Karim74's Weblog

my articles

Shahayam

மதுரை மேலுரில் பி.ஆர்.பி நிறுவனம் நரபலி கொடுத்தததாக கூறப்படும் இடத்தில் இருந்து எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மலம்பட்டி சுடுகாட்டில்  ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி, சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் முன்னிலையில், இன்று காலை 9 மணி முதல் 8 பேர் கொண்ட குழுவினர் உதவியுடன் சுடுகாட்டில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் பொக்லைன் உதவியுடன் அந்த இடத்தில் தோண்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்படி தோண்டும் போது சில தடையங்கள் அழிக்கப்படக்கூடும் என்பதால் மனிதர்களின் உதவியோடு அங்கு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, சுடுகாட்டில் சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டிய போது எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை  5 எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவற்றை மருத்துவ குழுவினர் சேகரித்து வருகின்றனர். நரபலி கொடுக்கபட்டதாக கூறப்பட்ட இடத்தில் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சில மாதங்களுக்கு முன் தைரியமாக வெளிக்கொண்டு வந்த கிரானைட் முறைகேடுகள், ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அதன்பின் பணிமாற்றம், அலைக்கழிப்பு,  என சகாயம் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சகாயத்தின் விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஆர்.பி. நிறுவனம் மன நலம் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களை நரபலி கொடுத்து ஓலைப்பாயில் சுருட்டி புல்டோசரில் குழி தோண்டி சின்ன மலம்பட்டி சுடுகாட்டில் ஒரு பனை மரத்தின் கீழ் புதைத்ததை நேரில் பார்த்ததாக மதுரை மாவட்டம் மேலூர் கீழவளைவை சேர்ந்த் சேவற்கொடியான் என்கிற பிரபு பகீர் புகாரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சகாயத்தை நேரில் சந்தித்து கொடுத்தார். முதலில் புகாரை வாங்கிய சகாயம், அந்த புகாரில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்று தனிப்படை அமைத்து விசாரித்து வந்தார்.

தற்போது, கிரானைட் விசாரனை இறுதிக்கட்டதை எட்டி, இன்னும் ஓரிரு நாட்களில் உயர் நீதிமன்றத்தில் சகாயம் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதிரடியாக மணிமுத்தாறு சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இருவரின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சகாயம் குழுவினர் நேற்று காலை 10:00 மணிக்கு சுடுகாட்டிற்கு வந்தனர். புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய 12 ஆம் தேதி காலையில் சகாயம் மாவட்ட நிர்வாகதிற்கும், காவல்துறைக்கும் முறைப்படி தகவலை அனுப்பிவிட்டு நரபலி கொடுத்து உடலை புதைத்த இடத்திற்க்கு சேவற்க்கொடியானுடன் அவர் வந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர், தாசில்தார் கிருஷ்ணண், ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பல்வேறு வேலைகளை கொடுத்து சம்பவ இடத்தில் இருந்து போகச் சொல்லிவிட்டனர். அதேபோல், பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவக்குழுவையும சம்பவ இடத்திற்க்கு அனுப்பாமல் இழுத்தடித்து. மதுரையில் இருந்து சென்ற 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவை, நான்கு மணி நேரமாக மேலூர் காவல் நிலையத்தில் உட்கார வைத்து மாலை ஆறு மணிக்கு மேல் மலம்பட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் சம்பவ இடதிற்க்கு சென்ற மருத்துவக்குழுவினர், சூரியன் மறைந்துவிட்டதால் இனி பிரேத பரிசோதனை செய்ய முடியாது. அதனால் பிணத்தை தொண்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.

நண்பகல் இரண்டு மணிக்கு மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் உங்களை அனுப்பிவிட்டதாக தகவல் சொன்னார்கள். ஆனால் நீங்கள் ஏன் இவ்வளவு தாமதமாக வந்துள்ளீர்கள் என்று சகாயம் கேட்டார். அதற்கு, இவ்வளவு நேரம் போலீஸ் என்கொயரி என்று சொன்னதோடு, மாவட்ட ஆட்சியர் சொன்னால்தான் வேலையை செய்வோம் என்று சகாயத்துடன் வாக்குவாதம் செய்தனர். சகாயம், ”இது உயர் நீதிமன்றம் அமைத்த சட்டப்பனிக்குழு. நான் அதன் ஆணையர் என்கிற முறையில் சொல்கிறேன் நீங்கள் பணியை தொடங்குங்கள்” என்றார். அதற்கு மருத்துவக்குழு, ”எங்களுக்கு ஆட்சியர் தான் எல்லாமே” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அதன் பிறகு ஏதோ சூழ்ச்சி நடப்பதை உனர்ந்த சகாயம், அந்த இடத்தைவிட்டு நகராமல் இரவு முழுவதும் சுடுகாட்டிலேயே இருக்கப்போவதாக கூறிவிட்டு, கீழே அட்டை, பேப்பர் போன்றவற்றை போட்டு அதில் அமர்ந்து விட்டார். அந்த சுடுக்காட்டில் மின்சார வசதி இல்லாமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகத்திடம் ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க சொல்லி கேட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. அதனால், அதிகாரி சகாயத்திற்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க பொது மக்கள் மேலூரில் இருந்து ஜெனரேட்டர் ஒன்றும் அதனை ஆப்ரேட்டிங் செய்ய ஆப்ரேட்டர் ஒருவரையும் மினி லாரியில் அழைத்து வந்தனர். ஆனால், வரும் வழியில் அந்த ஜெனரேட்டர் ஆபரேட்டரை மேலுர் காவல் உதவி ஆய்வாளர் அய்யனார் போகவிடாமல் தடுத்து அழைத்து சென்றதோடு, ஜெனரேட்டரில் இருந்த முக்கிய பாகம் ஒன்றையும் கழட்டி எடுத்து சென்று இருக்கிறார். 

அதனால், உணவை கூட சுடுகாட்டிற்கே வரவழைத்து உண்ட சகாயம் இரவு முழுவதும் பெட்ரோமாக்ஸ் லைட் உதவியுடன் கயிற்று கட்டிலில் சுடுகாட்டிலேயே படுத்து கிடந்தார். அவருடன், பொதுமக்களும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களும், சட்டப் பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்தவர்களும் இரவு முழுவதும் சகாயம் குழுவினருக்கு பாதுகாப்பாக இருந்தனர்.

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: