Karim74's Weblog

my articles

Shame on you bluddy TN politicians

பல்வேறு இன்னல்களை கடந்து துபாயிலிருந்து சென்னைக்கு நேற்று இரவு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , முக்கியமாக இதை கொண்டுசெல்ல உதவிய சில நேர்மையான இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும், சைலேந்திர பாபு IPS அவர்களுக்கும் நன்றிகள்.
பாதுகாப்பு காரணமாக உடன் செல்லும் எனது உயிர் தோழரின் பெயரை இங்கே வெளியிடவில்லை. அவர் இங்கிருந்து செல்லும் முன் ஆளுங்கட்சியிடமிருந்து பலவகையான தொலைபேசி அழைப்புகளும், மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன( தங்கள் கட்சியின் மூலமே பொருட்களை வினியோகம் செய்யப்பட வேண்டுமென ). அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது, அது உரிய இடத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

நமது மக்கள் பயனுற, நமக்கு துளியும் சம்பந்தமில்லாத துபாய் அரசின் எமிரேட்ஸ் விமானம் எவ்வித கட்டணமோ, வரியோ வசூலிக்காமல் ₹13 இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொண்டுசென்று உதவ முன்வந்துள்ளது, ஆனால் நமது கேடுகெட்ட அரசோ அதற்கு வரிவிதிக்க முயன்றது. இடையே அரசியல்வாதிகளின் இடையூரு வேறு!!!
தோழர் கடைசியாக கூறிய வார்த்தை ” உண்மையில், இந்தியனாய் பிறந்ததற்கு வெட்கபடுகிறேன், வேரு நாட்டிலேயே வசிக்கலாம் போல” என்ற வார்த்தையில் உள்ள உண்மையை உணர்ந்தேன் frown emoticon
கடந்த ஒருவாரமாக பகலில் அலுவலக வேலை, இரவில் தொண்டுநிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து பொருட்களை பெற்று அதனை பேக்கிங் செய்ய என முழுமையாக தன்னை அற்பணித்து, தற்போது அதை வழங்க சென்னை செல்லும் தோழருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Shame on you bluddy TN politicians unsure emoticon

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: