Karim74's Weblog

my articles

Joke

மே 2120:
அனைவருக்கும் வணக்கம். ‘அஜால் குஜால் Tvயின்’ தலைப்புச்செய்திகள் :

1. தமிழகத்தில் முன்னால் சுதந்திரப்போராட்ட வீரர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் ஆட்சியைக் கைப்பற்றினார்.
தன் தந்தையின் திட்டமான ‘அனைவருக்கும் போதை’ என்ற திட்டத்தை செயல்படுத்துவதே எனது முக்கிய நோக்கம் எனப் பேட்டியளித்தார்.

2.காதலித்தே பெண்ணையே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நெல்லை அருகே மாணவர் தற்கொலை.

3.இந்த ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் சத்துணவாக நாளொன்றுக்கு ஒரு பீட்சா,ஒரு பர்கர் வழங்கப்படும்-சத்துணவுத் துறை அமைச்சர் தகவல்.

4.2200 ல் இந்தியா கண்டிப்பாக வல்லரசு ஆகும்-அறிவியல் அறிஞர்கள் கணிப்பு.

5. திருச்சியில் நள்ளிரவில் வீட்டில் ரூபாய் 50,000 மதிப்புள்ள இரண்டு பாட்டில் தண்ணீர் திருடிய மர்மக்கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.

6. ஹரஹரமகாதேவகி சாமியின் பஜனை கோவையி்ல் நேற்றுத் தொடங்கியது.சாமிதரிசனம் காண மக்கள்வெள்ளம் அலைமோதல்.

7.தஞ்சையில் வீடுகட்ட குழித்தோண்டுகையில் முன்னோர்கள் பயன்படுத்திய அரிசி,பருப்புப் போன்ற அரிய வகைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்வத்துடனும் அதிசயத்துடன் பார்த்துச்சென்றனர்.

8.மதுரை அருகே இளம்வாலிபனை 4 பெண்கள் கற்பழிக்க முயற்சி-‘தமிழகத்தில் ஆண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’- எதிர்க்கட்சிகள் சாடல்.

9.பிரபல நடிகர் Powerstar ன் பேரன் Towerstar நடித்து வெளியான ‘நேத்துராத்திரி யம்மா’ படத்தின் இசைவெளியீடு நேற்று நடந்தது. ‘தன் தாத்தாவின் ஆசையான சூப்பர்ஸ்டார் பட்டத்தைத் தான் விரைவில் பெறப்போவதாக’ சபதம் எடுத்தார்.

10. பிரபல முன்னாள்நடிகர் சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படம் 100 ஆண்டுகள் கழித்து அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. ‘இதன்மூலம் தனது தாத்தாவின் ஆத்மா சாந்தி அடையும்’ என சிம்புவின் பேரன் கொம்பு தெரிவித்தார்.

11. பிரபல கிரிக்கெட்வீரர் தோனியின் பேரன் ‘ஜானி’ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு- ரசிகர்கள் அதிர்ச்சி.

12.செவ்வாய்க்கிரகத்தில் நடைபெற்றுவரும் கிரகங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில்
(PPL-Planets premier league)
Earth kings அணி Mars warriors அணியைத் தோற்கடித்தது.

13. 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் பருவமழை இந்த முறையாவது பெய்யுமா ?
-மக்கள் ஏக்கம்

நன்றி! வணக்கம்!

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: