Karim74's Weblog

my articles

Archive for the month “August, 2015”

Info

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

அந்த பதினாறும் எவை?

௧. கல்வி
௨. அறிவு
௩. ஆயுள்
௪. ஆற்றல்
௫. இளமை
௬. துணிவு
௭. பெருமை
௮. பொன்
௯. பொருள்
௧0. புகழ்
௧௧. நிலம்
௧௨. நன்மக்கள்
௧௩. நல்லொழுக்கம்
௧௪. நோயின்மை
௧௫. முயற்சி
௧௬. வெற்றி
———————————-
விளக்கம்!

கலையாத கல்வி
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்
அன்பான துணை
தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தடையற்ற கொடை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா வாழ்வு!

          முற்காலத்தில் மேற்கண்டவாறு பெரியவர்கள் வாழ்த்துவது என்பது மரபு.

          இனிவரும் நாட்களில் நாமும் அங்ஙனம் வாழ்த்தி மகிழ்வோமே!
          தமிழர்களின் இனிய பண்புகளை கடைபிடிப்போம்! அனைத்து சொந்தங்களுக்கும் எனது இனிய காலை வணக்கம்! 🙏

Advertisements

தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும் ஆண் குல சிங்கமா நீங்கள்.? அப்போ இது உங்களுக்குத்தான்..

தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும் ஆண் குல சிங்கமா நீங்கள்.? அப்போ இது உங்களுக்குத்தான்..!________________________________1. அப்பா அம்மாவோ வாத்தியாரோ, யாராவது அறிவுக்கெட்டவனே என்று திட்டினால், உடனே கோபம்கொள்ள கூடாது. அறிவுக்கெட்டவனை பிரித்து பாருங்கள்,–> அறிவு+Get+வனே. Get என்றால் ஆங்கிலத்தில் பெற்ற என்று அர்த்தம். ஆக அதை அறிவு பெற்றவனே என பொருள் கொள்ள வேண்டும்..!!________________________________2. நம்மை அதிகம் திட்டப்படும் இன்னொரு வார்த்தை”விளங்காதவனே” அந்த வார்த்தையையும் பிரியுங்கள்,–> விளங்கு+ஆதவனே.அதாவது விளங்குவதில் சூரியனே என்று அர்த்தம். ஆதவன் என்றால் சூரியன்..!!________________________________3.மேலும் ஆண்களை திட்ட பயன்படும் இன்னொரு வார்த்தை “தண்டச்சோறு” அதையும் பிரிப்போம்.–> தண்டம்+சோறு. தண்டம் என்றால் ஆங்கிலத்தில் Fine என்று அர்த்தம்.Fine என்பதற்கு நல்லது என்ற அர்த்தமும் உண்டு.ஆக ‘தண்டச்சோறு’ என்றால் ‘நல்லசோறு’ என்றுஅர்த்தப்படும்..!!ஆதலால் ஆண்களே, எதையும் ரிவர்ஸாக பார்போம்,ரிலாக்ஸாக இருப்போம்…!!.# என்ன நான் சொல்றது..?

image

Kuladhevam kovil important why?

P.T.SURESH: – குலதெய்வ வழிபாட்டின் அவசியம் அறிவோம் ..!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன ..?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது ..?
நமது குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிடமுடியாதது ..!
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் b நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் “குலதெய்வங்கள்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளையும் கூட நீக்க வல்லவை.
இன்று நம் அவசர வாழ்க்கையில் , இரண்டு தலைமுறை பாட்டன், பாட்டியின் பெயர்களுக்கு மேல் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது .
நம் முன்னோர்கள்…
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை. இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்..! இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டும்
– நாம் அங்கே போய் நின்று , அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம் தெரியுமா ..!
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே ..! ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் நாம் அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தந்தையின் குரோமோசோம் தான் முடிவு செய்கிறது. பெண்ணுக்கு xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. ஆணுக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. பெண்ணின் x உடன் ஆணின் y சேர்ந்தால் ஆண் குழந்தையும் ; இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது…
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும்,
முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு, தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்..!
பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்..!
பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை… ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது…
பெண்களுக்கு, பிறந்த வீட்டில் ஒன்று ; புகுந்த வீட்டில் ஒன்று என இரண்டு தெய்வங்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது… அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் யாரேனும் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
எல்லாம் சரி , ஆனால் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் என்ன செய்வது ..?
குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பு. மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம் எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.
ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும். இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி செல்லுங்கள் ..! (குறைந்தது வருடம் ஒரு முறையாவது)
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள் ..!
அக்கோவிலுக்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..!!!
தெய்வத்தின் அருளுடன் வாழ்க வளமுடனும் நலமுடனும் ..!!!

Color parrotta

வந்துடுச்சுங்க கலர் பரோட்டா…
விருதுநகர் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா நண்பர்கள் சொல்றாங்க…
ரொம்ப சீக்கிரத்துலயே தமிழ்நாடு முழுசுக்கும் வரலாம்…
எல்லாரும் சாப்பிட்டு வியாதிகளையும் கலர் கலராக்குவோம்…

image

image

11 hour

ஒ௫ தனியார் ஆஸ்பித்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள். இது அந்த​ ஆஸ்பித்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த​ அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது. பல​ நாடுகளிலிருந்து மிக​ சிறந்த​ மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர். மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன​ தான் நடக்கிறது என்று பார்க்க​ மிக​ பெரிய​ மருத்துவ​ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த​ குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ண ஆக​ போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க​…..

திடிரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேராமாக​ கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முணியம்மா… வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUGகை​ பிடுங்கிவிட்டு தனது செல் போணை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த​ அறையை பெருக்க​ ஆரம்பித்தாள்…

அடிங்கொய்யால…😁😁😁😁😁😁😁

College sing

Vasantha Maaligai  Remake Song:

“Yaarukkaaga Intha Degree Yaarukkaaga .

Arrear Ennum  Thoodhu Vanthathu.

Athu SEMESTER Endra  Vadivil  Vanthathu.

Clear Endru  Naan  Ninaithathu.

Indru  ARREARAKA  Maari Vitathu.

Arrearse PO PO PO Degreye VAA VAA VAA..,Yaarukkaaka Ha,Ha  Ha.

.Eluthungal En Kallaraiyil  HOD  Irakamilaathavan  Endru..

Paadungal En Kallaraiyil   Principal  Paithiyakaaran  Endru…….

Frwd to all college students..

Kid speaks to god

பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.

உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது,

அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது,

வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை :
இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் :
குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்

குழந்தை :
நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் :
இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா

குழந்தை :
என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் :
கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை :
மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் :
அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத்ப் தேவையில்லை.

குழந்தை :
(அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் :
(மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை :
உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கடவுள் :
வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை:
(மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் :
(குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை :
(மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் :
குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை
நீ
அம்மா
என்று
அழைப்பாய்.

கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….

தாய்மையை போற்றுவோம்

.
அம்மா பிடித்து இருந்தால் அதிகமாக பகிருஙக்ள் நண்பர்களே

👍🙏😄👏👌
👩👸👧👰👪

[ இரண்டு நிமிட குட்டி கதை

|- இரண்டு நிமிட குட்டி கதை
ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.

ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார். பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாம் நாளில் அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான்.

“முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம் நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று?” என்று முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கியிருந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்:

“நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன?” ரங்கன் சொன்னான்: “இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை அய்யா! நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமே!”

முதலாளி சொன்னார்: “ரங்கா, இந்த மண்வெட்டியைப் போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நமக்கு எவ்வளவோ  கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்!’

Self calc

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று
ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!!
அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த
கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு
கொண்டிருந்தார்..!!
.
பையன்: “மேடம் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும்
வேலையை எனக்கு கொடுக்க முடியுமா..”?
.
பெண்மணி: (எதிர் பக்கத்தில் பேசுபவர்)
“எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து
வருகிறார்..”!!
.
பையன்: “மேடம் அவருக்கு கொடுக்கும்
சம்பளத்தில் பாதி சம்பளம்
கொடுத்தால் போதும். நான் உங்கள்
தோட்டத்தை பராமரித்து தருகிறேன்..”!!
.
பெண்மணி: “இல்லை இப்பொழுது
பராமரிப்பவரின், பராமரிப்பில் தோட்டம்
நன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில்
மிகவும் திருப்தி அடைகிறேன்.”!!
.
பையன்: (இன்னும் பணிவோடு) மேடம் நான்
உங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட
தருவேன்..!!
அதற்காக தனியாக எனக்கு சம்பளம் தர
வேண்டாம்..”!!
.
பெண்மணி: “வேண்டாம்..! நன்றி”.!!
.
அந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன்
ரிசிவரை வைத்து விட்டு திரும்பினான்.!!
.
.அந்த கடை முதலாளி அவனிடம்.,
“எனக்கு உன்னுடைய அணுகுமுறையும்’
தோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர்
கொள்ளும் விதமும் பிடித்து இருக்கிறது..
நான் உனக்கு வேலை தருகிறேன் வருவாயா..”?
என்றார்.!
.
பையன்: “நன்றி..! எனக்கு வேலை வேண்டாம்”..!!
.
கடை முதலாளி: “இவ்வளவு நேரம் வேலைக்காக
மன்றாடிக் கொண்டிருந்தாயே..”?
.
பையன்: “இல்லை சார் நான் நன்றாக வேலை
செய்கிறேனா என்று தெரிந்து
கொள்ளத்தான் இப்படி
செய்தேன்..!!
எதிர் முனையில் பேசியவரின் தோட்டத்தை பராமரிக்கும்
தோட்டக்காரன் வேறு யாரும் இல்லை,
அது நான் தான்.!!!
.
இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு”.!!
.
நான் அப்படி செய்வேன்.. இப்படி
செய்வேன்.. என்று கூறுவது
தற்பெருமை..!!
நம் திறமையை அடுத்தவர் புகழ் பாட வேண்டும்
அதுவே திறமை.

Post Navigation

%d bloggers like this: