Karim74's Weblog

my articles

Archive for the month “August, 2013”

The sliding Rupee / Few Tips to save Ind

The sliding Rupee / Few Tips to save Indian Rupees

From: Rao – BOSTON MATRIX

To Share All True Indian Citizens

Please pass below dtls to all our Indian Brothers & Sisters

Few Tips to save Indian Rupees consciously………………….
Real story of American Dollar v/s Indian Rupee
(Very Interesting Article MUST SHARE)
An Advice to all who are worrying about fall of Indian Rupee
Throughout the country please stop using cars except for emergency for only seven days (Just 7 days)
Definitely Dollar rate will come down. This is true. The value to dollar is given by petrol only.This is called Derivative Trading. America has stopped valuing its Dollar with Gold 70 years ago.
Americans understood that Petrol is equally valuable as Gold so they made Agreement with all the Middle East countries to sell petrol in Dollars only. That is why Americans print their Dollar as legal tender for debts. This mean if you don’t like their American Dollar and go to their Governor and ask for repayment in form of Gold,as in India they won’t give you Gold.
You observe Indian Rupee, ” I promise to pay the bearer…” is clearly printed along with the signature of Reserve Bank Governor. This mean, if you don’t like Indian Rupee and ask for repayment, Reserve Bank of India will pay you back an equal value of gold.(Actually there may be minor differences in the Transaction dealing rules, but for easy comprehension I am explaining this)
Let us see an example. Indian petroleum minister goes to Middle East country to purchase petrol, the Middle East petrol bunk people will say that liter petrol is one Dollar.
But Indians won’t have dollars. They have Indian Rupees. So what to do now? So That Indian Minister will ask America to give Dollars. American Federal Reserve will take a white paper , print Dollars on it and give it to the Indian Minister. Like this we get dollars , pay it to petrol bunks and buy petrol.
But there is a fraud here. If you change your mind and want to give back the Dollars to America we can’t demand them to pay Gold in return for the Dollars. They will say ” Have we promised to return something back to you? Haven’t you checked the Dollar ? We clearly printed on the Dollar that it is Debt”
So, Americans don’t need any Gold with them to print Dollars. They will print Dollars on white papers as they like.
But what will Americans give to the Middle East countries for selling petrol in Dollars only?
Middle East kings pay rent to America for protecting their kings and heirs. Similarly they are still paying back the Debt to America for constructing Roads and Buildings in their countries. This is the value of American Dollar. That is why Many say some day the Dollar will be destroyed.
At present the problem of India is the result of buying those American Dollars. American white papers are equal to Indian Gold. So if we reduce the consumption of petrol and cars, Dollar will come down
The Above Details are translated originally from Telugu Language to English by Radhika Gr.
Kindly share this and make everyone aware of the facts of American Dollar V/s Indian Rupee.
And here is a small thing other than petrol , what we can do to our Indian Rupee
YOU CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY BY FOLLOWING FEW SIMPLE STEPS:-
Please spare a couple of minutes here for the sake of India.
Here’s a small example:-
At 2008 August month 1 US $ = INR Rs 39.40
At 2013 August now 1 $ = INR Rs 68
Do you think US Economy is booming? No, but Indian Economy is Going Down.
Dollar is not getting stronger but rupee is getting weaker & nobody else is responsible except us!

How can we change it?
Our economy is in your hands.INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries, is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down. The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation. More than 30,000 crore rupees of foreign exchange are being…

Advertisements

[tamil-islam] சட்டமன்றத்தில் கலைஞர் கர

[tamil-islam] சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி ஆற்றிய முதல் உரை – karim74@gmail.com – Gmail http://ow.ly/omUjn ^AK

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.
வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.
மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.
மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.
மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.

இது பற்றிய சந்தேகம் உள்ள சென்னைவாசிகள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம். மேலும் 044-24338421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் வருமாறு, மண்டலம் (1)-24328734, மண்டலம் (2)-24310687, மண்டலம்(3)-24351581.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engr.Sulthan

kulasaisulthan.wordpress.com
tamilislam.webs.com

வேலூரிலிருந்து சென்னைக்கு 97 நிமிடங்களில

வேலூரிலிருந்து சென்னைக்கு 97 நிமிடங்களில் வந்த இதயம்

வேலூர் : விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேதன்னஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (22). பெற்றோரை இழந்த இவரை பாட்டி மேச்சேரியம்மா வளர்த்தார்.

திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குபேந்திரன் கடந்த 24ம் தேதி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், குபேந்திரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தனர். இதையடுத்து குபேந்திரனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்களை தானம் செய்ய சித்தப்பா நடராஜ் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி, குபேந்திரனின் இதயம் சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியன் மருத்துவமனைக்கும், நுரையீரலை சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. உடல் உறுப்புகள் கொண்டு செல்ல வேலூர் மாவட்ட போலீசாரின் உதவி கோரப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணியளவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதை தொடர்ந்து சிஎம்சி டாக்டர் சீதாராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் குபேந்திரனின் உடல் உறுப்புகளை நேற்று காலை 5.30 மணிக்கு பிறகு ஒவ்வொன்றாக அகற்றினர். காலை 7.55 மணிக்கு பிரீசரில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் பாகங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு செல்லப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் 142 கி.மீ வேகத்தில் பொலீரோ ஜீப்பை போலீஸ் டிரைவர் சரவணன் ஒட்டினார்.

97 நிமிடத்தில் சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியன் மருத்துவமனையில் இதயம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு நுரையீரல் அனுப்பிவைக்கப்பட்டது. குபேந்திரனின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் சிஎம்சிக்கு தானமாக பெறப்பட்டது. இதற்காக பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ரோந்து போலீசார் பார்த்துக் கொண்டனர்.

மதுரையில் ஒரு ஹிதேந்திரன்…

மதுரை : சாலை விபத்தில் ”மூளைச்சாவு” அடைந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 4 பேருக்கு ”புது வாழ்வு” கிடைத்தது.

மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி சியாமளா. இவர்களது மகன் யுவராஜ் பிரவீன் (21) சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். திண்டுக்கல் கொடைரோட்டில் விபத்தில் சிக்கி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ”மூளைச்சாவு” அடைந்தார். யுவராஜ் பிரவீனின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக தர முன் வந்தனர்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை சிறுநீரகவியல் துறை தலைமை டாக்டர் சம்பத்குமார், முரளி, கிருஷ்ணன் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொண்ட குழு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது. மாணவரிடம் அகற்றப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று விருதுநகர் தும்புசின்னம்பட்டி பாஸ்கருக்கும் (37), திருநெல்வேலி கிட்னி கேர் சென்டர் மூலம் மற்றொருவருக்கும், கண்கள் வேறு இருவருக்கும் பொருத்தப்பட்டன. சென்னையில் மூளைச்சாவுக்கு ஆளான ஹிதேந்திரனை தொடர்ந்து உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல்

ஆகஸ்ட் 2012 முதல் கடந்த ஜூலை மாதம் வரை தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்த 99 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=60436

ப.இ.முனாப்
அல் அய்ன் – யு.ஏ.இ
+971503314977

என்னங்க அநியாயம் இது? Photo: வெளிநாட்டுல

என்னங்க அநியாயம் இது?
Photo: வெளிநாட்டுல அதுவும் அரபு நாட்டுல இருந்து வர்றவன்லாம் பெட்ரோல் கம்பெனி ஓனர்னு நினைச்சுகிட்டானுவ….

வாயையும் வயித்தையும் கட்டி… தீயா… நெருப்பாய் கொதிக்கும் வெயில்ல நின்னு வேலை செய்து…. ரத்தத்தை வேர்வையாய் சிந்தி, வெந்து போற அளவிற்கு சூடாகி போன வெண்ணீர்ல குளிச்சு, குப்புஸ் தின்னு கொட்டத்துல அடைக்கப்பட்ட மிருகங்களைப் போல் படுத்து, கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணத்துல, தான் கஷ்டப்பட்டாலும் தன் குடும்பத்தார் சந்தோசமா இருக்கட்டும்னு ஒரு டிவி வாங்கிட்டு வந்தா…

அதுக்கு இனி கட்டணுமாம் சுங்க வரி….

நல்லா இருக்குது…. வெளிநாட்டுல உழைச்சு அனுப்புற கோடிக்கணக்கான பணத்தின் மூலம் அரசுக்கு கிடைக்குற அந்நியச் செலாவணிக்கு…. நீங்க செய்யுற நன்றிக்கடன் இதானா?

via Sridhar krishnan.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz
வெளிநாட்டுல அதுவும் அரபு நாட்டுல இருந்து வர்றவன்லாம் பெட்ரோல் கம்பெனி ஓனர்னு நினைச்சுகிட்டானுவ….

வாயையும் வயித்தையும் கட்டி… தீயா… நெருப்பாய் கொதிக்கும் வெயில்ல நின்னு வேலை செய்து…. ரத்தத்தை வேர்வையாய் சிந்தி, வெந்து போற அளவிற்கு சூடாகி போன வெண்ணீர்ல குளிச்சு, குப்புஸ் தின்னு கொட்டத்துல அடைக்கப்பட்ட மிருகங்களைப் போல் படுத்து, கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணத்துல, தான் கஷ்டப்பட்டாலும் தன் குடும்பத்தார் சந்தோசமா இருக்கட்டும்னு ஒரு டிவி வாங்கிட்டு வந்தா…

அதுக்கு இனி கட்டணுமாம் சுங்க வரி….

நல்லா இருக்குது…. வெளிநாட்டுல உழைச்சு அனுப்புற கோடிக்கணக்கான பணத்தின் மூலம் அரசுக்கு கிடைக்குற அந்நியச் செலாவணிக்கு…. நீங்க செய்யுற நன்றிக்கடன் இதானா?
முகநூலில் இருந்து…
Engr.Sulthan

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவ

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பிபயன்படுத்துவது Youtube தளத்ததைத்தான் இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த் து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீடியோ க்களை டவுன்லோட் செய் யும் வசதி Youtube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Down loader மென்பொருட்களை பயன்படுத்தி டவுன்லோட்செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடி யோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்
படிஎன்று பார்ப்போம்.

1.முதலில் Youtube தளத்துக்கு சென் று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங் கள்

2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் :www.youtube.com/watch?v=9DXqx7y5ME0 இதி ல் நீங்கள் Youtube.com இதற்கு முன்னால் இரண்டு SS சேர்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு http://www.ssyoutube.com/watch?v=9DXqx7y5ME0 இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும்

3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோ வின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்க ளுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக்செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் அவ்வளவுதான்

எஸ்.குசைன் – மூதூர்
ஆசிரியர் ஆலோசகர் – ICT

5 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் மகசூல்…

5 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் மகசூல்…
வெளிநாடு போகும் வெள்ளரி..!
ஜி. பழனிச்சாமி
ஊரான் ஊரான் தோட்டத்திலே…
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா…
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி…
கடுதாசி போட்டான், வெள்ளைக்காரன்’
-வியர்வை சிந்தி விளைச்சல் எடுக்கும் விவசாயிக்கு, விலை நிர்ணயம் செய்யும் உரிமை… நாடு அடிமைப்பட்டுக்கிடந்த வெள்ளைக்காரன் காலத்தில் மட்டுமல்ல… இன்றைய சுதந்திர பூமியிலும் இல்லை என்கிற ஆதங்கத்தை, இதைவிட அழகாகச் சொல்ல முடியாது.
என்றாலும், அன்று தொடங்கி… இன்று வரை சிலபல யுக்திகளைக் கையாளும் விவசாயிகள், தங்கள் விளைபொருளுக்கு நிரந்தரமான விலையைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்து, நேரடி விற்பனை மூலம் நிரந்தர வருமானம் ஈட்டி வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், ஜே. கிருஷ்ணாபுரம், மோகன் செல்லக்குமார்.
கிராமத்துக்கு வெளியே, வளைந்து நெளிந்து செல்லும் தார்சாலையின் இருபுறங்களிலும் வரிசை கட்டி நிற்கின்றன, தென்னைமரங்கள். அவற்றுக்கு இடையே ‘பளிச்’ என காட்சி தரும் பண்ணை வீடுகளை ரசித்துக் கொண்டே சென்றால்… மோகன் செல்லக்குமாரின் பசுமைக் குடில் வந்துவிடுகிறது.
தனித்தனிச் சுவர்கள் போல அமைக்கப்பட்ட வலைகளின் முனையில் மஞ்சள் பூக்கள் அழகு காட்ட… காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்த வெள்ளரிப் பிஞ்சுகளைப் பறித்துக் கொண்டிருந்த மோகன் செல்லக்குமார் நம்மை வரவேற்றுப் பேசினார்.

முட்டுக்கட்டை போட்ட பெற்றோர்!
”நாங்க பரம்பரையா விவசாயக் குடும்பம். ஆறு ஏக்கர்ல தென்னை, மக்காச்சோளம், காய்கறிங்கனு மாத்தி மாத்தி சாகுபடி செய்வோம். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம். ஆனா, வீட்ல அதுக்கு ஆதரவு இல்லை. ‘படிச்சு நல்ல வேலையில சேர்ந்து கை நிறைய சம்பாதி, விவசாயத்துக்கெல்லாம் மதிப்பு இல்லை’னு சொல்லி பி.டெக். படிக்க வெச்சாங்க. பெத்தவங்க ஆசைப்படி படிச்சு, டிகிரி வாங்கின கையோட, சென்னையில இருக்கிற ஐ.டி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் சம்பளம் வாங்கினேன். லீவுல ஊருக்கு வரும்போதெல்லாம், விவசாய ஆசைய வீட்டுல சொல்லுவேன். வழக்கம் போல மறுத்துட்டாங்க. ‘விவசாயத்துக்கு வரவேண்டாம்னு சொல்றதுக்கு என்ன காரணம்?’னு வாக்குவாதம் பண்ணுனப்போ, ‘விவசாயத்துல நிரந்தர வருமானம் கிடைக்காது’னு சொன்னாங்க. அந்த பதில்ல எனக்கு உடன்பாடு இல்ல. ‘புது தொழில்நுட்பங்களைக் கடைபிடிச்சா… விவசாயத்திலயும் நிரந்தர வருமானத்தை நிச்சயம் பாக்கலாம்’னு சொல்லி வீட்டுல உள்ளவங்கள சம்மதிக்க வெச்சேன்.
பச்சைக்கொடி காட்ட வைத்த, பசுமைக் குடில்!
அதுக்கப்பறம், நிறைய பேர்கிட்ட விசாரிச்சப்ப… ‘பசுமைக் குடில் அமைச்சு, காய்கறிகளை வளர்த்தா நல்ல லாபம் பார்க்கலாம்’னு சொன்னாங்க. உடனே, அதை அமைச்சுட்டேன். 50 சதவிகிதம் அரசு மானியத்தோட 25 சென்ட் இடத்துல பசுமைக் குடிலை அமைச்சோம். ஒரு ஏக்கர் நிலத்துல கிடைக்கிற விளைச்சல் 25 சென்ட் பசுமைக் குடில்ல கிடைக்குது.
இந்த ரெண்டு வருஷத்துல… மல்லி, தக்காளி, குடைமிளகாய், குண்டுமிளகாய்னு நாலு வெள்ளாமை செஞ்சுட்டோம். பசுமைக் குடில் வெள்ளாமையில நல்ல வருமானம் கிடைக்கறதை வீட்ல எல்லாரும் தெரிஞ்சுக்கிட்டதும், வேலையை விட்டுட்டு, விவசாயம் செய்றதுக்கு எனக்கு பச்சைக்கொடி காட்டிட்டாங்க.
வெள்ளரி சாகுபடி செஞ்சதுல நல்ல வருமானம். அதனால, திரும்பவும் வெள்ளரியையே போட்டாச்சு” என்று முன்கதையை விரிவாகவே சொன்ன மோகன் செல்லக்குமார், வெள்ளரிப் பிஞ்சுகளை எடை போட்டு அட்டைப் பெட்டிகளில் அடுக்கிக்கொண்டே, பசுமைக் குடில் வெள்ளரி சாகுபடி முறை பற்றி சொல்லத் தொடங்கினார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஒரு யூனிட்டுக்கு 21 பாத்திகள்!
‘பசுமைக் குடில் விவசாயத்தில், ஆயிரம் சதுர மீட்டர் (25 சென்ட்) என்பது ஒரு யூனிட். இதை அமைக்க 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 50 சதவிகிதம் மானியம் கிடைத்துவிடும்.
தேர்வு செய்த நிலத்தில், உழுது பசுமைக் குடில் அமைத்துக் கொள்ள வேண்டும். இரண்டரை டன் தொழுவுரம், 5 கிலோ அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து இறைத்து… 4 அடி இடைவெளியில் ஓரடி உயரம், இரண்டரை அடி அகலம், 110 அடி நீளம் என்ற அளவில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். ஆயிரம் சதுர மீட்டரில் 21 பாத்திகள் அமைக்கலாம். பிறகு, சொட்டுநீர்க் குழாய்களை அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்திகளின் ஒரு புறத்தில் கொடிகள் படர ஏதுவாக, 11 அடி உயரத்துக்கு நைலான் கயிறு மூலம் பந்தல் போல அமைத்துக்கொள்ள வேண்டும். மேட்டுப்பாத்திகளில், இரண்டு அடிக்கு ஒரு வீரிய விதை என நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு யூனிட்டுக்கு 1,200 விதைகள் தேவைப்படும் (ஒரு விதை மூன்று ரூபாய் 50 காசு என்ற விலையில், அனைத்து விதை விற்பனை மையங்களிலும்…

பழந்தமிழரின் அளவை முறைகள்…! Photo: பழந

பழந்தமிழரின் அளவை முறைகள்…!

Photo: பழந்தமிழரின் அளவை முறைகள்…!

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை… எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

via சித்தர்கள் இராச்சியம்.

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை… எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Engr.Sulthan

kulasaisulthan.wordpress.com
tamilislam.webs.com
__._,_.___

அட அப்படியா…….! சாலைகளில் உள்ள மைல்க

அட அப்படியா…….!

சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல… இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க…

* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை

* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை

* நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை

* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !

60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !
Photo: 60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மதுரையில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள “ஜோதிமாணிக்கம்” என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். “M130” எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000
ஆண்டுகள் பழமையானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!.

இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. “THE STORY OF INDIA” என்ற தலைப்பில் “Michael Wood ” என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உலகிற்கே தெரிந்த இந்த தமிழனைப்பற்றிய செய்தி, எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறியானது? !. இதன் காணொளியை கீழே இணைத்துள்ளேன், தவறாமல்
காணுங்கள்.

மேலும் அறிய…
http://www.abroadintheyard.com/modern-faces-ancient-migration/

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மதுரையில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள “ஜோதிமாணிக்கம்” என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். “M130” எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!.

இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. “THE STORY OF INDIA” என்ற தலைப்பில் “Michael Wood ” என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உலகிற்கே தெரிந்த இந்த தமிழனைப்பற்றிய செய்தி, எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறியானது? !.
முக நூலிலிருந்து….
Engr.Sulthan

kulasaisulthan.wordpress.com
tamilislam.webs.com

Post Navigation

%d bloggers like this: