Karim74's Weblog

my articles

Archive for the month “May, 2013”

Source : http://www.ottrumai.net/SecretS

Source : http://www.ottrumai.net/SecretSociety/9-DutiesAndResponsibilitiesOfMuslims.htm

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

1) இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு, காதல் – காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி.

2) அத்தகைய மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மலர ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும். நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகள் அடிப்படையில், பெயரளவில் முஸ்லிம் என்று இல்லாமல் இஸ்லாத்தின் கடமைகளையும், சட்டதிட்டங்களையும் தெளிவாக விளங்கி செயல்படக்கூடிய முன்மாதிரி முஸ்லிமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளான சாட்சிபகர்தல், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றில் மிகுந்த பேணிக்கையுடன் நடந்து காட்டவேண்டும். ஒரு முஸ்லிமின் அடிப்படை அம்சங்களான உண்மை, நேர்மை, பணிவு, நன்னடத்தை, வாக்குறுதி மீறாமை போன்ற நற்பண்புகளின் உறைவிடமாக நீங்கள் திகழவேண்டும். இந்திய மண்ணில் இஸ்லாம் வேரூண்டக் காரணமாக அமைந்தவைகளுள் ஒன்று நம்மக்களிடம் அன்றைய அரபுமுஸ்லிம் வணிகர்கள் நடந்து காட்டிய நேர்மையான நன்னடத்தைகள் என்பதையும் கவனத்தில் கொள்க.

3) உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும்.பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய ஷைத்தானிய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும்? என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம். அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

4) இஸ்லாமிய குடும்ப உறவுகள் மேம்படவேண்டும். சிறுசிறு கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளால் பல முஸ்லிம் குடும்பங்களுக்குள் பல பிரிவினைகள் ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அத்தகைய பிளவுகள் அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பது, மறுமைக்கான பரிசோதனைக் கூடமான அற்ப உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றுதலே. சுயநலமாகவும், அகங்காரமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் வாழ்ந்திருந்து இறுதியில் நாம் எதைக் கொண்டு செல்லப்போகிறோம்? என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட விரோதங்கள்தாம் நாளடைவில் குடும்பப் பிரச்சனைகளாக வலுக்கிறது. நம் குடும்ப உறவுகளை முறித்து, பல பிளவுகளை நமக்குள் ஏற்படுத்தி அவற்றையே ஒருஇயக்கப்பிளவாக, ஒரு சமுதாயத்தின் பிளவாக மாற்றி, நம்மை கோழைகளாக ஆக்கிவிடுவது கெட்ட ஷைத்தானுடைய (இப்லீஸ் – லூசிஃபருடைய) வேளைதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கான வித்து உங்கள் குடும்பத்திலிருந்து ஊன்றப்பட வேண்டும்.

5) உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும். உங்கள் பெற்றோர்கள், மனைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் பொறுப்பிலுள்ளோர் என்று அனைவருக்கும் ஷைத்தானுடைய, இலுமனாட்டிகளுடைய சூழ்ச்சிகளை விளக்கவேண்டும். மேலும் அவர்களையும் தூய இஸ்லாத்தின் கோட்பாடுகளால் வார்த்தெடுத்து இஸ்லாம் என்னும் சத்தியமார்க்கத்தில் இறுகிப் பிணைத்திடவேண்டும். ஒரு வீட்டிற்கு படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்பன எவ்வாறு அவசியமோ அது போல ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்களாவது கொண்ட ஒரு…

Advertisements

தந்தையின் சிறப்பு தாயும் தந்தையும் ஒருவன

தந்தையின் சிறப்பு

தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.

தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம், தந்தையின் உயர்வு சொல்-த் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம்? என்று கூறுவார்கள். ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து, அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை.

தந்தையின் சிறப்பையும் உயர்வையும் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் விட்டுவிடவில்லை. அவருடைய சிறப்பையும் உயர்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அத்தோடு திருக்குர்ஆனும் தெளிவாகக் கூறியுள்ளது.

“ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ உன் பெற்றோரைப் பேணிக்கொள் அல்லது (பேணாமல்) விட்டுவிடு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 2080) மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு. அல்லது அதைப் பேணிக்கொள். (நூல்: இப்னுமாஜா 3653)

ஆக, மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம், ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஒரு தந்தைக்கு உயர்வும் சிறப்பும் ஏன்? அவன் தன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றான். எவ்வளவு பெரிய துன்பத்தையும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்காக உழைத்துப் பொருளீட்டுகின்றான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நல்வாழ்விற்காகவே வாழ்கிறான். எனவேதான் அவருக்குச் சிறப்பும் உயர்வும் உள்ளன. ஆகவே ஒரு குடும்பம் சிறந்து விளங்கவும் மேம்படவும் பொருளாதாரம் இன்றியமையாதது. அதை ஈட்டித் தருபவர் தந்தையே ஆவார்.

அதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுள் சிலரைவிட (வேறு) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள், தங்கள் பொருளாதாரத்திலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும் ஆகும். (04: 34)

ஆகவே, ஒரு தந்தை தன் கும்பத்தாருக்குப் பொருளாதார ரீதியில் உதவிசெய்வதாலும் பெண்களைவிட ஒரு படி உயர்வு அவருக்கு இருப்பதாலுமே அவர் மேன்மையடைகிறார். ஒரு தந்தையின் உயர்வையும் சிறப்பையும் பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம். மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை, 2. ஒரு பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை எவ்விதத் தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு தந்தை தம்மைவிடத் தம் பிள்ளை உயர்வையும் சிறப்பையும் பெற வேண்டும் என்று நினைப்பவர். உளத்தூய்மையோடும் உயர் எண்ணத்தோடும் அவர் செய்யும் பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தகைய உயர்வைப் பெற்றுள்ள தந்தைக்கு இக்காலப் பிள்ளைகள் கொடுக்கும் மரியாதை என்ன? அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன? மனத்தளவில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்களா?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதாவது: (நபியே!) உங்களது இறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படியும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்;அவர்களை (நிந்தனையாகச்) “சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்கüடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். (17: 23)

இவ்வசனத்தில் ஒருவரோ இருவருமோ என்று பொதுவாகத்தான் கூறியுள்ளான். தம் இளமை முழுவதையும் தம் குடும்பத்திற்காகவும் தம் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் செலவழித்த ஒரு தந்தையை அவர்தம் பிள்ளைகள் மிக்க…

THE PRAYER THAT SHOCKED THE WORLD. =====

THE PRAYER THAT SHOCKED THE WORLD.

======================
When Pastor Minister Joe Wright was asked to open the new session of the Kansas Senate, everyone was expecting the usual generalities, but this is what they heard:

“Heavenly Father, we come before you today to ask your forgiveness and to seek your direction and guidance. We know Your Word says, “Woe to those who call evil good”, but that is exactly what we have done. We have lost our spiritual equilibrium and values.

We have exploited the poor and called it the lottery.
We have rewarded laziness and called it welfare..
We have killed our unborn and called it choice.
We have shot anti-abortionists and called it justifiable.
We have neglected to discipline our children and called it building self esteem.
We have terrorised the world and called the victims terrorists.
We have abused power and called it politics.
We have coveted our neighbour’s possessions and called it ambition.
We have polluted the air with profanity and pornography and called it freedom of expression.
We have ridiculed the time-honoured values of our forefathers and called it enlightenment.

Search us, Oh, God, and know our hearts today; cleanse us from every sin and set us free. Amen

===========

The response was immediate. A number of legislators walked out during the prayer in protest.

In 6 short weeks, Central Christian Church, where Rev. Wright is
pastor, logged more than 5,000 phone calls with only 47 of those calls responding negatively.

The church is now receiving international requests for copies of this prayer from India , Africa and Korea .

Commentator Paul Harvey aired this prayer on his radio program, “The Rest of the Story,” and received a larger response to this program than any other he has ever aired.

With the Lord’s help, may this prayer sweep over our nation

If possible, please pass this prayer on to your friends. “If you don’t stand for something, you will fall for everything..”

புற்று – முற்றவிடக் கூடாது!.By ஆசிரியர்

புற்று – முற்றவிடக் கூடாது!.By ஆசிரியர்

First Published : 20 May 2013 01:54 AM IST

.ஊடகங்களில் இப்போது பேசப்படும் செய்தியாக இருப்பது, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனக்கு முலைப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் இருப்பதை மருத்துவச் சோதனைகளில் அறியவந்ததால் தனது இரு மார்பகங்களிலும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்பதுதான். (முலைப்புற்றுநோய் என்றால் ப்ரெஸ்ட் கேன்சர். மார்பகப் புற்றுநோய் என்றால் தொராசிக் கேன்சர்.)

“மார்க்கெட் சரிவை’ விரும்பாத எந்த ஒரு பிரபல நடிகையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கும் இந்த அறுவைச் சிகிச்சையை ஏஞ்சலினா ஜூலி உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லக் காரணம் – மருத்துவ வணிகம்தானே தவிர, மகளிர் நலன் அல்ல.

உலகில் உள்ள எல்லாப் பெண்களும் தங்களுக்கு முலைப்புற்று நோய்க்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்பதும், இதனால் இந்தச் சோதனையைச் செய்யும் மருத்துவமனைகள் மற்றும் இதற்கான மருத்துவக் கருவிகளை, தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றுள்ள நிறுவனங்கள் லாபம் பெற வேண்டும் என்பதும்தான் ஜூலியின் வெளிப்படையான ஒப்புதலுக்குப் பின்னணியில் உள்ள மருத்துவ உண்மை.

இந்தியாவில், சில கிரீம்களை பூசிக்கொண்டால் முகத்தின் நிறம் அல்லது கரும்புள்ளி நீங்கி, “டல்’ திவ்யா-க்கள் பிரகாசமாக ஆகிவிடுவதும், குறிப்பிட்ட ஊட்டச்சத்தை சாப்பிட்ட பிறகு குழந்தைகள் வேகமாக பனியன் சிறுத்துக் கிழியும் அளவுக்கு வளர்ந்துவிடுவதும், குழந்தை அதிக மதிப்பெண் வாங்குவதுமாக நிறைய விளம்பரங்கள், நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் கொண்டு தயாரிக்கப்படும் விளம்பரங்களைப் போன்றதுதான் ஏஞ்சலினா ஜூலியின் மருத்துவ அறுவைச் சிகிச்சையும்!

முலைப்புற்று நோயை ஏற்படுத்தும் மரபீனி “பிஆர்சிஏ-1′, “பிஆர்சிஏ-2′ ஆகியவற்றை அறிந்து, அதன் மூலம் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று கணிக்கிறார்கள். ஏஞ்சலினா ஜூலியின் மனம் திறந்த பேட்டியால் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களிடையே இதற்கான விழிப்புணர்வு ஏற்படலாம். வியாபாரமும் நடக்கலாம். ஆனால் இந்தியாவில் முலைப்புற்று நோய்க்கு ஆளாகியிருப்பதை அறிந்துகொள்ளவும் இயலாத நிலையில் பெண்கள் இருக்கிறார்கள் என்கிற நிலையில், நாம் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

இந்தியாவில் 2011-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் முலைப்புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 1.15 லட்சம். இது 2015-ஆம் ஆண்டு 2.5 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டது. குறிப்பாக பெருநகர வாழ்க்கைச் சூழல் காரணமாக, இந்நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் அதிகமாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது.

இந்தியாவில் அதிகமாகக் காணப்படுவது கருவாய் புற்றுநோய் (செர்விகல் கேன்சர்), முலைப்புற்று நோய் இரண்டும்தான். இதற்கு அடுத்த நிலையில்தான் வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் போன்றவை.

முலைப்புற்று நோய் இருப்பதைத் தொடக்க நிலையிலேயே கண்டறியும் “மம்மோகிராபி’ சோதனைக்கு இந்தியாவில் மருத்துவமனைக்கு ஏற்ப ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியப் பெண்கள் தங்களுக்கான நோயைச் சகித்துக்கொண்டு வாழ்க்கையைத் தொடருவதால், தாங்கமுடியாத நிலையில் மட்டுமே அதைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால், தொடக்கநிலையில் இந்த நோயைக் கண்டறிந்து, கதிர்வீச்சு மூலம் குணப்படுத்தும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர்.

இந்திய புற்றுநோய்க் கழகம் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் மூலம் எல்லா மாநிலங்களிலும் நடமாடும் மம்மோகிராபி வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் பரவலாகப் பெண்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டது உண்மை என்றாலும், இது முழுமையாக நடைபெறவில்லை என்பதோடு, இந்த வாகனம் தங்கள் பகுதிக்கு வருவது குறித்த விழிப்புணர்வும், இந்தச் சோதனையைப் பெண்கள் செய்து கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பானது என்கின்ற பரப்புரையும் இல்லாததால் இத்திட்டத்தால் பயன்அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருந்தது.

முலைப்புற்று நோய்க்குக் காரணம் துல்லியமாகத் தெரியவரவில்லை. இருப்பினும், இதற்கான அடிப்படைக் காரணமாக கருதக்கூடியவை, 30 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்தல், குழந்தை பெறுவதை பல ஆண்டுகள் தள்ளிப்போடுதல், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்தல் ஆகிய மூன்றும்தான். இதில் முதல் இரு காரணங்களும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரம் சார்ந்தவையாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக மம்மோகிராபி மற்றும் கருவாய்ப் புற்றுக்கான சோதனைகளை நடத்துவது மிகவும் அவசியம். தமிழக அரசு…

Of the thousands of white Britons embrac

Of the thousands of white Britons embracing Islam every year, most are thought to be professionally successful, independent-minded women, says a study

Arguably, Islam has more than a mere perception problem over how it treats its women. Even after allowing for stereotyping (the image of a burqa-clad woman walking two paces behind her husband is a crude caricature of the modern Muslim woman), the fact is that Muslim women are more vulnerable to misogyny and cultural prejudices of their menfolk than women of any other faith. The more “Islamic” a society, the fewer individual freedoms its women enjoy.

Yet, Islam appears to hold a strange fascination for white British women who are converting to it in large numbers. Of an estimated 50,000 or so white Britons who convert to Islam every year, some two-thirds are thought to be women. Most of them are independent career women — bankers, doctors, broadcasters — who know what they are doing, and often do so in the face of opposition from family and friends. High profile converts include Lauren Booth, sister-in-law of former Prime Minister Tony Blair, well-known journalist Yvonne Ridley and MTV presenter Kristiane Backer.

After 9/11

Though there is no hard data, mosques claim that there has been an increase in the number of converts to Islam since 9/11 with more women approaching them.

“I receive many more inquiries from women. It is quite surprising, given the negative publicity in terms of the mistreatment of women. But women say it was all the negative things that first stimulated their interest,” said Sheikh Imam Ibrahim Mogra from Leicester.

So, what makes professionally successful and liberated western women embrace a faith which has become synonymous with oppression? And what has it been like for these “new mullahs”?

A groundbreaking study by Cambridge University’s Centre of Islamic Studies (CIS) and the Leicester-based New Muslims Project provides a fascinating insight into the experience of women converts. Its 129-page report, “Narratives of Conversion to Islam,” outlines what it describes as “the social, emotional and sometimes economic costs of conversion” and examines the reasons for women converting to Islam in a society with “pervasive negative stereotypes” about it. The study shows they were prompted as much by a genuine curiosity about Islam, especially in the aftermath of 9/11, and a quest for “faith and spirituality” as by a reaction against too much individualism and excessive permissiveness of western culture. Then there are often such practical considerations as the wish to marry a Muslim boyfriend. Many were introduced to Islam by a “boyfriend, fiancé or husband.” Some were initially drawn to it out of sheer curiosity and then got “hooked.”

Anisa Atkinson, once a devout Catholic, ended up converting after reading a pamphlet on Islam.

“I was pretty bored so decided to flick through it. And a few pages in I realised this was what I had been searching for. It was a light bulb moment. So I read more, and studied the religion, and a few months later I become a Muslim. My mother was devastated.’’

In the case of Caroline Bate, an investment banker, her best friend was marrying a Muslim so she wanted to know more about it and started reading about Islam.

“The literature that I picked up just stimulated me. And Islamic teaching made perfect, logical sense. You can approach it intellectually and there are no gaps, no great leaps of faith that you have to make.”

Yasir Suleiman, project leader and director of CIS, described conversion as “a complex phenomenon.”

“It is often full of joy and pain for the convert and her family and friends, regardless of the faith to which she converts, but no more so than when the faith is a maligned Islam and its followers.”

Women said people wanted to know why a “liberated/free Western woman would embrace a backward faith that oppresses her.” According to Professor Suleiman, the question implied that there “must be something…

புற்று – முற்றவிடக் கூடாது!.By ஆசிரியர்

புற்று – முற்றவிடக் கூடாது!.By ஆசிரியர்

First Published : 20 May 2013 01:54 AM IST

.ஊடகங்களில் இப்போது பேசப்படும் செய்தியாக இருப்பது, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனக்கு முலைப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் இருப்பதை மருத்துவச் சோதனைகளில் அறியவந்ததால் தனது இரு மார்பகங்களிலும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்பதுதான். (முலைப்புற்றுநோய் என்றால் ப்ரெஸ்ட் கேன்சர். மார்பகப் புற்றுநோய் என்றால் தொராசிக் கேன்சர்.)

“மார்க்கெட் சரிவை’ விரும்பாத எந்த ஒரு பிரபல நடிகையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கும் இந்த அறுவைச் சிகிச்சையை ஏஞ்சலினா ஜூலி உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லக் காரணம் – மருத்துவ வணிகம்தானே தவிர, மகளிர் நலன் அல்ல.

உலகில் உள்ள எல்லாப் பெண்களும் தங்களுக்கு முலைப்புற்று நோய்க்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்பதும், இதனால் இந்தச் சோதனையைச் செய்யும் மருத்துவமனைகள் மற்றும் இதற்கான மருத்துவக் கருவிகளை, தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றுள்ள நிறுவனங்கள் லாபம் பெற வேண்டும் என்பதும்தான் ஜூலியின் வெளிப்படையான ஒப்புதலுக்குப் பின்னணியில் உள்ள மருத்துவ உண்மை.

இந்தியாவில், சில கிரீம்களை பூசிக்கொண்டால் முகத்தின் நிறம் அல்லது கரும்புள்ளி நீங்கி, “டல்’ திவ்யா-க்கள் பிரகாசமாக ஆகிவிடுவதும், குறிப்பிட்ட ஊட்டச்சத்தை சாப்பிட்ட பிறகு குழந்தைகள் வேகமாக பனியன் சிறுத்துக் கிழியும் அளவுக்கு வளர்ந்துவிடுவதும், குழந்தை அதிக மதிப்பெண் வாங்குவதுமாக நிறைய விளம்பரங்கள், நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் கொண்டு தயாரிக்கப்படும் விளம்பரங்களைப் போன்றதுதான் ஏஞ்சலினா ஜூலியின் மருத்துவ அறுவைச் சிகிச்சையும்!

முலைப்புற்று நோயை ஏற்படுத்தும் மரபீனி “பிஆர்சிஏ-1′, “பிஆர்சிஏ-2′ ஆகியவற்றை அறிந்து, அதன் மூலம் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று கணிக்கிறார்கள். ஏஞ்சலினா ஜூலியின் மனம் திறந்த பேட்டியால் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களிடையே இதற்கான விழிப்புணர்வு ஏற்படலாம். வியாபாரமும் நடக்கலாம். ஆனால் இந்தியாவில் முலைப்புற்று நோய்க்கு ஆளாகியிருப்பதை அறிந்துகொள்ளவும் இயலாத நிலையில் பெண்கள் இருக்கிறார்கள் என்கிற நிலையில், நாம் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

இந்தியாவில் 2011-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் முலைப்புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 1.15 லட்சம். இது 2015-ஆம் ஆண்டு 2.5 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டது. குறிப்பாக பெருநகர வாழ்க்கைச் சூழல் காரணமாக, இந்நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் அதிகமாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது.

இந்தியாவில் அதிகமாகக் காணப்படுவது கருவாய் புற்றுநோய் (செர்விகல் கேன்சர்), முலைப்புற்று நோய் இரண்டும்தான். இதற்கு அடுத்த நிலையில்தான் வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் போன்றவை.

முலைப்புற்று நோய் இருப்பதைத் தொடக்க நிலையிலேயே கண்டறியும் “மம்மோகிராபி’ சோதனைக்கு இந்தியாவில் மருத்துவமனைக்கு ஏற்ப ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியப் பெண்கள் தங்களுக்கான நோயைச் சகித்துக்கொண்டு வாழ்க்கையைத் தொடருவதால், தாங்கமுடியாத நிலையில் மட்டுமே அதைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால், தொடக்கநிலையில் இந்த நோயைக் கண்டறிந்து, கதிர்வீச்சு மூலம் குணப்படுத்தும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர்.

இந்திய புற்றுநோய்க் கழகம் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் மூலம் எல்லா மாநிலங்களிலும் நடமாடும் மம்மோகிராபி வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் பரவலாகப் பெண்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டது உண்மை என்றாலும், இது முழுமையாக நடைபெறவில்லை என்பதோடு, இந்த வாகனம் தங்கள் பகுதிக்கு வருவது குறித்த விழிப்புணர்வும், இந்தச் சோதனையைப் பெண்கள் செய்து கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பானது என்கின்ற பரப்புரையும் இல்லாததால் இத்திட்டத்தால் பயன்அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருந்தது.

முலைப்புற்று நோய்க்குக் காரணம் துல்லியமாகத் தெரியவரவில்லை. இருப்பினும், இதற்கான அடிப்படைக் காரணமாக கருதக்கூடியவை, 30 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்தல், குழந்தை பெறுவதை பல ஆண்டுகள் தள்ளிப்போடுதல், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்தல் ஆகிய மூன்றும்தான். இதில் முதல் இரு காரணங்களும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரம் சார்ந்தவையாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக மம்மோகிராபி மற்றும் கருவாய்ப் புற்றுக்கான சோதனைகளை நடத்துவது மிகவும் அவசியம்….

குழந்தை சொல்வதைக் கேளுங்கள்!.By பிரபா ஸ்

குழந்தை சொல்வதைக் கேளுங்கள்!.By பிரபா ஸ்ரீதேவன்

First Published : 25 May 2013 01:28 AM IST

.ஐந்து வயது, ஆறு வயது, நான்கு வயது – எங்கு போய் போர்க்கொடி தூக்கலாம்? எப்படி இந்தக் கொடூரத்தை நிறுத்துவது? பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்த பயிற்சிபெறும் இளம் நீதித்துறை அதிகாரிகளிடம், பாலியல் வன்முறை – சீண்டுதல் வழக்குகளில் நீதிமன்றத்தின் அணுகுமுறைபற்றிப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 150 இளைஞர்கள், ஆண்களும், பெண்களும். இறுதியில் கேள்வி நேரத்தில் ஓர் இளம் அதிகாரி இன்று நிலவும் சூழ்நிலைப் பற்றி விவரித்து, “”என்ன செய்யலாம் மேடம்? தாங்க முடியாத துயரமும் அவமானமுமாய் இருக்கிறது” என்றார். இதையே எதிரொலித்து இரு மாணவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள், “”மேடம் இது பற்றி நிறையப் பேசவேண்டும், பொறுக்கவில்லை” என்றார்கள். பொறுக்குதில்லை, உண்மை. குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை சமீப காலமாக நடக்கும் ஒன்று என்று நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல.

4 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தக் கொடுமைக்குப் பலியாகிறார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எத்தனை எத்தனை குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உணர்வுகள், மனநிலை சிதைக்கப்பட்டு வாழ்கிறார்கள்! இந்தக் கொடுமை நடந்தபின் அவர்கள் பார்வையிலும் கண்ணோட்டத்திலும் சந்தேகமும், பயமும், துயரமும், அழுத்தமும் நிரந்தரமாகக் கவிந்துவிடுகிறது.

சாவித்திரி குணசேகரா என்ற மனித உரிமை சிந்தனையாளர் சொல்லுவார், “”உரிமையும் கடமையும் எதிரும் புதிருமல்ல; இரண்டையும் ஒன்றாகப் பின்னலாம்” என்று.

குடும்பங்களில் பெரியவர்களுக்கு இருக்கும் அதிகாரமும் ஆளுமையும் குழந்தைகளின் குரல்களை அமுக்கிவிடுகின்றன. இங்கு “குழந்தைகள்’ என்று குறிப்பிடுபவர்கள் 18 வயதுக்குக் குறைவானவர்கள்.

“”ஸத்யமேவ ஜயதே” என்ற நிகழ்ச்சியில் இந்தக் கொடுமையை நடிகர் அமீர்கான் நம்முன் வைத்தார். அதில் அந்த அன்னை, தன் மகள் தனக்கு நேரும் கொடுமையை அவ்வப்போது முறையிட்டபோது தான் செவிசாய்க்க மறுத்ததுபோல் “”நீங்களும் செய்யாதீர்கள்” என்று நேயர்களை வேண்டிக்கொண்டார்.

உங்கள் குழந்தையை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், யார் அதற்குத் துணை? பல ஆண்டுகளாக அவர் மகள் சொந்தக்காரர் ஒருவரின் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். இந்த அநீதிக்கு எதிராகப் போராடும் சமூக அமைப்புகள் சொல்வது என்னவென்றால், பெரும்பாலும் தந்தையோ, தாத்தாவோ, சித்தப்பாவோ, மாமாவோ, குடும்ப நண்பரோ, ஆசிரியரோ அல்லது குடும்பத்துக்கு வேறு வகையில் நெருங்கினவரோதான் இந்தக் குற்றத்தைப் புரிகிறார்கள். அதனால், தாயார்களே குடும்ப மானம் காரணமாக இந்த நிகழ்வை இருட்டடிப்பு செய்துவிடுவார்களாம். “”சும்மா இரு அப்பாதானே, அவருக்கில்லாத உரிமையா?” என்றுகூடக் கூறுவார்களாம். தராசில் – குழந்தையா, மானமா என்றா பார்ப்பது? புரியவில்லை.

இதுதான் உண்மை நிலை என்றால், குற்றவாளிகள் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றங்களில் நின்று தண்டனை பெறுவது நடக்காத ஒன்று. இதைவிட, நரகத் தீயில்கூட பனிக்கட்டியை உருகவிடாமல் பார்த்துக் கொள்வது இன்னும் சுலபம். குழந்தைகளுடைய உடல் நலம், மனவளம், மனநலம் எல்லாவற்றையும் காப்பாற்றும் கடமை அரசுக்கு உள்ளது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் குழந்தைகளுக்கும் உண்டு. நாமும் சட்டத்தின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்க வேண்டும். சட்டம் சரியாக அமல்படுத்தப்பட வேண்டும். சில அரிய சட்டங்கள், காகிதப் புலிகளாகவே அமைந்து போவதும் உண்டு!

குழந்தையின் கண்ணோட்டத்தில் அனுபவங்களையும் பாருங்கள். துன்புறுத்துபவர் தாய்மாமன் என்று வைத்துக் கொள்வோம். மறைவான இடத்தில் அந்த அக்கிரமத்தைப் புரிந்துவிட்டு, உணவறைக்கு வந்து எல்லோருடன் உணவருந்துகிறார். அம்மாவும் பரிந்து பரிந்து பரிமாறுகிறார். குழந்தைக்கு ஒன்றும் புரியாது. “மாமா கெட்டவரா, இல்லை நான்தான் சரியில்லையா? அவர் செய்தது எனக்குப் பிடிக்கவில்லையே? பின் அம்மா அவருடன் ஏன் சிரித்துப் பேசுகிறார்?’. “ராட்சஸன்’, “ராட்சஸன்’ என்று சபிக்காதீர்கள். இந்தக் கொடூரர்கள் நம்மைப் போலத்தான் இருப்பார்கள். கோரைப்பற்களும், கொம்புத் தலையும் இருக்காது. நம்மைப் போலவே… இருப்பார்கள். அதுதான் பயங்கரம்!

இந்தக் கொடுமையைப் பற்றி நமக்கு எல்லாத் தகவல்களும் தெரியாது. அறியாமையே பரவியுள்ளது. உடலுறவு கொண்டால்தான் கொடுமை என்பது சரியல்ல. பாலியல் வக்கிரக் காட்சிகளைக் கொண்ட படத்தைக் குழந்தைகளிடம் காட்டலாம், அந்தக் குழந்தைகளையும் அந்த நிலையில் படமெடுக்கலாம். குழந்தையின் உடம்பில் “தொடக்கூடாத இடத்தில்’ தொடலாம், குழந்தையைத் தன் உடலுறுப்புகளைத் தொடச்சொல்லலாம். இப்படி எத்தனையோ? அதனால், உடலுறவு வரைக்கும் போகவில்லையே என்று குழந்தையின் முறையீட்டை ஒதுக்கக்கூடாது. குழந்தைகளுக்கு எது நல்ல தொடல், எது நல்லதல்ல…

Muslim Education Trust in Tamilnadu 02.

Muslim Education Trust in Tamilnadu

02. The Secretary
Central Wakf Council
No 14/173 Jam Nagar House
Shajahan Road
NEW DELHI – 110 011
http://www.centralwakfcouncil.org

03. MUSLIM EDUCATION TRUST
E-3 Abul fazl Enclave
Jamia nagar
NEW DELHI 110 025
E-mail : metdelhi@rediffmail.com/metdelhi@gmail.com/sitdelhi@yahoo.com
http://www.metdelhi.org/www.sit-india.org

04. M.S. Mushtaq Ahmed
No 21 Royapettah High Road
First Floor
Royapet, Chennai 600 014
Tel : 044-281 33 535
Cell : 94440 52530

05. Ibnu Soud
Tayseer Consultants
241 Rangarajapuram Main Road
Kodambakkam
CHENNAI 600 024
Tel : 044-247 22 707/ 247 20 600
Mobile : 94443 80600

06. MEPCOT
Muslim Educational Promotion & Counselling Organisation of Tamilnadu ( MEPCOT )
Labbaik Educational Trust
P O Box No. 3, Thirumangalam 625706, Madurai Dist
.ஐக்கிய பொருளாதரப் பேரவை
அலி டவர்ஸ் 55 கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு சென்னை-6
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

2. இஸ்லாமிக் டெவலப்மெண்ட் பேங்க்
முஸ்டாக் அஹமது (ஐ.டி..பி)
11 இராயப்பேட்டை நெடுஞ்சாலை
சென்னை-14
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

3. ஆல் இந்தியா இஸ்லாமிக் ஃபவுண்டேஷன்
688 அண்ணாசாலை
சென்னை-6

4. பி.எஸ் அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் ஃபவுண்டேஷன்
4 மூர்ஸ் சாலை
சென்னை-6
(ஜகாத் உரியவர்களுக்கு மட்டும்)

5. முகம்மது சதக் அறக்கட்டளை
133 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை-34

6. மெஜஸ்டிக் ஃபவுண்டேஷன்
117 ஜெனரல் பேட்டர்ஸ் சாலை
சென்னை-2

7. ஆலிம் முகம்மது சாலிஹ் அறக்கட்டளை
நிசாரா பொனன்ஸா எல்.ஐ.சி எதிரில்
அண்ணாசாலை, சென்னை-2

8. செய்யது வெல்ஃபேர் டிரஸ்ட்
சிந்துபூந்துரை, நெல்லை

9. அஸ்மாகாசிம் அறக்கட்டளை
மாண்ட்டியத் சாலை
எக்மோர் சென்னை-8

10. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்ஃபேர் டிரஸ்ட்
டி-பிளாக் 10(23) 11 வது தெரு
அண்ணா நகர் சென்னை-40

11. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
118பி வேப்பேரி நெடுஞ்சாலை
சென்னை-3

12. இஸ்லாமிய இலக்கியக் கழகம்
27-உட்ஸ் சாலை
சென்னை-2

13. தமிழ்நாடு பைத்துல்மால்
வாலாஜா மசூதி வளாகம்
காயிதே மில்லத் நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி சென்னை-5

14. கீழக்கரை பைத்துல்மால், கீழக்கரை

15. அடையாறு பைத்துல்மால்
அடையாறு மசூதி எல்.பி ரோடு
சென்னை-41

16. சகோதரத்துவ சமூக நீதிப் பேரவை
ரயிலார் நகர்,

மதுரை-18

17. மியாஸி அறக்கட்டளை
புதுக்கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு, சென்னை-14

18. எஸ்.ஐ.இ.டி.
கே.பி தாசன் ரோடு
தேனாம்பேட்டை சென்னை-18

19. எஸ்.அஹமது மீரான்
புரபசனல் கொரியர்ஸ்
மகாராஐh சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டைசென்னை-18

20. மெப்கான்
தபால்பெட்டி எண் 3
திருமங்களம்
மதுரை-625106

கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைமனை.

இணையதள முகவரி: http://www.educationsupport.nic.in

PEACE BE UPON ALL ALL OF YOU I THOUGHT T

PEACE BE UPON ALL ALL OF YOU

I THOUGHT THIS IS WORTH SHARING WITH ALL.

Sixty Verses from Holy Quran for Wise Guidance in Life Worth sharing with friends, Muslims, non-Muslims, (you don’t have to be a Muslim to appreciate these teachings, these are social-norms directed by Islam but actually universal ) — these verses have at least one positive aspect, they help people understand what Islam is all about, they are good bridge-building materials.

Sixty Verses from Holy Koran for Wise Guidance in Life

1. Respect and honor all human beings irrespective of their religion, color, race, sex, language, status, property, birth, profession/job and so on [17/70]

2. Talk straight, to the point, without any ambiguity or deception [33/70]

3. Choose best words to speak and say them in the best possible way [17/53, 2/83]

4. Do not shout. Speak politely keeping your voice low. [31/19]

5. Always speak the truth. Shun words that are deceitful and ostentatious [22/30]

6. Do not confound truth with falsehood [2/42]

7. Say with your mouth what is in your heart [3/167]

8. Speak in a civilized manner in a language that is recognized by the society and is commonly used [4/5]

9. When you voice an opinion, be just, even if it is against a relative [6/152]

10. Do not be a bragging boaster [31/18]

11. Do not talk, listen or do anything vain [23/3, 28/55]

12. Do not participate in any paltry. If you pass near a futile play, then pass by with dignity [25/72]

13. Do not verge upon any immodesty or lewdness whether surreptitious or overt [6/151].

14. If, unintentionally, any misconduct occurs by you, then correct yourself expeditiously [3/134].

15. Do not be contemptuous or arrogant with people [31/18]

16. Do not walk haughtily or with conceit [17/37, 31/18]

17. Be moderate in thy pace [31/19]

18. Walk with humility and sedateness [25/63]

19. Keep your gazes lowered devoid of any lecherous leers and salacious stares [24/30-31, 40/19].

20. If you do not have complete knowledge about anything, better keep your mouth shut. You might think that speaking about something without full knowledge is a trivial matter. But it might have grave consequences [24/15-16]

21. When you hear something malicious about someone, keep a favorable view about him/her until you attain full knowledge about the matter. Consider others innocent until they are proven guilty with solid and truthful evidence [24/12-13]

22. Ascertain the truth of any news, lest you smite someone in ignorance and afterwards repent of what you did [49/6]

23. Do not follow blindly any information of which you have no direct knowledge. (Using your faculties of perception and conception) you must verify it for yourself. In the Court of your Lord, you will be held accountable for your hearing, sight, and the faculty of reasoning [17/36].

24. Never think that you have reached the final stage of knowledge and nobody knows more than yourself. Remember! Above everyone endowed with knowledge is another endowed with more knowledge [12/76]. Even the Prophet [p. b. u. h] was asked to keep praying, “O My sustainer! Advance me in knowledge. ” [20:114]

25. The believers are but a single Brotherhood. Live like members of one family, brothers and sisters unto one another [49/10]

26. Do not make mockery of others or ridicule others [49/11]

27. Do not defame others [49/11]

28. Do not insult others by nicknames [49/11]

29. Avoid suspicion and guesswork. Suspicion and guesswork might deplete your communal energy [49/12]

30. Spy not upon one another [49/12]

31. Do not backbite one another [49/12]

32. When you meet each other, offer good wishes and blessings for safety. One who conveys to you a message of safety and security and also when a courteous greeting is offered to you, meet it with a greeting still more courteous or (at least) of equal courtesy [4/86]

33. When you enter your own home or the home of somebody else, compliment the inmates…

புன்னகை -புதுசுரபி ’தர்மம் தலைகாக்கும் த

புன்னகை

-புதுசுரபி

’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’ ………

மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.

பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும்இல்லதாவன் நிலை என்ன? அவன் தலையைக் காப்பதுகேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.

தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்டஒரு வழிமுறை.

ஒரு அரைத்துண்டு பேரிச்சம் பழத்தினையாவது தர்மம் செய்து அதன் மூலம் இந்தஉலகில் மட்டும் இல்லை, மறுஉலக வாழ்விலும் நரக நெருப்பிலிருந்து தலையைத் தக்கவைத்துக்கொள்ளும் சூட்சுமம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அட அது இதுன்னு ஒன்றுமே இல்லையா.. கவலையேவேண்டாம், ஒரு புன்னகை ஒரே ஒரு புன்னகை நம் எதிரிலிருப்போரைப் பார்த்து புன்னகை செய்தாலேபோதும் தர்மம் செய்த புண்ணியம் நிச்சயமுண்டு என்று நபிமொழியினை மேற்கோளிட்டும் விவாதம்தொடர்ந்து நடந்தது கொண்டிருந்தது.

’அதெப்படீங்க.. நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்குஅவரும் புன்னகைப்பார் அவ்வளவுதான். எப்படி.அது தர்மமாகும்? லாஜிக் இடிக்குதே?’ இது ஒரு நண்பர்.

‘இதிலே தலைகாக்கும் தந்திரம் எங்கிருக்கிறது?’ இது மற்றொரு நண்பர்.

அறிவியல் பேசலாமா? அவர்களின் கவனத்தைத் திருப்பினேன்.

உண்மைதான், நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்குஅவரும் புன்னகைப்பார். அப்போது நம் தலையை மட்டுமல்ல அவரின் தலையையும் நம் புன்னகை காக்கிறது.

நாம் கருவில் இருக்கும் போதே கற்றுக்கொண்டதுதான் புன்னகை.

ஆம்,முப்பரிமான அல்ட்ராஸோனிக் தொழில்நுட்பம் மூலம் கருவறையில் இருக்கும் சிசு புன்னகைப்பதுகண்டறியப்பட்டுள்ளது. நாம் பிறக்கும் போதும் புன்னகைக்கிறோம், பிறந்தபின்னும் புன்னகைக்கிறோம்.பிறந்த குழந்தைகள் தூக்கத்திலும் புன்னகைப்பதைப் பார்த்திருப்போம். கண்பார்வை இல்லாதகுழந்தைகள் கூட மனிதர்களின் குரலறிந்து புன்னகை புரிகின்றனர்.

மனிதர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த சார்லஸ் டார்வின் எழுதியThe Origin of the Species என்ற நூலில் முகத்தில் உள்ள தசைகள் ஏற்படுத்தும் மாற்றங்களின்விளைவுகள் குறித்த கோட்பாடுகள் வரும்போது புன்னகை பற்றி பேசப்படுகிறது.

ஒரு மனிதன் புன்னகை புரியும் நேரத்தில் அவனின் முகத்தசைகளின்மாற்றங்களின் மூலம் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாய் உணர்கிறான் என்று டார்வின்சொல்கிறார்.

அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், 2009ம் ஆண்டில் ஜெர்மனியில்ஒரு ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் புன்னகை புரிவதின் மூலம் மூளையில்நடைபெறும் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டபோது. புன்னகை மகிழ்வான மனநிலையினைத் தருவதுஉறுதியானது.

இந்த புன்னகை என்ன விலை தெரியுமா?

நாம் புன்னகை செய்யும் நேரத்தில்நம் மனதில் (மூளையில்) ஏற்படும் மகிழ்ச்சித் தூண்டலினால் 2000 சாக்லேட்டுகள் சாப்பிட்டஅளவிற்கு மகிழ்வு ஏற்படுகிறதாம். காசைப்பார்த்து தான் காந்தி தாத்தா போல புன்னகை புரிவேன்என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையாக தூய மனதோடு புன்னகைத்தால் 16,000 பவுண்ட்

( ஏறத்தாழ13பதிமூன்று இலட்சம் ரூபாய்) நம் கையில் இருந்தால் ஏற்படும் அளவுக்கு மகிழ்வு ஏற்படுகிறதாம்.(போலியான புன்னகையினை மூளை அங்கீகரிப்பதில்லையாம்).

அளவுக்கு மிஞ்சிய சாக்லேட்டுகள் வேண்டுமானால் உடலுக்கு தீங்குதரலாம். ஆனால் அளவுக்கு மீறிய புன்னகைகள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும்.

மனஅழுத்தம்,இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கிறது. மனதையும் உடலையும் இதமாக வைத்துக்கொள்ள உதவும்’எண்ட்ரோஃபின்ஸ்’ அளிக்கிறது.

புதுப்பணக்காரர் மார்க் ஸூக்கர்பெர்க் முகத்தில் தவழும் புன்னகையும்,

பணமென்றால் என்னவென்றே அறியாத புதுக்குழந்தையின் முகத்தில் தவழும் புன்னகையும் ஒரேமாதிரியாய் இருக்கும்.ஏன் தெரியுமா?

குழந்தை ஒருநாளைக்கு 400 முறை புன்னகைக்கிறதாம்.

ஒரு சிறு புன்னகை அனைத்தையும் விட மாபெரும் தர்மம் தானே??

அனைவரின் முகத்திலும் பூத்தது புன்னகை!

Post Navigation

%d bloggers like this: