Karim74's Weblog

my articles

​மது விலக்கு வேண்டுமா? உங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டுமா? இதோ அதற்கு வழி! திமுக ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்க வேண்டாம்! உங்கள் கிராமப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்! நீதிமன்றம்  சென்றால் நல்ல முடிவு கிடைக்கும். செய்வீர்களா? 

நண்பர் விளக்குகிறார்!
“ஒரு பஞ்சாயத்து தீர்மானத்தை ஏற்று, இனி அப்பஞ்சாயத்தின் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்படக்கூடாதெனவும், அதனை நிரந்தரமாக மூடவேண்டுமெனவும் 16/11/2016 அன்று உத்தரவிட்டுள்ளது உயர்நீதி மன்றம். 

இனி நாம் என்ன செய்யப்போகிறோம். 
தற்போது ஊராட்சி தீர்மானம் இருந்தால் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என உயர்நீதிமன்றம் 

உத்தரவிட்டிருப்பதை நாம் நமக்காணதொரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
ஏற்கெனவே தீர்மானங்கள் நிறைவேற்றியிருந்த ஊராட்சிகளில் முன்னாள் தலைவரோ, வார்டு உறுப்பினரோ அல்லது கிராம குடிமகன் ஒருவரோ குழுவாகவோ உங்கள் பஞ்சாயத்தின் தீர்மானத்துடன், 16/11/2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை கோடிட்டு காட்டி(நீதிபதிகள் எஸ்.நாகமுத்து மற்றும் எம்.வீ.முரளீதரன் அமர்வு – WP (MD) no 20063/15 on 16.11.2016) உங்கள் மாவட்ட ஆட்சியருக்கு விரிவான கடிதம் மூலம் கோரிக்கை வைக்கவேண்டும். 
இதே போன்று, உங்கள் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு கோரிக்கை வையுங்கள். 
(குறிப்பாகத் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்  கூட்டத்தில் நீங்கள் வைக்கும் கோரிக்கை, ஒப்புகை சீட்டுடன் பதிவு செய்யப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். )
நம்மில் சிலருக்கு இது பயனளிக்குமா என்று கூட தோன்றலாம். ஆனால் முயற்சியை கைவிடாதீர்கள்.  நீங்கள் வைக்கும் கோரிக்கையில், உங்கள் பஞ்சாயத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்படும் பாதிப்புகளை விரிவாகக் குறிப்பிடவேண்டியது அவசியம். மதுபானக்கடை இருக்கும் இடம், அதனால் அப்பகுதியினை கடக்கும்போது பெண்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமங்கள், குடிநோயால் உங்கள் ஊரில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்,குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விவரம் போன்றவை உங்கள் கோரிக்கையை வலுப்படுத்தும். 
ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால்  எடுத்துக்கொள்ளுங்கள்.இல்லையென்றால் கிராமசபையை கூட்டுங்கள் ! ஆம் நண்பர்களே. மக்களை கூட்டுங்கள். கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினால் உங்கள் கிராமமும் ஒரு முன்மாதிரி கிராமமே. வாழ்த்துக்கள். 
மேலும் விவரங்களுக்கு  நந்தகுமார் 9710230036”!

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: