Karim74's Weblog

my articles

— காவி வெறியர்களின் கழிசடைத்தனம் …

image


— காவி வெறியர்களின் கழிசடைத்தனம் …

குமரிமாவட்டம் அத்திக்கடை பகுதியை சேர்ந்த நதீசா என்ற முஸ்லிம் பெண் பக்கத்து ஊரான ஈத்தாமொளியைச் சேர்ந்த பரமசிவன் ஆசாரி என்ற ஹிந்து பையனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டாள். இதனால் அவளை ஜமாத்தை விட்டு நீக்கியது அத்திக்கடை ஜமாஅத் நிர்வாகம்.
இது நடந்து நாலு வருடம் ஆகிவிட்டது .
அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

இந்த நிலையில் மாவட்ட பிஜேபி மற்றும் சில ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் கெட்ட எண்ணத்தோடு ஈத்தாமொழியில் நதீசாவின் பெற்றோர் உட்பட பதினைந்து முஸ்லிம்கள் ஹிந்து மதத்தில் சேர இருப்பதாக புரளியைக் கிளப்பினார்கள். பத்திரிகைகளுக்கும் தகவல் கொடுத்தார்கள்.

இந்த செய்தியை அறிந்த பாப்புலர் பிரன்ட் அமைப்பைச் சேர்ந்த சிலர் காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு ” நதீசா ஹிந்து மத ஆளை கல்யாணம் செய்து கொண்டு நாலு வருசத்திற்கு முன்னாலேயே அங்கே போய் விட்டார். புதிதாக பதினைந்து முஸ்லிம்கள் ஹிந்து மதத்தில் சேருவது ஏன் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடப்பதாக இருந்தால் காவல்துறை அதை தடுத்து நிறுத்த வேண்டும் ” என்றார்கள்.
பாப்புலர் பிரன்ட் தொண்டர்களும் சமுதாயப் பொதுமக்களும் அங்கே திரண்டார்கள்.

உடனே காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
காவிகள் சொன்னதுபோல் அங்கே எந்த முஸ்லிமும் மதம் மாறவில்லை.
அன்று பரமசிவன் நதீசா தம்பதியின் பெண்குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் . அதை மதம் மாற்றும் நிகழ்ச்சியாக பிரபலப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் கேவலமான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் இந்த காவிகள். மேலும் ஒரு முஸ்லிம் பெண்ணை மதம் மாற்றி கல்யாணம் செய்ததற்காக கட்சியிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் வாங்கித் தருவதாக ஆசை காட்டி இந்த சம்பவத்தை விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள் என்று ஈத்தாமொழி ஜமாஅத் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
இவர்கள் சொன்னதை உண்மையென்று மாலைமலரும் செய்தி வெளியிட்டது. அதே நிர்வாகத்திற்குச் சொந்தமான தினத்தந்தி அதே செய்தியை மறுநாள் வேறு மாதிரி வெளியிட்டது .
காவிகளின் இதுபோன்ற தில்லு முல்லு பொய் பிரச்சாரங்களை எங்கேயும் யாரும் நம்ப வேண்டாம்.
எந்த முஸ்லிமும் எதற்காகவும் ஆசைப்பட்டு மதம் மாற மாட்டான் என்பது காவிகளுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்.
Sent by WhatsApp

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: