Karim74's Weblog

my articles

வழிப்பறிச் சாவடிகள்

வழிப்பறிச் சாவடிகள்

அரசின் ஆசியோடு தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாகனங்களில் செல்பவர்களிடம் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இனி அந்த சாலைகளில் செல்ல வேண்டும் என்றால், வழிப்பறிச் சாவடிகள் தற்போது நிர்ணயித்திருக்கும் பணத்தை கொடுத்தால் மட்டுமே, சாலையை கடக்க முடியும் என நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிராவில்தான் 1995ல் பாஜக- சிவசேனா கூட்டணி அரசில் சாலைகள் தனியார்மயமாக்கப்பட்டன. அதாவது தனியார் நிறுவனங்கள் சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.பின்னர் அதற்கு செலவிட்ட பணத்தை வட்டியுடன் சேர்த்து மக்களிடம் வசூலித்துக் கொள்ள வேண்டும். அப்படி வசூலித்து முடிந்த பின்னர் அதனை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். உருவாக்கு – பயன்படுத்து – ஒப்படை என்ற அடிப்படையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் இதே பாணியில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தங்க நாற்கரச் சாலை திட்டம் நாடு முழுவதும், அரசு தனியார் கூட்டு (பிபிபி) என்ற பெயரில் துவங்கப்பட்டது. தற்போது இந்த சாலைகள் நெடுக சுங்கச்சாவடி என்ற பெயரில் தனியார் கார்ப்பரேட்களின் வழிப்பறிச் சாவடிகள் மக்களை வழிமறித்து நிற்கின்றன.நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 352 சுங்கச் சாவடி மையங்கள் இருக்கின்றன.இதில் தமிழகத் தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் இருக்கின்றன.
இந்த வசூல் மையங்களின் பல்வேறு மோசடிகள் அம்பலமாகியிருக்கின்றன. ஆனாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய-மாநில அரசுகள் கள்ள மவுனம் காக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை- புனே அதிவிரைவு சாலை,காம்கோன்-ஜல்னா புறவழிச்சாலையில தனியார் நிறுவனங்கள் சுங்கவரி என்ற பெயரில் பல்லாயிரங்கோடிகளை சுருட்டியிருந்ததை பொதுக்கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை அம்பலப்படுத்தியது.
அதேபோல் மும்பையின் 5 மையங்களில் மட்டும் சாலைப் பணிக்காக ரூ.2100 கோடி முதலீடு செய்த தனியார் நிறுவனத்திற்கு, ரூ.14 ஆயிரத்து 524 கோடி வசூலிக்க அனுமதி வழங்கியிருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
தமிழகத்தில் சென்னை – திருச்சி சாலை, பரனூரில் 90 கி.மீ சாலைக்கு ரூ.80 கோடி செலவிட்ட தனியார் நிறுவனம். செங்கல்பட்டு அருகே பரனூரில் சுங்கச்சாவடி அமைத்து கடந்த பத்தாண்டில் மட்டும் ரூ. 2,268 சுருட்டியிருக்கிறது என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. இப்படி நாடு முழுவதும் இந்த பகல்கொள்ளை தொடர்கிறது.

ஆனால் இந்த அடாவடிக் கொள்ளை குறித்து மத்திய-மாநில அரசுகள் இன்றுவரை வாய்திறக்கவில்லை. ஏன் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தும் போது, அந்தபில்லில் தனியாரின் கடன் எவ்வளவு கழிந்திருக்கிறது என்பதையும் இணைத்தே கொடுக்க முடியும். அப்படி கொடுத்தால் அரசு மற்றும் தனியார் கார்ப்பரேட்களின் கூட்டுக் கொள்ளை முச்சந்திக்கு வந்துவிடும்.
அதனால்தான் காங்கிரஸ், பாஜக கட்சிகள் பிபிபி திட்டக் கணக்குகளை மத்திய கணக்கு தணிக்கைக் குழு, தணிக்கை செய்யக் கூடவே, கூடாது என தவமிருக்கின்றன. தேர்தலுக்கு முன்பு டோல் கேட்டிற்கு எதிராக வரிந்து கட்டிய மோடி, தற்போது டோல் கேட்டின் தடுப்பு மரமாக தனியாருக்காக வளைந்து நிற்கிறார்.

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: