Karim74's Weblog

my articles

Archive for the month “April, 2013”

மருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ

மருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் – http://ow.ly/kwdDM

மருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

“அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை”

ஸஹீஹுல் புஹாரி – பாகம் 6 : அத்தியாயம் 76 : ஹதீஸ் எண் 5678
1. பேரிச்சம்பழம்

செய்வினை – விஷம் குணமாக!
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்:

அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ, செய்வினையா அவரை அண்டாது.

​வாய்வுத் தொல்லை நீங்க!
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம்.

2. ஜைத்தூன்

ஷைத்தான் நெருங்காதிருக்க
“அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம் 40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்.

வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும்.

3. பேரிக்காய்

இதயம் வலுவடைய
“அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

அழகான குழந்தை பிறக்க
“கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் உண்ணக கொடுங்கள். அதனால் குழந்தை அழகாகப் பிறக்கும். இதய அழுத்தம், இதயவலி (முதலிய நோய்கள்) ஏற்படாமல் இதயம் நன்கு செயல்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.

4. கருஞ்சீரகம்

நினைவாற்றல் பெருகிட
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது.

சர்க்கரை வியாதி நீங்கிட
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும்.

5. கோதுமை

இதய பலத்திற்கு
இதயமும், மூளையும் வலுவடைவதற்கும், வயிற்றுக் கிருமிகள் மற்றும் வயிற்றிலுள்ள கசடுகள் எல்லாம் நீங்கி இரைப்பை சுத்தமாக இருப்பதற்கும் தப்னியா (அதாவது கோதுமை மாவில் பால் ஊற்றி பாயாசமாகக் காய்ச்சி இறக்கிய பின்பு தேவையான இனிப்புக்கு தேன் கலந்த உணவை) உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்.

சத்தான உணவு
தொலிக் கோதுமை ரொட்டித்துண்டை எடுத்து, அதில் பேரீச்சம்பழம் வைத்து, இதுவே சிறந்த சாலன்: இதுவே சிறந்த சாலன் என்று இரண்டு தடவை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள் என்று யூசுப்பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: கோதுமையுடன் பேரீச்சம்பழம் சேர்த்த உணவை “எல்லா சத்துக்களும் நிறைந்த பரிபூரணமான உணவு” என்று மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6. உப்பு

பைத்தியம் ஏற்படாதிருக்க
கொஞ்சம் உப்பை உண்டு உணவை உண்ணத் தொடங்குங்கள். அவ்வாறே உண்டு முடிந்த உடனும் கொஞ்சம் உப்பை உண்ணுங்கள். அதனால் பைத்தியம், குஷ்டம், குடல் வியாதி, மற்றும் பல்வலி போன்ற எழுபது வியாதிகள் உங்களை அண்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

குளுமை குறைந்திட
வெள்ளரிக்காயை உப்பில் தொட்டுத் தின்பார்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள். அதனால் வயிற்றுக் குளுமை குறைந்து விடும் என்பார்கள்.. இவ்வாறு தின்பதால் மார்புச்சளி, பித்தம் வெளியேறிவிடும். உண்ணும உணவு ஜீரனமாகவும் செய்யும் என்று திப்புன்னபவியில் குறிப்பிடுகிறார்கள்.

7. இறைச்சி

உடல் அழகு பெற
இறைச்சி இவ்வுலக மக்களுக்கும், நாளைய சொர்க்கவாசிகளுக்கும் சிறந்த உணவாகும் என்றும், இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் வளர்ச்சியடைந்து…

Advertisements

சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள் பூவ

சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள்

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்….

இணையத்திலிருந்து…
Engr.Sulthan

மூலிகை சமையல் சர்க்கரை கறிவேப்பிலை என்னை

மூலிகை சமையல்
சர்க்கரை கறிவேப்பிலை

என்னைக் கறிவேப்பிலை போலப் பயன்படுத்தி விட்டார்கள் என்று அடிக்கடி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். கறிவேப்பிலை எந்த அளவுக்கு நன்மை பயக்கக்கூடியது என்பதற்கு இந்த வாசகங்களே போதுமானவை.

புதினா, கொத்துமல்லி, போல கறிவேப்பிலை யையும் வாசனைக்காக காலங்காலமாக பயன்படுத்தி வருகின்றோம்.

இது கீரை வகையைச் சேர்ந்தது அல்ல என்றாலும் கீரைகளுக்கு உள்ள அனைத்துச் சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது.

எல்லா விதமான சமையலுக்கும் கறிவேப்பிலை பயன்படுத்துகிறோம். ஆனால் இதை சாப்பிடுகிறோமா என்று பார்த்தால் இல்லை. அதை ஒதுக்கி வைப்பவர்கள்தான் அதிகம் உள்ளனர்.

கறிவேப்பிலையை ஒதுக்குபவர்கள் வெகு விரைவில் ஆரோக்கியத்தை இழப்பார்கள். நாளடைவில் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைவார்கள்.

அறிவிலும் ஆக்கத்திலும் சிறந்த நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் பயனை அறிந்தே அதை சமையலுக்கு பயன்படுத்தியுள்ளனர். எனவே குழந்தைகளுக்கு கறிவேப்பிலை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டு வரவேண்டும்.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கைகால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.

மன அழுத்தம் நீங்க
அதிக மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போது பார்த்தாலும் குழப்பமாகவே இருப்பார்கள். எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு அருமருந்தாக கறிவேப்பிலை திகழ்கிறது.

கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும்.

இளநரை மாற
இன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க முடியவில்லை. இதனால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது. இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.
கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.

கொழுப்புச் சத்து குறைய
இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது. ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும்.

சுவையின்மை நீங்க
சிலருக்கு உணவு உண்ணும்போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இந்த சுவை அறியாதவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் மண்ணைத் தின்பது போலத்தான் இருக்கும். நிறைய குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட இதுவும் ஒரு காரணமாகின்றது.

இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும்

தன்மை நாவிற்கு கிடைக்கும்.

வயிற்றுப் போக்கு குணமாக

கறிவேப்பிலை – 20 கிராம்

சீரகம் – 5 கிராம்

இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

· குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

· கண் பார்வை தெளிவடையும்

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும்.

· கை கால் நடுக்கத்தைப் போக்கும்.

· வீக்கம், கட்டிகள் போன்றவற்றைக் குணப் படுத்தும்.

· நகங்களில் ஏற்படும் நோய்களைக் குணப் படுத்தும்.

இவ்வளவு மருத்துவப் பயன்களைக் கொண்ட கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம்.
நன்றி:நக்கீரன்

Engr.Sulthan…

Please find attached your FREE eBook; “

Please find attached your FREE eBook;
“Hijama Wet Cupping Therapy: What is Cupping?”.

We hope you enjoy the book! Please email us back or leave comments on our website http://clicks.aweber.com/y/ct/?l=MwYVQ&m=LPzRD9Kwz89RKA&b=gaEPTy8YvFm.8VMwxvCUJQ to give us your feedback about the eBook.

We thank you for your interest and we look forward to sharing the Great Hijama Experience with you!

HIJAMA NATION
http://clicks.aweber.com/y/ct/?l=MwYVQ&m=LPzRD9Kwz89RKA&b=gaEPTy8YvFm.8VMwxvCUJQ
info@HijamaNation.com
Online Hijama Training – Revive The Sunnah and promote health!
124 Coventry Rd, Ilford, Essex, IG1 4RG

[tamil-muslim] Fw: The Village for Orpha

[tamil-muslim] Fw: The Village for Orphans in Pakistan…….. – karim74@gmail.com – Gmail http://ow.ly/kmxDH ^AK

[tamil-muslim] Fw: The Village for Orphans in Pakistan……..
ISLAM
x

Amer Aleem
16 Apr (8 days ago)

to Amer

its indeed a great cause to care about the orphan childern of our society.
I urge all of you to visit them and give them charity so that they can provide better services to the orphan kids. Their contact details are written at the end of this article. you can reach them via phone or email or by visiting them.
The minimum you can do is to forward this email to other people so that this cause gets more and more attention and eventaully the village gets more and more donations.

Volume 7, Book 63, Number 224 :
Narrated by Sahl
Allah’s Apostle said, “I and the one who looks after an orphan will be like this in Paradise,” showing his middle and index fingers and separating them.
Volume 8, Book 73, Number 34 :
Narrated by Sahl bin Sa’d
The Prophet said, “I and the person who looks after an orphan and provides for him, will be in Paradise like this,” putting his index and middle fingers together.

Thanks,

National Office – Lahore
SOS Children’s Villages Pakistan
National Office
Ferozepur Road, Lahore-54600.
Tel:
+92-42-35917846 & 47
+92-42-35918035 & 36
Fax:
+92-42-35917843
Email:
national@sos.org.pk
Lahore
SOS Children’s Village Lahore
Ferozepur Road, Lahore-54600.
Tel:
+92-42-35917803
+92-42-35943906
Fax:
+92-42-35917843
Email:
lahore@sos.org.pk
Dhodial
SOS Children’s Village Dhodial
Fatima Zia Plaza,
Opp. Ayub Medical Complex Manshera Road,
Abbottabad. N.W.F.P.
Tel:
0992-500885
0992-383885
Fax:
0992-334537
Email:
dhodial@sos.org.pk
Karachi
SOS Children’s Village Karachi
153-Deh Mehran, Jinnah Avenue,
Behind Mukhtarkar’s Office,
Malir Halt, Karachi.
Tel:
021-34592202
021-34593035
021-38241672
Email:
Karachi@sos.org.pk
Rawalpindi
SOS Children’s Village Rawalpindi
Opposite High Court – G.T. Road,
P.O.Box 1379, Rawalpindi.
Tel:
051-4490510
051-4490511
Email:
Rawalpindi@sos.org.pk
Faisalabad
SOS Children’s Village Faisalabad
Chak No. 199/R.B,
Gatwala Post Office Gatwala,
Faisalabad.
Tel:
041-2421667
Email:
Faisalabad@sos.org.pk
Sargodha
SOS Children’s Village Sargodha
49-Tail, Main Faisalabad Road,
Near Board of Secondary Education,
Sargodha.
Tel:
048-3212828
Fax:
048- 3224306
Email:
sargodha@sos.org.pk
Multan
SOS Children’s Village Multan
Industrial Estate, Sector No.1, Multan.
Tel:
061-6538481
061-6538482
Fax:
061-6538480
Email:
multan@sos.org.pk
Sialkot
SOS Children’s Village Sialkot
Airport Road, Khambaranwala, Sialkot.
Tel:
052-3224906
052-3241768
Fax:
052-3553827
Email:
Sialkot@sos.org.pk
Quetta
SOS Children’s Village Quetta
Near Kidney Center
Samungli Road, Quetta
Tel:
081-2871693 & 2835649
Fax:
081-2839474
Email:
Quetta@sos.org.pk

Islamabad
SOS Children’s Village Islamabad
Near Police Academy
Opposite Nust University
H-11, Islamabad
Tel:
+92-51-5821582
Email:
islamabad@sos.org.pk

Jamshoro
SOS Children’s Village Jamshoro
Near Sindh Textbook Board
Jamshoro Campus of University of Sindh
Deh Mohro, Jabal Taluka, Kotri
District Jamshoro, Sindh.
Tel:
+92-22-9213404
Email:
jamshoro@sos.org.pk

ரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங் தொழி

ரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங் தொழில்

ஏன் இந்த தொழில் முக்கியம் ?:

இன்றைய அவசர இயந்திர உலகில் பலருக்கு இருக்கின்ற ‘நேரம்’ போதுமான அளவிற்கு இல்லையே என்று புலம்புவதுண்டு. அவர்களுக்கு அவ்வளவு வேலை பளு. சொந்த வேலைகளை செய்வதற்கே சிலர் வேலையாட்களை வைத்துக்கொள்கிறார்கள். இதில் அவர்கள் வீட்டில் நடைபெறும் சிறிய பெரிய வீட்டு விஷேசங்கள் என்று வரும்போது அதை நல்ல முறையில் நடத்த பலர் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அதாவது வீட்டில் நடக்கும் திருமணம், பிறந்த நாள், சுற்றுலா, பிக்னிக் , பொதுக்கூட்டம் , கோவில் விஷேசம் போன்ற சுபகாரியங்களை உறவினர்கள், சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்களை அழைத்து அவர்களுக்கு விருந்து படைக்க எண்ணுகிறார்கள். அதுவும் விதவிதமான சாப்பாடு ஸ்பெஷல் கொடுக்க வேண்டும் என்று பிரியபடுகிறார்கள்.

அந்த விருந்திற்கு ஆட்களை அமர்த்தி விருந்திற்கு வேண்டிய சாமான்கள் அனைத்தும் அவர்களே அலைந்து வாங்கி, சமையல்காரர்களை கொண்டு சமைத்து தடங்கலில்லாமல் அனைவருக்கும் பரிமாற வேண்டும் என்பது மிகப்பெரிய வேலை.மேலும் அவர்கள் அவ்வப்போது கேட்கும் சிறுசிறு சாமான்களை வாங்கித்தருவதற்க்கும், அவர்களின் வேலைகளை மேற்ப்பார்வையிடுவதற்க்கும் பொறுப்பாக நடந்துகொள்ளும் சொந்தம் ஓர் நண்பர்களை நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கும்போது அவர்களால் விஷேசங்களில் பங்கேடுத்டுகொள்ள முடியாது. இப்படி பல சிக்கல்கள் இருக்கின்றன.

எதிர்பார்ப்புகள் என்ன என்ன ?

இந்த மாதிரியான கஷ்டங்களை தவிர்க்க , பலர் குறைந்த செலவில் நிறைந்த சிறந்த தரமான கேட்டரிங் தொழிலை செய்பவர்களை நாடுகிறார்கள்.அத்துடன் சரியான நேரத்தில் அனைவரும் விரும்பும் ருசி மிக்க விதவிதமான உணவுகளை தயாரித்து வழங்கும் மிகச்சிறந்த சேவை மற்றும் சுகாதாரமுடன் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத படியும் , விருந்தினை உண்டவர்கள் திரும்ப திரும்ப கேட்டு வாங்கும்படியும் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறனர்.அப்படி தருகிறபட்சத்தில் கண்டிப்பாக விருந்தினை ருசி பார்த்தவர்கள் தங்களுடைய வீட்டு விஷேசத்திற்கு அவர்களையே ‘புக்’ செய்ய விரும்புவர். அதனால் உங்கள் தொழில் விருத்தியடையும்.

ஆரம்பிக்கும் முறை :

முதலில் சிறிய சிறிய விஷேசங்களுக்கு , சிலரை வைத்து சிறப்பான முறையில் தரமான சுகாதாரத்துடன் தயாரித்து வழங்கவேண்டும். எடுத்தவுடன் மிகப்பெரிய விஷேசங்களை ஒத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல் வேலை செய்யும் சிறந்த மாஸ்டர்களை எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டிருக்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமான உங்களது தரமான சேவையை பார்த்து அவர்களே உங்களுக்கு பெரிய பெரிய விஷேசங்களுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். இதன் மூலம் உங்கள் தொழில் வளரும் லாபமும் பெருகும்.
இணையத்திலிருந்து…

Engr.Sulthan

[tamil-muslim] சுய தொழில்கள்-42 கேட்டரிங் தொழில் – karim74@gmail.com – Gmail http://ow.ly/kmxBl ^AK

Dear all, This is season for சீனி புளியங

Dear all,

This is season for சீனி புளியங்காய் (கொடிக்கா புளி )
கொடுக்காப்புளி

அக்காலக் கிராமகுட்டிஸுடன் இது நெருங்கிய தொடர்புடையது.சுருள் சுருளான சிவப்பான காயும் பழங்களை உண்ண சிறுவர்கள் போட்டி போடுவார்கள் சில ரகங்கள் துவர்ப்பாகவும் சிலரகங்கள் இனிப்பாகவும் இருக்கும்.

​Please inform me how it is called in English and ​the botanical name. what are the nutrients in it?

​Press note:
​ஈரோடு: சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயில் சீஸன் துவங்கியதால், சீனி புளியங்காய் (கொடுக்காபுளி) அதிக அளவில் உற்பத்தியாகி, ஈரோடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ளது. ஈரோடு ஆர்.கே.வி., ரோட்டில் நேதாஜி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும், கோயம்பேடு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், ஆந்திராவில் இருந்தும் விற்பனைக்கு காய்கறிகள் வருகின்றன. காய்கறிகள் மட்டுமின்றி, பழங்கள், கலாக்காய், இலந்தை, மலை இலந்தை, மழை நெல்லி, சீனி புளியங்காய் உள்ளிட்ட மலைப்பகுதியில் விளைகின்றன பழங்களும், சீஸனுக்கு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. அந்த வரிசையில், சத்தியமங்கலம் மலைப்பகுதியில் கோடையில் உற்பத்தியாகும் சீனி புளியங்காய், தற்போது ஈரோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. கிராமத்தில் இருந்து வேலை, படிப்புக்காக நகர்புறத்தில் பெரும்பாலானவர்கள் குடியேறியதால், இதுபோன்ற பழங்களை அதிகம் விரும்பி வாங்குகின்றனர். இதுபற்றி வியாபாரி ராமாத்தாள் கூறியதாவது: சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் சீனி புளியமரங்கள் அதிகம் உள்ளன. கிராமத்தில் வசிப்பர்களுக்கு எளிதில் கிடைக்கும். நகர்புறம் வந்தவர்கள், ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். துவர்ப்பாக இருக்கும் இவை, மருத்துவ குணம் நிறைந்தது. நரம்பு சம்பந்தமான நோய்களுக்கும், வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை சரி செய்து வாய் துர்நாற்றத்தை சரி செய்யக்கூடியது. நவம்பர் இறுதியில் சீஸன் துவங்கியபோது, கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். வரத்து அதிகமானதால், தற்போது கிலோ, 40 ரூபாய்க்கு விற்கிறோம், எனக்கூறினார்.

Tit-bits:
Jaleela Kamal said…
கொடுக்காப்புளி இங்கு துபாயில் முன்பு இருந்த வீட்டில் பால்கனியில் அந்த மரம் கிளைகளில் இருந்து அடிக்கடி நல்ல பழமாக எடுத்து சாப்பிடுவோம் என் கணவருக்கு ரொம்ப் பிடிக்கும்
sowmya ‏@arattaigirl15 Dec
@Sricalifornia நாங்க சீனிபுளியங்கானு சொல்லுவோம்:-) ரொம்ப பிடிக்கும்:-))

Sri ‏@Sricalifornia15 Dec
@arattaigirl அது சாப்டணும்னா இந்தியாவுக்கு வந்தாகணும்:))

sowmya ‏@arattaigirl15 Dec
@Sricalifornia அங்க எல்லாம் மாங்கா, சீனிப்புளிங்காய், இலந்தவடைனு எந்த அடிப்படை வசதியும் இல்லாம எப்படி ஸ்கூல் நடத்தறாங்களோ!? :))

karim74@gmail.com – Gmail http://ow.ly/kgtBv ^AK

Fwd: FW: பிரார்த்தனைகள் (துவா )ஏற்றுக்கொ

Fwd: FW: பிரார்த்தனைகள் (துவா )ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள் – karim74@gmail.com – Gmail http://ow.ly/kb6PX ^AK

பிரார்த்தனைகள் ஒப்புக்கொள்ளப்படும் பல நேரங்கள் உள்ளன. அவைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

1) அதானுக்கும், இகாமத்துக்கும் மத்தியில் கேட்கப்படும் பிரார்த்தனை:

‘பாங்கிகிற்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் பிரார்த்தனை நிராகரிக்கப்பட மாட்டாது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: 212).

2) நடு நிசியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் (மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது) கேட்கப்படும் பிரார்த்தனை:

ஒவ்வொரு இரவிலும், இரவின் மூன்றில் ஒரு பகுதி எஞ்சி இருக்கும் போது அல்லாஹ் துன்யாவின் வானத்திற்கு இறங்குகின்றான், என்னிடத்தில் யாரும் பிரார்த்திப்பவர் இருக்கின்றாரா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்றுக் கொள்கின்றேன், என்னித்தில் யாரும் கேட்கக்கூடியவர்கள் இருக்கின்றார்களா? அதை நான் அவருக்குக் கொடுத்து விடுகின்றேன், என்னிடத்தில் பாவ மன்னிப்புத் தேடுபவர்கள் இருக்கின்றார்களா? அவர்களது பாவங்களை நான் மன்னித்து விடுகின்றேன். பஃஜ்ரு உதயமாகும் வரை இது நகழ்ந்து கொண்டிருக்கும்’ என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 5411, முஸ்லிம்: 857).

3) ஸுஜுதின் போது:

‘ஒரு அடியான் அல்லாஹ்விற்கு மிக சமீபமாக இருக்கும் சந்தர்ப்பம் அவன் ஸுஜுதில் இருக்கும் போதாகும், எனவே அந்த நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனையில் ஆர்வம் காட்டுங்கள் உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக் கொள்வான்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 46, 4925, முஸ்லிம்: 974).

4) ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், ஸலாம் கொடுப்பதற்கு முன்னர்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதை கற்றுத் தந்த போது பின் வருமாறு கூறினார்கள்: அவர் அதன் பின் தனக்கு விரும்பிய பிரார்த்தனைகளை கேட்கட்டும்.’ (புஹாரி: 538, முஸ்லிம்: 204).

5) ஜும்ஆ தினத்தில் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை மஃரிப் தொழுகையை எதிர்ப்பார்த்தராக வுழுவுடன் அமர்ந்தவர்:

தொழுகையை எதிர்ப்பார்த்து அமரும் ஒருவர் தொழுகையில் உள்ளவரைப் போன்றாகும். ‘ஜும்ஆ தினத்தில் ஒரு நேரம் உள்ளது, ஒருவர் தொழுகைக்கு நின்றவராக (அந்நேரத்தில்) அல்லாஹ்விடம் கேட்பாரானால் அவருக்கு அல்லாஹ் (அவர் கேட்டதை) வழங்காமல் இல்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 538, முஸ்லிம்: 204).

தொழுகைக்கு நின்றவராக என்பதற்கு அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது: தொழுகையை எதிர்ப்பார்த்தவராக, ஏனெனில் தொழுகையை எதிர்ப்பார்த்திருப்பவரின் சட்டம் தொழக்கூடியவரின் சட்டமாகும். ஏனெனில் அஸருடைய நேரம் என்பது (உபரியான) தொழுகைக்குரிய நேரமல்ல’ என்று விளக்குகின்றனர்.

எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் மறைவதற்கு முன் வரை ஒருவர் அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். மஸ்ஜிதிலே இருப்பாரானால் மஸ்ஜிதிலும், பெண்கள், நோயாளிகள் வீடுகளிலும் பிரார்த்தனைகளில் இடுபட வேண்டும். எனவே ஒருவர் வுழுவுடன் மஃரிப் தொழுகையை எதிர்ப்பார்த்தவராக பிரார்த்தனைகளில் ஈடுபட முடியும்.

பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளபடுவதற்கான காரணிகள்:

1) அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் பிரார்த்தனையில் ஈடுபடல்.

2) உள்ளச்சத்துடனும், பணிவுடனும் பிரார்த்தித்தல்.

3) அல்லாஹ்வின் பால் தேவையுடவனாக பிரார்த்தித்தல்.

4) அல்லாஹ்வை அதிகம் அதிகம் புகழுதல்.

5) அல்லாஹ்வின் அழகிய பெயர்கள், உயரிய பண்புகளை நினைவுகூர்ந்து அவனை பிரார்த்தித்தல்.

6) அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்து, அவனது அருளின் மீது நம்பிக்பையிலக்காது தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபடல்.

சீனி போடாம ஒரு டீ கொடுங்க நோயற்ற வாழ்வே

சீனி போடாம ஒரு டீ கொடுங்க

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் செல்வங்கள் செழிப்பு எவ்வளவுதான் இருந்தாலும் நோய் வந்து விட்டால் மனிதனுக்கு நிம்மதி குறைவு அதிலும் சர்க்கரைநோய் தாக்கியவர்கள் வாழ்நாள் முழுவதும் கசப்புத்தான் இதற்க்கு முக்கியக் காரணம் உடல் பருமன் மன அழுத்தமும்தான்
சர்க்கரை நோயாளிகள் தமிழ் நாட்டிலே அதிகம் என்பது ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது வரும் 2025 ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எட்டுக் கோடிபேர் இருப்பார்களென நம்பப்படுகிறது ,

இந்நோயாளிகள்.. காராமணி, கொத்தவரை, அவரை பீன்ஸ், வெங்காயம், முருங்கை, வெள்ளரிக்காய், தக்காளி, காலிஃபிளவர், கத்தரிக்காய், கோவக்காய், குடைமிளகாய், சவ் சவ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, முட்டைக்கோஸ், வெண்டைக்காய், பீர்க்கங்காய், வெள்ளைப்பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், ஓட்ஸ், ஆட்டா மாவு, மற்றும் தவிட்டரிசி வகைகளை உண்டு வரலாம்

புரதச்சத்து மிக்க உணவு உட்கொள்வது சிறந்தது அத்துடன் மருத்துவர் களின் ஆலோசனைப்படி உணவுக் கட்டுப் பாட்டோடு சீரான உடற்ப்பயிற்சி மற்றும் நடை பயிற்சி செய்து வந்தால் ஒரே சீராக இருக்கும் உடற்ப்பயிற்சி மேற்கொள்ளும் போதும் மன அழுத்தம் வைத்துக் கொள்ளக் கூடாது இருத்தமான ஆடைகள் அணியாமல் நடக்க இலகுவான ஆடையை அணிவது சிறந்தது

சர்க்கரை ஏன் வருகிறது என்பதை இங்கு சொடுக்கிப் பார்க்கவும் மேலும் சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் டயட் கண்ட்ரோல்ல இருக்க எண்ணிக் கொண்டு டயட் கோலா,&பெப்சி அருந்துவார்கள் இதனால் உடலில் சர்க்கரை அதிகரிக்காமல் நாரமலா இருக்குமென நினைப்போர் பலருண்டு அந்த டயட் பானத்தில் சர்க்கரைக்குப் பதிலாக aspartame (அஸ்பர்ட்டேம்) என்ற செயற்கையான இனிப்பூட்டும் மூளைப் பொருள் கலந்திருப்பதை விபரமா அறிந்துக் கொள்ளவும்

நமது உடலிலுள்ள இன்சுலின் குறைவடைந்து அல்லது அவை சரியாக செயல்படாமல் இருந்து அதன் மூலமாகவும் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதே நீரிழிவு நோய் எனப்படுகிறது சிலர் தனக்கு சிறு நீரில மட்டும்தான் நீரிழிவு என்பார்கள் சிலரோ தனது இரத்தத்தில் மட்டுமே நீரிழிவு என்பார்கள் அப்படியெல்லாம் இல்லை என்று டாக்டர் கமால் நாசர் அவர்கள் கூறுவதை படிக்கவும்…..

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேரட் சாப்பிட்டு வந்தால் நோயை எதிர்த்து குணப்படுத்தும் கேரட்டில் உள்ள கரோட்டினாய்டு இரத்ததில் அளவை குறைக்கும் தன்மையுடையது காண்க தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த பலனளிக்கும் விதத்தில் பயன் படுத்த இயலாத நிலமையில் இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் சர்க்கரை இருக்கும்….. காண்க

மேலும் சர்க்கரை நோய் பற்றிய கேள்விக்கு டாக்டர் ரவிசங்கர் பதில் கூறுவதை வீடியோவில் காண்க….

இது உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப் படுத்துங்கள் நன்றி

செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்படும் என்பத

செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்படும் என்பதை தெரிந்தும் நாம் அனைவரும் அந்த சாதனத்தை பயன்படுத்துகிறோம். செல்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள்.
செல்போன்களை எப்படி கையாள வேண்டும்
என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை குறைந்தபட்சம் தவிர்க்கலாம். உங்களுக்காக சில தகவல்கள்…
குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வெகு அதிகமாக குழந்தைகளை பாதிக்கும்.
சில கிராமப்புற பகுதிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இது போன்று சரியாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் செல்போன் பயன்படுத்தும் போது, கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
தூங்கும் போது செல்போனை பக்கத்திலேயே வைத்து கொண்டு தூங்குபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த பழக்கத்தினை ஆரம்ப காலத்திலேயே தவிர்த்து கொள்வது சரியான ஒன்று.
மற்றவர்களுக்கு பேசும் போது, எதிர் முனையில் பேசுபவர்கள் அழைப்பை எடுத்த பின், காதில் வைத்து பேசுவது நல்லது. ஏனெனில் பேசும் போது ஏற்படும் கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது.
முக்கியமாக வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதை தவிர்க்கவும். இது போன்று வைப்ரேட் மோடில் வைத்து, சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகம் தாக்குகின்றன.
பொதுவாக வலது காதில் வைத்து மொபைல் பேசும் போது மூளை நேரடியாக பாதிக்கும். இதனால் இடது பக்க காதில் வைத்து பேசினால் இதன் பாதிப்பை குறைக்கலாம்.
பயணங்களில் பொழுதுபோக்காக நிறைய பேர் கேம்கள் விளையாடுவது வழக்கம். இப்படி பயணங்களில் உற்றுபார்த்து ஒரு வேலையை செய்வதன் மூலம் கண்கள் எளிதாக பாதிக்கப்படும்.

Post Navigation

%d bloggers like this: