Karim74's Weblog

my articles

Archive for the month “September, 2013”

K A HAJI RAHIMAN SAHIB EXPIRED AT 7.21 H

K A HAJI RAHIMAN SAHIB EXPIRED AT 7.21 HRS TODAY (30/9/2013)
dad
x
yahoogroups
x

Haji Abdul Karim K M Chisthi
08:24 (0 minutes ago)

to aishakizer, alima92, boopathi_vk, gowtham_ng, Kaniyur, KMOmar, nisha, NPEERMOHAMED, numair-sahmed, o.noormohamed, priya.rao, vlbflb, VRBest-Friends, abdulkadar, Aisha, aishakizer, Alvin, Anand, basheer, bhuvaneshwari.r, geethapriya, hrm24, jamuna_psg, Jesudass, kirubhav
அஸ்ஸாலாமு அலைக்கும்

இன்ன லில்லஹி வாஇன்ன இலைஹி ரஹீவூன்

கணியூர் (உடுமலை) மர்ஹூம் T A ஹாஜி அஹ்மத் அ ்ராஹீம் சாஹிப் (சுல்தானிய ரைஸ் மில், கணியூர் ) மகன் ஹாஜி K A ரஹிமன் அவர்கள் (ALMECH ENTERPRISE, COIMBATORE) இன்று காலை 7.21 மணி அளவில் தாருல் Fபன வை விட்டு தாருல் Bபக்க அடைத்துவிட்டார்கள்

இன்ன லில்லஹி வாஇன்ன இலைஹி ரஹீவூன்

அன்னாரின் நல்லடாக்கம் இன்ஷா அல்லாஹா உடுமலை கணியூர் இல் MAHRIB தொழுகைக்கு பிறகு (சுமார் 6 மணிஅளவில் ) நல்லடாக்கம் நடைபெறும்

அலைபேசி : 9363122964/9843097862 /9944056786/9443755968

மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்? இந்தி

மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரோ விண்வெளி கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் திட்டம் கடந்த ஆறு மாதங்களாக இழுபறியில் நிற்கிறது. மேலும், பெரும்பான்மை ஆந்திர அதிகாரிகள் லாபகரமான இத்திட்டத்தை ஆந்திராவுக்குக் கடத்திச் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே இந்திரா காந்தி காலத்தில் உருவாக்கப்பட்ட ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் தமிழகத்தில் செயல்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது விண்வெளி திட்டங்கள் குறித்து தமிழகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் திட்டம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. இப்போதும் அப்படி நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் நடுநிலையான விஞ்ஞானிகள்.
இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் “இஸ்ரோ” நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான செயற்கை கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றை தயாரித்தும் விண்ணில் செலுத்தியும் வருகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருக்கும் இரண்டு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே இந்தியாவின் செயற்கைக் கோள்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
ஆண்டுக்கு 60 விண்வெளித் திட்டங்கள்
விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 60 விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த இந்திய விண்வெளித் துறை திட்டமிட்டுள்ளது.
அவ்வளவு திட்டங்களை நிறைவேற்ற ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இரண்டு ஏவு தளங்கள் போதாது; கூடுதலாக ஒன்று தேவை என்று இஸ்ரோவின் விண்வெளிக் கமிஷன், இந்திய விண்வெளித் துறையிடம் கோரியது. தொடர்ந்து புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்யவும் அதற்கான கட்டமைப்பு தேவைகளைப் பரிந்துரைக்கவும் இந்திய விண்வெளித்துறை, இஸ்ரோவின் விண்வெளித்துறை பேராசிரியரான நாராயணா தலைமையில் விண்வெளித் துறை நிபுணர்கள் அண்ணாமலை, சேஷகிரி ராவ், சோமநாத், அபேகுமார், கனங்கோ, சுதிர்குமார் ஆகிய ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் இடத்தைத் தேர்வு செய்து மொத்த திட்ட அறிக்கையையும் இந்திய விண்வெளித் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இதற்கான உத்தரவை கடந்த 2012, டிசம்பர் 20-ம் தேதி இஸ்ரோ தலைவரும் இந்திய விண்வெளித் துறையின் செயலாளருமான ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.
சிறந்த இடம் குலசேகரப்பட்டினம்
தொடர்ந்து தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை ஓரங்களில் பல்வேறு இடங்களை நிபுணர் குழு ஆய்வு செய்தது. இதில் மூன்றாவது ஏவுகளம் அமைக்க புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் என்று தெரியவந்தது. ஆனாலும் குலசேகரப்பட்டினத்தில் ஏவு தளம் அமைக்க அதன்பின்பு அலுவலக ரீதியாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்க உத்தரவிடப்பட்டும் ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆந்திரத்தில் மூன்றாவது ஏவுதளம்?
இதற்கிடையே மூன்றாவது ஏவு தளம் அமைக்கும் திட்டத்தை ஆந்திர மாநிலத்தில் அமைப்பதற்கான பணிகளை சில அதிகாரிகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குலசேகரப்பட்டினத்தில் ஏவு தளம் அமைந்தால் ஸ்ரீஹரிகோட்டாவின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்றும் ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் அஞ்சுகின்றனர். அதனால், தற்போது ஸ்ரீஹரிகோட்டாவிலேயே மூன்றாவது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கலாம் அல்லது கிருஷ்ணா மாவட்டத்தில் அமைக்கலாம் என்று அதிகாரிகள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.
ஆனால், விண்வெளிப் பணியாளர்கள் சங்கம் மற்றும் லிக்யூட் ப்ராப்புல்லேஷன் சிஸ்டம்ஸ் மையத்தின் பணியாளர்கள் சங்கம் (எல்.பி.எஸ்.சி.எஸ்.ஏ.) ஆகியவை குலசேகரப்பட்டினத்தில்தான் மூன்றாவது ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் குலசேகரப்பட்டினத்தில் ஏவு தளம் அமைக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
குலசேகரப்பட்டினம் ஏன்?
தமிழகம், ஆந்திரம் என்ற பாகுபாடு இல்லாமல் புவியியல், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ரீதியாக மட்டுமே குலசேகரப்பட்டினத்தில் ஏன் மூன்றாவது ஏவு தளம் அமைக்க வேண்டும்…

மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்? இந்தி

மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரோ விண்வெளி கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் திட்டம் கடந்த ஆறு மாதங்களாக இழுபறியில் நிற்கிறது. மேலும், பெரும்பான்மை ஆந்திர அதிகாரிகள் லாபகரமான இத்திட்டத்தை ஆந்திராவுக்குக் கடத்திச் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே இந்திரா காந்தி காலத்தில் உருவாக்கப்பட்ட ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் தமிழகத்தில் செயல்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது விண்வெளி திட்டங்கள் குறித்து தமிழகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் திட்டம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. இப்போதும் அப்படி நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் நடுநிலையான விஞ்ஞானிகள்.
இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் “இஸ்ரோ” நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான செயற்கை கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றை தயாரித்தும் விண்ணில் செலுத்தியும் வருகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருக்கும் இரண்டு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே இந்தியாவின் செயற்கைக் கோள்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
ஆண்டுக்கு 60 விண்வெளித் திட்டங்கள்
விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 60 விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த இந்திய விண்வெளித் துறை திட்டமிட்டுள்ளது.
அவ்வளவு திட்டங்களை நிறைவேற்ற ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இரண்டு ஏவு தளங்கள் போதாது; கூடுதலாக ஒன்று தேவை என்று இஸ்ரோவின் விண்வெளிக் கமிஷன், இந்திய விண்வெளித் துறையிடம் கோரியது. தொடர்ந்து புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்யவும் அதற்கான கட்டமைப்பு தேவைகளைப் பரிந்துரைக்கவும் இந்திய விண்வெளித்துறை, இஸ்ரோவின் விண்வெளித்துறை பேராசிரியரான நாராயணா தலைமையில் விண்வெளித் துறை நிபுணர்கள் அண்ணாமலை, சேஷகிரி ராவ், சோமநாத், அபேகுமார், கனங்கோ, சுதிர்குமார் ஆகிய ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் இடத்தைத் தேர்வு செய்து மொத்த திட்ட அறிக்கையையும் இந்திய விண்வெளித் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இதற்கான உத்தரவை கடந்த 2012, டிசம்பர் 20-ம் தேதி இஸ்ரோ தலைவரும் இந்திய விண்வெளித் துறையின் செயலாளருமான ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.
சிறந்த இடம் குலசேகரப்பட்டினம்
தொடர்ந்து தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை ஓரங்களில் பல்வேறு இடங்களை நிபுணர் குழு ஆய்வு செய்தது. இதில் மூன்றாவது ஏவுகளம் அமைக்க புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் என்று தெரியவந்தது. ஆனாலும் குலசேகரப்பட்டினத்தில் ஏவு தளம் அமைக்க அதன்பின்பு அலுவலக ரீதியாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்க உத்தரவிடப்பட்டும் ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆந்திரத்தில் மூன்றாவது ஏவுதளம்?
இதற்கிடையே மூன்றாவது ஏவு தளம் அமைக்கும் திட்டத்தை ஆந்திர மாநிலத்தில் அமைப்பதற்கான பணிகளை சில அதிகாரிகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குலசேகரப்பட்டினத்தில் ஏவு தளம் அமைந்தால் ஸ்ரீஹரிகோட்டாவின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்றும் ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் அஞ்சுகின்றனர். அதனால், தற்போது ஸ்ரீஹரிகோட்டாவிலேயே மூன்றாவது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கலாம் அல்லது கிருஷ்ணா மாவட்டத்தில் அமைக்கலாம் என்று அதிகாரிகள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.
ஆனால், விண்வெளிப் பணியாளர்கள் சங்கம் மற்றும் லிக்யூட் ப்ராப்புல்லேஷன் சிஸ்டம்ஸ் மையத்தின் பணியாளர்கள் சங்கம் (எல்.பி.எஸ்.சி.எஸ்.ஏ.) ஆகியவை குலசேகரப்பட்டினத்தில்தான் மூன்றாவது ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் குலசேகரப்பட்டினத்தில் ஏவு தளம் அமைக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
குலசேகரப்பட்டினம் ஏன்?
தமிழகம், ஆந்திரம் என்ற பாகுபாடு இல்லாமல் புவியியல், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ரீதியாக மட்டுமே குலசேகரப்பட்டினத்தில் ஏன் மூன்றாவது ஏவு தளம் அமைக்க வேண்டும்…

Subject: படித்ததில் பிடித்தது NAMES எங்க

Subject: படித்ததில் பிடித்தது NAMES

எங்க ஆளுக

பேரை வைத்துதான் உலகமே இயங்குதா …..தமிழன் !
Doctor — வைத்தியநாதன்
Dentist — பல்லவன்
Lawyer — கேசவன்
Financier — தனசேகரன்
Cardiologist — இருதயராஜ்
Pediatrist — குழந்தைசாமி
Psychiatrist — மனோ
Sex Therapist — காமதேவன்
Marriage Counselor — கல்யாண
சுந்தரம்
Ophthalmologist–கண்ணாயிரம்
ENT Specialist — நீலகண்டன்
Diabetologist — சக்கரபாணி
Nutritionist — ஆரோக்கியசாமி
Hypnotist — சொக்கலிங்கம்
Exorcist — மாத்ருபூதம்
Magician — மாயாண்டி
Builder — செங்கல்வராயன்
Painter — சித்திரகுப்தன்
Meteorologist — கார்மேகம்
Agriculturist — பச்சைப்பன்
Horticulturist — புஷ்பவனம்
Landscaper — பூமிநாதன்
Barber — சவுரிராஜன்
Beggar — பிச்சை
Alcoholic — மதுசூதனன்
Exhibitionist — அம்பலவானன்
Fiction writer — நாவலன்
Makeup Man — சிங்காரம்
Milk Man — பால் ராஜ்
Dairy Farmer — பசுபதி
Dog Groomer — நாயகன்
Snake Charmer — நாகராஜன்
Mountain Climber — ஏழுமலை
Javelin Thrower — வேலாயுதம்
Polevaulter — தாண்டவராயன்
Weight Lifter — பலராமன்
Sumo Wrestler — குண்டு ராவ்
Karate Expert — கைலாசம்
Kick Boxer — எத்திராஜ்
Bowler — பாலாஜி
Spin Bowler — திருப்பதி
Female Spin Bowler — திரிப்புர
சுந்தரி Driver — சாரதி
Attentive Driver — பார்த்த சாரதி….

ஓர் எழுத்து ஒரு சொல் !

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஆ – பசு
ஈ – பறவை
ஊ – இறைச்சி
ஏ – கணை
ஐ – தலைவன்
ஓ – வியப்பு
மா – பெரிய
மீ – மேல்
மூ – மூப்பு
மே – மேன்மை
மை – இருள்
மோ – மோதுதல்
தா – கொடு
தீ – நெருப்பு
தூ – தூய்மை
தே – தெய்வம்
தை – மாதம்
சா – சாதல்
சீ – இலக்குமி
சே – எருது
சோ – மதில்
பா – பாட்டு
பூ – மலர்
பே – நுரை
பை – பசுமை
போ – செல்
நா – நாக்கு
நீ – முன்னால் இருப்பவர்
நே – அருள்
நை – இகழ்ச்சியை குறிப்பத்து
நோ – வலி
கா – பாதுகாப்பு
கூ – வெல்
கை – ஒப்பணை
கோ – அரசன்
வீ – மலர்
வை – வைக்கோல்
வௌ – கைப்பற்றுதல்
யா – கட்டுதல்
நொ – துன்பம்
து – உணவு

என் இனிய சகோதர, சகோதரிகளே ! நம்மை தூக்கி

என் இனிய சகோதர, சகோதரிகளே !

நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக தயாராகுங்கள் !!!

ஏறும் இடம் (Departure ) : துணியா !
இறங்கும் இடம் (arrival) : கபர்ஸ்தான் !!.

புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.

கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகா சான்சே இல்லை!?.

Destination Air போர்ட் : டெர்மினல் 01 சொர்க்கம் ! /
டெர்மினல் 02 நரகம்!?.

இது ஒரு ட்ரான்சிட் AIR LINE ?

இந்த அதிநவீன ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால்

புனித திருக்குரான் மற்றும் நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்ல -ாம்அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த அதிநவீன எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது ஏர் இந்திய கிடையாது.

ஆனால் இதன் பெயரோ ஏர் ஜனாசா !.

இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!.

இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு -மட்டும்தான் பயணிக்கலாம் !.

இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?.

இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !,

ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.

அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.

இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லைஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.

இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை !!!! ??? காசும் விரயம் இல்லை!?.

உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.

மேலும் மகிழ்ச்சிதானே?! -ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட் -டு விட்டது (confirmed )!. ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!.

ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டைவைத்துகொள -்ள மறந்தும் இருந்து விடாதீர்கள் ?

உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.

பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.

வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது -???.

ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.

ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.(மரணம் )
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.

எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட்

எமிக்ரேசன் ஆபிசர் மதிற்பிக்குரிய முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.

அதை சரியாக கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!.

ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.

உஷார் !

உஷார் !

உஷார் !

உஷார் ! அந்த மூன்று கேள்விகள் !.

உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ் !!!!!!.

உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம் !!!!!!!!.

உன்னுடைய நபி யார் ? விடை முகமது சல்லல்லாஹுவசல்ல -ாம்
மறந்தும் இறந்து விடாதீர்கள் ? பதிலை சொல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து மட்டுமே பதிலலிக்க முடியும்.

சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம்.

இன்ஷா அல்லாஹ் !.

நம்முடைய ஏர் ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,

எங்கள் இறைவனே,எங்களுக் -கு இந்த உலகத்திலும் நல்ல வாழ்க்கை தருவாயாக,மறுஉலக -த்திலும்(மரணத்த -ுக்கு பின் உள்ள வாழ்வு)நல்ல வாழ்க்கையை தருவாயாக.மேலும் -நரக நெருப்பை விட்டும் பாதுகாப்பாயாக.. -.

எங்கள் இறைவா ! உன்மீது ஈமான் கொண்டவர்களை நல்லோருடன் வாழ வைப்பாயாக ! நல்லோருடன் சேர்ப்பாயாக”

“யா முகல்லி புள் குளூப் ஃசபித் கல்பி அலா தீனுக்க”

இவ்வுலக வாழ்க்கை ……….விளைய -ாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோ -ருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. கவனமாக தயாராகுங்கள்

14:52 இ(வ் வேதமான) து மனிதர்களுக்கு எத்தி வைத்தலாகும். இதனை கொண்டு அவர்கள் எச்சரிக்கபடுவதற -்காகவும் , வணக்கத்திற்கு உரியவன் ஒரே நாயன் (ஆன அல்லாஹ் ) தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்காகவும் -, இன்னும் அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் -ஆகும் .

ALAVUDEEN

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும்…

சென்னையின் வரலாறு சென்னை தமிழ்நாட்டின் த

சென்னையின் வரலாறு

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.

17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. சென்னையின் பொருளாதாரம் பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது.

ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

வரலாறு
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது.

சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது.

1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது.

1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை…

உன்னதமான சேவை செய்யும் மாமனிதர். வாழ்க ப

உன்னதமான சேவை செய்யும் மாமனிதர். வாழ்க பல்லாண்டு
மதுரையில் ஒரு புத்தக ஐயா…. 9578797459.

உங்களுக்கு தமிழில் ஏதேனும் நூல்கள் தேவைப்படலாம்.அப்போது நீங்கள் இவரை ஒரு முறை அழையுங்கள்.புத்தகம் இருந்ததால் கொடுப்பார்,இல்லை தேடியாவது கொடுப்பார்.தொலைவில் இருந்தால் அனுப்பிவைப்பார்.ஏனென்றால் இதுதான் பல ஆண்டுகாலமாக இவரது வாழ்க்கை.
நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் முனைவர் பட்ட ஆய்வுக்கு குறிப்புதவி நூல்களை தேடி கொடுத்து உதவியவர்.ஐயா முருகேசன் அவர்கள்.அகவை 70 கடந்தவர்.மதுரை காமராஜ் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்களுக்கு இந்த தமிழ்ப்பெரியவரை தெரியாமல் இருக்க முடியாது.
ஒரு மளிகைக் கடைக்கரராக வாழ்வை தொடங்கி,பழைய புத்தக விற்பனையளராக மாறி,பின்னர் தன்னிடம் சேர்ந்த நல்ல தமிழ் நூல்களின் பெருமையை அறிந்த பின் இத்தகைய நூல்கள்,அறிவாக பயன்படவேண்டும் என்று மாணவர்களை தேடிச்சென்று அளிப்பார்.இப்படி தொடங்கிய வாழ்க்கை அப்படியே தொடர்கிறது.பிள்ளைகள் அனைவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.துணைவரும் இல்லை.ஒரு தனி மனிதராக தம் வாழ்க்கையை தொடர்கிறார்.வீடெல்லாம் புத்தகம் தான்.நடைபாதையை தவிர அனைத்து இடமும் புத்தக அடுக்குகள் தான்.
மாணவர்கள் ஆய்வு முடிந்த பின் நூல்களை திரும்ப கொடுத்துவிடவேண்டும்.இல்லையேல் எப்படியாவது வாங்கிவிடுவார்.நூல்களை விலைக்கு தரமாட்டார்.ஏனென்றால் நூல்கள் பிறருக்கும் பயன்படவேண்டும்,அடுத்து யாராவது ஆய்வுக்கு தேவைப்படும் என்பதால் பயன்பெற்றவர்கள் திரும்ப தந்து விடுவார்கள்.யாரிடமும் பணமும் கேட்க மாட்டார்.விரும்பி கொடுத்தால் மட்டுமே ஏதேனும் பெற்றுக்கொள்வார்.தினமும் நூல்களை தேடிசென்று மாணவர்களுக்கு கொடுப்பதும்,மாணவர்கள் தேடும் நூல்களை தாமும் தேடிச்செல்வதும் தான் அன்றாட வாழ்க்கை.எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முனைவர் அம்பிகா சரண் ,அவர்களின் மூலம் அறிமுகமானார்.இப்போது ஐயாவுக்கு ஒரே சிக்கல் அனைத்து நூல்களும் ஒரு வாடகை வீட்டில் தான் இருக்கின்றது.அவற்றை பாதுகாக்க ஒரு இடம் வேண்டும்.அதை தேடி அலைந்து வருகிறார்.அவ்வாறு ஒரு இடம் தனக்கும்,தமது நூல்களுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.மதுரை புறநகரில் இருந்தாலும் பரவாயில்லை என்பதே இவரது தேடல்…..தமிழ்ப்பிள்ளைகளுக்கு பயன் பட வேண்டும் என்று,இந்த நூல்களை தம் பிள்ளைகள் போல பேணி காத்து வருகிறார்.உங்களுக்கு புத்தகம் தேவைப்படாவிட்டலும் இவரை அழைத்து பேசுங்கள் மகிழ்வார்.தமிழ் மொழியின் நூல்கள் பாதுகாக்கப்படுகிறது என்றால் இவர் போன்ற மனிதர்களின் எதிர்ப்பார்ப்பற்ற உழைப்பால் தான் …. 9578797459.

#தமிழ் – http://WWW.ILAVAM.COM

நமது கல்விநிறுவனங்களின் கல்வி முறை சரியா

நமது கல்விநிறுவனங்களின் கல்வி முறை சரியானதா…?

CMN SALEEM

இந்த உலகில் எத்தனையோ தத்துவங்கள், வாழ்க்கை நெறிகள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவையெல்லாம் மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் எல்லாக் காலத்திற்கும் வழிகாட்டும் ஆற்றலை கொண்டதாக இல்லை. ஒரு நேரம் இல்லையென்றால் ஒரு நேரத்தில், ஒரு துறை இல்லையென்றால் ஒரு துறையில் பிற கொள்கையோடு சமரசம் செய்து கொள்ள அல்லது பிறரின் கருத்துக்களை தனதாக்கிக் கொள்ள வேண்டிய நிலையில் உலகின் பெரும்பாலான தத்துவங்கள் குறைபாடு நிறைந்தவையாகவே இருக்கின்றன.

அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாம் மட்டுமே முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம். மனித சமூகத்தின் அகத்தேவை, புறத்தேவை என அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு மனிதனுக்காக படைக்கப்பட்ட பிற உயிரினங்களையும் இயற்கை அமைப்புகளையும் பாதுகாக்கும் விதிகளைக் கொண்ட பரிபூர்ணமாக்கப்பட்ட மார்க்கம்.

இப்படி உலகம் ஒழுங்குற இயங்குவதற்கு இயற்கையான சட்டதிட்டங்களைக் கொண்ட இஸ்லாத்தை முஸ்லிம்கள் அனைவரும் முறைப்படி பயின்ருறிக்க வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வகுத்துள்ள விதி. கட்டாயக் கடமை. அதை மனித சமூகத்திற்கு பயிற்றுவிப்பதற்காகத்தான் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக்கப்பட்டதாக அவர்களே கூறுகின்றார்கள்.

“நற்குணங்களைப் பயிற்றுவிப்தற்கு நான் ஆசிரியனாகவே ஆக்கப்பட்டுள்ளேன்”

-நபிமொழி

பூமிப்பந்தில் எந்த மூலையில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் எந்த இனத்தை, நிறத்தை, மொழியை கொண்டவராக இருந்தாலும் இஸ்லாம் என்கிற ஒரே வாழ்க்கை நியதி. ஒரே பாடத்திட்டம். அது சர்வதேச பாடத்திட்டம்.பிராந்திய ரீதியான சமூக, பொருளாதார, அரசியல், தேசியம் போன்ற எந்த காரணங்களுக்காகவும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை அதன் கல்வி அமைப்பை மாற்றிக் கொள்ள சமரசம் செய்து கொள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கும் அனுமதி கிடையாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் தங்களுடைய மார்க்க, கலாச்சாரத்தை முழுமையாக பயின்று அதனடிப்படையில் வாழ்ந்திட சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் மக்கள் தொகையில் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கவும் அதனடிப்படையில் வாழ்ந்திடவும் தடைகள் உள்ளன.சில நாடுகளில் அரசு தடைகளை விதித்துள்ளன. சில நாடுகளில் முஸ்லிம்களே தடைகளை ஏற்படுத்தி அலட்சியமாக வாழ்கின்றனர். இந்தியா போன்ற நாட்டில் இந்திய அரசியலமைப்புச்சட்டம் முஸ்லிம்களுக்கு முழுமையான உரிமைகள் வழங்கியும் கூட இஸ்லாமியக் கல்வியை முறைப்படி பயிற்றுவித்து அந்த கலாச்சாரத்தின் நிழலில் முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதிலிருந்து மார்க்க அறிஞர்களும் கல்வியாளர்களும் தலைவர்களும் தவறிவிட்டனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம்

Ariticle :25

Freedom of conscience and free profession, practice and propagation of religion

“ஒரு இந்தியனுக்கு சுய சிந்தணையோடு ஒரு மதத்தை ஏற்க, வழிபாடு செய்ய, பிறர்க்கு பரப்புறை செய்யும் உரிமை.”

Ariticle :28. (2)

shall apply to an educational institution which is administered by the State but has been established under any endowment or trust which requires that religious instruction shall be imparted in such institution

மத போதனைக்கென ஓர் அறக்கட்டளை அல்லது கொடைகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கல்விச் சாலைகள் நடத்தும் உரிமை. (அவை அரசின் நிதி உதவியின் மூலம் நடைபெற்றாலும் கூட)

Ariticle :30 (1)

All minorities, whether based on religion or language, shall have the right to establish and administer educational institutions of their choice

“மதச்சார்பு அல்லது மொழியின் காரணமாகச் சிறுபான்மையினர் என்று கருதப்பட்டுள்ள வகுப்பினருக்கு தமக்கென கல்விச் சாலைகளை நிறுவுவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் உரிமை.”

முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் இஸ்லாமியக் கல்வியை புகட்டுவதில் எள் முனையளவும் அலட்சியம் காட்டக்கூடாது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டதை முஸ்லிம் அறிஞர்கள் உலமாக்கள் கல்வியாளர்கள் நன்கு அறிந்திருந்தும், மதச்சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் இஸ்லாமியக் கல்வியை பயிற்றுவித்திட முழுமையான உரிமைகள் வழங்கி அவற்றிக்கு சட்ட பாதுகாப்பு அளித்தும் கூட, தமிழக முஸ்லிம் சமூகத்தின் 95 விழுக்காடு குழந்தைகள் கடந்த 66 ஆண்டுகளாக இஸ்லாம் இல்லாத “ஹராமான” கல்வி முறையில் பயின்று வருவது ஏன்? அல்லாஹ்வின் சிந்தனை அறவே இல்லாதவர்களாக நமது குழந்தைகள் இன்றைய பள்ளி கல்லூரிகளில் படித்து வெளியேறுபவர்கள் பட்டதாரிகள், கல்வியாளர்கள் என்ற போலியான வேஷமிட்டு வெளிவருகின்றனர். இரண்டு மூன்று தலைமுறை முஸ்லிம்களை இது போல நாசம் செய்து விட்டோம்.

1950க்குப்…

நாம் தெரிந்து வைத்துகொள்ள வேண்டிய விஷயம்

நாம் தெரிந்து வைத்துகொள்ள வேண்டிய விஷயம் ….

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.

*******

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால்
அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்

நன்றி எண்ணச்சிதறல் மற்றும் உக்கஸ் அஹ்மத்

Engr.Sulthan

http://kulasaisulthan.wordpress.com

http://tamilislam.webs.com

mohammed Ibrahim originally shared: நம்

mohammed Ibrahim originally shared:

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா…?

…….PLEASE SHARE THIS

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு…

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்…

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா….??

கீழே படியுங்கள்……

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா….???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது….!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே…

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10… அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது…

இதை தடுக்கவே முடியாதா…???

முடியும்.

நாம் மனசு வைத்தால்…!!!

நாம் என்ன செய்ய வேண்டும்…???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன…

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்…

LIST OF PRODUCTS:–

COLD DRINKS:-

வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK…

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON’S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.

Food Items:-

வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD’S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN…

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது…

Post Navigation

%d bloggers like this: