Karim74's Weblog

my articles

Archive for the month “February, 2012”

கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!
http://ping.fm/TZxq1
செவ்வாய், 28 பிப்ரவரி 2012 18:13 கட்டுரைகள் – சட்ட விழிப்பறிவுணர்வு
E-mail | Print |
inShare1
கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

உலக அளவில், குறிப்பாக இந்தியாவில் எந்த பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு இஸ்லாமிய சமுதாய மக்களே காரணம் என்ற தோரணையைப் போல், தமிழகத்தில், எந்த குற்றச்சம்பவம் நடந்தாலும், வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களே காரணம் என்கிற தோரணை வலுப்பெற்று வருகிறது.

இதனால், வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல கூலித் தொழிலாளர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத அவலச் சூழ்நிலையும், காவல்துறையின் சட்டத்துக்கு உட்படாத உச்சகட்ட கொடுமைகளையும், விசாரணைகளையும், மனித உரிமை மீறல்களையும் நம் வட நாட்டவர்கள் சந்திக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.

குறிப்பிட்ட சில பகுதிகளில், சினிமா பார்த்து விட்டோ அல்லது வேறு காரணத்தால் நள்ளிரவில் நடமாடும் நபர்களிடம் கூட, கை ரேகை வாங்கி கொள்கிற வழக்கம் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது என்பதை நானே நேரடியாக அறிந்துள்ளேன். இப்படி பதிவு செய்து கொடுத்தவர்களும், பதிவு செய்ய மறுப்பவர்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி இதுதான்.

திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடைப்பெற்ற கோடிக்கணக்கான கொள்ளையை அடுத்து, அவ்வூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களை அழைத்த இக்கொலைத்துறை குற்றவாளிகளை அடையாளம் காணும் சட்டம் 1920 இன் பிரிவு 4 மற்றும் 5 க்கு எதிராக, அவர்களைப் புகைப்படம் பிடித்தும், கை ரேகையை பதிவு செய்தும் கொண்டும் இருந்த காட்சிகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

பொதுவாக சந்தேகத்தின் பேரில் கூட, ஒருவரின் கைரேகையைப் பதிவு செய்ய முடியாது. மாறாக, பிரிவு 4-இன்படி, ஒருவரின் மீதான குற்றச்சாற்றுகள் நிருபிக்கப்பட்டு, கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.

ஒருவேளை குற்றம் சாற்றப்பட்டுள்ள நிலையில் எடுக்க வேண்டும் என்றாலும் கூட, பிரிவு 5 இன்படி, அக்குற்றச்சாற்றை விசாரணை செய்ய அருகதையுள்ள குற்றவியல் நீதித்துறை ஊழியரின் அனுமதியைப் பெற்றே, அடையாளங்களைப் பதிவு செய்ய முடியும். குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டால், தன்னிடம் இருந்து எடுக்கப்பட்ட அங்க அடையாள அளவீடுகளை திரும்ப பெற உரிமையுண்டு.

மேலும், அடையாளம் காண்பது அல்லது எடுத்துக் கொள்வது என்பது எல்லோரும் நினைப்பது போல் அல்லது ஊடகங்களில், பூடகமாக, பூதாகரமாக காட்டப்படுவது போல் குற்றம் சாற்றப்பட்டவரின் உருவத்தை ஒளிப்படமோ அல்லது ஒலி-ஒளிப்படமோ பிடித்தல் அன்று. மாறாக, கை மற்றும் கால்களின் அளவகளை அளந்து கொள்ளுதல் மற்றும் ரேகைகளை பதிவு செய்து கொள்வது மட்டுமே ஆகும்.

ஆனால், இந்த விபரங்கள் எல்லாம் எவருக்கும் தெரியாததால், சட்டத்தை கையாளும் ஊழியர்கள் முட்டாள்தனமாக எதைச் செய்தாலும் அதுவே சட்டம் என்று மூடத்தனமாக நம்பி, சட்டம் சரியில்லை அல்லது சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். சட்டத்தை எவர் ஒருவர் தவறாக கையாண்டாலும் அதற்கு எழுத்து வடிவில் இருக்கின்ற சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அச்சட்ட அறிவுறுத்தலை உணர்ந்திருக்கிற நாம்தான் செயலில் களமிறங்க வேண்டும்.

ஆனால், நமது வேலைக்காரர்களான அரசு மற்றும் பொது ஊழியர்களுக்கு தெரிந்த ஓரிரண்டு சட்ட விதிகள் கூட, நாட்டின் முதலாளிகளான நமக்கு தெரியாமல் இருந்தால், எப்படி அவ்வேலைக்காரர்களை வேலை வாங்க முடியும்? வேலையைத் தப்பாக செய்கிறார்கள் என முடிவு செய்ய முடியும்? அதன் நிரந்தர தீர்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்?

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான வட நாட்டவருக்கு நடந்து வரும் இக்கொடுமையான நிலை, இந்தியாவின் வேறு மாநிலத்தில் நமக்கு (ஒரு தமிழருக்கு) உருவாகியிருந்தால், இந்நேரம் குய்யோ, முய்யோ என்று நாம் குரல் கொடுத்திருப்போம். நமது உயிர் மட்டும்தான் உயிரா? மற்ற மனிதர்களின் உயிரெல்லாம் உயிர் இல்லையா?

மேலும், வட மாநிலத்தவர்களே இது போன்ற குற்றச் செயல்களை புரிகின்றனர் என்கிற இத்தோரணை தவறு என்பதற்கு, சென்னையில் மோதல் கொலைகளை (என்கவுண்டர்) நடத்தி மார்தட்டிக் கொள்ளும் அதே வேளையில், தமிழகம் முழுவதும் அங்காங்கே கோடிக்கணக்கில் அரங்கேற்றப்படும் வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளைச் சம்பவங்களே சாட்சிகளாக உள்ளன. கொல்லப்பட்டவர்கள்தான் அங்கும் கொள்ளையடித்தார்களா?

இதுவரை, தமிழ்நாடு கொலைத்துறை தமிழர்கள் மீது மட்டுமே அரங்கேற்றி வந்த கொலை வெறியை தற்போது, வட மாநிலத்தவர் மீதும் காட்ட ஆரம்பித்துள்ளது. அதுவும் ஒரே சமயத்தில் ஐந்து பேர். இதில் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் நான்கு பேர், என்பதால் அக்குறிப்பிட்ட வட மாநிலத்தால் நிச்சயம் தமிழக அரசுக்கு பெருத்த தலைவலிதான். அதற்கான அறிகுறிகள் தற்போதே தென்பட தொடங்கிவிட்டன.

ஏற்கனவே, தென் மாநிலங்களுடன் ஆன உறவு சுமூகமாக இல்லாத நிலையில், வட நாடுகளின் பகையையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, மத்திய அரசு வேறு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. அதனால், என்னிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த உங்களிடம்தானே நான் எனது கோரிக்கைகளை வைக்க முடியும் என்கிற அற்பமான காரணத்தை கூறி மக்களின் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் பயணங்களின் செலவை கூட்டியதே மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவைகள் எல்லாம் ஒருபோதும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது. மாறாக, அழிவின் அதல பாதாளத்துக்கே கொண்டு செல்லும்.

இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டுதான் நடக்கிறதா என்பதை கண்டறிந்து விமர்சித்தும், தடுத்த நிறுத்தவும் கடமைப் பொறுப்புள்ள ஊடகங்கள், இதுபோன்ற மனித உரிமைகளை மீறும் துரதிருஷ்டவசமான மற்றும் அப்பட்டமான கொலை, கொள்ளை உட்பட அனைத்து விதமான குற்றச் செயல்களையும் தங்களுக்கு கிடைத்த அட்சய பாத்திர தீனியாகவே கருதி காலாண்டுக்கும் குறையாத காலத்திற்கு, இஷ்டத்திற்கு கதை எழுதவும், வாசிக்கவும் வழிவகை செய்து கொள்கின்றன. இந்தக் கூத்துக்கள் போதாது என்று, யாருக்குமே தெரியாத பரம ரகசியத்தை சொல்வது போல பல வகைகளில் புலனாய்வு தொடர்கள் வேறு இனி அரங்கேறும்.

ஒருவரின் சட்டத்துக்கு உட்படாத குற்றச் செயல்களை விவரிக்கும் ஊடகங்கள் அச்செயலை புரிந்தோருக்கு செக்ஸ் டாக்டர், செக்ஸ் சாமியார், காம மன்னன், காதல் வெறியன் என்பன உட்பட பல்வேறு பட்டப்பெயர்களை தர தயங்காத ஊடகங்கள், காவல் காக்க வேண்டிய கடமையில் இருந்து தவறி, கொலைச் செய்யும் போது ‘‘கொலைத்துறை‘‘ என விமர்சனம் செய்வதில்லையே ஏன்?

இதுபோன்ற தவறுகள் நீதித்துறையில் நடந்த போது கூட, நீதிபதிகளை ‘‘நிதிபதிகள் அல்லது நிதிக்கு அதிபதிகள்‘‘ என்று நேருக்கு நேர் எழுத்து மூலமாகவே ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். இப்படி உண்மையைச் சொன்னதால் எனக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை. இதனை ஊடகங்கள் செய்யாவிட்டாலும் கூட, நாம் ஏன் சொல்லக்கூடாது / பின்பற்ற கூடாது? தைரியமாக பின்பற்றுவோம்.

இதுபோலவே, நீங்களும் யாருக்காகவும், எதற்காகவும் பயந்து புனைப் பெயரில் உலாவராமல், உங்களது சொந்த பெயரிலேயே அனைத்து விதமான கருத்துக்களையும் மிகவும் தைரியமாக பதிவு செய்யலாம். தப்பு செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டுமே தவிர, கருத்து சொல்கிற நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்?

பொதுவாக, குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டியதே, நம் ஒவ்வொருவரின் கடமை. இதனை சட்டம் பொதுமக்களான நமக்கு, ஊதியமில்லாத கடமையாகவும், காவல் ஊழியர்களுக்கு கூலியுடன் கூடிய கடமையாகவும் விதிக்கிறது. அவ்வளவே!

இதனை குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 36 ஆனது, காவல் நிலைய ஊழியர்களுக்கு மேலான ஊழியர்களுக்கும், விதி 149 காவல் நிலைய ஊழியர்களுக்கும் சட்டப்படியான ஊழியமாக அறிவுறுத்துகிறது.

இதன் அடிப்படையில், கொள்ளைச் சம்பவங்களை தடுக்க துப்பில்லாத, குற்றம் நடந்த பின்னும் கண்டு பிடிக்க வக்கில்லாத காவல்துறை, விதி 37 இன்படி, பொது மக்கள் முன்வந்து தர வேண்டிய கடமையில் சந்தேகத்தின் பேரில் கொடுத்த தகவலின் அடிப்படையில், வீட்டை சுற்றி வளைத்த கொலைத்துறை காக்கா குருவிகளை சுட்டுக் பொசுக்குவது போல் ஐந்து மனித உயிர்களை சுட்டுக் கொன்றுள்ளது வெட்கப்பட வேண்டிய ஒன்றே தவிர, எவ்விதத்திலும் பெருமைப்பட வேண்டிய ஒன்றல்ல.

என்கவுண்டர் எனப்படும், ‘‘மோதல் கொலைகள் எல்லாமே, சட்டத்துக்கு உட்படாத திட்டமிட்ட கொலைகள்தான்‘‘.

ஏனெனில், இதுபோன்ற மோதல் சாவுகளில், காவல் ஊழியர்கள் எவருமே இதுவரையிலும் செத்தது கிடையாது. ஆனாலும், தங்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது என்று கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே, ஓரிரு காவல் ஊழியர்களை கை, கால் என ஆங்காங்கே கட்டுப்போட்டு அரசு மருத்துவமனையில் படுக்க வைத்து விடுவார்கள்.

பணத்துக்காக எதையும் செய்யும், ஒரே வீச்சில் தலையை துண்டாக (வீ)விழச் செய்யும், கொத்து கறி போல கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்யும் திறன் கொண்ட தாதாக்கள், ரவுடிகள் எல்லாம், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு காவல் ஊழியர்களை தாக்கும் போது மட்டும் அவர்களுக்கு வலிக்க கூடாது என்பதற்காக கை, கால்களில் சும்மா வெற்றுக் கீறல்களை உண்டுபண்ணுவதன் ரகசியம்தான் என்ன? யாராவது சொல்ல முடியுமா?

இதனை பணியில் இருந்து ஓய்வு பெற்ற மனசாட்சிக்கு பயப்படுகின்ற ஊழியர்கள் பகிரங்கமாகவே தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களில் ஒத்துக் கொள்கின்றனர். இதுபோலவே அரசு மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களும் ஒத்துக் கொள்கின்றனர். இருந்தாலும் என்ன செய்வது? சோத்துக்கு வேறு வழியில்லாமல், இதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது என்று அரசின் அற்ப கூலிக்கும், ஓய்வூதியத்திற்கும் மாரடிக்கும் பொது ஊழியர்கள் புலம்புகின்றனர்.

கொலைத்துறையால் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஒரு நபர், வங்கியை நோட்டமிடுவது போல் வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த நபரைத்தவிர, மற்ற முன்பின், பக்கவாட்டுப் புறப்பகுதிகள் எதுவுமே தெரியாத வண்ணம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது,

உண்மையில் அந்த காட்சி வங்கியில் நோட்டமிட்ட போது பதிவானதுதானா?
இதுதான் உண்மையென்றால், அவரது சுற்றுப்புறங்களை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? என்பன போன்ற பல்வேறு சந்தேகத்தை கிளப்புகிறது.
எது எப்படியோ, இந்த கொலையைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் இந்த ஆட்சியில் அதற்கான நீதி விசாரணையை எதிர்கொள்ளாவிட்டாலும், அடுத்த ஆட்சியில் நிச்சயம் எதிர்கொள்வார்கள். ஒருவேளை சட்டம் மற்றும் சமூக தண்டனையில் இருந்து தப்பினாலும், இயற்கையின் தண்டனையில் இருந்து ஒருவரும், ஒருபோதும் தப்பப் போவதில்லை.

கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் பல காவல்துறையின் உயர்மட்ட ஊழிய இடத்தை பிடிப்பதற்காகவே நடைபெறுகிறது என்கிற திடுக்கிடும் ஒரு செய்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற, ‘‘சைக்கோ கொலை‘‘ விடயத்தில் எனக்கு கிடைத்தது. அது குறித்த ஆராய்ந்த போது அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பது தெளிவானது.

ஒரு சம்பவம் நடந்து விட்டால் மக்கள் அதுபற்றி அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கு மாறாக, உணர்ச்சி வயப்படுவதே வழக்கமாக இருக்கிற

Advertisements

சஞ்சீவ் பட்: அரிதாய் ஒரு அறச்சீற்றம்

Source: புதிய கலாச்சாரம்

விசாரணையே தேவையில்லாமல் சுட்டுக் கொல்லப்படத்தக்க ஒரு கிரிமினலைக் காட்டச்சொன்னால் தயக்கமின்றி நரேந்திர மோடியை நோக்கி நாம் விரலை நீட்டலாம். ஆனால் அவர் குஜராத்தைக் கூறு போட்டுத் தங்களுக்கு வழங்கியிருப்பதால், முஸ்லிம்களைக் கூறு போட்ட மோடியின் குற்றத்தை நாடு மறந்துவிடவேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. ஆளும் வர்க்க ஊடகங்களும் 2002 இனப்படுகொலையை, கவனக்குறைவால் நேர்ந்து விட்ட ஒரு தவறுபோலத்தான் காட்டுகின்றன. சி.பி.ஐ இன் சிறப்புப் புலனாய்வுக் குழுவும், நீதித்துறையும், வழக்குகளை மோடிக்கு நோகாமல் மூடுவதுதெப்படி என்றே சிந்திக்கின்றன. காங்கிரசு கட்சி, தன் மீது வீசப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தடுப்பதற்கான கேடயமாக மட்டுமே மோடியைப் பயன்படுத்திக் கொள்கிறது. தனது பார்ப்பனப் பாசிசத்திமிரைப் பிரகடனப் படுத்தும் விதத்தில் ஜெயலலிதா மோடியை முன்வரிசையில் அமரவைத்து கவுரப்படுத்த, கவுரவமே இல்லாத வலது இடது போலிகள் மோடியின் அருகமர்ந்து பல்லிளிக்கிறார்கள்.

வஞ்சகமும் துரோகமும் பிழைப்புவாதமும் கோலோச்சுகின்ற இந்தச் சூழலில்தான் சஞ்சீவ் பட், என்றொரு குஜராத் போலீசு அதிகாரி மோடியை எதிர்த்து நிற்கிறார். அந்தக் குற்றத்துக்காக சிறை வைக்கப்பட்டிருக்கிறார். 2002 இல் கோத்ரா ரயில் பெட்டி எரிக்கப்பட்டவுடன், நடந்த உயர் போலீசு அதிகாரிகள் கூட்டத்தில், “இந்துக்கள் தங்களது கோபத்தை வெளியிடுவதைத் தடுக்காதீர்களென்று வெளிப்படையாகவே மோடி உத்தரவிட்டார்’ என சி.பி.ஐ புலனாய்வுக் குழுவிடம் கூறினார் சஞ்சய் பட். அவரது சாட்சியத்தை சி.பி.ஐ அலட்சியப்படுத்தவே, இதனை உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாகவும் தாக்கல் செய்தார். அந்த அதிகாரிகள் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவரது வாகன ஓட்டுனர் கே.டி.பந்த் என்பவரை மிரட்டி, ” பொய் சாட்சி சொல்லுமாறு சஞ்சீவ் பட் தன்னை மிரட்டியதாக’ மோடி அரசு புகார் எழுதி வாங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் பொய் வழக்கு போட்டு, பட்டை தற்காலிகப் பணிநீக்கமும் செய்திருக்கிறது.

காங்கிரசு எம்.பி இஷான் ஜாப்ரி கொலை செய்யப்பட்ட குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கிலும் மோடியின் நேரடித் தொடர்பை நிறுவியிருக்கிறார் சஞ்சய் பட். அப்போது உளவுத்துறை துணை ஆணையராக இருந்த சஞ்சீவ் பட், “குல்பர்க் சொசைட்டி குடியிருப்பை கொலைக்கும்பல் சுற்றி வளைத்திருப்பது பற்றி மோடிக்கு நான் நேரடியாகத் தகவல் கொடுத்தும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று சாட்சியமளித்திருக்கிறார். 2002 இனப்படுகொலையில் மோடியின் பாத்திரம் குறித்து சாட்சியம் அளித்த அமைச்சர் ஹிரேன் பாண்டியா 2003 இல் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய ஆவணப் பூர்வமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் சஞ்சீவ் பட்.

இந்த மனுவைத் தாக்கல் செய்த மூன்றாவது நாள் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் வீடு சோதனையிடப்பட்டது. அவரது வங்கி லாக்கரைத் திறந்து சாட்சியங்களைத் திருட போலீசு துடித்தது. சோதனைக்கு சம்மதித்தால், உடனே பிணையில் விடுவதாக சஞ்சீவ் பட்டிடம் பேரம் பேசினார் நீதிபதி. “இது கொள்கைக்கான போராட்டம். நீதிமன்றத் தரகர்களுடன் எனக்கு சமரசம் தேவையில்லை. அரசின் நடவடிக்கை எதுவானாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’ என்று காறி உமிழ்ந்த சஞ்சீவ் பட், 18 நாட்கள் சிறைக்குப் பின் பிணையில் வந்திருக்கிறார். “மோடி இன்று முதல்வராக இருக்கலாம். 2002 படுகொலையைப் பொருத்தவரை மோடி ஒரு கிரிமினல். ஒரு கிரிமினலாகத்தான் மோடியை நடத்தவேண்டும்’ என்று தொலைக்காட்சிக்குப் பேட்டியும் அளித்திருக்கிறார். மோடியின் குற்றத்தை மறுக்கின்ற அல்லது மறக்கின்ற பேடிகளை எப்படி நடத்துவது? இது குறித்த நம் அணுகுமுறைதான் சஞ்சீவ் பட் போன்றோருக்கு நாம் அளிக்கும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

Today, ten years ago, we saw the horrors unfolding before our eyes on the small screens in our homes. Please click below and read the article to refresh your minds:

http://ping.fm/Ouh71

What have we done since then for such pogroms not to repeat?

Date: Wed, 29 Feb 2012 08:11:45 +0530
Subject: Fwd: The battle against forgetting

The Hindu
Opinion» Lead
February 28, 2012
The battle against forgetting
Farah Naqvi

If we accept Gujarat 2002 as something ‘in the past,’ as some would like us to, we threaten the meaning of our present, and endanger our future.
Dateline: Shah-e-Alam Relief Camp, Ahmedabad, March 27, 2002:
Among the human debris scattered around the courtyard of the Shah-e-Alam relief camp in Ahmedabad, the largest with over 10,000 survivors, are Saira (age 12), Afsana (age 11), Naina (age 12), Anju (age 12), Rukhsat (age 9), Nilofer (age 10), Nilofer (age 9), Hena (age 11). They are all survivors from Naroda Patiya. And they have seen things no child should see. They know words no child should have to learn.
“Balatkar” (Rape) — they know this word. “Mein bataoon didi?” (Shall I tell you?), volunteers a nine year old. “Balatkar ka matlab jab aurat ko nanga karte hain aur phir use jala dete hain” (Rape is when a woman is stripped naked and then burnt). And then she looks fixedly at the floor. Only a child can tell it like it is. For this is what happened again and again in Naroda Patiya — women were stripped, raped and burnt.” (The Survivors Speak, fact-finding by a women’s panel, April 16, 2002. P. 13)
Nothing was left of these mutilated women — no bodies, no evidence, no justice. Nothing but the scars on this little girl’s mind. I still remember her face, and today 10 years later, I wonder where she is, how she is making her way through life, scarred by this macabre, twisted image of rape. I wonder where those men are, the ones who butchered so many childhoods and got away with it. I wonder, again and again, at the State, whose constitutional duty it was to protect, that colluded in the massacre of its own citizens.
Remains a wound
Ten years to the pogrom in Gujarat, I try to look back. But for me, like for thousands of survivors and activists, it is impossible. How does one look back at something that is so much a part of one’s present? And so, Gujarat remains a wound that stays with me always, deep and continuous. I cried often in 2002. I still cry. And I guess that is all right. Because Gujarat should make us collectively weep. And make us truly ashamed of ourselves as a nation.
What happened 10 years ago is the kind of upheaval that refuses to be historicised. That cannot be consigned to the pages of any history book with a full stop at the end. In part because the violence of Gujarat continued for long after February-March 2002, and is continuing today in the frightened little lives lived by scores of destroyed Muslim families; in the lives of thousands of men, women and children still languishing in ‘resettlement colonies’ relegated to the margins of Gujarat’s seemingly flourishing towns and cities. In part, because many battles for justice are still being bravely waged in the courts, and the narrative is still unfolding. But in greatest part because the ‘meaning’ of what Gujarat did to India remains contested.
People say — “move on, get a life, why do activists keep raking up this ‘unpleasant’ past? It’s been 10 years.” Why? Because if we settle for the past as some would like it scripted, we threaten the meaning of our present, and endanger our future. These contestations are not just about many battles in courtrooms that must be waged. The contestation is about the meaning of citizenship. It is about the relationship between citizen and State. It is about challenging State impunity. Gujarat is the battle for collective memory against forgetting because it is ultimately the battle for the idea of India.
In 1950, India made a constitutional promise to protect the rights of its minorities to live with dignity and with full rights of citizenship. Time and again, that sacred promise has been violated — in Delhi, Nellie, Meerut, Bhagalpur, Hashimpura, Kandhamal, Gujarat and most recently in Gopalgarh (Sept. 2011). In each case, innocents were murdered, maimed, sexually assaulted, burnt out of hearth and home, scattered to the winds, simply because of their minority identity, because of who they were. In each episode of targeted violence, the officers of the State acted in a biased manner, failing in their duty to protect, to prosecute, and to give justice. How long can this go on? How long will those in political power use the might of the State, the guns, and the police, and sirens against one group of citizens and get away with it? Institutional biases of the State machinery cannot be acceptable in any civilised democracy — that is the lesson of Gujarat.
The challenges
The massacre in Gujarat poses many challenges to us as a nation, exposing holes in our hearts, in our social fabric, as well as in our criminal justice system, laws and jurisprudence. Now we cannot legislate against communal prejudice and hatred in the hearts and minds of people. That is a battle that we as a society and a people must wage in a million different ways at a million different moments in our collective and individual lives. But we can and we must legislate to ensure justice to the weak.
Elusive justice
Unlike any other violent episode in India’s recent history, Gujarat 2002 tested the strength and resilience of many of our democratic institutions to the fullest. The National Human Rights Commission, the honourable Supreme Court, and the National Commission for Minorities. Each came forward and acted. And yet somehow, that thing called justice still eludes the victims of Gujarat. These victims and survivors call upon us to restore equality in the working of the law for all citizens; to create a legal remedy for institutional bias by the State; to fill the lacunae in our laws and our jurisprudence that has failed time and again to ensure criminal culpability for those in command, those who are never caught with the knives in their hands, but who instruct others to lie, and kill and misuse the law for electoral gain. These are not very tall orders. For, if we get this right it will help realise, better than we have so far, the constitutional promise of justice and equality before law. And without justice, we cannot move on.
A survivor’s courage
On January 18, 2008, Bilkis Bano, a Gujarat survivor who had the courage to speak of the unspeakable, withstanding over 20 days of gruelling cross-examination, found a little justice, when 12 accused who had gang-raped her, murdered and raped 14 members of her family, and smashed her three-year-old daughter to the ground during the horrifying days of 2002, were finally awarded life sentences by a Mumbai Session court.
On January 21, 2008, at a press conference in Delhi, Bilkis made this statement:
“For the last six years I have lived in fear, shuttling from one temporary home to the other, carrying my children with me, trying to protect them from the hatred that I know still exists in the hearts and minds of so many people. This judgment does not mean the end of hatred but it does mean that somewhere, somehow justice can prevail. This judgment is a victory for not only me but for all those innocent Muslims who were massacred and all those women whose bodies were violated only because, like me, they were Muslim. It is a victory because now, hereafter, no one can deny what happened to women in Gujarat in those terrible days and nights of 2002. Because now it will forever be imprinted on the historical record of Gujarat that sexual violence was used as a weapon against us. I pray that the people of Gujarat will some day be unable to live with the stigma of that violence and hatred, and will root it out from the very soil of a State that still remains my home.”
We give up on the battle for justice in Gujarat at our own peril. For in giving up on Gujarat, we give up on hope for a better India — an India that is by right home to each one of us.
(The author is a member of the National Advisory Council. Views expressed here are personal.)

சுய தொழில்கள் வரிசையில் அடுத்து பார்க்க இருப்பது எரிகட்டி(Fuel Bricks) தயாரிப்பு பற்றியது. இது ஒரு சுவாரிஸ்யமான தொழில். வருங்காலத்தில் இதற்கு பெருமளவில் மவுசு இருக்கும் என நம்புகிறேன். எனது கணிப்பில் இத் தொழிலுக்கு முதலிடம் தான். ஏன் நாமே இத் தொழிலைத் தொடங்கலாமா என்ற ஆசையும் உண்டு. மேலும் தகவல்கள் திரட்டி வருகிறேன். நேரில் சென்று ஆய்வு செய்து வரலாம் என இருக்கிறேன். பின் இது பற்றி ஒரு பதிவு போடுகிறேன்.
ஆமா சுய தொழில்கள் பற்றி இவ்வளவு பதிவுகள் போட்டிருக்கிறேன். ஓரிருவரைத் தவிர யாரும் இதில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லையே ஐயா! வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்காகத் தான் இவ்வளவு சிரமம் எடுத்து செய்கிறேன். கொஞ்சம் உங்க கருத்துக்களையும் அள்ளி விடுங்க ஐயாமாரே!

PDF VERSION ALSO ATTACHED

fuel bricks.–fuel briquettes–Bio Coal

எரிகட்டி தொழில் தொடங்க முழு விவரம்

செயற்கையைவிட இயற்கைதான் ‘சீப் அண்ட் பெஸ்ட்’ என்பதற்கு சிறந்த உதாரணம் எரிகட்டி (Fuel Briquettes). அதிகரித்து வரும் கேஸ் விலையேற்றம் அனைத்துத் தரப்பு மக்களையும் கலக்கமடைய செய்திருக்கிறது. இந்த பிரச்னைக்கு அருமையானதொரு தீர்வாக உருவெடுத்திருக்கிறது எரிகட்டி தயாரிப்பு.
குறைந்த அடர்த்தியிலான (Density) பயோமாஸை அதிக அடர்த்திக்கு மாற்றி எரிசக்தி தருவதே இதன் சிறப்பு. வீண் என வீசி எறியப்படும் பொருட்களை கொண்டே தயார் செய்யப்படுகிறவை இந்த எரிகட்டிகள் என்பதால் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, நம் நேரத்தையும், எரிசக்தியையும் மிச்சப்படுத்துகிறது.
மூலப் பொருட்கள்:
தேவையற்ற வேஸ்ட் பேப்பர்கள் மற்றும் கார்டு போர்டுகள், மரங்களிலிருந்து உதிரும் இலைகள், புளியின் மேல் ஓடு, கடலைத்தோல், புற்கள், வைக்கோல்கள், மரத்தின் அடிபாகங்கள், கரித்துண்டுகள், மரத்தூள் போன்ற பொருட்கள்தான் இத்தொழிலுக்கான மூலப் பொருட்கள். மூலப் பொருட்களை காய வைக்க வெயில் மிகவும் தேவைப்படும். குளிர் பிரதேசங்களில் ஆரம்பிக்க இயலாத தொழில். பெரும்பாலும் விவசாயம் சார்ந்த கழிவுப் பொருட்களே பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு முறை:
மூலப் பொருட்களை நன்கு காய வைத்து, சரியான விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இது 4,500 கலோரி வெப்பத் தரத்தை கொடுக்கும் அளவில் இருக்க வேண்டும். இயந்திரத்தில் கொடுத்தால் 60, 90 டயாமீட்டர் என தேவையான அளவில் குழாய் புட்டு வடிவத்தில் எரிகட்டி கிடைத்துவிடும். இதனை அப்படியே பேக்கிங் செய்தால் விற்பனைக்குத் தயார்.
கட்டடம்:
இந்த எரிகட்டியைத் தயாரிக்க 2,500 சதுர அடி இடம் தேவை. எரிகட்டி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப் பொருளை காய வைக்க 25-30 சென்ட் இடம் தேவை. இந்த இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இடம் சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு.
இயந்திரம்:
இத்தொழிலுக்கான இயந்திரத்தின் விலை 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். இயந்திரங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், பவானி, சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது. இயந்திரத்தைப் பயன்படுத்துவதும் சுலபம். ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டால் போதுமானது.
மானியம்:
எரிகட்டித் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் உண்டு. முதலீட்டுத் தொகையில் 35% மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள். நேரடியாக கையில் கொடுக்க மாட்டார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு வங்கிக் கடனில் கழித்துக் கொள்வார்கள். வங்கியில் மானியத் தொகை இருப்பு இருக்கும் வரை, அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி கட்ட வேண்டியதில்லை.
சந்தை வாய்ப்பு:
அதிகரித்து வரும் எரிவாயு விலையேற்றத்தால் மாற்று எரிபொருளைத் தேடி மக்கள் ஓடும் காலமிது. பெரிய பெரிய பாய்லர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள், டீ எஸ்டேட்கள், டீக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் அடுப்புகளை நம்பி இருக்கின்றன. இந்த அடுப்புகள் எறிய வேண்டுமெனில், விறகு மற்றும்
மூன்றாம் தர நிலக்கரியைப் பயன்படுத்தியாக வேண்டும். இவற்றின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. தவிர, வேறு இடங்களிலிருந்து இதை கொண்டு வருவதற்கான செலவும் அதிகரித்து வருகிறது. குறைந்த செலவில் அதிக எரிசக்தி தருவது இந்த எரிகட்டியின் ஸ்பெஷல் அம்சம். இரண்டு கிலோ விறகு எரிப்பதன் மூலம் கிடைக்கும் எரிசக்தி, ஒரு கிலோ எரிகட்டியை எரிப்பதன் மூலம் கிடைக்கிறது. தவிர, இவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்பதால், தற்போது இதற்கான சந்தை வாய்ப்பு பெருகி வருகிறது. பெண்கள் எளிதாக இத்தொழிலை செய்ய முடியும் என்பது இத்தொழிலில் இருக்கிற இன்னொரு ஸ்பெஷாலிட்டி.
வேலையாட்கள்:
மூலப்பொருட்களைக் காய வைக்க, இயந்திரத்தை இயக்க, பேக்கிங் செய்ய என இங்கே கொடுக்கப்பட்டுள்ள உற்பத்தித்திறனுக்கு மொத்தம் இருபது நபர்கள் தேவைப்படுவார்கள்.
சூப்பர்வைசர் – 1
திறமையான வேலையாட்கள் – 5
சாதாரண வேலையாட்கள் – 14
மின்சாரம்:
ஒரு நாளைக்கு முழு உற்பத்தித் திறன் பயன்பாட்டிற்கு 504 யூனிட்களுக்குமேல் மின்சாரம் தேவைப்படும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து மணிநேரம் இயந்திரத்தை இயக்க வேண்டி வரும்.

பிளஸ்:
மாற்று எரிபொருளுக்கானத் தேவை அதிகரித்து வருவது இத்தொழிலுக்கு நல்ல வாய்ப்பு. மேலும், காடுகளை அழித்து விறகுகள் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்யும் பட்சத்தில் எரிகட்டிக்கானத் தேவை மேலும் அதிகரிக்கும்.
ரிஸ்க்:
தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மரம் அறுக்கும் மில்களில் இருந்து மொத்தமாக மரத்தூளை வாங்கி கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை எனில் அண்டை மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். எனவே, இந்த தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் மூலப் பொருட்கள் கிடைக்கும் வழிகளைப் பற்றி தெரிந்து கொண்டு பிறகு இறங்கவும்.
மார்க்கெட்டிங்:
அலைந்து திரிந்து ஆட்களைப் பார்க்க வேண்டும் என்பதைவிட, எரிகட்டி தயாராகத் தயாராக உடனடியாக வாங்கிக் கொண்டு போகும் அளவிற்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கூடுதலாக சந்தை வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு சென்று எரிகட்டியின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூறி ஆர்டர்களை பெறலாம்.
சுய உதவிக் குழுப் பெண்களும், கிராமப்புற இளைஞர்களும் இந்த தொழிலில் சுலபமாக இறங்கலாம்

எரிகட்டி தயாரித்தால்

பெரிய தொழிற்சாலைகளில் இருக்கும் பாய்லர்களை இயக்க விறகுகள் எரிக்கப்படுகின்றன. விறகுகளுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதோடு விலையும் அதிகமாக இருப்பதால், விறகுகளுக்கு மாற்றாக மரக்கழிவு எரிகட்டிகளை பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது. பயன்பாடு அதிகளவில் இருப்பதால், மரக்கழிவு எரிகட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம், எரிகட்டி உற்பத்தி செய்யும் கம்பெனிகள் மிகக் குறைவாகவே இருப்பதால் அதிக போட்டி இருக்காது என்கிறார் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பார்த்திபன் அவர் கூறியதாவது: தமிழகத்தில் காகித ஆலைகள் மற்றும் அனல் மின் உற்பத்திக்கு மரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதே தேவை தொடர்ந்தால், வரும் 5 ஆண்டுகளில் எரிப்பதற்கு மரம் கிடைக்காது. அப்போது மரக்கழிவு எரிகட்டியே தொழிற்சாலை பாய்லர்களுக்கு முக்கிய எரிபொருளாக அமையும்.

விறகுக்கு கிராக்கி உள்ளதால், தற்போது பல ஆலைகள் எரிகட்டியை பயன்படுத்த துவங்கியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சம் 30 எரிகட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. இவை ஆயிரத்துக்கு மேல் பெருகினாலும் எரிகட்டி உற்பத்தி போதுமானதாக இருக்காது. எனவே இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் நிரந்தர லாபம் பார்க்கலாம். எரிகட்டி உற்பத்தியை ஊக்குவிக்க வனத்துறை சார்பில் தமிழகத்தில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி வளாகத்தில் எரிகட்டி உற்பத்தி பயிற்சி மையத்தை 3 மாதம் முன்பு துவக்கினோம். இலவச ஒரு நாள் பயிற்சித் திட்டத்தை நடத்தி வருகிறோம். 250 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். பயிற்சி பெற்றவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்க வங்கி மற்றும் அரசு அதிகாரி களுடன் பேசி வருகிறோம். தொழிற்சாலைகளில் பயன்படுத்தி வரும் விறகுகள் ஒரு டன் பயன்படுத்தினால் கிடைக்கும் வெப்பம், எரிகட்டியில் முக்கால் டன் பயன்படுத்தினாலே கிடைத்துவிடும். எரிகட்டியின் விலை குறைவாக உள்ளதால், தொழிற்சாலைகள் எரிகட்டி பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன. சந்தை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால் இத்தொழிலில் இறங்குபவர்களுக்கு சிறப்பான வாழ்வு உள்ளது.
இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

எங்கு கிடைக்கும்?

எரிகட்டி தயாரிக்க தேவையான மரக்கழிவுகள், மரங்கள் வெட்டி விற்கும் விவசாயிகளிடமும், புளியம்பழம், கடலைத் தோல் ஆகியவை புளி, கடலை உற்பத்தி இடங்களிலும், டீ, காபித்தூள் கழிவுகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிலும், மரத்தூள் மர அரவை மில்களிலும் கிடைக்கும். இலை, தழை போன்றவற்றை கிடைக்கும் இடங்களில் பெறலாம். கிரைண்டர், டிரையர் உள்ளிட்ட எரிகட்டி தயாரிப்பு இயந்திரங்கள் கோவையிலும், குஜராத்திலும் கிடைக்கிறது. எரிகட்டி தயாரிப்பு பயிற்சி மற்றும் ஆலோசனைக்கு கோவை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம்.

முதலீடு

குறைந்தபட்சம் அரை ஏக்கர், அதிகபட்சம் முக்கால் ஏக்கர் இடம். 2 செட்டுகள் போட வேண்டும். மணிக்கு 250 கிலோ உற்பத்தி செய்யும் எரிகட்டி தயாரிப்பு இயந்திரம் 7.5 லட்சம், 1.5 டன் உற்பத்தி செய்யும் இயந்திரம் ரூ. 18 லட்சம். கிரைண்டர் இயந்திரம் ரூ. 3 லட்சம். டிரையர் ரூ. 5 லட்சம். தினசரி 5 டன் உற்பத்தி வீதம், மாதம் 30 நாளில் 150 டன் எரிகட்டி தயாரிக்கலாம். இதை உற்பத்தி செய்ய 200 டன் மரக்கழிவுகள் தேவை. மரக்கழிவுகள் டன் ரூ. 1200 முதல் ரூ. 1750 வரை விற்கிறது. அதிகபட்ச விலை ரூ. 1700 என்றால் 200 டன்னுக்கு 3.4 லட்சம் தேவை. ஒரு டன் உற்பத்தி செய்ய ஆள் கூலி, மின்சாரம், இயந்திர தேய்மானம், இட வாடகை ஆகியவற்றுக்கு ரூ. 600 செலவாகும். மாதம் 150 டன்னுக்கு ரூ. 90 ஆயிரம் ஆகிறது. உற்பத்தி முதலீட்டிற்கு மாதம் ரூ. 4.30 லட்சம் ஆகிறது.

மாதம் ரூ. 2 லட்சம் லாபம்

உற்பத்தி செய்யப்படும் எரிகட்டி டன் ரூ. 3800 முதல் ரூ. 4200 வரை விற்கிறது. இதன் மூலம் 150 டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ. 5.7 லட்சம், அதிகபட்சம் ரூ. 6.3 லட்சம் லாபம் கிடைக்கும். இதன் மூலம் மாதத்துக்கு குறைந்தபட்ச லாபம் ரூ. 1.4 லட்சம், அதிகபட்சம் ரூ. 2 லட்சம். கொள்முதல் செய்யப்படும் மரக்கழிவுகளின் விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப லாபம் இருக்கும்

தயாரிக்கும் முறை

மரக்கழிவுகளான இலை, கிளை, கொப்புகள், புளியம்பழத்தின் தோல், கடலைத்தோல் உள்ளிட்ட தானிய அரவை கழிவுகள், காபி, டீ தூள் கழிவுகள், அரவை மில்களில் வீணாகும் மரத்தூள் என தாவர கழிவுகள் எதுவாக இருந்தாலும் எரிகட்டி தயாரிக்க பயன்படுத்தலாம். முதலில் அவற்றை எரிகட்டி தயாரிப்பு இயந்திரத்தில் உள்ள கிரைண்டரில் அரைத்து தூளாக்க வேண்டும். தூளில் உள்ள ஈரப்பதத்தை சோதிக்க வேண்டும். 10 முதல் 12 சதவீதத்துக்குள் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
அதற்கு மேல் ஈரப்பதம் இருந்தால், தூளை டிரையர் மெஷினில் போட்டு, ஈரப்பதத்தை 10 முதல் 12 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும். வெயிலில் போட்டும் உலர்த்தலாம்.

பின்னர் தூளை இயந்திரத்தில் கொட்டினால், அவை மரத்துண்டு வடிவத்திலான குழாயில் சேரும். அங்கு 80 முதல் 100 டிகிரி வெப்பநிலை இருக்க வேண்டும். குழாயில் தூள் சேர்ந்தவுடன் இரும்பு பிஸ்டன், தூளை இடித்து இறுக்கும். அவை மரத்துண்டுகளைப் போல் கெட்டியாகி வெளியே�

Dear Consumers,

We are happy to post this message to you all. As a part of extending the activities of State Consumer Helpline , Government of Tamilnadu, new facility is made available to consumers to send their complaints, suggestions, etc., through SMS to 72 99 99 8002, 72 0001 8001, 86 8001 8002 besides the existing facility of registering their calls in 044 – 28592828 .

Regards,

Moderator,

tamilnadu consumerprotection yahoo group

http://ping.fm/k2pve

is the site you have to if you have not renewed the indian ration card

உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள்
கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன்
மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.

இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ‘ஸ்மெல் பண்ணவர்கள்’ அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.

இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.

‘இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்’ என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.

இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,

“ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.

மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.

இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:

அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.

இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது… விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!

சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல…பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.

இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.

இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.

ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.

இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள ‘பில்லியன் டாலர் கேள்வி’!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் ‘ட்ரில்லியன் டாலர் கேள்வி!’.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.

இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.

இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.

ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.

ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.

‘Unobtanium’ என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் ‘அவ்தார்’ என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.

இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.

K.Anvar Ali
Kuwait
+965-97170648
anvarali@hotmail.com
anvaralik@yahoo.com


உங்களுக்குத் தொழ வைக்கமுன்
நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.

உன் செயல்கள் அனைத்தும்
உன் எண்ணங்களின் படிதான் நடக்கும்.
( நபி மொழி !!!)
M.Zahir husseன்

மொட்டை மாடி, பால்கனித் தோட்டம்

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் லட்சுமி, ஸ்ரீராம் தம்பதி, பால்கனியில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவார்கள். இன்றைய பொழுது சிறப்பாக இருக்க உதவும், மனதிற்கு ஆறுதல் தரும் ஆலயம் இது என்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாகக் காய்கறித் தோட்டம் வளர்ப்பதில் ஊக்கமும் ஆர்வமும் உள்ள இந்தத் தம்பதி, இந்தத் தோட்டம் உளவியல் ரீதியாக மனதிற்கு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வாடகை வீட்டில், பார்ப்பவர் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தக் காய்கறித் தோட்டத்தை வளர்த்துவருகின்றனர். வாடகை வீட்டில் தோட்டம் போட முடியுமா? அதற்கு இடமும் நேரமும் இருக்குமா? அதைப் பராமரிப்பது சாத்தியமா? இப்படிப் பல சந்தேகங்களுக்கு அவர்களிடமிருந்து “முடியும்” என்று பதில் வருகிறது. மனம் இருந்தால் எதுவும் சாத்தியம்தான் என்கிறார்கள்.

‘‘எங்க வீட்டு பால்கனித் தோட்டம் பீர்க்கங்காய், புடலை, வெள்ளரி, வெற்றிலைக் கொடின்னு விதவிதமாக இருக்கு’’ எனப் பெருமை பொங்கச் சொல்லும் லட்சுமி ஸ்ரீராம், தன் அனுபவத்தையே காய்கறித் தோட்டம் பற்றிய பாடம் ஆக்குகிறார்.

“என்னோட சொந்த ஊர் கேரளா. நான் சின்ன வயசாக இருக்கும்போது, தோட்டத்துல என் பாட்டி வளர்க்கிற கீரையை வேடிக்கை பார்க்கிறதுதான் எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு. அரைக்கீரை சாப்பிட்டா, இரும்புச் சத்து மாத்திரையே தேவையில்லைன்னு சொல்லி பாட்டி வளர்க்கிற கீரை நல்ல உயரத்துக்கு வரும். அதோட விதையை சேகரிக்க, அதை சாம்பல்ல கலந்து மறுபடியும் விதைப்பாங்க. எதுக்கு பாட்டி சாம்பல்னு கேட்டா அப்பதான் விதையை எறும்பு சாப்பிடாதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க.” அந்தப் பாட்டிதான் செடி வளர்க்கும் ஆர்வத்தை இவருக்குள் விதைத்துள்ளார்.

மேற்கொண்டுஅவரிடம்பேசிக் கொண்டிருந்ததில் காய்கறிகள் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

கோடைக் காலத்திற்கு ஏற்ற முறையில் என்னென்ன பயிரிடலாம்?

புடலங்காய், தர்ப்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி.

மழைக்காலத்திற்கு?

அவரைக்காய், காராமணி, கொத்தவரங்காய்

குளிர்காலத்திற்கு?

முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கேரட், கொடமிளகாய்

மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்ப்பதற்கும், ப்ளாஸ்டிக் போன்றவற்றில் செடி, கொடி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?

மண் தொட்டியில் செடி, கொடிகளைப் பயிரிடுவதே நல்லது. தேவைக்கு அதிகமான தண்ணீரை மண்தொட்டி உறிஞ்சிக்கொள்ளும். மீதமுள்ள தண்ணீர் சிறு துளை வழியாக வெளியேறும்.

அதிகப்படியான நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் பிளாஸ்டிக் போன்ற பொருட்களுக்குக் கிடையாது. அதிகப்படியான நீர் வேரில் தங்கி, நாளடைவில் வேர் அழுகி செடி, கொடிகள் வளர்ச்சி குன்றத் தொடங்கும்.

மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்க்கத் தேவையான வழிமுறைகள் என்ன?

1 பங்கு செம்மண், 3 பங்கு ஆற்று மணல் கலந்த கலவையே செடி, கொடிகள் வளர்வதற்கு ஏற்ற மண் கலவை. விதை ஊன்றிய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இயற்கை உரங்களான ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இயற்கை உரமாகத் தூவலாம்.

மொட்டை மாடி, அடுக்குமாடிக் குடியிருப்பில் மண்தொட்டியில் தாவரம் வளர்ப்பதால் கட்டிடத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா?

ஒரு பாதிப்பும் ஏற்படாது. மண் தொட்டியில் செடி, கொடிகள் பயிரிடப்படும்போது, அதிகப்படியான நீரை மண் தொட்டி உறிஞ்சிக்கொள்ளும்.

வாடகை வீட்டில் இருந்துகொண்டு செடி வளர்ப்பதில் ஏற்பட்ட அனுபவங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்?.

பல அனுபவங்கள் உண்டு. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குக் குடி புகும்போது முதலில் நான் பார்க்க விரும்புவது, செடி, கொடி வளர்க்க இடம் கிடைக்குமா? என்பதுதான். வீட்டுச் சொந்தகாரரின் அனுமதி பெற்றுத்தான் காய்கறித் தோட்டம் போடுகிறேன். இராஜா அண்ணாமலைபுரத்தில் ஸ்கூல் வ்யூ தெருவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். அங்கு மொட்டை மாடியில் 140 மண் தொட்டிகள் வைத்து, காய்கறித் தோட்டம் அமைத்தோம். செம்பருத்தி, ரோஜா, மல்லிகை, முட்டை கோஸ், வெற்றிலை என விதவிதமான செடி, கொடிகளை வளர்த்துவந்தோம். வீடு காலி செய்ய வேண்டும் என்கிற சூழ்நிலையில், அத்தொட்டிகளை நன்கு பராமரிக்கக்கூடிய சில நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, ஒரு சில தொட்டிகளே வைத்துக்கொள்ள முடிந்தது. மண் தொட்டிகளைப் பிரிய மனம் இடம் கொடுக்க வில்லை. அது மறக்க முடியாத அனுபவம்.

மண் தொட்டியில் செடி, கொடிகள் முழுமையான வளர்ச்சியை அடையாததற்குக் காரணம் என்ன?

நான் தினமும் எழுந்தவுடன் என் வீட்டு பால்கனி தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவேன். வெற்றிலைக் கொடியைக் கண்ணில் ஒற்றிக்கொள்வேன். பூத்துக் குலுங்கும் மல்லி, ரோஜா இதழ்களைத் தடவிக் கொடுப்பேன். பிஞ்சு விட்டுக்கொண்டிருக்கும் கத்திரி, வெண்டைக் காய்களை முத்தமிடுவேன். இவ்வாறு, நாம் நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளைப் பேரன்புடன், பாதுகாத்துவந்தால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மண் கலவையில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் நம் மனம்தான் காரணம். தாவரத்திற்குத் தண்ணீர் ஊற்றிவிடுவதோடு நம் கடமை முடிந்து விடவில்லை. நம்மைப் போல தாவரத்திற்கும் உயிர், உணர்வுகள் உண்டு.

“ஏன் நீ காய்க்க மாட்டாய்?, ஏன் நீ பூக்கவில்லை?’’ எனக் கேள்வி கேட்பதை விட, அத் தாவரங்களிடம் புன்னகை செய்யுங்கள். “நீ நன்றாக வளர்வாய்!” என்று வாழ்த்துக்களைச் சொல்லிவாருங்கள். நீண்ட காலம், வளமுடன் இருக்கும். செடி, கொடிகள் நன்கு வளரும்.

இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்

மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார்.

”நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. இவற்றை நம் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். முதலில் தண்ணீர். ஒரு தொட்டி அமைத்து மழை நீரைச் சேகரிக்கலாம். மழை நீரைச் சாக்கடைக்குள்விட்டு, அது கடல் நீரில் கலந்து, அப்புறம் கடல் நீரைக் குடிநீராக்கும் கூத்துக்குப் பதிலாக, முறையாக மழை நீரைச் சேகரித்தாலே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். மிகக் குறைந்த பரப்புள்ள மொட்டை மாடி இருந்தாலே, ஆறு ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்கலாம்.

வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட்டிக்குள் போட்டுவைத்தால், எல்லா அசுத்தங்களும் அடங்கித் தெளிவடைந்துவிடும். அதைச் செப்புப் பாத்திரத்தில் எடுத்து தேற்றான்கொட்டைகளைப் போட்டால்,

குடிநீர் தயார். யுரேனியத்தையே சமநிலைப்படுத்தும் தன்மை உள்ள தேற்றான்கொட்டைகள் நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான்.

இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விட்டுவிடலாம். அதில் இருந்து எடுத்து செப்புப் பாத்திரத்தில் வைத்து குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தலாம். என் வீட்டில் இப்படித்தான் செய்கிறேன்.

கேன்களில் அடைக்கப்பட்ட நீர் எத்தனை மாதங்கள் பழையது என்றுகூடத் தெரியாத நிலையில், இந்த எளிய முறையைச் சாத்தியமுள்ள எல்லோரும் செய்தால் தண்ணீர் பிரச்னையும் தீரும், நல்ல ஆரோக்கியமான நீரும் கிடைக்கும். 100 சதுர அடி மொட்டை மாடி இருந்தாலே வருடத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்க முடியும்.

100 அடி சுற்றளவுகொண்ட வீட்டு மொட்டைமாடியில் பாதைக்கு 5 அடி விட்டுவிட்டால் மிச்சம் 95 அடிகள் கிடைக்கும். இது சதுர அடி கணக்கில் 155 சதுர அடி வரும். சென்னைக்குள் 155 சதுர அடி நீளத்தில் நீங்கள் விவசாயம் செய்யலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? 800 சதுர அடி பரப்புள்ள என் வீட்டு மொட்டை மாடியில் 40 மூலிகைகள் உள்பட 150 வகையான செடிகள் இருக்கின்றன. மொட்டைமாடித் தோட்டம் என்றதும் எல்லோரும் பயப்படும் முதல் விஷயம் தண்ணீர் பிரச்னை! ஐந்து பேர்கொண்ட குடும்பத்தில் சமையல் அறையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறைப்படுத்தினாலே கழிவு நீரை மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்த முடியும். மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை ஒட்டியதுபோல ஒரு தொட்டி அமைத்து அதற்குள் மண் பரப்பி எந்தச் செடியையும் வளர்க்க முடியும். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டும்போதே இதற்கான ஏற்பாட்டைச் செய்வது நல்லது. இதுக்கூடச் சிரமம் என்றால் மிக எளிய வழி, பானையில் செடி வளர்ப்பது. 20 சதுர அடியில் பானைத் தோட்டம் போட்டாலே, ஒரு குடும்பத் துக்குப் போதுமானது. கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், மிதி பாகற்காய், காராமணி என நம் ஊர்க் காய்கறிகள் அனைத்தும் விளையும். என் வீட்டு மாடியில் தலைகீழ் பிரமிடு வடிவத்தில் ஒன்றின் மீது ஒன்றைக் கட்டி அதில் அடுக்குமாடிக் கீரைத் தோட்டம் அமைத்து இருக்கிறேன்.

சரி, இதற்கு உரம் வேண்டும் இல்லையா?அதற்கும் எங்கும் போக வேண்டாம்.ஒவ்வொரு வீட்டிலும் நாள்தோறும்உருவாகும் மக்கும் கழிவுகளை இரண்டுபூந்தொட்டிகளில் போட்டு வந்தால்அதுவே சிறந்த உரம். அதை ஒரு கைப் பிடிஅளவு போட்டாலே, காய்கறிகள் செழித்துவளரும். குளியலறைக் கழிவு நீர்வெளியேறும் இடத்தில் கல்வாழை,சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால்அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும்.இப்படி எல்லாவற்றையும் ரீ-சைக்ளிங்செய்வதுதான் இந்த முறையின்முக்கியமான அம்சம். இப்படி ரீ-சைக்ளிங்செய்ய ஆரம்பித்தால், கழிவு நீர் என்பதேஇருக்காது. கழிவு நீர் இல்லை என்றால்கொசு இருக்காது. இதை எல்லாம்செய்தால் வீட்டில் எப்போதும் குளிர்ச்சிஇருக்கும். நம் வீட்டுக் கிணற்றில் மார்கழிஅதிகாலையில் தண்ணீர் எடுத்தால் வெதுவெதுப்பாகவும், சித்திரை வெயிலில்தண்ணீர் எடுத்தால் குளிராகவும் இருக்கும்.என்ன அர்த்தம் என்றால், தண்ணீரின்குளிர் எப்போதும் அப்படியேதான்இருக்கிறது. வெளிப்புற வெப்பம் கூடி,இறங்கும்போது நமக்குத் தண்ணீர் குளிராகவும், வெப்பமாகவும்தெரிகிறது. மேற்சொன்ன மாடித் தோட்டத்தையும், வீட்டைச் சுற்றி உரியமரங்களும் வளர்த்தால், வீட்டின் வெப்பம் எப்போதும் குளிர்ச்சியானநிலையில் சீராக இருக்கும்!”என்கிறார் இந்திரகுமார்.
Source : AV

சிட்டுக் குருவிகள் வந்துபோகும் மொட்டை மாடி தோட்டங்கள்.

வீட்டில் கார்டன் போட இடமில்லையே என்ற கவலை இப்போது பலருக்கு இருக்கிறது. இனி அந்தக் கவலையில்லை! சிட்டி மெயின் ரோடில் உங்கள் வீடு இருந்தாலும்… அதில் மொட்டை மாடி இருந்தால்போதும் மனசுக்குப் பிடிச்ச கார்டன் ரெடி!

சென்னை அசோக் நகரின் நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள அந்த வீட்டின் மொட்டை மாடியில் சிட்டுக்குருவிகள் ‘கீச் கீச்’ சப்தமிட்டபடி நம்மை வரவேற்றன… அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிஸினஸ் டைரக்டராக இருக்கும் கண்ணன்!

‘‘எங்க வீடு மெயின்ரோட்டை ஒட்டி இருப்பதால் எப்போதும் பொலியூஷன், தேவையில்லாத சத்தம்… வீட்டிற்கு வந்தால் அமைதியே இல்லியேன்னு ரொம்ப கவலைப்பட்டேன். அப்புறமாத்தான் மொட்டை மாடியில் கார்டன் வைக்கணும்னு தோணுச்சு. செடி, கொடின்னு இருந்தால்தான் பறவைகள் வரும்னு நினைச்சேன்… இப்போ என் டெரஸ் கார்டன் நினைச்சமாதிரி அமைஞ்சிருக்கு… நிறைய குருவிகள் வருது… காலை நேரத்திலேயும் மாலையும் அதுங்களோட சத்தம் இனிமையா இருக்கு. அப்பாவுக்குத் தோட்ட வேலைன்னா �

http://ping.fm/Y3Cyh
அஹ்மதாபாத்: குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை, கொடூரமாக படுகொலைச் செய்வதற்காக, மோடி அரசு சதித்திட்டம் தீட்டி, நடைமுறைப்படுத்திய கோத்ரா ரெயில் தீ விபத்து நிகழ்ந்து, 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது.

அயோத்தியில் இருந்து வந்துகொண்டிருந்த, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 5 மற்றும் 6 எண் பெட்டிகளில் பயணித்த 59 பயணிகள் 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ராவில் தீவைத்து கொளுத்தப்பட்டு பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் போலீசின் துணையுடன், சங்க்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகள், இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்தனர். கோத்ரா சம்பவத்தின் பின்னணியில், மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும்தான் காரணம் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நடந்த, உயர் மட்ட கூட்டத்தில், ஹிந்துக்களை அவர்களிடன் கோபத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும், என்று மோடி கூறியதாக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஐ.பி.எஸ், மூத்த அதிகாரி சஞ்சீவ் பட், உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்ட, குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து, 10 ஆண்டுகள் கழிந்த பிறகு, ஒரு சில வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வெளியாகியுள்ளன. இனப் படுகொலை குறித்து விசாரணை நடத்த, குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷனின் அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. நரேந்திர மோடியின் அக்கிரமங்களை, அன்றைக்கு மத்தியில் பிரதமராக இருந்த அவரது கட்சியின், வாஜ்பேயி அவர்களும் கூட கண்டித்தார். நீங்கள் ஒரு முதலமைச்சர் என்ற முறையில், ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று கட்டளை பிறப்பித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மோடியை அன்றைக்கு “மரண வியாபாரி” என்றழைத்தார். இத்தனைக்கும் பிறகு, இன்று, அவரை காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. ஒன்று மட்டும் நிச்சயம், நரேந்திர மோடியை தண்டிக்க இந்திய சட்டங்கள் தவறினால்? அது எதிர்கால இந்தியாவிற்கு நன்மை பயக்காது.

http://ping.fm/ufgYC

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?

தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?

தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://ping.fm/9S1Vp என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?

விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :

1. இருப்பிடச் சான்று
2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி செலுத்திய / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டணம் செலுத்திய போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO ) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?

1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?

அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி : ( தஞ்சை மாவட்டதாரர்களுக்கு )

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் :-
மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ( DSO )
Tel : 04362 231336
Mobile : 9445000286
E-mail : dso.tnj@tn.gov.in மற்றும் dso.tntnj@nic.in

பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் :-
வட்ட உணவு வழங்கல் அதிகாரி ( TSO )
Tel : 04373 235049
Mobile : 9445000293
E-mail : tsotnj.patukottai@tn.gov.in

குறிப்பு : சகோதரர்களே, புதிய குடும்ப அட்டை பெற வேண்டி தரகர்களிடம் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் கையூட்டு கொடுப்பது என்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.
-சேக்கனா M.நிஜாம்
http://ping.fm/IJUcT

Post Navigation

%d bloggers like this: