Karim74's Weblog

my articles

சதா இந்து மதத்தை நோண்டி கொண்டே – வாசுகி பாஸ்கர்

சதா இந்து மதத்தை நோண்டி கொண்டே இருப்பதிலும், பொதுவாகவே செகுலரிசிம் பேசுபவர்கள் மற்ற மதங்களை விட்டு விட்டு இந்து மதத்தையே குடைவது ஏன்? இந்த சூழலில் இந்து மதத்தை காப்பவர் யார்? இந்துக்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறதல்லவா? இந்து மதத்துக்கு இருக்கும் ஆபத்தை சிந்திக்கும் அமைப்புகள் RSS , பாஜக, போன்ற இந்துத்துவ அமைப்புகள் தானே? பின்னே அவர்களது அரசியலிலும் கொஞ்சம் நியாயம் இருக்கத்தானே செய்யும்?

பதில் : கேட்ட மாத்திரத்தில் நியாயமென பட்டாலும், இந்த மண்ணை எழுநூறு ஆண்டுகள் இஸ்லாமியர்கள் ஆண்டு இருக்கிறார்கள், இருநூறு வருடம் கிருஸ்துவர்கள் ஆண்டு இருக்கிறாரக்ள், ஆட்சி அதிகாரத்தில் வீற்று இருந்த போது, ஆயுதங்களின் முனையில் மிரட்டி இருந்தால் கூட இந்த மண்ணை கிருஸ்துவ நாடாகவோ, இஸ்லாமிய நாடகாவோ மாற்ற முடியவில்லை! மாறாக முகலாயர்கள் இங்கே அதிகாரத்தில் இருந்த போது, அந்த ஆட்சியின் கீழ் உயர் அந்தஸ்தில் உயர் பதவி வகுத்தவர்கள் இன்று இந்துத்துவத்தை உயர்த்தி பிடிக்கும் வம்சத்தினர் தான்! அதே போல கிருஸ்துவ பிரிட்டிஷ் ஆட்சியின் போது, மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்களும் முக்கால் வாசி பேர், உயர் சாதி இந்துக்கள் தான்! சென்னையில் பழமையான அரசு கட்டிடங்களில் வைக்கப் பட்டிருக்கும் பலகைகளில் உயர் பதவிகளில் இருந்தவர்களின் வரலாற்று தகவல் வரிசையில் சாதி பெயரோடு சேர்த்து யார் பெயரெல்லாம் இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்!

ஒரு கிருஸ்துவ அரசாங்கத்துக்கு கீழ் நான் பதவி வகுக்கவோ, சம்பளம் பெறவோ மாட்டேன் என சுதேசியாக இருந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்! அதுவும் சுதந்திர போராட்டம் இறுதி கட்டத்தில் தான் சுதேசி இயக்கங்கள் மிக தீவிரமாக முன்னெடுக்க பட்டது, அதற்கு முன் மத சின்னங்களை நெற்றியில் வரைந்து கொண்டு ஒய்யாரமாக பதவியில் இருந்தவர்களும், குதிரை பூட்டிய சாரட் வண்டிகளில் பயணமானவர்கள் எல்லாம் யார் என்பது வரலாறு படித்தவர்களுக்கு வெளிச்சம்!

அப்போதெல்லாம் இந்து மதத்தின் மீதான குபீர் பாசம் ஏன் இல்லாமல் போனது என்கிற கேள்விக்கு பதில்:

ஆள்வது, இஸ்லாமியனோ, கிறிஸ்துவனோ, எவனோ, பிரச்சனை அதுவல்ல, இந்து மதத்தின் நம்பிக்கையின் படியே, மனு தர்மத்தின் நம்பிக்கை படியே நீங்கள் இவர்களை இயங்க, இயக்க அனுமதித்தால், இவர்கள் யார் கீழும் இருந்து கொள்வார்கள், ஆனால் காலத்திற்கு தகுந்தாற் போல சமூகம் சீர்திருத்தம் அடைவதை, சீர்திருத்தம் பெறுவதை, அதை செய்கிறவர்கள் இந்துக்களாகவே இருந்தாலும் சரி, இந்தியர்களாவே இருந்தாலும் சரி, அதை அனுமதிக்க மாட்டார்கள், அவர்களை விடமாட்டார்கள்! அவ்வளவு தான்!

ஆக, அந்த ஆட்சியின் காலத்திலெல்லாம் வராத பதற்றம், இந்தியா சுதந்திரம் அடைந்து, இந்து மதமே ஆட்சியில் இருக்கும் போது, மத சதவிகிதம் குறித்து கவலை படுவதற்கு யார் காரணம்? கிருஸ்துவமா? இஸ்லாத்தா? கிடையவே கிடையாது, இந்து மதமே தான் காரணம்! தன்னை சுய பரிசோதனை செய்யவோ, பரிசீலனை செய்யவோ ஒரு போதும் இந்து மதத்தின் அதிகார வர்கம் தயாராக இருக்காது! இந்த இந்து மதத்தின் பலவீனத்தை மற்ற மதங்கள் சாதகமாக்கி கொள்கிறார்கள் என்பது தான் உண்மையே ஒழிய, இந்த அளவு நுணுக்கமாக மக்கள் ஆராய ஆரம்பித்தால், அதன் உண்மை முகம் தெரிய வந்தால், இன்னும் இந்து மதத்தின் சதவிகிதம் குறையுமே ஒழிய இருப்பதும் எதிர்காலத்தில் நிலைக்காது!

இந்து மதத்தின் அவல நிலைக்கு அதன் அதிகார வர்கம் தான் காரணமே ஒழிய, அயல் நாட்டின் பணமும், சூட்சமும் இந்தியாவில் பலிக்காது! வேண்டுமானால் இங்கிருக்கும் அயோக்கியர்களின் ஆணவத்தை பயன் படுத்தி கொள்ளலாம்!

கையை நீட்டினால், நூறு பேர் கீழே விழும் கோமாளி கிருஸ்துவ கூட்டத்தின் வீடியோவை பகிர்ந்து, இந்தியாவுக்கு ஆபத்து என சொல்வது நகைப்பு, கிருஸ்துவர்கள் அவர்களை காமெடியன்களாக பார்க்கிறார்கள்! அந்த காமெடியன்களை குறை கூற வில்லன்களான உங்களின் கரிசனம் தான் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது!
வாசுகி பாஸ்கர்

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: