Karim74's Weblog

my articles

Archive for the month “July, 2013”

நன்மைகளின் வாயில்கள்! வருடம் முழுவதும் ந

நன்மைகளின் வாயில்கள்!

வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?
“ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்)
காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?
ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். (புகாரி ஹதீஸ் சுருக்கம்)
நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதன் சிறப்புகள்:
யார் நோன்பாளி நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்கின்றாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி கிடைக்கும். எனினும் நோன்பாளியின் கூலியில் எந்தக்குறைவும் ஏற்படாது. (திர்மிதீ)
பன்மடங்கு நன்மைகளை பெற குர்ஆனை ஓதுங்கள்!
“யார் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்கு. ‘அலிப்’ ‘லாம்’ ‘மீம்’ என்பது ஒரு எழுத்து இல்லை. ‘அலிஃப்’ ஒரு எழுத்து, ‘லாம்’ ஒரு எழுத்து, ‘மீம்’ ஒரு எழுத்து” (புகாரி, முஸ்லிம்)
இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா?
“எவர் ‘இஷாத்’ தொழுகையை ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் பாதி இரவை நின்று வணங்கியவர் போலாவார். எவர் சுப்ஹ் தொழுகையையும் ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் முழு இரவும் தொழுததைப் போன்றதாகும்.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு ஹஜ் செய்த நன்மையைப் பெற!
“ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஒரு ஹஜ் அல்லது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்குச் சமமானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மை வேண்டுமா?
‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்
(பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)
‘என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! (புகாரி)
அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிய வேண்டுமா?
“என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்பவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை வேண்டுமா?
(தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது,
அல்லாஹூம்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தித் தாம்மாத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல்ஃபளீலத்த வப்அஸ்ஹூ மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹூ
பொருள்: பரிபூரணமான இந்த அழைப்புக்கும் நிலைபெறப் போகும் தொழுகைக்கும் சொந்தக்காரணமாகிய அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ‘வஸீலா’ என்ற உயர் பதவியையும் சிறப்பையும் வழங்கி, அன்னாரை நீ வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தில் எழுப்புவாயாக!
என்று யார் ஓதுகின்றாரோ அவருக்கு எனது பரிந்துரையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
லுஹா தொழுகையின் சிறப்புகள்:
உங்களில் ஒருவர் தனது எலும்பு மூட்டுகளுக்காக தர்மம் வழங்க வேண்டும். (நீங்கள் கூறுகின்ற) ஒவ்வொரு சுபுஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும்.
நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது இவை அனைத்திற்கும் போதுமான தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
மலைகளைப் போல நன்மைகள் வேண்டுமா?
“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
நன்றி:சுவனத்தென்றல்
Engr.Sulthan
__._,_.___

Subject: நினைவூட்டல்…. Please see the

Subject: நினைவூட்டல்….

Please see the attached “Hunger campaign” power point show

ஜகாத்தினை கேட்டு ஒரு நினைவூட்டல் மடல்…
Photo
அன்புள்ளசகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்…
ஜகாத்தினை கேட்டு சிறிய நினைவூட்டல் மடல் இது.
அடிக்கடி தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். திரும்ப திரும்ப உங்களிடம் ஜகாத் விஷயமாக கேட்பதில் நான் எந்த வித தயக்கமோ, வெட்கமோ படவில்லை. ஏனெனில் இது எனது கடமை,
இதுவரை சில சகோதரர்கள் ஜகாத் தொகையினை அனுப்பி தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னோடு இணைந்திருக்கும் ஆதரவற்ற ஏழைக் குடும்பங்களின் சார்பில் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயவு செய்து உங்களின் ஜகாத் தொகையினை (என் மேல் முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே) காலந் தாழ்த்தாமல் அனுப்பித் தரவும். உங்களின் உதவியினை எதிர் நோக்கியிருக்கும் குடும்பங்களுக்கும், கல்வி கட்டணத்துக்காக காத்திருக்கும் மாணவ,மாணவிகளுக்கும் உரிய நேரத்திற்குள் கிடைக்க வழி செய்யும்படி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
அவர்களுடன் சேர்ந்து உங்களது உதவியினை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
நன்றி…
வங்கி விபரம்:
H.Mehar sultan
A/C.no;SB 414362020
Indian Bank
Athiththanar Salai Branch
IFS Code:IDIB000A090
Chennai-2
தங்கள் சகோதரன்,
Engr.Sulthan

எனது முந்திய மடல்:
Photo

அன்புள்ளங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் அன்பு தழுவிய ரமலான் வாழ்த்துக்கள்.
குழுமத்தில் உள்ள நம் சகோதரர்கள் அனைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவன் என்ற உரிமையோடு உங்களிடம் என் ஆதரவற்ற சகோதர,சகோதரிகளுக்காக உதவி வேண்டி உங்களிடம் வருகிறேன்.
ஜகாத் என்பது மார்க்கத்தில் கட்டாய கடமையாக்கப் பட்டிருக்கும் ஒருஅமலாகும்.அதனால் தான் இறைவன் தன் அருள் மறையில் 30 இடங்களுக்கும்மேலாக தொழுகைக்கு அடுத்த படியாக ஜகாத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறான். கட்டாயக் கடமையான ஜகாத்தினை, ஜகாத் பெற தகுதியுள்ளவர்களுக்கு சரியாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஜகாத் பற்றிய விழிப்புணர்ச்சியை நம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்7 வருடங்களுக்கு முன்பு இணைய தளம் மூலமாக எனது தாவாப் பணியினைத் துவக்கி அல்ஹம்துலில்லாஹ் அதில் ஒரளவு வெற்றியும் பெற்று விட்டேன். உற்ற நண்பர்கள்,சகோதரர்கள் சிலரின் மூலம் கிடைக்கும் ஜகாத் தொகையினை உரியவர்களுக்கு பங்கீட்டு வருகிறேன். இதில்எந்த விதமான தவறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதாலேயே தனி ஒரு மனிதனாகஇதை செய்து வருகிறேன்.
ஜகாத்தினை வசூலிக்க முற்றிலும் தகுதி வாய்ந்தவன் என்ற முழு நம்பிக்கையோடு தொடர்ந்து இப்பணியினை செய்து வருகிறேன்.
ஆகவே அன்பு சகோதரர்களே! தங்களின் ஜகாத் பணத்தில் ஒரு பகுதியையாவது, என் மேல் முழு நம்பிக்கையிருந்தால் மட்டுமேகொடுத்து உதவி இந்த எனது புனித பணியினில் நீங்களும் பங்கெடுக்க உங்களை அன்போடு வேண்டுகிறேன்.

சென்னை புதுபேட்டையில் என்னை சுற்றிஏறத்தாழ 22 குடும்பங்கள் வறுமை கோட்டிற்கும் கீழாக, எவ்விதவாழ்வாதாரமுமின்றி கஷ்ட நிலையில், ஆண் துணையின்றி, உங்களின் மேலானஉதவியினை எதிர் நோக்கியிருக்கிறார்கள். இக்குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் பொருளாதார உதவியினை மற்றவர்களிடம் சென்று பெறக் கூட வெளியில் வர அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் இருக்கிறார்கள். இவர்களுக்கு வீடு தேடிப் போய் உதவிகளை என்னால் முடிந்தளவு செய்து வருகிறேன். பள்ளிவாசல்,மதரஸா கட்டுவதற்காக உங்களின் ஜகாத்தினை அளிப்பதை விட , நம்அண்டை வீட்டாரின் பசியை போக்குவதே சிறந்ததாகும்.இது இறைவனுக்கேஉணவளித்த பயனை அடைவது போலாகும்.
இந்த வருடமும் பலர் உங்களின் மேலான உதவியினை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள்.

1.குலசை, உடன்குடி,சென்னையில் புதுப்பேட்டையைச் சேர்ந்த 23 உயர் நிலைப் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு(தனியார் பள்ளியில் பயிலும்) ஒரு வருட பள்ளிக் கட்டணம்,யூனிஃபார்ம்,போன்ற தேவைகளுக்காக ஒரு ஆளுக்கு ரூ,2200-ரூ2400 தேவை படுகிறது.

2. தூத்துக் குடி மாவட்டத்தைச் சார்ந்த 6 கல்லூரி மாணவியர் தங்களுடைய கல்லூரி வருட கட்டணமாக தலா ரூ5000–ரூ 6000 கட்ட வசதியின்றி நம்மிடம் உதவி கேட்டிருக்கிறார்கள்.

3. மேற்குறிப்பிட்ட 22 ஆதரவற்ற குடும்பங்களுக்கும் ரமலான் மாத செலவுகளுக்கும், ரமலான் பெருநாளை நம்மோடு சேர்ந்து கொண்டாடவும், புத்தாடைகளுக்கான செலவும் சேர்த்து ஒரு குடும்பத்திற்கு ரூ 5000 தேவைப் படுகிறது.

இவர்கள் அனைவருமே நன்கு பரிசீலிக்கப் பட்டு தேர்வு செய்யப் பட்டவர்கள்.உங்களின் மேலான உதவியினை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள்.

ஸதக்கத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையினை அடைய இவர்களின் கல்விக்காக முடிந்த உதவியினைச் செய்ய வேண்டுகிறேன்.

இன்னும் மேலே குறிப்பிட்ட ஆதரவற்ற குடும்பங்கள் அவர்களின் அன்றாட…

His Highness Shaikh Mohammed bin Rashid

His Highness Shaikh Mohammed bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, honoured Dr Zakir Naik, winner of Islamic Personality of the Year of the 17th Dubai International Holy Quran Award on Monday evening.

As patron of the Award, Shaikh Mohammed welcomed the prominent Indian scholar at Zabeel Palace and presented him with the honour. Shaikh Mohammed congratulated Dr Naik for adopting calm dialogue, proof-based method of persuasion in preaching and promoting Islam as a religion of mercy and tolerance.

Shaikh Mohammed marvelled at Dr Naik’s intellectual and spiritual merits which enable him to memorise and interpret the Holy Quran. He also praised him for deep understanding of the divinely-revealed Books and for his valuable books.

– Khaleej Times

Engr.Sulthan

லைலத்துல் கத்ர் இரவு!!! கண்ணியமும், மகத்

லைலத்துல் கத்ர் இரவு!!!

கண்ணியமும், மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையைஎதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது.

எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)

மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில்21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ, பிரத்தியேகமான வணக்கமோ ஹதிஸ்களில் காணப்படவில்லை.ஆனாலும், நம்மில் பலர் நின்று வணங்கவேண்டும் என்பதால் நபி(ஸல்) அவர்கள கற்று தராதவைகளை மார்க்கம் எனும் பெயரில் செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் தஸ்பிஹ் தொழுகைஎனும் வணக்கமாகும்.

அதாவது, முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்னர் கிராஅத் ஒதிய பிறகு ருகூவுக்கு முன்னர் நிலையில், ருகூவில், பின்னர் நிலையில், ஸஜ்தாவில், இருப்பில் இப்படி 10 தடவையாக 4ரக்அத்களில் மொத்தம் 300 தடவை ஓதி தொழுவது தான் தஸ்பிஹ் தொழுகை.

இத்தொழுகையை வாழ்நாளில் ஒரு முறையாவது தொழ வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளனர் நம் மௌலவிகள். மேலும் இத்தொழுகை தொடர்பாக பல அறிவிப்புகள் இருந்தாலும் அவை அத்தனையும்ஆதாரமற்ற பலவீனமான அறிவிப்புகளாகும். அவற்றின் தரத்தை அறிந்து அதனை விட்டு விடுவது தான் அறிவுடைமையாகும். ஆதாரப்பூர்வமாக இல்லாத ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யும் அமல்கள் எந்த ஒரு நன்மையையும் பெற்றுத்தராது என்பதை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட அமல்களை விட்டுவிடுவதே சால சிறந்தது.

மார்க்கத்தில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் செய்பவர்களைப்பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி(ஸல்)…

why Media channel’s are not covering th

why Media channel’s are not covering this news ??

Yuwa Team from Jharkhand has represented India in Under 14 years Women’s Donosti Football cup which was held at Spain and won the 3rd Prize in the Tournament !!

Out of 400 Worldwide Teams , The Yuwa Team qualified for the Tournament and won 3rd Position !!!

Photo Gallery & Complete Report here : http://bit.ly/13xV0km

They Received the 3rd Prize in their local Traditional Dress and sang Vande Mataram in the stadium

Thank you sister’s for making India Proud !!

Everyone Kindly Share this News with Pride

Jai Hind

மூன்றாவது பத்தில், ரமலான்! மூன்றாவது பத்

மூன்றாவது பத்தில், ரமலான்!

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும்.

அல்லாஹ் அல் குர்ஆனில்,

நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
( அல் குர் ஆன் 4 : 56 )

என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.

திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது – வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை – கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று.
(அல் குர் ஆன் 78:21-33).

நபிமொழி : “இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா

நரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

இவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு, (17 : 28-31) நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும். குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.

மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:

முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)

மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.

உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள், “அத்துவாஉ ஹுவல் இபாதா – துவா என்பதே ஒரு…

விவசாயி கடித்து பாம்பு சாவு! விவரங்கள் வ

விவசாயி கடித்து பாம்பு சாவு!
விவரங்கள் வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 29 ஜூலை 2013 05:46 போபால்: தன்னைக் கடித்த பாம்பை தானும் கடித்துத் துண்டங்களாக்கிக் கொன்றுள்ளார் விவசாயி ஒருவர். இது பற்றிய ருசிகரமான செய்தி வருமாறு: நிலாப் துர்பே என்பது அந்த விவசாயியின் பெயர். போபாலை அடுத்த…

சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அபா

சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அபாய எல்லைக்குள் நுழைகின்றன

Friday, 12 July 2013 00:14 லதீப் பாரூக்

ksauaeலதீப் பாரூக்
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட எண்ணெய் வளம் நிரம்பிய வளைகுடா நாடுகள், எகிப்திய ஜனநாயக அரசாங்கத்தைக் கவிழ்த்த இராணுவப் புரட்சிக்குத் தமது எண்ணெய் வருமானத்தை அள்ளி இறைத்திருக்கின்றன. இதன் மூலம் இஸ்ரேலிற்கு பிரயோசனம் தருகின்ற விதத்தில், மற்றொரு கொலைக்களமாக எகிப்தை மாற்றுவதற்கு இவை வழி செய்துள்ளன.
புகழ் பூத்த அரபு வசந்தம் மூலம், ஆறு தசாப்த இராணுவ சர்வதிகார ஆட்சிக்கு முடிவு கண்ட பிறகு உருவான மூர்ஸி தலைமையிலான ஜனநாயக அரசாங்கத்தை, இராணுவம் பதவி கவிழ்த்திருக்கிறது. இராணுவப் புரட்சி நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் சவூதி மன்னர் அப்துல்லாஹ், எகிப்திய பாதுகாப்பமைச்சரும், இராணுவத் தளபதியுமான அப்துல் பதாஹ் அல்- ஸிஸிக்கு தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து நடக்கின்ற நிகழ்வுகள், எகிப்தில் குழப்ப நிலையையும், இரத்தக் களரியையும் உருவாக்குவதற்கான துருப்புச் சீட்டாக எகிப்திய இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளதையே தெளிவுபடுத்துகின்றது.
இராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால பொம்மை ஜனாதிபதி அத்லி மன்ஸூரிற்கு, இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலராகத் தன்னை வர்ணித்துக் கொள்கின்ற சவூதி மன்னர் அப்துல்லாஹ் அனுப்பியுள்ள வாழ்த்துக் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
“எகிப்திய வரலாற்றின் முக்கியமான இக்கட்டத்தில், அதன் தலைமைத்துவத்தைத் தாங்கள் ஏற்றிருக்கிறீர்கள் என்ற வகையில், என் பெயரிலும், சவூதி அரேபிய மக்கள் சார்பிலும், தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வாழ்த்துவதன் மூலம், தங்கள் தோள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவு செய்து, எமது எகிப்திய சொந்தங்களின் எதிர்ப்பார்ப்புக்களை எய்தும் வகையில் செயற்படுவதற்கு, எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
இதே நேரம், ஜெனரல் அப்துல் பத்தாஹினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இராணுவப் படையினருடனும் நாம் உறுதியாகக் கைகுழுக்கிக் கொள்கின்றோம். இவர்கள் இம்முக்கியமான தருணத்தில், எகிப்தை இருண்ட குகையில் இருந்து பாதுகாத்திருக்கிறார்கள். எகிப்துக்கு ஏற்பட இருந்த அபாயத்தின் பரிமாணத்தையும், அது ஏற்படுத்த இருந்த விளைவுகளையும் இறைவன் மாத்திரமே அறிவான். சகல தரப்பினரது உரிமைகளையும் அரசியல் செயன்முறையின் ஊடாகப் பாதுகாப்பதற்கான ஞானமும், மாற்றமும் இம்மனிதர்கள் மூலமாகவே உருவானது”.
சவூதியில் சர்வதிகார ஆட்சியை நடாத்திக் கொண்டு, சவூதி மக்கள் சார்பாக பேசுவதாக சவூதி மன்னர் கூறிக்கொள்வதே ஏற்றுக்கொள்ள இயலாதது. முஸ்லிம் நாடொன்றில் குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதற்காக, இஸ்லாம் விரோத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு, அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக அவர் கூறியிருப்பதும் கேலிக் கூத்தானதுதான்.
இராணுவப் புரட்சி இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள், எகிப்திய இராணுவத் தளபதி, அப்துல் பத்தாஹ் அல்- ஸிஸி, மூர்ஸி தலைமையிலான சட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாநாயக அரசை, இராணுவ சதி மூலம் கவிழ்ப்பதற்குரிய நிதி மற்றும் பிற உதவிகளை வழங்கிய சவூதி மன்னர் அப்துல்லாஹ்வுக்கும், ஐக்கிய அரபு இராச்சிய அதிபர் கலீபா பின் ஸைத் நஹ்யானிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இதில் மிகவும் வருத்தம் தருகின்ற விடயம் யாதெனில், இஸ்லாம் மற்றும் ஜனநாயகத்திற்கெதிரான சதி, இரண்டு புனிதத் தளங்களின் காவலர் என்று சொல்லிக் கொள்கின்ற ஒருவரினால், நிதி வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமைதான்.
இது தொடர்பில், DEBKA என்ற வாராந்தப் பத்திரிகை கடந்த 04.07. 2013 வியாழக்கிழமை அன்று பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “சவூதி மற்றும் டுபாய் என்பவற்றின் புலனாய்வு மற்றும் நிதி ரீதியான உதவிகள் இல்லாமல், எகிப்திய இராணுப்புரட்சி சாத்தியமாகி இருக்காது. சவூதியும், ஐக்கிய அரபு இராச்சியமும் பணத்தை எகிப்திய இராணுவ ஜெனரல்களின் கால்களில் குவித்தனர். லிபியா, சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அரபு வசந்தத்தை இவை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் போன பிறகு, அரபு வசந்தம் குறித்து இவ்வாறுதான் இவை முதன் முதலில் கதைத்திருக்கின்றன”.
கெய்ரோவில் வெற்றிகரமான இராணுவப் புரட்சியை மெற்கொண்டதன் மூலம், 2011 இல் தனது நண்பர் ஹுஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டமைக்காக தற்போத் சவூதி மன்னர் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். சவூதி அரேபியாவும், வளைகுடா நாடுகளும், தமது அமெரிக்க, பிரித்தானிய மற்றும் இஸ்ரேலிய எஜமானர்களைத் திருப்தி செய்வதற்காக இஸ்லாத்தை ஒடுக்கவும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக செயற்பட்டும் வருகின்றன.
ஜனநாயக ரீதியாக…

இஃதிகாஃபின் சட்டங்கள் இஃதிகாப் என்ற அரபி

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக?
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.

இஃதிகாபின் ஆரம்பம்

இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)
ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.
அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.

இஃதிகாபின் முடிவு நேரம்

இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.
அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)
நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.
பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?
நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033)
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். “இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ (2034)
“நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?” என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது.
மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.
… நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது… (புகாரீ 2041)
நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.
இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும்….

IMPORTANT INFORMATION : A 21 year old gi

IMPORTANT INFORMATION :
A 21 year old girl had worn a pair of contact lenses
during a barbecue party.(An event or meal at which
food is cooked outdoors over an open grill or fire)
While barbecuing he stared at the fire charcoals
continuously for 2-3 minutes.
Inline image 1
After a few minutes, She started to scream for help
and moved rapidly, jumping up and down.
No one in the party knew why she was doing this?
Then she admitted into the Hospital, the doctor said
she’ll be blind permanently because of the contact
lenses that he had worn.
Contact lenses are made by plastics, and the heat
from the charcoal melted his contact lenses.
DO NOT WEAR CONTACT LENSES WHERE
OVERHEATING and FLAMES are concerned….
or while COOKING…!
__._,_.___

Post Navigation

%d bloggers like this: