Karim74's Weblog

my articles

Finland’s education

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

* பின்லாந்தில் எல்கேஜி, யுகேஜி எல்லாம் கிடையாது. 7 வயது வரை ஜாலியாக வீட்டில் குழந்தைகள் விளையாடலாம். அதற்குப் பின்புதான் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். அதனால் ஏழு வயது வரை குழந்தைகள் தாங்கள் கண்டதை, கேட்டதை வைத்து அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.

* அப்படியே பள்ளிக்குப் போனாலும் பாடப்புத்தகங்களை மட்டும் படித்து மனப்பாடம் செய்யப் பழக வேண்டியதில்லை. இசை, ஓவியம், விளையாட்டு என்று எதில் குழந்தைகளுக்கு ஆர்வமோ அதையும் சேர்த்துப் படித்துக் கொள்ளலாம்.

* ஃபர்ஸ்ட் ரேங்க்… 20 ஆவது ரேங்க்… என்று ரேங்க் எல்லாம் போட்டு மாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை அங்கே விதைப்பதில்லை.

* கூடப் படிப்பவனை போட்டியாக யாரும் நினைப்பதில்லை.

* பள்ளியிலும் பாடங்களைப் படித்துவிட்டு, வீட்டுக்கு வந்தால் வீட்டுப் பாடம் என்று எப்போதும் டென்ஷனில் நம் ஊர் குழந்தைகள் இருப்பதுபோல பின்லாந்து நாட்டுக் குழந்தைகள் இருப்பதில்லை. ஏனெனில் அங்கே வீட்டுப் பாடமே தரப்படுவதில்லை.

* படிக்கும் மாணவர்களுக்குத் தேர்வுகள் முக்கியமில்லை. தேர்வுக்காக இரவு, பகல் கண்விழித்துப் படித்து பாடங்களை வாந்தியெடுக்கும் முறை பின்லாந்தில் இல்லை.

* பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது..

* அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

* ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்…

* ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது…

* முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்..

* கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்…
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது.

* கற்றுக் கொள்ளவே… அறிவை வளர்க்கவே மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள்.

கல்வியை லாபம் தரக்கூடிய வணிகப் பொருளாக மாற்ற உலகம் எங்கும் முயற்சிகள் நடைபெற்றுவரும் வேளையில், பின்லாந்தின் கல்விமுறை மிக… மிக… வித்தியாசமாக இருக்கிறதல்லவா?

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: