Karim74's Weblog

my articles

About vallarai

“வல்லாரை” – மருத்துவக் குணங்கள்

பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன.

இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன.

இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது.

இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது.

மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும்.

தோல் வியாதியிலும் பயன் தரும். வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம்.

வல்லாரை

வல்லாரைக்கு சரஸ்வதி, பிண்டீரி, யோகவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்து குளத்தி, அசுர சாந்தினி போன்ற வேறு பெயர்களும் உண்டு.

வல்லாரையில் அதன் இலைதான் மருத்துவ பயன் மிகுதியாக கொண்டது வள்ளலார் கூறும் ஞான மூலிகையில் வல்லாரைக்கு சிறப்பிடம் உண்டு .
அன்னை சரஸ்வதி மென்மையின் இருப்பிடம். மென்மை உள்ள இடத்தில்தான் அறிதல் இருக்கும்.

வன்மை உள்ள இடத்தில் ஆணவம் மட்டுமே நிலைக்கும். வன்மை உள்ள மானிடருக்கு அன்னையின் அருள் கிட்டுவதில்லை.
வன்மை கொண்ட மானுடர்கள் எல்லாம் மென்மைகொண்ட மூலிகையாம்- நடமாடும் சரஸ்வதியாம் வல்லாரையைச் சரணடைந்து வளம் பல பெறலாம்.

தேவ மருத்துவராகிய தன்வந்திரி சித்தர் தன் சீடர்களின் நினைவாற்றலும் அறிவுக்கூர்மையும் மேம்படும் பொருட்டு, அவர்களுக்கு வல்லாரை தொடர்பான மருந்துகளைக் கொடுத்து வந்ததாய் பண்டைய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.

மனநோய்க்கு மா மருந்து !

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயிலிட்டு மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.

இதய நோய்கள் நீங்க

வல்லாரை இலைகள் மூன்று, அக்ரோட் பருப்பு ஒன்று, பாதாம் பருப்பு ஒன்று, ஏலக்காய் ஒன்று, மிளகு மூன்று, கற்கண்டு பத்து கிராம் – ஆகியவற்றை அம்மியில் விழுதாய் அரைத்து, அதைப் பாலில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, அன்னையின் அருளால் இதயநோய்கள் மாயமாய் மறையும்.

படை, அரிப்பு, சிறங்கு குஷ்டம் மறைய

கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து, அந்த மாவில் ரொட்டி போல் சுட்டு சாப்பிட்டு வர, படை, நமைச்சல், தோல் நோய்கள், குஷ்டம் போன்றவை விலகும்.

நினைவாற்றல், ஞாபகசக்தி பெற

வல்லாரை இலையைக் காயவைத்து அரை கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள் சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர, அறிவு மேம்படும். நினைவாற்றல் பெருகும். அன்னை அருளால் அற்புதமான மூளை பலம் உண்டாகும்.

வலிப்பு குணமாக

அரை லிட்டர் வல்லாரை இலைச்சாற்றில் கால் கிலோ வாய்விளங்கத்தை ஊறவைத்து, அதை வெயிலில் உலர்த்தவும். இதனைத் தூள் செய்து வைத்துக்கொண்டு, காலையும் மாலையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வர, வலிப்பு குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் கோளாறுகள் மறையும்.

காமாலை குணமாக

அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாலை குணமாகும்.

கபம், இருமல் விலக…

வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் நான்கு சிட்டிகை அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.

உடல் வலிமை உண்டாக

நிழலில் உலர்த்தித் தூள் செய்த வல்லாரைத் தூள் 100 கிராம், அமுக்கரா கிழங்குத்தூள் 100 கிராம் – இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதனை இரண்டு கிராம் அளவில் காலை – மாலை தேனுடன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடல் வலிமை, ஆரோக்கியம் உண்டாகும். இளைத்த உடல் பருக்கும்.

வல்லாரைக் கற்பம்

வல்லாரை கற்ப மூலிகைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. உடலை அழியா நிலைக்கு எடுத்துச் செல்லும் சித்தர்கள் அருளிய வல்லாரையை கற்ப மருந்தாய்க் கொள்ளும் முறையை அறிவோம்.
வல்லாரைக் கற்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, பேதி மற்றும் வாந்தி செய்விக்கும் மருந்துகளால் உடல் சுத்தி செய்துகொள்ள வேண்டும். வேது பிடித்தல் போன்ற ஆவிக் குளியல் முறைகளால் உடலில் வியர்வையை உண்டாக்கி கழிவுகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஐந்து வல்லாரை இலைகளை எடுத்து அரைத்துப் பிழிந்து சாறெடுத்து உட்கொள்ள வேண்டும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, அதன்பின் உப்பில்லாக் கஞ்சியைத் தேவையான அளவில் பருக வேண்டும்.

நாள்தோறும் ஒவ்வொரு இலை அதிகம் சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு, உப்பில்லாக் கஞ்சியைப் பருகி வர, மூளை பலப்படும். அறிவுக் கூர்மை, அற்புத நினைவாற்றல், சுறுசுறுப்பு போன்றவை உண்டாகும்.
சாப்பிட ஆரம்பித்த இரண்டு வாரங்களி லேயே நூல்களைப் படைக்கும் சக்தி உண்டாகும். நுண்ணிய செய்திகளை ஏற்கும் தன்மை உண்டாகும். மூன்று வாரங்களில் நூறு பாடங்களை வாய்ப்பாடமாய் சொல்லும் அளவுக்கு மனசக்தி உண்டாகும்.

தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உடல் இறுகும். உடலில் காந்த சக்தி, அழகு உண்டாகும். ஆயுள் விருத்தியாகும். இவ்விலையை அரைத்து படை, வீக்கம், யானைக் கால் வீக்கம், ரணம் இவைகட்கு மேல் பூசுவதால் அதிக நன்மை தரும்.

வல்லாரையை இடித்தெடுத்துப் பிழிந்த சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் அரைலிட்டர் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து எரிக்க, அடிமண்டி மெழுகு போல விரலால் உருட்டும் போது திரளும் பதத்தில் இறக்கி வடிகட்டி தினந்தோறும் தலையில் தடவியும், தேய்த்துக் குளித்தும் வர, மூளைத்தெளிவு, குளிர்ச்சி தந்து நரையைத் தடுக்கும்.

வல்லாரை இலையை பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும்.

இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் நீங்கும் என்று கூறுவார்கள்.
வல்லாரை இலையை பச்சையாக பயன்படுத்தக் கூடாது. இலைகளை ஆய்ந்து பிட்டுபோல அவித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

வல்லாரை இலையுடன் அரிசித் திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை சுண்டைக் காயளவு சாப்பிட்டு வர நல்ல ஞாபசக்தி உண்டாகும்; அழகுக்கூடும்; இது நினைவாற்றல் பெருக்கும். குழந்தைகட்கு காணும் சீதபேதிக்கு 1-2 இலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சர்க்கரைக் கூட்டிக் கொடுக்கக் குணமாகும்.

அப்போது 5-6 இலையை அரைத்து கொப்ப+ழைச் (நாபியை) சுற்றித் தடவி வர அதிக நன்மையைத் தரும்.

நோய்களுக்கு உபயோகிக்கும் முறை :

கண்டமாலை (கழுத்தில் உருண்டு திரண்டு மலைபோல் கட்டிக்கொள்ளும்) நாள்பட்ட மேகவியாதி உடம்பு முழுவதும் புண் இவைகளுக்கு இதன் பச்சை இலையை நன்றாய் அரைத்துப் பிழிந்து எடுத்த சாற்றில் வேளைக்கு 3-5 துளி பாலுடன் கூட்டிச் சிறிது அதிமதுரச் சூரணம் கூட்டி 3 வேளை கொடுக்கலாம். அல்லது இதன் இலையைக் காம்பு முதலியவை இல்லாமல் ஆய்ந்து சூரணம் செய்து சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு வேளைக்கு 2-3 குன்றிமணி எடை சிறிது சர்க்கரைக் கூட்டித் தினம் 3 வேளைக் கொடுக்கலாம். அல்லது உலர்ந்த இலையில் ஒரு தோலா (3 பலம்) எடை 8 அவுன்ஸ் கொதிக்கின்ற நீரில் போட்டுச் சூடு ஆறினபின் வடித்து வேளைக்கு அரை அல்லது ஒரு அவுன்ஸ் வீதம் பால் சர்க்கரை கூட்டித் தினம் இருவேளை கொடுக்கலாம். இவற்றால் வீக்கம் பயித்தியம் ஞாபகசக்தி குறைவு வெள்ளை முதலியன குணமாகும்.

குறிப்பு :

இதை அளவுக்கு மிஞ்சி உபயோகப்படுத்த தலைவலி மயக்கம் விகாரபுத்தி முதலிய சம்பவிக்கும். எனவே சமயம் அறிந்து அளவோடு கொடுக்க வேண்டும்.

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: