Karim74's Weblog

my articles

Archive for the month “June, 2015”

Photo – படித்ததில் ரசித்தது… முதலிரவு அன்று ‘அலுப்பாக இருந்தால் தூங்கு’ என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு…….! காலையில் எனக்கு முன்பே விழித்து இருந்தாலும் நான் எழுப்பி விடும் வரை காத்திருப்பதும்…….’ கால் விரல்களில் இறுக்கமாக மாட்டிக்கொண்ட மிஞ்சியை (மெட்டி) பற்களாலேயே கடித்து எடுக்கும் போதும்…….! என் கர்ப்ப காலத்தில் என்னைவிடவும் என்னையும் குழந்தையையும் பேணி கவனித்துக்கொண்ட போதும்…….! விடுமுறை நாட்களில் கூட வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கும் போதும்……..! வேலைக்கு செல்லும் சமயத்தில் சாமி கும்பிட மறந்தாலும் என் நெற்றியில் முத்தமிட மறக்காத போதும்……..! செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அசிங்கமாக திட்டும்போதும்….! என் வீட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களிடம் பேச கூச்சப்படும் போதும்; ஆனால் அவர்களிடமும் மறக்காமல் என்னை கிண்டல் செய்யும் போதும்…….! என் பிறந்தநாளையும் எங்கள் திருமண நாளையும் மறந்து என்னிடம் மன்னிப்பு கேட்கும் போதும்..! மெகா சீரியல் அன்று கிரிக்கெட் இருந்தால் ஹைலைட்சிலேயே திருப்தி பட்டுக்கொள்ளும் போதும்…….! நினைத்துக்கொள்வேன்,…. ஏனென்றால்… நீ எனக்கு கிடைத்த வரம் என்று.. என்றும் இருப்பேன் உன் அன்பாக.. என்றும் உன் மீது எனக்கு அன்பு மாறாதுடா….

Photo – படித்ததில் ரசித்தது…

முதலிரவு அன்று ‘அலுப்பாக இருந்தால் தூங்கு’ என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு…….!
காலையில் எனக்கு முன்பே விழித்து இருந்தாலும் நான் எழுப்பி விடும் வரை காத்திருப்பதும்…….’
கால் விரல்களில் இறுக்கமாக மாட்டிக்கொண்ட மிஞ்சியை (மெட்டி) பற்களாலேயே கடித்து எடுக்கும் போதும்…….!
என் கர்ப்ப காலத்தில் என்னைவிடவும் என்னையும் குழந்தையையும் பேணி கவனித்துக்கொண்ட போதும்…….!
விடுமுறை நாட்களில் கூட வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கும் போதும்……..!
வேலைக்கு செல்லும் சமயத்தில் சாமி கும்பிட மறந்தாலும் என் நெற்றியில் முத்தமிட மறக்காத போதும்……..!
செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அசிங்கமாக திட்டும்போதும்….!
என் வீட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களிடம் பேச கூச்சப்படும் போதும்; ஆனால் அவர்களிடமும் மறக்காமல் என்னை கிண்டல் செய்யும் போதும்…….!
என் பிறந்தநாளையும் எங்கள் திருமண நாளையும் மறந்து என்னிடம் மன்னிப்பு கேட்கும் போதும்..!
மெகா சீரியல் அன்று கிரிக்கெட் இருந்தால் ஹைலைட்சிலேயே திருப்தி பட்டுக்கொள்ளும் போதும்…….! நினைத்துக்கொள்வேன்,….
ஏனென்றால்…
நீ எனக்கு கிடைத்த வரம் என்று.. என்றும் இருப்பேன் உன் அன்பாக.. என்றும் உன் மீது எனக்கு அன்பு மாறாதுடா….

Advertisements

மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும்,

மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட கடல் பிரவ்னின் கூட்டத்தை முழ்கடித்ததும் நாம் அறிந்ததே!! இது குரானின் அத்தாட்சியாகும்.

செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமானதும் எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடல். எகிப்து முதல் எதியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும் செங்கடல் இருக்கிறது. இதில் மூன்று குடாக்கள் காணப்படுகின்றன. சுயஸ் குடா (Gulf of Sues) ,அகபா குடா (Gulf of Aqaba) மற்றும் ஏடன் குடா (Gulf of Adan).

இவ்வளவு நீளமான செங்கடலின் எந்த இடத்தில் கடல் பிளவுபட்டு மூஸா(அலை) அவர்களின் கூட்டத்திற்கு வழிவிடப்பட்டது என்ற கேள்வி பலஆண்டுகளாக அகல்வாராய்ச்சியாலர்கள் மத்தியில் இருந்ததுவந்தது. ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ச்சி செய்து வந்தபோது, அகபா குடாவின் ஒரு இடத்தில் இருகரைகளும் தொடர்ச்சியான கற்குன்றுகளாக இருந்தபோதும் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் இருகரைகளிலும் அசாதாரணமான மண்மேடுகள் காணப்படுவதை ரான் வையாத் என்ற ஆய்வாளர் அவதானித்தார். ஒரு கரை சவுதியின் பக்கமும் மற்றைய கரை எகிப்தின் பக்கமும் இருந்தது. இதில் எகிப்தின் பக்கம் இருக்கும் கடற்கரை நுவைபா (Nuweiba Beach) என்று அழைக்கபட்டது. இந்த இரண்டு இடங்களையும் மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கடலிலும் கரையிலும் ஆராய்ச்சி செய்தபோது அதிசயிக்கத்தக்க பல தடயங்களை கண்டுபிடிக்கப்பட்டது.

கடலின் அடியில் மூழ்கடிக்கப்பட்ட பிரவ்னின் கூட்டத்தின் வண்டிகளின் சக்கரங்கள், ஆயுத தளபாடங்கள் மற்றும் எலும்பு கூடுகள் இருந்த அதேவேளை அந்த குறிப்பிட்ட இடம் மட்டும் ஆழம் குறைந்த நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் அவற்றை காணலாம். இவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்திலான சில சக்கரங்கள் சவூதி நூதனசாலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதேநேரம் கடலில் ஆராய்ச்சியை முடித்து விட்டு பார்த்தால், எகிப்தின் நுவைபா கடற்கரையிலும், அதற்கு நேரான சவுதியின் கரையிலும் கிரனைடிலான உயர்ந்த இரு தூண்கள் காணப்பட்டன.பல வருட தேடலின் பின்னர் தற்போதுதான் கடல் பிளந்த இடத்தை நாம் கண்டுபிடித்து இருக்கும் போது, இந்த இடத்தில் இதற்கு முன்னர் இந்த தூண்களை உருவாக்கியது யார், எதற்கு என்ற ஆச்சரியமான கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மூளையை குடைந்ததது . பின்னர் அந்த அதிசய தூணை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, அதில் இருந்த பழைய அரமைக் மற்றும் ஹிப்ரு எழுத்துக்களை கொண்டு அது பெரும்பாலும் சுலைமான் (அலை) அவர்களால் கடல் பிளந்த அதிசய இடத்தை அடையாளம் காணும் வகையில் உருவாக்கியிருக்கலாம் என்று அறியப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா தனது பக்கம் இருந்த தூணை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கொடிகம்பம் ஒன்றை நாட்டி இருக்கிறது. எனினும் எகிப்தின் நுவைபா கடற்கரையில் இருக்கும் தூண் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது .

மேலதிக ஆராய்ச்சிகளின் பயனாக இந்த பகுதிக்கு மிக அண்மையில் இருக்கும் ஜபல் எல் லவுஸ் என்ற (தூர்சீனா) மலையடிவாரம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு மூஸா (அலை) அவர்களால் கல் பிளக்கப்பட்டு தண்ணீர் வந்த கல்லும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மலையடிவாரம் ஒருசில காரணங்களுக்காக தற்போது சவூதி அரசினால் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.( இணைக்கப்பட்ட படங்களில் அவற்றை காணலாம்)

image

image

image

image

image

image

image

‪#‎Engineering_Facts‬ grin emoticon wink

‪#‎Engineering_Facts‬ grin emoticon wink emoticon Get More: facebook.com/Elec.Eng.World http://ow.ly/OyM5y

After a meeting I was coming out of a ho

After a meeting I was coming out of a hotel and I was looking for my car keys. They were not in my pockets. A quick search in the meeting room… it wasn’t there. Suddenly I realized I must have left them in the car. My husband has shouted many times for leaving the keys in the ignition. My theory is, the ignition is the best place not to lose them. His theory is that the car will be stolen. Immediately I rushed to the parking lot, I came to a terrifying conclusion. His theor…y was right. The parking lot was empty. I immediately called the police. I gave them my location, car number and description of the place where I parked etc. I equally confessed that I had left my keys in the car, and that it had been stolen. Then I made the most difficult call of all, to my husband!!! “Honey,” I stammered; I always call him “honey” in times like these. “I left my keys in the car, and it has been stolen. ” There was a period of silence. I thought the call had been dropped, but then I heard his voice. “Idiot”, he shouted, “I dropped you at the hotel !” Now it was my time to be silent. Embarrassed, I said, “Well, come and get me.” He shouted again, “I will, as soon as I manage to convince this policeman that I have not stolen your car.” See More http://ow.ly/OyM0k

சவுக்கடி

சவுக்கடி. . . .
 
நான் தமிழன், நான் தமிழன் என்று வெறுமனே மார்த் தட்டிக்கொள்ளும் தமிழின நண்பர்களுக்கு, நமது ஒற்றுமையையும், நாம் தமிழ் இனத்திற்கு தரும் ஆதரவைப் பற்றியும் ஓர் சிறிய பதிவு.
 
ஈழ மக்களை கொன்று ஒழித்த சிங்களவனை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த ஐநா சபை   (ஐக்கிய நாடுகள் சபை) ஒரு கோரிக்கை கேட்டுக் கொண்டது.   அதற்கு 10 இலட்சம் பேர் கையொப்பமிட அதற்கான இணைய தள இனிப்பான http://www.tgte-icc.org  என்ற தகவல் வாட்ஸ் ஆப்பில் பரவியதைத் தொடர்ந்து நான் அந்த இணைய  தளத்திற்கு சென்று எனது பெயரை பதிவு செய்கையில் இன்று வரை (16/06/2015) மொத்தம் 1,35,877 கையெழுத்துக்கள் மட்டுமே உலக நாடுகளில் இலங்கை உட்பட இருக்கும் உண்மையான தமிழர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
 
இதில் குறிப்பாக, இந்தியாவில்  மட்டும்  வெறும் 78537 பேர்  மட்டுமே மிக சொற்ப எண்ணிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
 
இதில் வெட்கப்படவும், வேதனைப்படவும், அசிங்கப்படவும் உள்ள விஷயம் என்னவென்றால், நம் தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகை 2012-ன் படி 6.25கோடி இதில் 2% பேர் கையெழுத்திட்டாலே போதும்.  ஐநா சபை கோரிய 10இலட்சம் கையெழுத்து வந்துவிடும்.  ஆனால், அது நடக்கவில்லை. 
 
 
தமிழினத்திற்கு ஆதரவு தர மறுப்பதற்கு காரணம் என்ன? பயமா? அதில் பெயர் பதிவு செய்வதால் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடாது! ! ! தைரியமாக கையெழுத்திடுங்கள்.  நாம் இப்போது கூட ஒன்று சேராவிட்டால் ஒரு நாள் நம் நாட்டிலேயே அன்னியர்கள் புகுந்து அனைவரையும் அனைத்து விதமாக சூரையாடும்போது இதே போல் தான் வேடிக்கை பார்க்க வேண்டி வரும்.
 
எனவே, தயவு கூர்ந்து 10இலட்சத்திற்கும் மேலான கையெழுத்துக்களை பதிவு செய்து நமது ஒற்றுமையை நிலை நாட்டு தமிழினமே. . . .

BEST in the world:-

BEST in the world:-

Leader:
A L L A H

Guide:
Q U R A N

LifeStyle:
I S L A M

Person:
M U M I N

Personality:
M O H A M M A D

Routine:
S U N N A T

Law:
S H A R I A T

Lyrics:
A Z A A N

Loyalty:
E M A A N

Request:
D U A

Protection:
S A D Q A

Oath:
K A L M A

Exercise:
N A M A Z

Control:
R O Z A

Charity:
Z A K A T

Tour:
H A J J

Decision:
S A B A R

Action:
N E K I

Hobby.
S A L W A T

Hope:
We’ll try 2 be the best INSHAALLAH.
We  Know  That.?

Gravity  Was  Discovered  By
‘Newton’
==
Radio Was  Invented  By
‘Marconi’
==
Telephone Was Invented By
‘Graham Bell’
==

👉But  Do  We  Know.?
==
👉1. ‘Soap’  Was  Invented  By Hazarat Saleh  Allehesaalam 👍
==
👉2. ‘Bridge’  By  Hazarat Yousuf  Allehesaalam
==👍
👉3. ‘Boat’  By Hazarat Nuh’ Allehesaalam👍
==
👉4. ‘Mirror’  By Hazarat Suleman Allehesaalam 👍
==
👉5 .’Needle’  By Hazarat Idrees      Allehesaalam 👍
==
👉6. ‘Comb’  By Hazarat Ibrahim Allehesaalam 👍
==
👉7. ‘Fountain-Pen’  By
‘ Imaam  Moiz’ Radiallahutalaanhu 👍
==

👉Send  This  To  Everyone
For  The  World  To  Know.!!👈
🏤”ISLAM” ‘Is’ ‘A’ ‘School’,
💻”DEEN” ‘Is’ ‘A’ ‘Class’,
🌍”DUNIYA” ‘Is’ ‘A’ ‘Campus’,
👪’WE’ ‘Are’ ‘Student’,
📖”QURAN” ‘Is’ ‘Sylabus’,
🌷 Zakat is our Investment
📝”Ramzan” ‘is ‘”Test”
🎎”NAMAZ” ‘Is’ ‘Practical’,
🎓MOHAMMAD” Sallallahu Alaihi Wasallam ‘Is’ ‘Teacher’,
☝”ALLAH” ‘Is’ ‘Examiner’,&
📰’Qayamat ‘Is ‘Date ‘Of ‘Result’
👉’So,”TRY’ ‘To ‘Get’ ‘good marks .

📩Forward to all
Jazakallahu khair

Joke3

விடிய விடிய

டீவி ஓடினாலும்

அதால ஒரு இன்ச் நகர முடியுமா?

_________________________________________________________________________________________________
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசியில காச கரியாக்குவாங்க!

நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!
_________________________________________________________________________________________________
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.

ஆனா,

முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!

– எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்
_________________________________________________________________________________________________
Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!

ஆனா,

பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!

கொஞ்சம் யோசிங்க!!!

– பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்
_________________________________________________________________________________________________
ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.

அப்ப,

பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
_________________________________________________________________________________________________
ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.

ஆனா

Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?
_________________________________________________________________________________________________
வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.

ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1

தெரிஞ்சுகிட்டியா?
_________________________________________________________________________________________________
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ‘ மேனேஜர் நாயைக் காணோம்’னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..
_________________________________________________________________________________________________
நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்

என் இதய துடிப்பு அதிகரிக்கிறது

ஆயிரம் மடங்கு!

ஏன் தெரியுமா?
சாதரணமா பேய் கடந்து போனா

அப்படிதான் ஆகும்.

நெப்பொலியன் : ‘முடியாது’ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.
அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

_________________________________________________________________________________________________
டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ , கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, ………
_________________________________________________________________________________________________
தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க

அன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க

காசு இருந்தா கால் பண்ணுங்க

எல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க
 
 
 
By
 
எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்.
✌REALLY TRUE✌

தத்துவம் சொல்லி நாளாச்சி…

🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊

தண்ணீர் மேல
படகு போனா உல்லாசம்.
ஆனா,
படகு மேல தண்ணீர்
போனா கைலாசம்.

நெக்ஸ்டு

🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲

Back
வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண
முடியாது.

அப்புறம்

🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻

டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்
வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும்.

ரைட்டு…

🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵

பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்
ஆயிடும்
ஆனா,
பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம்
ஆகுமா?

அடுத்து

💉💊💉💊💉💊💉💊💉💊💉💊

என்னதான் MBBS படிச்சி டாக்டர்
ஆனாலும் கம்ப்யுட்டர்ல
இருக்கற
வைரசுக்கு மாத்திரை குடுக்க
முடயுமா? ,,, யோசிப்பா, யோசி,

last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.

REALLY   REALLY  TRUE ☝☝☝☝

📝📔📝📔📝📔📝📔📝📔📝📔📝

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது. ‘

நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா ????

😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
குரூப்ல கலாட்டா இருக்கும்
கலாட்டால குரூப் இருக்க
முடியாது
ஷோஃபாவில் படுத்து
யோசிப்போர் சங்கம்

எப்புடி இஇஇ👀👀👀

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! ++++++++++++

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
+++++++++++++++++++++++++++++++
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்
குழந்தையாக இருக்கும் போது அவனுடைய
உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர
வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற
எலும்புகளுடன் இணைந்து விடுகிறது…
2. நாம் 6
விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.
சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25
கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்…
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள்
ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில்
சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக
வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம்
தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்
இடது கால் செருப்பை விட வலதுகாலின்
செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த
சிறு வித்தியாசத்தால் தான்…
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள்
தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4
நாட்களை வரை செயல் படுகிறது. தோல்
தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்
மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்
பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம்
தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக
அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல்
உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்
லை…5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்
ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்
பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.
இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள
பெண்களுக்கு குழந்தை பிறப்பும்
சற்று முன்னாடியே (குறை பிரச வம்)
அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்
கவனம் கொள்ள வேண்டும்…
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8
மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம்
பகலில் நமது வேலைகள்
செய்யும்போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள்
ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால்
உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்
தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால்
நமது உடம்பின் உயரம் கூடுகிறது…
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம்
127 நாட்கள் தான் அதன்
பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள்
உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்
ஆயுட்காலம் 120 நாட்கள்…
8. நம் உடலில் சுமார் 20 லட்சம்
வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6
லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன…
9. நமது கைகளில் நடுவிரலில் நகம்
வேகமாகவும், கட்டை விர லில் நக ம்
மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல்
பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்
மெதுவாக வளர்கிறது…
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல்
தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,
இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்…
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்
குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்
கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4
முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும்,
அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது…
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித
உறுப்பு கட் டை விரல்கள்…
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம்
தாடை எலும்பு…
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்
தண்ணீரைக் கொண்டதாகும்…
15. கல்லீரல் 500 விதமான
இயக்கங்களை நிகழ்த்துகிறது…
16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630…
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம்
பங்கு ரத்தம் உள்ளது…
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த
ு இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1
மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன…
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்
வயது வரை வளர்கிறது…
20. மனித முகங்களை மொத்தம் 520
வகைகளுக்குள் அடக்கி விடலாம்…
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ…
22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9
லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்
போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும்
போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்
தேவைப்படுகிறது…
23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும்
மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்
ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால்
போன்றவற்றால் பாதிப்படைகிறது…
24.பெண்களைவிட
ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது.
பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்
ஆண்கள் மூளையில் இருக்கிறது…
25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்…
26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்…
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4
வயதுக்குள் கிடைத்து விடும்…
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க
நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும்
பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம்
கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்
கிடை யாது…
29. மூளையின்
மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது…
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30
அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்…
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /
கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற
வேறுபாடே தெரியாது…
32. மனித உடலின் தோலின் எடை 27
கிலோ கிராம்…
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன…
34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,
முழங்காலை மாற்றலாம். ஆனால்
மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம்
ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற
முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்
தான் அவன் அந்நியன் தான்…
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண்
இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்
விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும்
போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்
அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்
போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந
்து கண்ணீர் வினியோகம் ஆகிறது…
36. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.
ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்
இறந்து புது செல்கள் பிறக்கின்றன…
37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம்
வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல்
இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்
வளர்கிறது…
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54
தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது…
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்
இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம்
ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை,
கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால்
போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்…
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்
தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்
திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது…
41. நமது உடலின் நீளமான
எலும்பு தொடை எலும்பு தான்…
42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500
சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது…
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்
உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே…
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்
கூடுதலாக வியர்க்கிறது…
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13
வைட்டமின்கள்…
46. உடலில் ரத்தம் பாயாத
பகுதி கருவிழி மட்டுமே…
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்
பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்
உட்கொள்கிறோம்..
.48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர
அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள்
இருக்கின்றன…
49. நம்முடைய தலை ஒரே எலும்பால்
உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும்…
50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்
உள்ளதாகவும், பெண்களின் முடியை விட
ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும்
அறியப்படுகிறது..
.51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்
தூங்கி விடுகின்றான்…
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன
சென்டி மீட்டர்…
53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000
முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன்
முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக
இவ்வளவு வார்த்தைகளைத்தான்
பயன்படுத்துகிறார்கள்…
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள்
உள்ளன…
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம்
வளர்கிறது..
.56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040
தடவை சுவாசிக்கின்றோம்…
57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின்
எண்ணிக்கை 46 (23 ஜோடி)..
58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள்
வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்..
.59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும்
இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.
இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது…
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும்
வளரும்…
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த
சிவப்பணுக்கள் உள்ளன…
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
.63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக
குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி,
வயிற்றுப் போக்கு ஏற்படும்.
.64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்
எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்
வியர்வை வெளியிடுகிறான்..
65. சிந்தனையின் வேகம்
அல்லது ஒரு யோசனையின் தூரம்
என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்..
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்
அதிகமாக துடிக்கிறது…
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்
நுனிவரை உள்ள நீளமும், மேவாய்
கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள
நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..
68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30
கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்..
69. உடலில் உண்டாகும் உஷ்ணம்
வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்
முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்
இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம்
30 செகண்டு ஆகும்..
.71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்
ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய
அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்
மனிதனுக்கு கோபம் வருகிறது…
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம்
ஆகும்.
..73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக
நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்
ஆணுக்கு பெண்குணமும்,
பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்…
74. தானாக
மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்
ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது…
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50
லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்
22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால்
மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை..
.76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்.
அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்
என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான்
அவரவர் இதயம் இருக்கும்…
77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள
‘ஆலவியோலி’ என் னும் சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்
ஆனது..
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள்
உள்ளன..80. மனிதனுக்கு 3 வகையான பற்கள்
உண்டு..
81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள்
9000 உள்ளன..
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள்
உள்ளன.
83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும்
தசை நாக்கு..
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான
பகுதி மூளை,மூளையின்
வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால்
உருவானது..
85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம்
தூங்குகிறான்.
.86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½
லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள்.
இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம்
நிரப்பலாம்.
.87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600
மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார்
375 முறை ஏற் படுகிறது..
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம்
தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4
கோடி தடவை..
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20
சதுரஅடிகள்.
.91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20
ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900
பென்சில்களை உரு வாக்கலாம்.
.93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7
பார் சோப்புகளை செய்ய லாம்..
94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல
ஆணி ஒன்று செய்யலாம்..
95. மனித உடலில் அதிகமாக காணப்படும்
தாதுப்பொருள் கால்சியம்..
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்
நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்
வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது…
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்
குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால
் உபரியாக காற்றை உள்வாங்க
கொட்டாவி விடுகிறோம்…
98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின்
எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும்
நின்று விடுகிறது.
இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்
சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத
அளவிற்கு வளர்ச்சி…
99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான்
என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள்
வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..

Joke

மே 2120:
அனைவருக்கும் வணக்கம். ‘அஜால் குஜால் Tvயின்’ தலைப்புச்செய்திகள் :

1. தமிழகத்தில் முன்னால் சுதந்திரப்போராட்ட வீரர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் ஆட்சியைக் கைப்பற்றினார்.
தன் தந்தையின் திட்டமான ‘அனைவருக்கும் போதை’ என்ற திட்டத்தை செயல்படுத்துவதே எனது முக்கிய நோக்கம் எனப் பேட்டியளித்தார்.

2.காதலித்தே பெண்ணையே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நெல்லை அருகே மாணவர் தற்கொலை.

3.இந்த ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் சத்துணவாக நாளொன்றுக்கு ஒரு பீட்சா,ஒரு பர்கர் வழங்கப்படும்-சத்துணவுத் துறை அமைச்சர் தகவல்.

4.2200 ல் இந்தியா கண்டிப்பாக வல்லரசு ஆகும்-அறிவியல் அறிஞர்கள் கணிப்பு.

5. திருச்சியில் நள்ளிரவில் வீட்டில் ரூபாய் 50,000 மதிப்புள்ள இரண்டு பாட்டில் தண்ணீர் திருடிய மர்மக்கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.

6. ஹரஹரமகாதேவகி சாமியின் பஜனை கோவையி்ல் நேற்றுத் தொடங்கியது.சாமிதரிசனம் காண மக்கள்வெள்ளம் அலைமோதல்.

7.தஞ்சையில் வீடுகட்ட குழித்தோண்டுகையில் முன்னோர்கள் பயன்படுத்திய அரிசி,பருப்புப் போன்ற அரிய வகைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்வத்துடனும் அதிசயத்துடன் பார்த்துச்சென்றனர்.

8.மதுரை அருகே இளம்வாலிபனை 4 பெண்கள் கற்பழிக்க முயற்சி-‘தமிழகத்தில் ஆண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’- எதிர்க்கட்சிகள் சாடல்.

9.பிரபல நடிகர் Powerstar ன் பேரன் Towerstar நடித்து வெளியான ‘நேத்துராத்திரி யம்மா’ படத்தின் இசைவெளியீடு நேற்று நடந்தது. ‘தன் தாத்தாவின் ஆசையான சூப்பர்ஸ்டார் பட்டத்தைத் தான் விரைவில் பெறப்போவதாக’ சபதம் எடுத்தார்.

10. பிரபல முன்னாள்நடிகர் சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படம் 100 ஆண்டுகள் கழித்து அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. ‘இதன்மூலம் தனது தாத்தாவின் ஆத்மா சாந்தி அடையும்’ என சிம்புவின் பேரன் கொம்பு தெரிவித்தார்.

11. பிரபல கிரிக்கெட்வீரர் தோனியின் பேரன் ‘ஜானி’ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு- ரசிகர்கள் அதிர்ச்சி.

12.செவ்வாய்க்கிரகத்தில் நடைபெற்றுவரும் கிரகங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில்
(PPL-Planets premier league)
Earth kings அணி Mars warriors அணியைத் தோற்கடித்தது.

13. 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் பருவமழை இந்த முறையாவது பெய்யுமா ?
-மக்கள் ஏக்கம்

நன்றி! வணக்கம்!

Post Navigation

%d bloggers like this: