Karim74's Weblog

my articles

Archive for the month “March, 2014”

http://ow.ly/uxEzl

http://ow.ly/uxEzl

Advertisements

சிறுபான்மையினரின் வாக்குகளை பறிக்க முஸ்ல

சிறுபான்மையினரின் வாக்குகளை பறிக்க முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைப் புரிந்து கொள்வீர்!

நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க இஸ்லாமியர்கள், சிறுபான்மையினரின் வாக்குகளை பறிக்க முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் என்ற அமைப்பை உருவாக்கி பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ள – ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள இளைஞர் சமுதாயம் தவறக் கூடாது என தமிழர் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று (3.3.2014) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுப்புது யுக்திகள்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் மத்தியில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ்., இம்முறை வெளிப்படையாகவே இறங்கி, அதன் கைக்கருவியாக நரேந்திரமோடியை நிறுத்தி, அதற்காகப் பெரும் பண முதலைகள், திமிங்கலங்கள் இவர்களின் நிதியை தாராளமாக, ஏராளமாகச் செலவிட்டு, மோடிபற்றிய புனைவுகளை, இணையம் முதற் கொண்டு வெளியிட்டு, தங்கள் கைவசம் உள்ள ஊடகங்களை சிறப்பாக ஒத்து ஊதச் செய்து பார்ப்பன மனுதர்மத்தை ஆட்சிப் பீடத்தில் ஏற்றிட துடியாய்த் துடிக்கிறார்கள்!

சாம, பேத, தான, தண்டம் என்ற அத்தனை உபாயங்களையும் கையாண்டு வருவதோடு, நாளும் புதுப்புது வித்தைகளையும் உத்திகளையும் உபாயங்களையும் கையாளத் தவறுவதே இல்லை.

உத்தரப்பிரதேசத்திலும் நாட்டின் இதர மாநிலங்களிலும், ஒடுக்கப்பட்டவர்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்து, டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டி விழாக் கொண்டாடுதல், கன்ஷிராமுக்கு உ.பி.யில் விழா நடத்தி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை ஏமாற்றி வெற்றி பெற பல வகைகளைக் கையாளுகின்றனர்.

மோடியை பிற்படுத்தப்பட்டவர் முத்திரையுடன் புதிதாக ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து, OBC என்ற பிற்படுத்தப்பட்டோரின் வாக்கு வங்கியைக் குறி வைக்க, தமிழ்நாட்டில் கூட சில அரசியல் தரகர்களைப் பிடித்துப் பிரச்சாரம் செய்ய வைக்கின்றனர்!

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பதவி தேடிகள் சிலரையும், அதுபோல மாநிலங்களில் அரசியலில் பல முறை தோல்வி கண்டு துவண்ட விரக்தி வீரர்களையும் பிடித்து மோடி பல்லக்கைத் தூக்கி பிரச்சாரப் புழுதியைக் கிளப்ப முயலுகிறார்கள்!

பதவி அரசியலுக்கு சந்தர்ப்பவாதம் தானே சரியான படிக்கட்டு! அதனைப் பற்றியுள்ளவர்களையெல்லாம் பிடித்து மீண்டும் இராமாயண காலத்தை திரும்ப அழைத்து வர முயலுகின்றனர்!

ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோர்

இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் வாக்குகளையும்கூட ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டு பறித்துவிட புதிய முயற்சியாக முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதற்காக 26 மாநிலங்களில் ஆங்காங்கே தேடி, சிலரை அச்சுறுத்தி அல்லது விலைக்கு வாங்கி ஒரு அமைப்பையே உருவாக்கியிருக்கிறார்கள் போலும்! 300 மாவட்டங்களில், 10 லட்சம் இஸ்லாமியர்கள் எங்களிடம் வந்து மோடியைப் பிரதமராக்கத் துடிக்கின்றனர் என்று துணிந்து ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர்!

முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்

சிறுபான்மைச் சமுதாய மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு சமூக நீதி அடிப்படையில் தேவை என்பதை வெளிப்படையாக எதிர்த்துக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அணி மறுபுறத்தில் இப்படி இஸ்லாமியர்களுக்காகவே ஒரு வாக்கு வங்கியை மய்யப்படுத்தி முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் துவக்கி நடத்துவதும், அதன் மூலம் ஏமாந்த அல்லது பயந்த இஸ்லாமியர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிட முயலுவதும் அசல் இரட்டை வேடம் அல்லவா?

இந்த முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்சின் வேலை என்ன தெரியுமா?

மோடி பிரதமர் மிஷன் – 272+ என்ற ஒரு தேர்தல் பிரச்சார இயக்கமாம்! டில்லியில் 500 பிரதிநிதிகளை அழைத்து இப்படி ஒரு இயக்கத்தைத் துவக்கியுள்ளனர்.

இஸ்லாமியர்கள் மீது கொடுமையான மனிதநேயமற்ற செயற்பாடுகளை குஜராத்தில் நடத்தி விட்டு,

இப்போது ராஜ்நாத்சிங்குகள் இஸ்லாமியர்களிடம், ஏதாவது தவறு நடந்திருந்தால் அதற்காக நாங்கள் வருத்தம் – மன்னிப்பு – தெரிவிக்கிறோம் என்று நாடகம் ஆடுவது எதைக் காட்டுகிறது?

இந்த மயக்க பிஸ்கட்டுகளை வாங்கி சாப்பிட்டு அவ்வளவு எளிதாக இஸ்லாமிய சகோதரர்கள் ஏமாற மாட்டார்கள் என்றாலும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. எப்படி எல்லா கற்களையும் பெயர்த்திடும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது புரியவில்லையா?
அவர்களுக்குத் தெரியும் ஓநாய் ஒரு போதும் சைவமாகாது என்ற உண்மை!

என்றாலும் இவர்களது இரட்டை வேடத்தை நாடும் நல்லவர்களும் குறிப்பாக இளைஞர் சமுதாயமும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது.

நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?

உண்மையான நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை சரியாக அடையாளம் காணா விட்டால் எதிர்காலம் இருட்டாகி விடும் – எச்சரிக்கை!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

3.3.2014…

சிங்களப் பெண்மணியே கிளர்ந்தெழுகிறார் சிங

சிங்களப் பெண்மணியே கிளர்ந்தெழுகிறார் சிங்கள வெறியர்களின் ஆட்சியை எதிர்த்து!

பிற இதழிலிருந்து….!

சிங்களப் பெண்மணியே கிளர்ந்தெழுகிறார்
சிங்கள வெறியர்களின் ஆட்சியை எதிர்த்து!

நிமல்கா பெர்னாண்டோ

இனப்பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவி, ராஜபக்சே சகோதரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் சிங்களப் பெண். ராஜபக்சே அரசின் போர்க் குற் றங்களுக்காகவும், இனப்படுகொலை களுக்காகவும் சர்வதேச நீதிமன்றக் கூண் டில் அவரை நிறுத்தத் துடிக்கிற மனித உரிமை செயற்பாட்டாளர், கண்காணிப்பு, கொலை முயற்சி, மிரட்டல்களைக் கடந்து இனப் படுகொலைக்கு எதிராக உலக அரங்கில் முழக்கமிட்டு கவனம் ஈர்க்கும் வழக்கறிஞர். இலங்கைக்கு எதிரான அய்.நா.வின் மூன்றாவது தீர்மானத்துக்கு ஆதரவாக உலகைத் திரட்டிக் கொண்டி ருக்கும் பரபரப்பான சூழலுக்கு நடுவில் குங்குமம் இதழுக்காக பேசினார் நிமல்கா.

தேர்தல்களுக்குப் பிறகான இலங் கையில், தமிழர்களின் நிலை மாறி யிருக்கிறதா?

ஒன்றும் மாறவில்லை. தமிழர் பகுதி களில் ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. 5 பேருக்கு ஒரு ராணுவ புலனாய்வாளர் என்ற கணக்கில் படையினர் தமிழ் நிலங் களை ஆக்கிரமித்துள்ளார்கள். ஒரு குழந் தையின் பிறப்பைக் கொண்டாடவும், ஒரு மரணத்தின் துக்கத்தில் அழவும் கூட முடியாத அளவுக்கு மக்கள் முடக்கப் பட்டுள்ளார்கள். வீட்டுக்கு எவரேனும் வந்தால், விசாரணைக்கு உட்பட வேண்டி யுள்ளது. வாழ்வுரிமை கேட்டுப் போரா டும் தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்படு கிறார்கள். கோத்த பய ராஜபக்சே தலை மையில் இதற்காகவே ஒரு சிறப்புப்படை இயங்குவதாகச் சொல்லப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட சிறப்புப்படையினர் உலா வருவதாகச் சொல்கிறார்கள்.

தமிழர் பகுதிகள் அதிவேகத்தில் சிங் களமயமாகி வருகின்றன. இதற்கு மூன்று விதமான யுக்திகள் பயன்படுத்தப்படுகின் றன. முதல் யுக்தி, தமிழ்ப்பெயர் மாற்றம், வடக்கில் பழைமையான புத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த தமிழ்ப்பெயரை அழித்துவிட்டு சிங்களத்தில் எழுதியுள் ளார்கள். தமிழ்ப்பகுதிகளில் சிங்களர் களே ஆதிகுடிமக்கள் என்று வரலாற்றை மாற்றி எழுதுகிற முயற்சியும் நடக்கிறது. தமிழ் மக்களுக்கு அரசு வேலை தேவை யென்றால் சிங்களம் படிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இரண்டாவது யுக்தி, எல்லாப்பகுதிகளி லும் புத்தவிகாரங்கள், தூண்கள், வழி பாட்டுத் தலங்கள் உருவாக்கப்படுகின் றன. பிற மத வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்படுகின்றன. மூன்றாவது யுக்தி, சிங்களக் குடியேற்றம், தமிழ் மக் களின் நிலங்களை ராணுவம் கையகப் படுத்தி, குடியிருப்புகளை உருவாக்கி சிங் களர்களை குடியமர்த்துகிறது. விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட மக்களை மீண்டும் கொண்டு வருவதாகச் சொல்லி, ராணுவக்குடும்பங்களை தமிழ் மண் ணுக்கு இடம் மாற்றுகிறார்கள். உறவு களை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, வரலாற்றையும் இழந்து தமிழர்கள் மிகப்பெரிய இக்கட்டில் தவிக்கிறார்கள்.

தமிழ் மக்கள் – குறிப்பாக பெண்கள் – ராணுவத்தால் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கிறதே?

உண்மை தான் பெரும்பாலான தமிழர் கிராமங்களில் ஆண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. பெரும் பாலான பெண்கள் தனித்தே வாழ்கிறார் கள்; ஆண்கள் கொல்லப்பட்டு விட்டார் கள், அல்லது காணாமல் போய்விட்டார் கள். பெண்களே பொருளீட்டி வாழ வேண்டிய நெருக்கடியில், பெண் பிள் ளைகளை தனியாக வீட்டில் விட்டு விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ராணுவத்தினர் மட்டுமின்றி உள்ளூர் அரசியல்வாதிகளும் அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடு கிறார்கள். வெளியில் சொன்னாலோ, காவல்நிலையத்திற்குப் போனாலோ உயிரோடு வாழ முடியாது.

இதனால், சீக்கிரமே பெண் பிள்ளை களுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இது வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்குகிறது. பெண் பிள்ளைகள் நிறைய படித்திருக்கிறார்கள். படிக்காத ஆண்களுக்கு அவர்களைத் திருமணம் செய்து வைப்பதால், குடும்ப வன்முறைகள் அதிகரிக்கின்றன. அதிக மான பெண்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்தவர்கள். நல்ல விளைச்சல் தந்த அவர்களின் நிலங்களைப்பிடுங்கி, ராணுவ முகாம்களாக மாற்றி விட்டார்கள். இத னால் மிகக் குறைந்த அளவே விவசாயம் நடக்கிறது. கடன் வாங்கி வேறு தொழில் செய்வதற்கும் வழியில்லை. சிங்களத் தொழிலதிபர்கள் மொத்தமான பொருட் களை வாரிக்கொட்டி விற்பனை செய் கிறார்கள். அடித்தட்டுக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கின்றன.

தமிழர் பகுதிகளில் இதுவரை எந்தப் புள்ளி விவரங்களும் நேர்மையாகப் பதிவு செய்யப்படவில்லை. தற்போது நடைபெற்றுவரும் காணாமல் போனவர் பற்றிய தகவல் சேகரிப்பும் முறையாக நடக்கவில்லை என்று தகவல்கள் வரு கின்றன. எந்த ராணுவத்துக்கு எதிராகப் போராடினார்களோ, அந்த ராணுவத்தின்…

மறந்து விட்டீர்களா? ********************

மறந்து விட்டீர்களா?
********************

100 ஆண்டு பேசும் அம்மாவின் மூன்றாண்டு ஆட்சியின்
TOP 50 சாதனைகள்!

1. வரலாறு காணாத மின் கட்டண உயர்வு சுமார் 100% சதவீதத்துக்கு மேல் கட்டண உயர்வு…

2. வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு , சுமார் 200% சதவீதத்துக்கு மேல் கட்டண உயர்வு…

3. பால் விலை கடுமையாக உயர்வு

4. பத்திரபதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது

5. கடுமையான மின் வெட்டு, குறைந்த பட்சம் 7 மணி நேரதிற்கு மேல்

6. வங்கி கொள்ளைகள், படுகொலைகள் அதிகரிப்பு, தினமும் சராசரி 3 கொலை சம்பவங்கள், 5 கொள்ளை சம்பவங்கள், 10 செயின் பறிப்பு சம்பவங்கள் என்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக பேணி காப்பது..

7. எந்த ஒரு பெரிய திட்டத்தையும் அறிவிக்காதது
8. துறைமுக விரைவு சாலை பணியை நிறுத்தியது
9. திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட பல மேம்பால பணிகளை தாமதபடுத்துவது
10. அமைச்சர்களை பேசா மடந்தைகள் ஆக்கிவிட்டு, தானே அனைத்து அறிவிப்புகளையும் விதி எண் 110 இன் கீழ் வெளியிடுவது
11. சட்டசபையை, சுய புராண, தற்புகழ்ச்சி, ஜால்ரா மன்றமாக ஆக்கியது
12. உடன்பிறவா சகோதரி சசிகலாவை, சின்னக்காவாக்கி, மக்களை முட்டாளகியது…
13. பொய் வழக்குகளை போடுவதில் புதிய சாதனையை படைத்தது…அந்த பொய் வழக்குகளை நீதி மன்றங்கள் தள்ளுபடி செய்து குட்டுவாங்கியது…
14. கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டது
15. வெற்றிகரமாக சொத்துக்குவிப்பு வழக்கை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இழுத்தடித்து கொண்டுவருவது..
16. சொத்துக்குவிப்பு வழக்கில் தான் மட்டும் ஜாமீனில் இருந்து கொண்டே, முதல்வர் பதவில் இருந்து கொண்டு , பிறரை குற்றம் சொல்வது..
17. பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடிக்கு வரிகளை போட்டது / உயர்த்தியது.
18. மக்களின் மேல் கடும் விலை உயர்வை சுமத்தியது
19. முந்தய திமுக ஆட்சியில் போடப்பட்ட, திட்டமிடப்பட்ட, துவக்கப்பட்ட திட்டங்களை , ஏதோ தான் ஆட்சிக்கு வந்து துவக்குவதாய் ஏமாற்றுவது
20. அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சீட்டு ஆட்டம் போல் மாற்றிக்கொண்டே இருப்பது, அனைவரையும் இடமாற்றம், பதவி மாற்றம் எப்போ வருமோ என்ற பயத்திலேயே வைத்து இருப்பது.
21. ஓராண்டு காலத்தில் நீதிமன்றத்திடம் அதிகமாக குட்டு வாங்கிய அரசு என்று பெயர் வாங்கியது
22. 200 கோடி மதிப்புள்ள , சென்னையின் மையபகுதிலுள்ள, (செம்மொழி பூங்கா எதிரில்) 115 கிரௌண்ட் அரசு நிலத்தை தனியாருக்கு (தோட்டகலை கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகருக்கு) தாரைவார்த்து கொடுக்கப்பட்டது.
23. விலையில்லா மென்பொருள் பல இருக்க, மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி கொடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது (ஹிலாரியை சந்தித்தவுடன்)
24. சுமார் 500 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை பாழ்படுத்துவது.
25. இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்ட 3 செம்மொழிகளுள் , தமிழையும் பல ஆண்டு போராடி சேர்த்ததை இருட்டடிப்பு செய்து, செம்மொழி என்ற பெயர்களை மறைப்பது..
26. ஆசியாவின் பெரிய நவீன நூலகமாக திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முயற்சிப்பது
27. சேலத்தில் சுமார் 100 கோடி செலவில் கட்டப்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை உபயோக படுத்தாமல் வீணடிப்பது
28. பழைய பாட திட்ட புத்தகங்கள் வீணாக அச்சிட்டு சுமார் 200 கோடி நஷ்டம்
29. 6800 கோடி புது வரி விதிப்பு (பட்ஜெட் அல்லாத)
30. பரமக்குடி காவல்துறை கண்மூடிதனமாக 6 பேரை சுட்டு கொன்றுள்ளது இனவெறியுடன் இருவர் தேடுதல் வேட்டையில் கொலை..
31. தொழில் துவங்க வரும் பன்னாட்டு நிறுவனங்களை குஜராத்க்கு அனுப்பபடுகிறது.
32. மணல் கொள்ளை33. காவல் நிலையத்தில் இதுவரை 12 பேர் அடித்து கொலை.
34. வாரம் மூன்று முறை மீனவர்கள் மீது தாக்குதலை கை கட்டி வேடிக்கை பார்ப்பது.
35. செயல்அற்ற மற்றும் செயல்படாத அமைச்சரவை
36. நெசவாளர்கள் போராட்டம்
37. சமசீர் கல்வி போராட்டம், மாணவர்களின் கல்வியில் விளையாடியது
38. மக்கள்நல பணியார்களை வேலையிலிருந்து நீக்கி, அவர்களின் வாழ்கையில் விளையாடியது, பலரின் தற்கொலைக்கு காரணமாயிருப்பது..பதிமூனாயிரம் மக்கள் நல பணியாளர்கள் குடும்பங்களை நடு தெருவில் நிறுத்தியது
39. செங்கல் விலை ரூபாய் முன்றில் இருந்து ரூபாய் ஏழு ஆக உயர்வு
40. சிமெண்ட் விலை ரூபாய் 230 இல் இருந்து ரூபாய் 320 உயர்வு
41. நியாய விலை கடையில் கலைஞர் ஆட்சியில் வழங்கிய 30 ரூபாய் பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது
42. நியாய விலை கடைகளில் கலைஞர் வழங்கிய 25 ரூபாய் மளிகை பொருள்கள் கொடுப்பதில்லை
43. ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெ அளவை குறைத்து, விலையை உயர்த்தியது..
44. அனைத்து எண்ணைகளும், 50 ரூபாய் விலை உயர்வு
45. ஜவுளிகள் விலை உயர்வு
46. செய்யாத சாதனையை செய்ததாக கூறி 4 முழு பக்க விளம்பரங்களை, இந்திய அளவில் பெரும்பாலான நாளிதழ்களில் வெளியிட்டு அரசு கஜானாவை காலி செய்வது
47. செம்மொழி…

[m-g.in] Mushrif refutes claim in BJP ad

[m-g.in] Mushrif refutes claim in BJP advertisement, threatens legal action – karim74@gmail.com
Mushrif refutes claim in BJP advertisement, threatens legal action

New Delhi (1 March 2014): Former IG Police Maharashtra Mr S.M. Mushrif has strongly objected to an advertisement published by the Vapi unit of the BJP in some newspapers including the Delhi edition of the Indian Express, 27 February. He has stressed that he has been quoted out of context and sentences have been added to what he actually said about Modi in an article in the Milli Gazette in April last year. Mr Mushrif has demanded an apology and publication of denial in the same newspapers where the said advertisement was published. Failing this he has said that he will taken legal action against the persons responsible for this advertisement which has lowered his image in the public eye and has defamed him.

Mushrif is most remembered for exposing the Abdul Karim Telgi fake stamp paper scam. He took voluntary retirement in October 2005. In October 2009 he wrote the bestseller Who Killed Karkare? which has been translated in many languages and this year in January his another hard hitting book 26/11 Probe: Why Judiciary Also Failed? (with DVD) was released.

BJP Ad focussing Muslims, using (misusing) Shahid
Siddiqui, Zafar Sareshwala, SM Mushrif

Following is the full text of the letter which has also been sent to the Indian Express, Chairman, Press Council of India, Election Commission of India and President, BJP, Gujarat State:

The National President,
Bhartiya Janta Party

This has a reference to the advertisement published by Vapi unit of the BJP in the Delhi edition of the Indian Express dated 27th Feb. 2014 (copy is attached). In the advertisement, apparently aimed at projecting Gujarat C.M. Mr. Narendra Modi as the BJP’s Prime Ministerial candidate for the Lok Sabha elections 2014, following sentences have been attributed to me:
“The most safe place for Muslims today is Gujarat. I dealt with several states. But no Chief Minister is as good, as strong and determined as Modi. Now even Muslims realize that Modi is good for them.”

I would like to point out that the part of the above quote viz. “I dealt with several states. But no Chief Minister is as good, as strong and determined as Modi. Now even Muslims realize that Modi is good for them” is absolutely wrong. I have never said so or written so anywhere.

So far as the first sentence, viz., “The most safe place for Muslims today is Gujarat” is concerned, it was only a part of a sentence from my article published in the English fortnightly “The Milli Gazette” in its issue dated 1-15 April 2013. But this is not the full sentence and hence does not correctly convey my point of view. The full sentence was as follows: “The most safe place for Muslims today is Gujarat, only because its Chief Minister Mr. Narendra Modi has ‘banned’ entry to the IB in Gujarat”. This sentence is followed by three sentences, viz., “After spending more than 40 years in the RSS, Mr. Modi has now understood the games the hardcore elements in the RSS have been playing in the guise of the IB. After ‘banning’ IB, the Muslim atrocities in Gujarat have stopped. That is what is required to be done if we want to put a full stop to fake encounters, false terror attacks, their fabricated investigations and arrests of innocent Muslim boys.” These four sentences taken together bring out my point home correctly.

But by quoting only a part of the sentence from my article out of context and also by wrongly attributing many more sentences to me, your Vapi unit has lowered my image in the public eye and has defamed me. Moreover, courtesy demanded that the office-bearers concerned obtained my prior permission before using my name and photograph in the advertisement of your political party. But they have failed to do so. Thus, they are liable for action, both criminal & civil.

You are…

Post Navigation

%d bloggers like this: