Karim74's Weblog

my articles

Archive for the month “April, 2014”

Mushawarat condemns whole-sale death sen

Mushawarat condemns whole-sale death sentences in Egypt

All India Muslim Majlis-e-Mushawarat

Original_aimmm-logo-white
New Delhi, 28 April 2014: All India Muslim Majlis-e Mushawarat, the umbrella body of Indian Muslim organizations, condemned the reckless and wholesale death sentences issued today in Egypt against another set of 683 political opponents of the putschist regime which toppled the democratically elected President of Egypt last July and has since continued to break one world record after another in persecution of its political opponents. Persons sentenced to death today include Dr Muhammad Badie, head of the Egyptian mass organization, Muslim Brotherhood. The same Egyptian judge, after a summary trial, had earlier sent 528 political detainees to the gallows only a month ago in a case of political protest and attack on a police station in which one police officer was reportedly killed.

Mushawarat forcefully condemned this judicial murder in Egypt under an illegitimate government. Mushawarat President Dr Zafarul-Islam Khan requested human rights organisations all over the world, especially the UN and EU human rights commissions, to take note of the blatant violations of human rights being committed by the Egyptian putschist government and to take it to the World Court of Justice and to boycott it internationally.

مشاورت نے مصرمیں تھوک سے جاری ہونے والے پھانسی کے احکامات کی مذمت کی
ئی دلی، ۲۸ اپریل ۲۰۱۴: ہندوستانی مسلم تنظیموں کی وفاق آل انڈیا مسلم مجلس مشاورت نے آج یہاں مصر میں تھوک کے بھاؤ جاری ہونے والے پھانسی کے احکامات کی سخت مذمت کی۔ آج ۲۸ اپریل کو مصر کی ایک عدالت نے انقلاب کے ذریعہ آنے والی فوجی حکومت کے ۶۸۳ سیاسی مخالفین کو پھانسی کی سزادی ہے جوکہ ایک بین الاقوامی ریکارڈ ہے۔ جن لوگوں کے خلاف آج سزائے موت سنائی گئی ہے ان میں مصری عوامی تحریک الاخوان المسلمون کے سربراہ ڈاکٹر محمد بدیع بھی شامل ہیں۔ آج سزا سنانے والا جج وہی شخص ہے جس نے ایک ماہ قبل ۵۲۸ اشخاص کو صرف دوبار کیس کی سماعت کرکے پھانسی پر بھیجا تھا حالانکہ اس کیس میں ان سب پر مظاہرہ کرنے اور ایک پولیس افسر کے قتل کا الزام تھا۔

مشاورت نے سخت الفاظ میں اس عدالتی قتل کی مذمت کی جوکہ ایک غیر قانونی حکومت کے زیر سایہ ہورہا ہے۔ صدر مشاورت ڈاکٹر ظفرالاسلام خان نے حقوق انسانی کی تنظیموں اور بالخصوص اقوام متحدہ اور یوروپین یونین کے ہیومن رائٹس کمیشنوں سے درخواست کی کہ وہ حقوق انسانی کے خلاف ان غیر معمولی تجاوزات کا نوٹس لیں اور مصر کی انقلابی حکومت کو بین الاقوامی عدالت کے سامنے لے جائیں اور اس کا عالمی بائیکاٹ کریں۔
(ختم)

Issued at New Delhi on 28 April 2014 by

Advertisements

தேர்தல் திருவிழா நிறைவடைந்த வேளையில் என்

தேர்தல் திருவிழா நிறைவடைந்த வேளையில் என்னுடைய இந்த தலைப்பு மிகவும் வியப்பாக இருக்கும்.
இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் யாருக்கும் வாக்களிக்காதவர்களுக்காக நோட்டா என்ற ஒன்றை அறிமுகபடுத்தியது .இந்த பட்டனை, எந்த வேட்பாளரையும் விரும்பாத வாக்காளர்கள் வாக்கு சாவடி வரை வந்து இந்த நோட்டா என்ற பட்டனை அழுத்த வேண்டும். இது ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரங்கள் விழும் ஆனால் 1.50 கோடி எப்படி வரும் என்று ஒரு கேள்வி வரும். அதற்கு என்னுடைய விளக்கமும் காரணமும்.
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை வாக்கு சாவடிக்கு வந்து நோட்டா பட்டனை அழுத்தும் போது அந்த ஓட்டு நோட்டா என்ற அங்கீகாரம் அடைகிறது. ஆனால், என்னுடைய கணக்கு வாக்கு சாவடிக்கே வராமல் விடுமுறையாக இருந்தும் வீட்டில் பொழுதை கழிக்கும் ஒவொவொரு வாக்காளரும் நோட்டா தான். அந்த அடிப்படையில் தமிழ் நாட்டில் 5.50 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஓட்டு போட்டவர்கள் 75% மட்டுமே. மீதம் 1.37 கோடி பேர் ஓட்டு போடவில்லை . அதோடு அங்கீகாரம் பெற்ற நோட்டா 40 தொகுதிக்கும் குறைந்தது 40,000 நோட்டா கண்டிப்பாக இருக்கும் ஆக மொத்தம் 1.50 கோடிக்கு மேல் கணக்கு வருகிறது .இதில் நடக்க முடியாத அளவுக்கு நோயாளிகள், வெளிநாட்டில் இருப்பவர்கள், அவசரமாக வெளி ஊர் சென்றவர்களை கழித்தால் என்னுடைய நோட்டா கணக்கு 1.50 கோடியை மிஞ்சி விடும். இப்போது நோட்டா என்ற நிலைக்கு வாக்காளர்கள் தள்ளப்பட்ட காரணங்களை ஆராய்வோம்.
நாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டில் வாக்காளர்களாக இருக்கலாம் ஆனால், தொலைக்காட்சி முன்பு அமர்ந்தால் காஸ்மீரில் பேசும் ஒரு தேசிய தலைவரின் உரையை கேட்கமுடியும். குஜராத்தில் ஒரு கட்சிகாரர் பேசுகிறார். மோடியை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் தேர்தல் முடிந்தவுடன் பாகிஸ்தான் செல்ல வேண்டும் அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று இன்னொருவர் உத்தரபிரதேசத்தில் பேசுகிறார் முசாபர் நகர் கலவரத்துக்கு பழிவாங்க இந்த தேர்தல் சரியான ஆயுதம் என்று. இப்படி பல பல பேச்சுக்களை கேட்ட மக்கள் அரசியல் கட்சிகளை வெறுத்து இருக்கலாம்.
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு குற்றவாளியை தூக்கிலிட்டு அந்த உடலை பாகிஸ்தானுக்கு அனுப்ப முன் வந்த இந்த அரசு, ஒரு இந்தியனை தூக்கிலிட்டு, அந்த செய்தியை அவனது குடும்பத்துக்கு தாமதமாக தெரிவித்ததோடு அவசர அவசரமாக அந்த மனிதரை சிறை வளாகத்திலேயே சமாதி கட்டியதை மனித நேயம் உள்ள எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. காரணம் குற்றம் நிருபிக்கப்படாத அவருக்கு இந்த நிலை. மறுபுறம் பாரத பிரதமரையே கொன்றவர்கள் 20 வருடங்களுக்கு மேலாக உயிரோடு இருக்கிறார்கள். அடுத்ததாக வானமே இடிந்தாலும் பேசாத பிரதமர். இது போன்ற காரணங்களால் மக்கள் ஆளும் அரசை வெறுத்து இருக்கலாம். இது தேசிய நிலவரம் .
தமிழகத்தில் முதல்வரை காணும் இடங்களில் எல்லாம் காலில் விழும் அமைச்சர்கள், கூனிகுருகி நிற்கும் வேட்பாளர்கள் என்று தினம் தினம் பார்த்த மக்கள், சுயமரியாதையை இழந்த இவர்களுக்கு ஓட்டு போட்டு நாம் ஏன் சுயமரியாதையை இழக்க வேண்டும் என்று நினைத்து இருக்கலாம்.
இன்னொரு கட்சி இருக்கிறது 2ஜி முறைகேட்டில் இந்தியாவையே அதிர வைத்தவருக்கு மீண்டும் சீட்டு. அமைச்சராக இருந்து தன்னுடைய அதிகாரத்தை சுயநலத்துக்கு பயன்படுத்திய ஒருவருக்கு மீண்டும் சீட்டு. இப்படியான கேலி கூத்துகளை மக்கள் விரும்பாமல் இருக்கலாம்.
இன்னொரு அரசியல்வாதி சொன்னார் நீங்கள் ஓட்டுக்கு 200 ருபாய் பணம் வாங்கினால் (அதை ஐந்து வருடங்களுக்கு வகுத்தால் ஒரு நாளுக்கு 10 பைசா வருகிறது) அது பிச்சையை விட கேவலம் என்று சொல்லாமல் சொன்னதால் மக்களுக்கு ரோசம் வந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் பதிவாகியுள்ள 75% ஓட்டும் நோட்டாவாக ஆவதற்கு முன்னால் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் திருந்தி கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.
– நெயினார் முகம்மது (கலீல்), வீரசோழன்
http://www.inneram.com/opinions/readers/5930-nota-votes-in-tamilnadu.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+inneram+%28இந்நேரம்.காம்%29
http://www.inneram.com/opinions/readers/5930-nota-votes-in-tamilnadu.html
INNERAM.COM

ALAVUDEEN

😴Sleeping after Fajr?  😵Finding it difficult to stay up?
 Spirit is willing …but flesh is weak…soul wants to encash on the barakah.. but the body does not oblige…

 Read on dear sisters …to find out what we are missing out on… Subhanallah!

The time after Fajr is a time of immense barakah (blessings). 
Why would it not be filled with blessings…. when Rasoolullah (salla Allahu alaihi wa sallam) made the following dua for his Ummah?
”O Allah, bless my Ummah (in their work) in the early part of the morning” (Tirmidhi).
It is however, obvious that to receive this barakah one will have to be awake. A person sleeping at this time is deprived of these blessings.

DETESTABLE

Sleeping after Fajr is a detestable practice, unless it is due to weakness, illness or any other valid reason.
If one needs to sleep, he should do so after sunrise, although it is better to take a short nap in the afternoon

”SHOOK HIM AWAKE”

Abdullah bin Umar (R.A.) once passed by a person sleeping after Fajr Salaah. Abdullah (R.A.) shook him awake and remarked: “Don’t you know that Allah pays particular attention to His creation at this part of the morning and out of His sheer mercy He admits a great number of people into Jannah” (Majma’uz Zawaid Lil-Haythami—Vol.2, Pg,.70).

According to another hadith  – Rasoolullah (salla Allahu alaihi wa sallam) is reported to have declared:
“Sleeping in the morning hinders sustenance” (Majma’uz Zawaid—Vol.4, Pg.111).

💧RIZQ💧

Aisha (R.A.) narrates that Rasoolullah (salla Allahu alaihi wa sallam) said: “Search for your rizq (sustenance) in the morning because the morning is a time of blessing and success” (Ibid).

The word “rizq” is a comprehensive word which includes:
spiritual progress, physical well-being, one’s livelihood, academic work, household duties, etc.
Any work done at this time is guaranteed to have barakah.
There will also be much ease and greater hope of success.

The habit of sleeping after Fajr should therefore be changed.
This time should be used especially for recitation/memorization of the Qur’an, dhikr or any other work. Many great Ulema even disliked talking at this time unless it was something urgent. Genuine necessity is nevertheless excluded.

It Is not Haram or forbidden to sleep after fajr or Asr for that matter… but as mentioned above there is barakah in that time..

Sleeping after Fajr and ‘Asr – islamqa.info – http://islamqa.info/en/2063

May Allah grant us the ability to maximise on the barakah of the fajr time. Aameen.

2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு

2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி!
அச்சிடுக
மின்-அஞ்சல்
விவரங்கள்

வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014 00:01
2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி!
நடைபெற்று கொண்டிருக்கும் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து மோடியை ஒரு “வளர்ச்சி நாயகனாக” சித்தரித்து விளையாடிக் கொண்டிருக்கிறது.
குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையால் ஆதங்கத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம் சமூகமும், “மோடி ஒரு கொலைவெறியர்” என்ற கண்ணோட்டத்தில் சமூக ஆர்வலர்களும், “மோடி ஒரு மதவெறியர்” என்ற பார்வையில் மதச்சார்பற்றோரும், “குஜராத் வளர்ச்சி என்பது அப்பட்டமான பொய்” என்று குவியும் ஆவணங்களின் அடிப்படையில் நடுநிலையாளர்களும், பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனர்.
ஒருவேளை மோடி பிரதமர் ஆகிவிட்டால், “குஜராத் போன்றே நாடெங்கும் ஹிந்துத்துவ வெறியர்களால் அதிகார மையத்தின் ஆதரவுடன் இரத்த ஆறு ஓட்டப்படலாம்” என்ற அச்சமே இந்த எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணம். ஆனால் உண்மையில் அவ்வாறானதொரு அச்சம் கொள்வதற்கான நிலைமையில் தற்போதைய இந்திய அரசியல் சூழல் இல்லை என்பது தான் யதார்த்த நிலை. எவ்வளவுதான் பகீரதப் பிரயத்தனம் நடத்தினாலும் பாஜகவால் இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. இனிவரும் காலங்களில் காங்கிரஸாகட்டும்; பாஜகவாகட்டும்; மத்தியில் தனித்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு மிக அரிது. ஒருவேளை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிட்டாலும்கூட ஹிந்துத்துவம் தயாராக்கி வைத்திருக்கும் “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்” ஆகியோரை முதலில் அழித்தொழிக்கும் ஃபாஸிச சித்தாந்தத்தைச் செயல்படுத்துவது இந்நவீன காலத்தில் சாத்தியம் இல்லை. அப்படி ஒருவேளை நடந்தால் இந்தியா முழுக்க இரத்த ஆறு ஓடும். அது இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகள் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும்.
இந்த உண்மை, மோடியை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ் அறியாத ஒன்றல்ல. எனினும், முன்பு தாம் முன்னிறுத்திய கட்சியின் மூத்த தலைவர் அத்வானி போன்றோரின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, தற்போது மோடியைப் பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ் துடிப்பது ஏன்? இதற்கான பதில் கிடைக்கவேண்டுமெனில், “மோடி என்ற வளர்ச்சி மாயை”யைச் சற்று மறந்து அதையும்தாண்டி சிந்திக்கவேண்டும். அவ்வாறு மக்கள் ஆழமாக சிந்தித்துவிடாமல் இருக்கும் பணியையும் இரத்தக்கறை படிந்த மோடி பிம்பம் கவனித்துக்கொள்கிறது!
குறிப்பாக, மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த தருணத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலிடம் “இனிமேல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. சமூக நலப்பணிகளை மட்டுமே ஆர்.எஸ்.எஸ் மேற்கொள்ளும்” என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து தம்மீதான தடையினை நீக்கிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ், இந்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக கொடுத்த வாக்குறுதியினை மிக வெளிப்படையாக மீறி – இதற்காகவே மீண்டும் இந்திய அரசால் தடை செய்யப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்தும் அது குறித்து கவலையே கொள்ளாமல், முதன் முதலாக இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக களமிறங்க வேண்டிய அளவுக்கான கட்டாயம் என்ன நேர்ந்தது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தம் கொள்கைகளை மிக நிதானமாக நீண்டகால திட்டத்தோடே செயல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், தனிப்பெரும்பான்மை பெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாத இத்தருணத்தில் மோடியைப் பிரதமராக்கியே தீருவது என்று நேரடியாக களமிறங்கியுள்ளதன் நோக்கம் “குஜராத் சாம்ப்பிளை வைத்து நாடு முழுவதும் சோதிப்பதற்கல்ல”!
பின்னர்?
அதையும் தாண்டி, ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுத்து கொண்டு வந்துள்ள, ஹிந்துத்துவா சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்தும் ஒரே நம்பிக்கையான “சங்கத்தைப்” பாதுகாப்பதுதான் இதன் பின்னணி ரகசியம்! இதுவே ஆர்.எஸ்.எஸ்ஸை வரவிருக்கும் ஆபத்திலிருந்து காக்கும்!
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆபத்தா? அதெப்படி?
மோடி சுனாமி(!)யால் நாம் மறக்கடிக்கப்பட்டிருக்கும் சில முக்கிய விசயங்களைப் பார்ப்போம்.
கார்கரே – இப்பெயர் நினைவுள்ளதா?
நினைவுள்ளது எனில், கீழ்கண்ட பெயர்களை வரிசையாக படியுங்கள்.
– ப்ரக்யா சிங் தாக்கூர்
– கர்னல் ப்ரோகித்
– அசிமானந்தா
– சுனில் ஜோஷி
– இந்திரேஷ் குமார்
– மோகன் பகவத்
இதேவரிசையில் இப்பெயர்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு இடையில் நடந்துள்ள சில முக்கிய விசயங்களைப் பார்ப்போம்.
“ஹிந்துத்துவ ராஷ்டிரம்” என்ற ஒற்றைக் கனவுடன் இயங்கும் ஹிந்துத்துவா, அதற்காக தயாராக்கிய திட்ட வரைபடத்தின் முக்கிய மூன்று மூர்த்திகள் – சாது, சங்கம், சர்க்கார்!
சாதுக்களைக் கொண்டு…

Hi

ஒரு நாள் ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கட

ஒரு நாள் ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்..
திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் போட்டு நாய் கழுத்தில் மாட்டிவிட்டார்.
நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாக நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…
கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.
கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது.
கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார். நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது.
கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்.
கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …???
அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.
Note : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது. ^AK

http://www.kazhuku.com/2014/04/blog-post

http://www.kazhuku.com/2014/04/blog-post.html

மோடி என்னும் மாயை…..விழித்துக் கொள்ளுங்கள் வாக்காளர்களே…!

Sunday, April 20, 2014 கழுகு 4 comments

நான் என் குடும்பத்தாரோடு உறங்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று என் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. நிறைய பேர் கூட்டமாய் கத்திக் கொண்டு என் வீட்டு கதவை உடைப்பது போல தட்டி ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருக்கின்றனர். பயத்தில் எழுந்து என்ன ஏது என்று யோசிப்பதற்கு முன்பே என் வீட்டுக் கதவு உடைக்கப்படுகிறது…. திபு திபுவென்று கோஷமிட்டபடியே என் வீட்டிற்குள் நுழைந்த கூட்டம் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து இழுத்துச் செல்கிறது. என் குழந்தையை இரும்புக் குழாய் கொண்டு இடது பக்கத் தலையில் ஒருவன் அடிக்கிறான், ஆக்ரோஷமாய் அந்தக் கூட்டம் இதை ஏன் செய்கிறதென்றே என்று எனக்குப் பிடிபடவில்லை.

என் வீட்டை எரிக்கத் தொடங்குகிறது கூட்டம்…. இரண்டு பேர் சேர்த்து என்னைப் பிடித்துக் கொண்டு தாக்கத் தொடங்குகிறார்கள். என் தலை உடைந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. என் வீட்டுக்கு வெளியேயும் பக்கத்து வீட்டிலும் கூட இதுவேதான் நடந்து கொண்டிருக்கிறது. என்னைகீழே தள்ளி மிதித்து முசல்மான் நாயே என்று ஒருவன் கத்தியபடியே என் வலது காலை வெட்டி எறிகிறான்….

கையெடுத்து கும்பிட்டு விட்டுவிடும்படி என் பிள்ளை கதற, ஈவு இரக்கமின்றி பிள்ளை மீது பெட்ரோல் ஊற்றி எரித்தே விடுகிறான் ஒரு பாவி…..

காரணம்………

கோத்ராவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இந்துப் புனிதப் பயணிகள் 57 பேர் ரயில் பெட்டியோடு எரிக்கப்பட்டு விட்டனராம். அவர்கள் வந்த ரயில் பெட்டியில் எப்படி தீ பற்றிக் கொண்டது என்று விசாரிக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல் இதைச் செய்யது முஸ்லீம்களாகத்தான் இருக்கவேண்டும் என்று கருதி ஒட்டு மொத்த குஜராத் வாழ் இஸ்லாமியர்களையும் அடித்துக் கொல்கிறார்கள். படுகொலைகள் செய்கிறார்கள்….அப்போது எதுவுமே அறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எனக்கோ, அல்லது நம் உறவுகள் யாருக்கோ நான் மேலே கூறிய யாவும் நடந்திருந்தால் அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் நண்பர்களே….?????

ஒரு மாநிலத்தில் இப்படி கட்டுக்கடங்காமல் மதத்தின் பேரால், அனுமானத்தின் பேரால் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் அதுவும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என்றும் பாராமல் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த போது வேடிக்கைப் பார்த்த அந்த மாநிலத்தின் காவல் துறையையும், பாராமுகமாய் இருந்த அந்த மாநில முதலமைச்சரையும், நீங்களும் நானும் மன்னிக்க முடியுமா என் சொந்தங்களே….?

நரேந்திர மோடி……மட்டும் நினைத்திருந்தால் கலவரம் தொடங்கியதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். தனக்கும் தன் மாநில அரசுக்கும் வக்கில்லை என்றால் அவர் இந்திய பெருதேசத்தின் இராணுவத்தின் உதவியைக் கோரியிருந்திருக்கலாம். அவர் அப்படி செய்யவில்லை. இது நிகழட்டும் என்று அனுமதிக்க விட்ட அவரின் மனோநிலையின் அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு சித்தாந்தம் பெரு நாகமாய் படுத்துக் கிடந்ததே அதற்கு காரணம்.

இன் த நேம் ஆஃப் ஃபெய்த் என்ற டாக்குமென்ட்ரி காணொளியைக் தொடர்ச்சியாய் என்னால் காணவே முடியவில்லை. வெறித்தனமாய் சூறையாடப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அங்கே வெகு கோரமாய் காணமுடிந்தது. பாலகர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்கள் மழலை மொழியில் அந்த வன்முறைச் செய்திகளைக் கேட்டறிந்த போது கூனிக் குறுகிப் போனேன் நான். ஈழத்தில் நடத்தப்பட்ட வன் கொடுமைகளுக்கு யாதொரு குறைவும் இல்லாமல் குஜராத்தில் ஈனத்தனமான மதவெறியாட்டம் நடந்தேறியிருக்கிறது என்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது. இலங்கை வேறு நாடு, வேறு சட்டம், வேறு நோக்கம், என்று அங்கே எல்லவிதமான கொடுங்கோல்களும் நிகழ சாத்தியமான சிங்களப் பேரினவாத அரசு இன அழிப்புக்கு பின்னால் இருந்ததனால் அப்படி நிகழ்ந்தேறியது என்று எண்ணி மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர நமக்கு சாத்தியமிருக்கிறது.

குஜராத் அப்படி அல்ல…. அது இந்திய தேசத்தின் வலப்பக்கத்தில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு மாநிலம். அந்த மாநிலத்தில்தான் நம் தேசப்பிதா பிறந்தார். ஒழுக்கம் கெட்ட வேலைகளை அண்டை நாடுகளில் செய்து உலக அரசியல் அரங்கில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளச் செய்யும் ஈன வேலையை இந்திய அரசு இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு மாநிலத்தில் செய்யாது என்ற நம்பிக்கை வேறு நம்மிடம் நிறைய உண்டு. சாத்வீக பூமி, பாரத மாதா, ஜனநாயகமுள்ள மதச்சார்பற்ற பூமி என்றெல்லாம் சொல்லி மார்தட்டிக் கொள்ள நிறைவே சமாச்சாரங்கள் இருக்கும் இந்த இந்திய தேசத்தில்தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான உச்சகட்ட இனப்படுகொலை நிகழ்ந்தேறி இருக்கிறது.

குஜராத் கலவரத்திற்குப் பிறகு தொடர்சியாய் மோடிஜிதான் அங்கே…

Mushawarat criticises Election Commissio

Mushawarat criticises Election Commission’s double-standards and inactivity, asks Supreme Court to intervene

All India Muslim Majlis-e-Mushawarat

Original_aimmm-logo-white
New Delhi, 21 April 2014: All India Muslim Majlis-e Mushawarat, the umbrella body of Indian Muslim organizations, said here today that the Election Commission of India is playing partisan politics by removing the ban on Amit Shah while retaining the same in the case of Azam Khan. The Election Commission has also failed to take action against umpteen BJP leaders who have crossed all limits during the current electoral campaign, like Giriraj Singh saying that “opponents of Modi will be sent to Pakistan” or Vasundra Raje saying “we will see who is cut to pieces after the election,” or Nitin Gadkari saying that “casteism is in the DNA of Bihar” or Parveen Togadia saying that Muslims will be expelled to Pakistan and reminding them of Muzaffarnagar, Khokhrajhar and Gujarat 2002, etc. etc.

Mushawarat president Dr. Zafarul-Islam Khan said: since the Election Commission has developed cold feet to tackle the BJP-RSS hate juggernaut, Supreme Court of India should take suo motto notice by appointing an SIT to probe the hatemongering by Sangh Parivar people during the current election campaign and bring the culprits to book. Mushawarat chief has written a letter in this connection to the Chief Justice of India.

الیکشن کمیشن کے دوہرے معیار اور سستی کی مذمت کرتے ہوئے
مشاورت نے سپریم کورٹ کی مداخلت کا مطالبہ کیا

نئی دلی، ۲۱ اپریل ۲۰۱۴: مسلم تنظیموں کی وفاق آل انڈیا مسلم مجلس مشاورت نے آج یہاں کہا کہ الیکشن کمیشن آف انڈیا نے اعظم خان پر پابندی جار ی ر کھتے ہوئے امیت شاہ پر سے پابندی ہٹا کر جانبداری کا ثبوت دیا ہے۔ مشاورت نے کہا کہ الیکشن کمیشن بی جے پی کے لیڈروں کے خلاف ایکشن لینے میں بھی ناکام رہا ہے حالانکہ ان لوگوں نے حالیہ انتخابی حملے کے دوران تمام حدود پارکر دی ہیں مثلا گریراج سنگھ کا کہنا کہ مودی کے مخالفین کو پاکستان بھیج دیا جائے گا ، وسندھرا راجے کا کہنا کہ الیکشن کے بعد دیکھیں گے کہ کس کے ٹکڑے ہوتے ہیں، یا نتن گڈکری کا کہنا کہ ذات پات بہار کے ڈی این اے میں شامل ہے ، یا پروین توگڑیا کا کہنا کہ ہم سارے مسلمانوں کو پاکستان دھکیل دیں گے اور اس کا مسلمانوں کو مظفر نگر، کھوکھراجھار اور گجرات ۲۰۰۲ یاد دلانا، وغیرہ، وغیرہ۔

صدر مشاورت ڈاکٹر ظفر الاسلام خان نے کہا کہ کیونکہ الیکشن کمیشن بی جے پی اور آر ایس ایس کے نفرت انگیز حملوں کا نوٹس لینے میں ناکام ہوگیا ہے، سپریم کورٹ کو سوو موٹو نوٹس لیتے ہوئے اسپیشل انوسٹگیشن ٹیم کی تشکیل کرنی چاہئے کہ موجود انتخابی حملوں میں سنگھ پریوار نے کس طرح نفرت پھیلانے کا کام کیا ہے اور تحقیقات کے نتائج کی روشنی میں مجرمین کو قرار واقعی سزا دے ۔ صدر مشاورت نے اس سلسلہ میں چیف جسٹس آف انڈیا کو خط بھی لکھا ہے۔

விலைபோன ஊடகங்களின் தவறான சித்தரிப்பின் க

விலைபோன ஊடகங்களின் தவறான சித்தரிப்பின்
காரணமாக மோடி நாட்டின்
பிரதமராகிவிட்டால் அப்போது இந்திய
முஸ்லிம்களின் நிலை என்னவாகும்?
-அப்துல் கபூர், சேலம்.
பதில் :
விலை கொடுத்து வாங்கப்பட்ட
ஊடகங்கள் தான் மோடி பிரதமராவார் என்ற
மாயையை ஏற்படுத்தி வருகின்றன.
அதற்கு சாத்தியமில்லை என்றுதான் அரசியல்
நோக்கர்கள் கணிக்கிறார்கள்.
எனவே மோடி ஆட்சியை பிடித்தால்
இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் இதற்காக
அஞ்சத் தேவையில்லை. ஆட்சியையும் அதிகாரத்தையும்
பயன்படுத்தி முஸ்லிம்களை ஒடுக்க நினைத்தால்
முஸ்லிம்கள் மத்தியில் அதிக
விழிப்புணர்வு ஏற்படும்.
பெயரளவிற்கு முஸ்லிம்களாக
வாழ்பவர்களும் உண்மை முஸ்லிம்களாக
வாழும் நிலை ஏற்படும்.
சமுதாயத்தைப் பற்றி அக் கரையில்லாமல்
வாழ்ந்த பொறுப்பற்ற முஸ்லிம்கள்
சமுதாய உணர்வு பெறுவார்கள்.
அபூஜஹில் வகையறாக்களின்
அடக்கு முறை களுக்குப் பின்னால்
இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக
இணைந்ததுபோல் அக்கிரமத்தை விரும்பாத
பெரும்பாலான இந்து சகோதரர்கள்
இஸ்லாத்தில் இணைவது அதிகரிக்கும்.
சிறிய சமுதாயத்தை ஏன் நசுக்குகிறார்கள் என
சிந்திக்கத் தலைப்பட்டு இஸ்லாத்தில்
தம்மை இணைத்துக் கொள்வார்கள்.
பாதிக்கப்படும் முஸ்லிம்கள் அறவழியில்
போராட்டம் நடத்துவது நசுக்கப்பட்டால்
இதனால் விரக்தி அடையும் மக்களில்
ஐந்து விழுக்காடு மக்கள் ஜனநாயகம்
அல்லாத வேறு பாதைக்குத் திரும்பினால்,
அவர்களை எந்த முஸ்லிம் தலைவர்களாலும்
கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
காவல்துறைக்கும் இராணு வத்திற்கும்
அஞ்சாத நிலை ஏற்பட்டு சாகத் துணிந்த
மக்களை யாராலும் ஒன்றும் செய்ய
முடியாது. மோடி வகையாறாக்களுக்கு
மூளை சிறிதளவாவது இருந்தால், இதுபோன்ற
ஆபத்தான முடிவை எடுக்க மாட்டார்கள்.
குஜராத்தைப்போல் எல்லா முஸ்லிம்களும்
இருக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த
நடந்து கொள்வார்கள்.
மன்னராட்சி நடக்கும் கற்காலத்தில் நாம்
வாழவில்லை. உலக
நாடுகளை அனுசரித்து ஆட்சி நடத்தும் காலத்தில்
நாம் வாழ்கிறோம்.
சிறுபான்மை மக்களை நசுக்கி அடக்கி ஒடுக்கும்
ஆட்சி நடத்தினால், வல்லரசுகளான கிறித்தவ
நாடுகளும், அண்டை நாடுகளான முஸ்லிம்
நாடுகளும், பொருளதாரத் தடை போன்ற
நடவடிக்கை எடுப்பது நிச்சயம்.
அப்படி நடந்தால் ஏற்றுமதி மற்றும்
இறக்குமதி நின்றுவிடும். மருந்துகளுக்குக்கூட
தட்டுப்பாடு ஏற்படும். இன்னும் நினைத்துப்
பார்க்க முடியாத நிலைமையை நாடு நிச்சயம்
சந்திக்கும். எரிபொருள்
தட்டுப்பாட்டால் வாகனங்கள் ஓட முடியாது.
மாட்டு வண்டியில் மோடி பாராளுமன்றம்
செல்லும் நிலை ஏற்படும். ஓட்டுப்போட்ட மக்கள்
எல்லாம் கற்காலத்து மக்களைப்போல் நவீன(?)
வசதிகளுடன் வாழும் நிலை ஏற்படும்.
குஜராத் என்ற மாநிலத்தில் நடத்தப்பட்ட
வெறியாட்டத்தை உலக நாடுகள்
சாதாரணமாக எடுத்துக்
கொண்டதுபோல் இந்திய
அரசு நடந்துகொள்வதை எடுத்துக்
கொள்ள மாட்டார்கள்.
கற்பனை செய்து பார்த்தாலே குலை நடுங்குகிறது.
தொழில் நுட்பத்தில் இந்தியாவை விட
பன்மடங்கு உயர்ந்து நிற்கும் பெரும்
பெட்ரோல் வளம் கொண்ட
ஈரானால்கூட இதுபோன்ற நெருக்கடிகளைச்
சமாளிக்க முடியவில்லை.
ஈரானுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைவிட
பலமடங்கு நெருக்கடிகள் பலநாடுகளால்
ஏற்பட்டு, மோடி நாட்டைவிட்டு ஓட்டம் பிடித்தாலும்
ஆச்சரியம் இல்லை. 1900களில் உருவாக்கப்பட்ட
உளுத்துப்போன ஆர்.எஸ்.எஸ்.
கொள்கை நாட்டை அழித்து நாசமாக்கிவிட்டதை
அப்போது மக்கள் உணர்வார்கள்.
எனவே இடஒதுக்கீடு போன்ற சில பிரச்சினைகளில்
சில்லரைத்தனமாக நடக்க முடியுமே தவிர,
முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும்
பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க
முடியாது.
ஒவ்வொரு விளைவுக்கும்
எதிர்வினை உண்டு என்ற மோடியின்
பொன்மொழி நமக்கும்
பொருந்தக்கூடியதுதான். எனவே மோடியைக்
கண்டு நாம் பயப்படத் தேவையில்லை.
நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும்
என்பதை நம் எதிரி தீர்மானிக்கிறான் என்ற
தத்துவம் எக்காலத்திற்கும்
பொருந்தக்கூடியதாகும்.
ஆர்.எஸ்.எஸ். கொள்கையான
ஒரே நாடு, ஒரே இனம் ஒரே கலாச்சாரம்
என்பதை இவர்கள் செயல்படுத்த
விரும்பினால் இன்னும் கடுமையான
விளைவுகளை நாடு சந்திக்கும்.
இந்து மதத்தில் உள்ள
ஒவ்வொரு ஜாதிக்கும்
ஒரு கலாச்சாரம் உள்ளது. பிராமணக்
கலாச்சாரத்தை நாட்டு மக்கள் அனைவரின்
கலாச்சாரமாக மாற்றும் இவர்களின்
திட்டத்தை செயல்படுத்தினால்,
ஒவ்வொரு சாதியினரும்
கொந்தளித்து எழுவார்கள்.
யானைக்கு வடகலை நாமம்
போடுவதா தென்கலை நாமம்
போடுவதா என்பதற்காக கொலை விழும்
நாட்டில்
ஒரே கலாச்சாரத்தை செயல்படுத்த
விரும்பினால், அதன் விளைவுகள்
கடுமையானதாக இருக்கும்.
ஒரே இனம்
என்பது இந்துக்களை மட்டுமே கொண்ட
தேசம் என்பதாக நினைக்கமுடியாது.
ஒரே மொழிதான் இருக்க வேண்டும்.
மொழிவாரி மாநிலங்கள்
இருக்கக்கூடாது என்பதுதான் இவர்களின்
கொள்கை. தென்னிந்திய
மொழி பேசும் மக்கள் மீது,
இந்தி மொழி திணிக்கப்படும்.
இந்தியாவின்
ஆட்சி மொழி இந்திதான்
என்று…

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின்

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின் வாக்கு தமிழகத்தில் திரும்பத் திரும்பத் தண்ணீரைப் பற்றிப் பேசக் கூடியவர்களால் சொல்லப்படுகிறது. அவர் சொல்வது நல்ல நீரைப் பற்றி, உப்பு நீரைப் பற்றி அல்ல என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், நல்ல நீரைப் பற்றிய விவரங்கள் நமக்கு அதிகம் தெரியாது.

உலகில் இருக்கும் தண்ணீரில் 97.5% கடல் தண்ணீர். மீதமுள்ள 2.5% நல்ல தண்ணீரில் மூன்றுக்கு இரண்டு பங்குக்கும் மேல் ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளிலும், இமயமலை போன்ற பனிமலைகளிலும் உறைந்துகிடைக்கிறது. மீதமுள்ள பங்கில் பெரும் பகுதி நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர். கிடைக்கும் தண்ணீரில் 0.26% மட்டுமே ஏரிகளிலும் குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் ஆறுகளிலும் இருக்கிறது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

தண்ணீரில் ஏற்றத்தாழ்வு

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்போலத் தண்ணீர் கிடைப்பதிலும் உலகில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் இருப்பவர்களில் ஒவ்வொருவருக்கும் வருடத்துக்கு 1.5 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் கிடைக்கிறது! ஆனால், குவைத்தில் இருக்கும் நல்ல தண்ணீர் ஒவ்வொருவருக்கும் வருடத்துக்கு 10 கனமீட்டர் தேறினால் அதிசயம். இந்தியாவைப் பொறுத்த அளவில் நமக்குக் கிடைக்கும் தண்ணீர் தலைக்கு சுமார் 2,200 கனமீட்டர்கள்.

சீனர்களுக்கும் 2,250 கனமீட்டர்கள் கிடைக்கிறது. கிடைப்பது குடிநீருக்கு மட்டுமல்ல. பாசனத்துக்கு, குளிப்பதற்கு, தொழிற்சாலைகளுக்கு, நமக்கு உணவாகப்போகும் மிருகங்களுக்கு – இவை எல்லாவற்றுக்கும்தான்.

இன்று உலகின் மக்கள்தொகை சுமார் 700 கோடி. இது 2050-க்குள் 900 கோடிக்கும் மேல் உயர்ந்துவிடும். உலகில் உணவு உற்பத்தி ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாது. காரணம், விளைநிலங்களின் தட்டுப்பாடு அல்ல. தண்ணீர்த் தட்டுப்பாடு. 2050-ல் தண்ணீர் அப்போதைய தேவையை விட 27% குறைவாகக் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் தட்டுப்பாடு இருக்காது.

வளரும் நாடுகளில்தான் தட்டுப்பாடு. அடிமேல் அடி அவர்கள் மீதுதான் விழும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டால் அது எல்லை நிலங்களுக்காக இருக்காது; தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்படும் முரண்களுக்காக இருக்கலாம்.

இந்தியாவின் நிலை

தண்ணீர்த் தட்டுப்பாடு என்றால் என்ன என்பதை ஐ.நா. சபை நிர்ணயம் செய்திருக்கிறது. வருடத்துக்குத் தலைக்கு 1,700 கனமீட்டர்களுக்கு மேல் தண்ணீர் இருக்கும் நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு அறவே இல்லை என்று சொல்லலாம். 1,700 கனமீட்டரிலிருந்து 1,000 கனமீட்டர்கள் கிடைக்கும் நாடுகளில் மக்கள் தண்ணீர் குறைபாட்டை உணர்வார்கள். ஆனால், கடுமையான தட்டுப்பாடு 1,000 கனமீட்டர்களுக்கும் குறைவாகக் கிடைக்கும் இடங்களில்தான் நிகழ்கிறது.

முழுவதுமாகப் பார்த்தால், இந்தியாவில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை என்று சொல்லலாம். ஆனால், நமக்குக் கிடைக்கும் தண்ணீரில் சுமார் 90% விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், கிடைக்கும் தண்ணீரை நாம் திறமையாகப் பயன்படுத்துவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கடலில் கலக்கும் நீரின் அளவு மிக அதிகம். இந்திய நதிகள் உலக நதிகளின் நீர் அளவில் 4% மட்டுமே சுமக்கின்றன.

ஆனால், அவை சுமக்கும் வண்டலின் அளவு 35% சதவீதத்துக்கும் மேல்! இதனாலேயே நதிகளின் ஆழம் குறைந்து கரைகள் உடைபட்டு வெள்ளங்கள் ஏற்படுகின்றன. பல சமயங்களில் யாருக்கும் பயனின்றி தண்ணீர் அழிவையே ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் நிலை

சென்ற வாரம் சென்னையில் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “தண்ணீர்த் தட்டுப்பாடு உண்டா?” என்று கேட்டேன். “கிடையவே கிடையாது” என்றார். “காசு கொடுத்தால் டேங்கரில் தண்ணீர் வந்துவிடும்.” “மாதம் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?” “இரண்டாயிரம் இருக்கும்.” மாதம் இரண்டாயிரம் தண்ணீருக்காகச் செலவுசெய்யும் வசதிபடைத்தவர்கள் தமிழகத்தில் அதிகம் இருக்க மாட்டார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? இந்தக் கேள்விக்குச் சரியான விடை இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் 750 கன மீட்டர்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது என்று தமிழக அரசின் ஆவணம் ஒன்று கூறுகிறது. தட்டுப்பாடு நிலை என்று ஐ.நா. சபை நிர்ணயித்த 1,000 கனமீட்டர்களை விட இது 25% குறைவு. பாலைவனப் பிரதேசம் என்று சொல்லக்கூடிய ராஜஸ்தானில் தலைக்கு 780 கனமீட்டர்கள் கிடைக்கிறது. நமது நிலைமை பாலைவனத்தைவிட மோசம். கிடைக்கும் நீரில் 45 சதவீதத்துக்கும் மேல் நிலத்தடி நீர்.

நிலத்துக்கு மேல் கிடைக்கும் நீரில் சுமார் 30 சதவீதத்துக்கு நாம் அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கிறோம். அண்டை மாநிலங்களிலும் உபரி நீர் அதிகம் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஏற்கெனவே நிலத்துக்கு மேல் கிடைக்கும் நீரில் 95 சதவீதத்தையும்,…

Post Navigation

%d bloggers like this: