Karim74's Weblog

my articles

அல்வா’ மாவட்டம் ‘அருவா’ மாவட்டமாக மாறலாமா?

அல்வா’ மாவட்டம் ‘அருவா’
மாவட்டமாக மாறலாமா?

அல்வாவிற்கு பெயர்போன திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றைக்கு கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ‘அல்வா’ மாவட்டம் ‘அருவா’ மாவட்டமாக மாறலாமா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்தளவிற்கு உள்ளது என்பதற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டச் சம்பவங்களே உதாரணம்.காவல்துறையில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. ஆனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் வேகம் இல்லை. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தது.

சிபிசிஐடி பிரிவு விசாரித்தது. ஆனால் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத் துறையில் பணியாற்றிய ஆறுமுகம் தனதுமனைவியுடன் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நான் காண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் சிக்கவில்லை.கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். ஆனால், ஒரு துண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டால் சாப்பிட்டவருக்கு தண் டனை உறுதி. இது தான் இன்றைய நிலை.எல்லா மாநிலங்களிலும் அதிகாரப்பூர்வமாக முதல்வர், டிஜிபி, தலைமைச் செயலாளர் இருப்பது நடைமுறை.

ஆனால் தமிழகத்தில் தான் முதல்வர், மக்கள் முதல்வர், டிஜிபி, சிறப்பு டிஜிபி (ஒய்வு பெற்றவர்), தலைமைச் செயலாளர், சிறப்பு ஆலோசகர் (ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர்) என்ற பொறுப்புகளெல்லாம் வழங்கப்படுகின்றன. –

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: