Karim74's Weblog

my articles

Archive for the month “October, 2015”

Confusion

28 வயதுள்ள பெண் ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது…கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில்.. அவள் கடவுளைக் கண்டாள்.
அவள் கடவுளிடம்,
”ஆண்டவா..என் காலம் முடிந்துவிட்டதா?” என்று துக்கமாக கேட்டாள்.
அதற்கு கடவுள்,
“இல்லை… இல்லை…உனக்கு இன்னும் 40 வருடம் இருக்கின்றன…நீ 40 வருடம் உயிர் வாழலாம்” என்றார் கடவுள்.!
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது…
அப்பெண் பிழைத்துக் கொண்டாள்..
பிறகு இரண்டு மாதம் கழித்து.. அப்பெண் தன்னை அழகு படுத்திக்கொள்ள பியூட்டி பார்லர்க்கு சென்று…
எல்லா மேக்கப்பையும் போட்டுக்கொண்டு ரோட்டில் நடந்து வந்தாள்..
கடை வீதியில் நின்ற எல்லா இளைஞர்களும் அவளை சைட் அடிப்பதை கண்டு ரசித்துக்கொண்டே.. ரோட்டில் நடந்தாள்…
அப்போது வேகமாக வந்த தண்ணி லாரியின் டயரில் சிக்கி.. சம்பவ இடத்திலயே அப்பெண் உயிரிழந்தாள்…பிறகு கடவுளின் முன்பாக கொண்டு வரப்பட்டாள்…!!
அப்பெண் கடவுளிடம் கோபமாக கேட்கிறாள்,
“எனக்கு சாவு வருவதற்கு இன்னும் 40 வருடங்கள் இருப்பதாகச் சொன்னீர்களே,அப்போ ஏன் லாரி விபத்திலிருந்து என்னை காப்பாற்றவில்லை?”.. என்று கேட்டாள்.
அதற்கு கடவுள்,
“அட,,,நீயா அது? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே” என்றாராம் கடவுள்…
பொண்ணுங்க ஓவரா மேக்கப் போட்டா,கடவுளுக்கே கன்பியூஸ் வரலாம்…!!

Advertisements

Pirandai soup

உடல் ஆரோக்கியத்திற்கு நம்
முன்னோர் பின்பற்றிய முறைக்கு பலர் மாறத்துவங்கியுள்ளனர். இதனால் தான் சிறுதானியங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தோட்டம், வீடுகளில் வளர்க்க கூடிய மூலிகை செடிகளை பயன்படுத்தி வெஜ் சூப், ஜூஸ் என தயார் செய்து குடிக்கவும் துவங்கிவிட்டனர். குறைந்த செலவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் ஜூஸ், சூப் ஆகியவற்றை வீட்டிலேயே தயார் செய்து அருந்தலாம்.

இதற்கான வழிமுறையாக ‘பிரண்டை சூப்’ தயார் செய்யும் விதம் குறித்து சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த ஏ.பாக்கியவதி விளக்கினார்.

அவர் கூறியதாவது:

பிரண்டை செடி தோட்ட வேலிகளிலும், பலர் வீடுகளிலும் வளர்த்து வருகின்றனர். மருத்துவ குணம் வாய்ந்த பிரண்டையை உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. பிரண்டையை துவையல் ஆகவும், சூப் ஆகவும் தயார் செய்து பயன்படுத்தலாம். இளம் பிரண்டையை கை பிடி அளவு எடுத்து தேவையான அளவில் ஒடித்து, அதன் மேல் உள்ள தோல் பகுதியை நீக்கி, சதைப்பகுதியை தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.

வெண்ணெய் அல்லது நெய் ஒரு ஸ்பூன் விட்டு சிறிதளவு சீரகத்தை வதக்கிக்கொள்ளவேண்டும். பின் பிரண்டையுடன் மூன்று சிறுவெங்காயம், மூன்று பூண்டு, ஒரு தக்காளி சேர்த்து வதக்கவேண்டும். அதன்பின் சிறிது துவரம் பருப்பு, தேவையான அளவு தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். நன்கு வெந்த பிறகு சக்கையை நீக்கி விட்டு சாறு எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின்
பிரியாணி இலை, இரண்டு கிராம்பு சேர்த்து இதமாக சூடு ஏற்படுத்தி நுரை வந்தவுடன் இறக்கினால் பிரண்டை சூப் ரெடி.

குடிப்பதற்கு முன் மிளகு துõள்
சிறிதளவு சேர்த்து கொள்ளலாம். உடல் வலி, வயிற்றுபுண், மூலத்திற்கும் பயன் உள்ள மருந்தாகவும் பிரண்டை சூப் உள்ளது, என்றார்.

Info

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை…

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்…

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது…

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்…

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை…

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்…

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது…

👉சொத்து
👉ஸ்திரி
👉உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு…

👉தாய்
👉தந்தை
👉குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..
மது நாட்டுக்கு  வீட்டுக்கு கேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று மக்களின் மீது அன்பை பொழியும் அரசு அவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம் தட்டி கேட்காது.

குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும் கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம் தட்டி கேட்காது.

ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவது போல் நீதிமன்றம் இதை மட்டும் கட்டாயப்படுத்தும்.

மக்கள் மீது அககறை காட்டும் நீதிமன்றமே உன்னால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா?

இக்கருத்தை வரவேற்போர் இப்பதிவை குறைந்தது 5 குழுவிற்காவது பகிரவும்

அவ்வாறு செய்தால் விரைவில் தங்களுக்கு டாஸ்க் மார்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி கிடைக்கும்

சும்மா கடவுள் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்

இனி உங்கள் கையில்…🙏🙏😀

History of bonus

“போனஸ்” சரித்திரம் என்ன சொல்கிறது?
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள். 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்.
அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.
இந்தியர்கள் னா சும்மாவா?
அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள். அதன் விளைவாக
அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்.
அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது.
பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.
இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகையால் இதனை பலரும் அறிந்து கொள்ள பகிருங்கள்.
(சேர் செய்யுங்கள்)

The Divine system of Allah Subhaanuwa Tha’aala

Dear Brothers and Sisters in Islam,

السلام عليكم ورحمة الله وبركاته

1. Muharram and the day of Aashura

The Divine system of Allah Subhaanuwa Tha’aala

It is the divine system of Allah Subhaanuwa Tha’aala that He has afforded special virtue and significance to some things over others. From mankind, the Ambiyaa عليهم السلام have been blessed with distinguished positions and elevated statuses over others. From the different places in the world, the Haramain (Makkah Mukarramah and Madinah Munawwarah) have been accorded a special rank over the rest of the world. From the twelve months of the Islamic calendar, special sanctity and sacredness has been given to four specific months i.e. Zul-Qa’dah, Zul-Hijjah, Muharram and Rajab.

By the same token, amongst the days of the Islamic year the day of Aashura has been blessed with exclusive virtue and immense blessings.

عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه و سلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله

It is reported from Abu Qataadah (Radhiallahu Anhu) that Rasulullah (Sallallahu Alaihi Wasallam) said: “On account of observing the fast of Aashura, I have hope that Allah Subhaanuwa Tha’aala will expiate the sins of the past year.” (Ibnu Maajah 1/124, Saheeh Muslim 1/368)

 The month of Muharram and the day of Aashura

 Reward for fasting an entire month

عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه و سلم : من صام يوم عرفة كان له كفارة سنتين ومن صام يوما من المحرم فله بكل يوم ثلاثون يوما

It is reported from Ibnu Abbaas (Radhiallahu Anhuma) that Rasulullah (Sallallahu Alaihi Wasallam) said: “The one who observes the fast of the day of Arafah two years of his sins will be forgiven and the one who fasts during the month of Muharram, for each day he fasts he will receive the reward of fasting for an entire month.” (At-Targheeb wat-Tarheeb, vol. 2, p. 46)

It is an exclusive virtue of the month of Muharram that each fast in this auspicious month is equivalent in reward to fasting for an entire month. No other month has been blessed with this virtue.

The greatness and virtue of Aashura

While the month of Shawwaal, Zul-Qa’dah and Zul-Hijjah have been divinely selected to accommodate the rituals of Haj and sacrifice, the month of Muharram is the month that enjoys the honour of being the month of Allah Ta’aala and of accommodating the fast of Aashura, which expiates the sins of the past year. The immense virtues and abundant blessings that this day holds could be somewhat understood through the desire and eagerness that Rasulullah (Sallallahu Alaihi Wasallam) expressed to meet this day.

 

عن ابن عباس رضي الله عنهما قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء

Hazrat Ibnu Abbaas (Radhiallahu Anhuma) reports: “I did not see Rasulullah (Sallallahu Alaihi Wasallam) anxiously await the fast of any virtuous day more than the day of Aashura.” (Saheeh Bukhari 1/268)

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم  أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل

It is reported from Abu Hurayrah (Radhiallahu Anhu) that Rasulullah (Sallallahu Alaihi Wasallam) said: “The best of fasts after the month of Ramadhaan is fasting in the month of Allah, which is Muharram, and the best of Salaahs after the faraaidh (obligatory Salaah) is the Tahajjud Salaah.” (Saheeh Muslim 1/368)

Fasting on the day of Aashura

Rasulullah (Sallallahu Alaihi Wasallam) fasted on the day of Aashura and exhorted the Sahaabah to also observe the fast. The extent of enthusiasm and passion with which the Sahaabah enlivened and upheld this mubaarak sunnah of Rasulullah (Sallallahu Alaihi Wasallam) could perhaps be gauged from the following hadith.

عن الربيع بنت معوذ بن عفراء رضي الله عنها قالت فكنا بعد ذلك نصومه ونصوم صبياننا الصغار منهم إن شاء الله ونذهب إلى المسجد فنجعل لهم اللعبة من العهن فإذا بكى أحدهم على الطعام أعطيناهم إياه عند الإفطار

Hazrat Rubayyi’ (Radhiallahu Anha) reports that the Sahaabah observed the fast of Aashura and encouraged their children to observe the fast. The Sahaabah used to make toys for their children out of wool and if any child felt hungry and wept for food then they kept them occupied with those toys until the time of iftaar. (Saheeh Muslim 1/360)

History of Aashura

Prior to the Hijrat, Rasulullah (Sallallahu Alaihi Wasallam) and the Sahabah observed the fast of Aashura in Makkah Mukarramah as this conformed to the sharee’at of Ebrahim (Alaihis salaam). Rasulullah (Sallallahu Alaihi Wasallam) migrated to Madinah Munawwarah in the month of Rabiul Awwal. The following year (2 A.H.), in the month of Muharram, Rasulullah (Sallallahu Alaihi Wasallam) witnessed the Jews of Madinah Munawwarah fasting. Nabi (Sallallahu Alayhi Wasallam) inquired from them as to why they were observing the fast on that day. They exclaimed that it was on that day that Allah Subhaanuwa Tha’aala delivered Moosa (Alaihis Salaam) and the Bani Israa’eel from the tyranny and oppression of Fir’oun and his people and Allah Subhaanuwa Tha’aala destroyed Fir’oun and his army. This is explained in the following narration:

عن ابن عباس رضي الله عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه

Hazrat Ibnu Abbaas (Radhiallahu Anhuma) said: “When Nabi (Sallallahu Alaihi Wasallam) migrated to Madinah Munawwarah, he witnessed the Jews observing the fast of Aashura. After inquiring, they replied that this was a virtuous day. This was the day that Allah Subhaanuwa Tha’aala had delivered the Bani Israa’eel to safety from their oppressive enemy (Fir’oun and his army). In expression of gratitude and thanks to Allah Subhaanuwa Tha’aala, Moosa (Alaihis salaam) fasted on this day. Nabi (Sallallahu Alaihi Wasallam) remarked, ‘We are more worthy of following Moosa (Alaihis Salaam) than you.’ Thereafter, Nabi (Sallallahu Alaihi Wasallam) continued fasting on this day and ordered the Sahabah (Radiallahu Anhum) to fast as well.” (Saheeh Bukhari 1/268)

Prior to the fast of Ramadhaan becoming compulsory, fasting on the day of Aashura was Fardh (obligatory). After the fast of Ramadhaan became compulsory, fasting on the day of Aashura was optional.

عن عائشة زوج النبي صلى الله عليه و سلم أنها قالت :كان يوم عاشوراء يوما تصومه قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه و سلم يصومه في الجاهلية فلما قدم رسول الله صلى الله عليه و سلم المدينة صامه وأمر بصيامه فلما فرض رمضان كان هو الفريضة وترك يوم عاشوراء فمن شاء صامه ومن شاء تركه

Hazrat Aa’isha (Radiallahu Anha) reports: “In the pre-Islamic era, the Quraish fasted on the day of Aashura. Nabi (Sallallahu Alaihi Wasallam) also observed the fast of Aashura. After migrating to Madinah Munawwarah, Nabi (Sallallahu Alaihi Wasallam) continued with this noble practice (of fasting on the day of Aashura) and instructed the Sahabah (Radhiallahu Anhum) to fast on this auspicious day (as it was made obligatory). However, after the fast of Ramadhaan became obligatory, fasting on the day of Aashura no longer remained fardh.” (Rather it was made sunnah (optional).) (Muatta Imaam Maalik, p. 240)

This remained the practice of Rasulullah (Sallallahu Alaihi Wasallam) and Sahaabah till the end of the life of Rasulullah (Sallallahu Alaihi Wasallam). In the 11th year of Hijri  (after the fast of Aashuraa prior to Rasulullah (Sallallahu Alaihi Wasallam)’s demise), Rasulullah (Sallallahu Alaihi Wasallam) commanded the Sahabah (Radhiallahu Anhum) to oppose the Jews and to add another day of fasting together with the tenth. Rasulullah (Sallallahu Alaihi Wasallam) said that if he lived till the following year he would fast for two days.

عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه و سلم صوموا يوم عاشوراء و خالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما (البيهقي)

Hazrat Ibnu Abbaas (Radiallahu Anhuma) reports that Rasulullah (Sallallahu Alaihi Wasallam) said: “Observe the fast of Aashura and oppose the Jews by fasting a day before it or after it (as well) i.e. the ninth and tenth or tenth and eleventh of Muharram.” (As-Sunan Al-Kubra Baihaqi 4/287 / Talkheesul Habeer 2/819)

عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه و سلم لئن بقيت الى قابل لأصومنّ التاسع (مسلم 359/1)

Hazrat Ibnu Abbaas (Radiallahu Anhuma) reports that Rasulullah (Sallallahu Alaihi Wasallam) said: “If I live until the following year, I will definitely fast on the ninth (together with the tenth).” (Saheeh Muslim 1/359) (Awjaz-ul-Masaalik, vol. 5, p. 192 / Addurrul Mandhood, vol. 4, p. 254)

Important lesson

While reaping the virtues of fasting on the day of Aashura, an important lesson is emphasised by means of this fast. This is the lesson of firmly maintaining one’s Islamic identity at all times, totally refraining from imitating the kuffaar (disbelievers) and even avoiding any resemblance with them. Hence, Rasulullah (Sallallahu Alaihi Wasallam) instructed the ummah to fast for two days (i.e. the ninth and tenth or tenth and eleventh) in order to oppose the Jews.

Dressing

Imitating the kuffaar can occur in any and every aspect of life. However, the most obvious and apparent is in the aspect of appearance and dressing. Imitating “others,” which is known astashabbuh’ is completely forbidden in cases where it opposes the sunnah of Rasulullah (Sallallahu Alaihi Wasallam). So abhorred is this practice that Rasulullah (Sallallahu Alaihi Wasallam) has declared: “The one who imitates a nation is from amongst them.”

Thus when the dressing and appearance taught by Rasulullah (Sallallahu Alaihi Wasallam) is not adhered to, and the kuffaar are imitated, at times it becomes difficult or even impossible to distinguish a Muslim from a Jew, Christian or an atheist.

Desire to resemble Rasulullah (Sallallahu Alaihi Wasallam)

The Fast of Aashura highlights the importance of avoiding any resemblance to the Jews and Christians. No person prefers to resemble the one who is his enemy. Rather, he will prefer to resemble those whom he loves. A true follower of Rasulullah (Sallallahu Alaihi Wasallam) will love to resemble, in fact imitate, his beloved. He would love to be identified with Rasulullah (Sallallahu Alaihi Wasallam), not with those who are the enemies of Islam and the Muslims.

Baseless practices

There are also many baseless practices and customs which people engage in on the tenth of Muharram. Among these baseless customs and practices is mourning over the martyrdom of Hazrat Husain (Radiyallahu Anhu). This practice was introduced in the tenth century of Islam (946 A.H.) by the deviated group known as the shia. Undoubtedly the gruesome martyrdom of Hazrat Husain (Radiyallahu Anhu) was among the tragic and heart breaking events that occurred in the annals of history. However despite that, it has no connection with the blessed occasion of Aashura. Instead Aashura had received its virtue and auspiciousness even before the birth of Hazrat Husain (Radiyallahu Anhu). Hence the custom of mourning the martyrdom of Hazrat Husain (Radiyallahu Anhu) has no basis whatsoever in Islam.

2. Aashura of Muharram – A Shia and Sunni Muslim Observance

10th of Muharram (the day of Aashura / Ashoora) is observed as an important day by both Sunni and Shia Muslims – however, for different reasons.

Most scholars believe that Aashura is named as such because of “tenth” of Muharram (ten is translated as “Ashara” in the Arabic language)

Sunni Muslims look at Aashura as a day of “respect and gratitude” (for Prophet Moosa and his nation), while Shia Muslims believe that day to be a day of mourning and sorrow. The following is an explanation of the difference.

Sunni Muslims

Based on the Hadith of Prophet Muhammad (saws), Sunni Muslims celebrate Aashura as the day when Prophet Moses (Moosa) fasted on that day because Allah saved the Israelites from their enemy in Egypt. One of the many Ahadith (sayings of Prophet Muhammad) that attests to that is in Bukhari that states:

Narrated by al-Bukhaari (1865) from Ibn ‘Abbaas, who said: The Prophet (saws) came to Madinah and saw the Jews fasting on the day of Aashura. He said, “What is this?” They said, “This is a good day, this is the day when Allah saved the Children of Israel from their enemy and Moosa fasted on this day.” He (the Prophet Muhammad) said, “We are closer to Moosa (Prophet Moses) than you.”

So he (the Prophet Muhammad) fasted on this day and told the people to fast.

There are many other versions of this Hadith in the books of “Muslim” and “Bukhari”.

According to a version narrated by Muslim,

This is a great day when Allah saved Moosa (Moses) and his people and drowned Pharaoh and his people.”

Sunni Muslims celebrate Aashura by fasting on that day. Usually, Sunni Muslims are recommended to fast on the 9th and 10th of Muharram.

Al-Shaafa’i and his companions, Ahmad, Ishaaq and others said: It is mustahabb [recommended] to fast both the ninth and the tenth, because the Prophet (peace and blessings of Allah be upon him) fasted the tenth and intended to fast the ninth. Based on this, there are different ways of fasting ‘Ashoora’, the least of which is to fast the tenth only, but it is better to fast the ninth as well. The more one fasts in Muharram, the better. (islamqa.info)

In Jewish tradition, this festival is celebrated as the Passover, which is their way to commemorate their liberation over 3,300 years ago by God from slavery in ancient Egypt that was ruled by the Pharaohs, and their freedom under the leadership of Prophet Moses. It commemorates the story of the Exodus as described in the Hebrew Bible especially in the Book of Exodus, in which the Israelites were freed from slavery in Egypt.

Other Ahadith on the subject are the following:

The prophet observed the fast on Ashuraa (the 10th of Muharram), and ordered (Muslims) to fast on that day. (Agreed upon Hadith i.e. Bukhari & Muslim).

Narrated by Abi Katada: The prophet was asked about fasting on ‘Aashura’ (the 10th of Muharram), he said: “it expiates the previous year (for sins).” (Sahih Muslim)

It was proven from the Prophet (peace and blessings of Allah be upon him) that the best fasting after Ramadan is fasting in the month of Muharram. It was narrated that Abu Hurayrah (may Allah be pleased with him) said: The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) said: “The best fasting after Ramadan is the month of Allah Muharram, and the best prayer after the obligatory prayer is prayer at night.” Narrated by Muslim, 1163.

Shia Muslims Observance

Shia Muslims observance of Ashura is different altogether. They observe Ashura as the day of martyrdom of Hussein ibn Ali, the grandson of Prophet Muhammad at the Battle of Karbala. Shia Muslims, therefore, consider this a day of sorrow and observe it as such by refraining from music, listening to sorrowful poetic recitations, wearing mourning attire, and refraining from all joyous events (e.g. weddings) that in anyway distract them from the sorrowful remembrance of that day.

Virtue of spending on one’s family on the Day of Aashura

Apart from the virtue of fasting on the Day of Aashura, Nabi (Sallallahu Alaihi Wasallam) has also encouraged that one should be generous upon one’s family on this auspicious day.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه و سلم قال : من أوسع على عياله و أهله يوم عاشوراء أوسعالله عليه سائر سنته

Abu Hurairah radiyallahu anahu reports that Nabi Sallallahu alaihi wa sallam said, “Whoever spends freely upon his family on the day of Aashura Allah Subhaanuwa Tha’aala will bless him with abundant sustenance for an entire year.” (At-Targheeb wat-Tarheeb, vol. 2, p. 48)

 قال السخاوي رواه الطبراني والبيهقي في الشعب وفضائل الأوقات وأبو الشيخ عن ابن مسعود والأولان فقط عن أبي سعيد والثاني فقط في الشعب عن جابر وأبي هريرة وقال إن أسانيده كلها ضعيفة ولكن إذا ضم بعضها إلى بعض أفاد قوةبل قال العراقي في أماليه لحديث أبي هريرة طرق صحح بعضها ابن ناصر الحافظ وأورده ابن الجوزي في الموضوعات من طريق سليمان بن أبي عبد الله وقال سليمان مجهول وسليمان ذكره ابن حبان في الثقات فالحديث حسن على رأيه قال وله طريق عن جابر على شرط مسلم أخرجها ابن عبد البر في الاستذكار من رواية أبي الزبير عنه وهي أصح طرقه ورواه هو والدارقطني في الأفراد بسند جيد عن عمر موقوفا عليه والبيهقي في الشعب من جهة محمد بن المنتشر قال كان يقال فذكره قال وقد جمعت طرقه في جزء قلت واستدرك عليه شيخنا رحمه الله كثيرا لم يذكره وتعقب اعتماد ابن الجوزي في الموضوعات قول العقيلي في هيصم بن شداخ راوي حديث ابن مسعود إنه مجهول بقوله بل ذكره ابن حبان في الثقات والضعفاء (المقاصد الحسنة ص505)

قال المنذرى في الترغيب: رواه البيهقى و غيره من طرق و عن جماعة من الصحابة و قال البيهقي:هذه الأسانيد وإن كانت ضعيفة فهي إذا ضم بعضها الى بعض أخذت قوة والله أعلم (الترغيب و الترهيب 2/48)

Article published in

islam and quran

في امان الله

Your brother in Islam,
A Shabbir Ahmed

About the month of Muharram (Sacred Islamic Month)

Dear Brothers and Sisters in Islam,

السلام عليكم ورحمة الله وبركاته

About the month of Muharram (Sacred Islamic Month)

The month of Muharram is the first month of the Arabic year, and it is one of the four sacred months of Allah. Allah says in the Qur’an:

islam on About the month of Muharram (Sacred Islamic Month)

“Verily, the number of months with Allah is twelve months (in a year), so was it ordained by Allah on the Day when He created the heavens and the earth; of them four are Sacred (i.e. the 1st, the 7th, the 11th and the 12th months of the Islamic calendar)….” [Qu’ran, Surah Al-Tawbah 9:36]

The Prophet (peace and blessings of Allah be upon him) said: “The division of time has turned to its original form which was current the day Allah created the heavens and earth. The year consists of twelve months of which four are sacred: three consecutive months, Dhu’l-Qa’dah, Dhu’l-Hijjah and Muharram, and Rajab of Mudar which comes between Jumada and Sha’baan.” [Hadith mentioned in al-Bukhaari (3167) and Muslim (1679) as narrated from Abu Bakrah (may Allah be pleased with him)]

islam on About the month of Muharram (Sacred Islamic Month)

The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) said: “The best fasting after Ramadan is the month of Allah Muharram, and the best prayer after the obligatory prayer is prayer at night.” Narrated by Muslim, 1163.

It was proven that the Prophet (peace and blessings of Allah be upon him) did not fast any month in full apart from Ramadan, so this hadith is to be understood as meaning that it is it is encouraged to fast a lot in the month of Muharram, not to fast the whole month.

Article published in

islam and quran
في امان الله

Your brother in Islam,
A Shabbir Ahmed

Abdul Karim Chisthi sent you an image file!

imageSent by WhatsApp

Press 1 for

🇮🇳P.T.SURESH🇮🇳: MAKKAL MANDRAM – கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தார்.
அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர்.
எப்படியாவது இன்று அவரைச் சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாகத் தீர்த்து வைக்க வேண்டும்.
அது முடியாவிட்டால் இனி மேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டி விட்டு வர வேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
வாடிக்கையாளரின் வீடானது அந்தத் தெருவின் இறுதியில் தனியாக இருந்தது.
தனது வண்டியை நிறுத்தி விட்டு, கேட்டினைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்.
கேட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது.
அதன் மேல் “உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி” என்று எழுதி இருந்தது.
அவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில் சென்றார்.
அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன.
அதனைப் பார்த்தாவாறே அவர் காலிங் பெல்லை அழுத்தினார்.
“வணக்கம்” என்ற குரல் கேட்டது.
அதிர்ச்சியுடன் பின் வாங்கினார். பின் குரல் தொடர்ந்தது…
“தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்…
ஃபார் இங்க்லீஷ் பிரஸ் நம்பர் 2…” என்று சொன்னது.
என்னடா இது விளையாட்டு… என்று நினைத்தவாறே எண் 1ஐ அழுத்தினார்.
இப்பொழுது “தெரிந்தவர் என்றால் எண் 1ஐ அழுத்தவும். தெரியாதவர் என்றால் எண் 2ஐ அழுத்தவும். கடன் வாங்க வந்தவர் என்றால் எண் 3ஐ அழுத்தவும். கடன் கொடுக்க வந்தவர் என்றால் எண் 4ஐ அழுத்தவும். பேசியே அறுப்பவர் என்றால் எண் 5ஐ அழுத்தவும். நண்பர் என்றால் எண் 6ஐ அழுத்தவும்.
சொந்தக்காரர் என்றால் எண் 7ஐ அழுத்தவும். கூட்டமாய் வந்திருந்தால் எண் 8ஐ அழுத்தவும். பால், பேப்பர், தபால் காரர் என்றால் எண் 9ஐ அழுத்தவும். மீண்டும் முதலில் இருந்து கேட்க எண் 0வை அழுத்தவும்” என்ற அறிவிப்பு வந்தது.
ஒன்றுமே புரியாதவராய் ஒரு அதிர்ச்சியுடன் கஸ்டமர் கேரில் வேலை பார்க்கும் அந்த நபர் எண் 2ஐ அழுத்தினார்.
மீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது…
“வணக்கம்… வாருங்கள்… வீட்டின் முதலாளி பணி காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்” என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது.
“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி… வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி… சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…” என்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது.
கஸ்டமர் கேர் மனிதர் வெறுத்துப் போய் விட்டார்.
பாடல் முடியும் முன்பே எண் 2ஐ அழுத்தினார்.
“அன்பரே… நீங்கள் முழுப் பாடலையும் கேட்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.
“நடக்கும் என்பார் நடக்காது… நடக்காதென்பார் நடந்து விடும்… கிடைக்கும் என்பார் கிடைக்காது… கிடைக்காதென்பார் கிடைத்து விடும்…”
மனுசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
நேரம் ஆக ஆக இவரும் சிறிது சிறிதாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.
பாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2ஐ அழுத்தினார்.
“மன்னிக்கவும். இன்று வீட்டு முதலாளியை உங்களால் சந்திக்க இயலாது. அவர் இப்பொழுது தூங்கி விட்டார். ஆனால் உங்களால் திரும்பிப் போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டுமென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும்” என அறிவித்தது.
தன்னைத் தானே நொந்து கொண்டவராய், “உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி” என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் நூறு ரூபாயைப் போட, கதவு திறந்து கொண்டது.
தன் கோபத்தை எல்லாம் அவர் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி வரை ஸ்டார்ட் ஆகவேயில்லை…
வேக வேகமாகத் தள்ளிக் கொண்டு, அந்த வீட்டை கோபமாகப் பார்த்தவாறே தன் வீடு நோக்கிக் கிளம்பினார்.
எங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது….
“எங்களுக்கும் காலம் வரும்…”

நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய இயற்கை வைத்தியம்

“நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவக் குறிப்புகள்  பற்றிப் பார்ப்போம் ”

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல்
அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல்

உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்( வயிற்றுப் போக்கு)

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கோபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கோபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடி க்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது ஆகும்

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு

கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள்

இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல்

மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

இயற்கை மருத்துவம்  முறைக்கு மாறுவோம் உடலை
ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு வாழ்வாங்கு  வாழ்வோம்…

“நோய் அணுகா விதி

“நோய் அணுகா விதி”

“சித்தர்கள் பாடல்”

“நாளிரண்டு
வாரமிரண்டு
மாதமிரண்டு
வருடமிரண்டு”

என்பது சித்தர்கள் வகுத்த மருத்துவ மொழியாகும்.

நாளிரண்டு :

ஒவ்வொரு நாளும் இருமுறை மலம் கழிக்க வேண்டும்.

வாரமிரண்டு :

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

மாதமிரண்டு :

மாதம் இருமுறை மட்டும் உடல் உறவு கொள்ள வேண்டும்.

வருடமிரண்டு:

ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டு வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

இவற்றை கடை பிடித்தால் நோய்கள் உடலில் தோன்றாது.

ஆரோக்யமாக வாழ முடியும்.

இவைகள் மட்டும் இல்லாமல் கர்ம வினைகளாலும் நோய்கள் தோன்றும் என்று அகத்தியர் பெருமான் கூறுகின்றார்.

“வாழ்க வளமுடன்”…

Post Navigation

%d bloggers like this: