Karim74's Weblog

my articles

What?

ஒரு நாட்டில் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது .
ஒருவரை அரசனாக தேர்ந்தெடுப்பார்கள் .ஒரு வருடம் மட்டுமே அவன் அரசனாக இருக்கலாம் .
அந்த ஒரு வருடத்தில் அவன் விருப்பம் போல் வாழலாம் . 
அந்த ஒரு வருடம் முடிந்த பின் ஆள் இல்லாத தீவில் அவனை விட்டுவிட்டு வந்து விடுவார்கள் உணவு நீர் வீடு மனித நடமாட்டமில்லாத தீவில் அவன் வாழ வேண்டிய நிலை வரும் பிறகு அப்படியே சில நாட்களில் இறந்து விடுவான் .
ஆனால் அரசனாக இருந்த ஒரு வருட காலத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் அனுபவித்துக்கொள்ளலாம்.
எனவே மக்கள் அரசனாகவும் ஆசைப்பட்டார்கள் .அந்த ஒரு வருடத்திற்கு பிறகு உண்டான நிலையை நினைத்தும் பயந்தார்கள் .
அப்படிப்பட்ட வித்தியாசமான நாட்டில் ஒரு மனிதன் அரசனாக நியமிக்கப்பட்டான் .
ஒரு வருட காலத்தில் அவன் அனுபவிக்க வேண்டிய இன்பங்களையும் அனுபவித்தான் அதே நேரத்தில் ஒரு வருடம் முடிந்ததும் எந்த தீவில் அவன் விடப்படுவனோ அந்த தீவில் ஆறுகளை வெட்டி நீர் வர செய்தான் .உணவிற்காக மரங்களையும் ,தானியங்களையும் பயிரிட்டான் . வீட்டை கட்டினான் .தன மனைவி மக்களை அங்கே குடியமர்த்தினான். 
ஒரு வருடம் முடிந்து மக்கள் அந்த தீவிற்க்கு மக்கள் அவனை அனுப்பி விட்டார்கள் .
மற்ற அரசர்களை போல கலங்காமல் சென்றான் அங்கே ஏற்கனவே அனைத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருந்த அரசன் தன் மனைவி மக்களுடன் சிறப்பாக வாழ்ந்தான் .
இதில் யார் அறிவாளி ?? 
ஒரு வருடம் மட்டும் சுகபோகமாக வாழ்ந்த மற்ற அரசர்கள் அறிவாளியா ? அல்லது 
அந்த ஒரு வருட சுகத்தையும் அனுபவித்து அதன் பின் வாழப்போகும் வாழ்க்கைக்கும் தன்னை தயார் செய்து கொண்ட இந்த அரசன் அறிவாளியா ?? 
நம்முடைய வாழ்க்கையும் இவ்வுலகிலே அப்படித்தான் இருக்கிறது .
இவ்வுலக சுகத்தை அனுபவித்து மறு உலக இன்பத்தை மறந்து விடுகிறோம் .
அதற்காக இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க கூடாது என்றும் அல்லாஹ் தடுக்கவில்லை .
ரப்பனா ஆதினா பித்துன்யா ஹசனதவ் வபில் ஆகிரதி ஹசனா .இவ்வுலக இன்பங்களையும் மறு உலக இன்பங்களையும் எங்களுக்கு வழங்குவாயாக என்றே அல்லாஹ் கேட்க சொல்கிறான் . 
நாம் ஒரு வாழ்க்கையை மட்டும் சுகமாக அனுபவித்து மறு வாழ்க்கையை மறந்த நஷ்டவாளியாகிறோம் !

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: