேண்டுமானால் பார்க்கலாம் என்று இருந்தால் அதன் தெய்வீகம் கொஞ்சம் குறைந்து தான் போகும், வேண்டுமென்றே கூட்டத்தை கூட்டி, அடைத்து, நீண்ட நேரம் காக்க வைத்து, பலத்த மணி சப்தத்துடன், மந்திர ஓலங்களோடு அந்த கதவுகள் திறக்கும் போது, ஒரு வித பரவச நிலை உண்டாகி, அவனவன் கன்னத்திலும், தலையிலும் போட்டு கொண்டு முட்டி மோதி ஏறி ஏழுமலையானை கோவிந்தா கோவிந்தா ன்னு காட்டு காத்தல் கத்தி கும்பிடுவான், அதே ஏழுமலையானை தனியாக தரிசிக்கும் போது அங்கே பக்தி நிசப்தமாக இருக்கும்.

இது தான் யுக்தி, Oats ல் இருந்து Ola கார் வரை, அனைத்தும் முதலில் மேல் தட்டு மக்கள் என சொல்லப்படும் மக்களை நோக்கி ஏவுவாராகள், அவர்கள் அதை பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்ததும், மெல்ல மெல்லமாய் அது மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு வரும், அல்லது அதை அடைவதை மிடில் கிளாஸ் இலக்காக கொள்வார்கள், அது தான் அந்த Product ன் வெற்றி.

மிடில் கிளாசுக்கு கீழே இருப்பவனுக்கு ஒரு நாள் அது கிட்டும் போது, காக்கா முட்டை பீசா மாதிரி உவ்வே ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பான், அதை நல்லா இல்லன்னு சொல்லிட்டா நம்மளை குறைத்து மதிப்பிடுவார்களோ என்கிற சைக்காலஜி மிடில் கிளாஸ் மக்களை கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது, ஒரு படம் புரியலைனா புரியலை, ஒரு சாப்பாடு பிடிக்கலைன்னா பிடிக்கலை என்கிற யதார்த்தம் இங்கே இருப்பதால் தான், இந்த மக்களை நோக்கி இன்னும் எந்த நவீன வியாபாரங்களும் வீசப்படுவதில்லை, அதனால் தான் வேட்டி விளம்பரத்தில் இருந்து காபி விளம்பரம் வரை ஸ்டார் ஹோட்டல்ல நடந்து போற சரத்குமாரும், ஊஞ்சல் சேர்ல பேஷ் பேஷ் சொல்லும் நடுத்தர மாமாவும் விளம்பர படுத்த படுகிறார்கள்.

இதை நீங்கள் எதோடவும் பொருத்தி பார்க்காலாம், செருப்பு, வேட்டி, காபி பொடி, கக்கூஸ் கிளீனர், மடம், சாமியார், தொடப்பக்கட்டை, ஷூ etc

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: