Karim74's Weblog

my articles

Archive for the month “May, 2011”

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. உலகத் தரத்திலான பொருள்கள் அனைத்தும் இந்தியாவில் கிடைக்கிறது என்கிற திருப்தியும், சர்வதேச அளவில் நமது இந்திய நிறுவனங்கள் போட்டிபோடும் தகுதி பெற்றிருக்கின்றன என்கிற பெருமையும், நமது நகரங்கள் மேலைநாடுகளைப்போல நுகர்வோர் கலாசாரத்தை வரிந்து கொண்டிருக்கின்றன என்கிற யதார்த்தமும் இனிக்கிறது. குறிப்பாக, தகவல் தொலைத்தொடர்புத் துறை நமது இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய சொர்க்கவாசலையே திறந்துவிட்டிருக்கிறது என்பதும் உண்மை.
ஆனால், இவையெல்லாம் மேம்போக்கான முன்னேற்றங்கள்தானே தவிர, ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் சமச்சீர் முன்னேற்றம் கண்டு, எல்லா தரப்பினருக்கும் உலகமயமாக்கல், பொருளாதாரச் சீர்திருத்தம் போன்ற கொள்கைகளின் பயன்கள் சென்றடைந்திருக்கின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் ஏற்பட்டிருக்கும் கலாசாரச் சீரழிவுகளைப் பற்றி நாம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. எந்தவொரு சமுதாயத்தையும் நாம் அந்தச் சமுதாயம் விரும்பும் மாற்றங்களிலிருந்து தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதுதான் காரணம்.
சமீபத்தில் 2009-10-க்கான தொழிலாளர் ஆணையத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வேலையில்லாமைக்கான கணக்கெடுப்பின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் தவிர, இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் எல்லாம் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களும், அறிக்கையும், இந்தியாவை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக இப்போதும் தொடர்வது வேலைவாய்ப்புதான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலையால் சரக்குப் போக்குவரத்து சுலபமாகி, கணிசமாக நமது ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற கருத்தையும் பொய்யாக்கி இருக்கிறது இந்த அறிக்கை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நமது இறக்குமதி அதிகரித்து வருவதுடன், உற்பத்தி பல துறைகளில் குறைந்திருப்பதும், அதனால் வேலை இழப்பு ஏற்பட்டிருப்பதும் இந்த அறிக்கையிலிருந்து தெரிய வந்திருக்கிறது. போதாக்குறைக்கு, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற திட்டங்கள் எந்தவிதப் பயனும் அளிக்கவில்லை என்கிறது அந்த அறிக்கை.
தொழில் துறை வளர்ச்சி பற்றி நாம் என்னதான் பேசினாலும், இப்போதும் இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புக் களமாகத் தொடர்வது என்னவோ நமது கிராமப்புறங்கள்தான். கடந்த இருபதாண்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தால் இந்த நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரமாக இருக்கிறது.
இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 23.80 கோடிக் குடும்பங்களில் 72.26% குடும்பங்கள் இப்போதும் கிராமப்புறங்களில்தான் வசிக்கின்றன. இவர்களில் 10.1% பேர் வேலையில்லாமல் திண்டாடுபவர்கள் என்று தெரிவிக்கிறது அந்தப் புள்ளிவிவரம். அதனால்தான் அரசுகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் கிராமப்புற ஏழை மக்களை இந்த அளவுக்குக் கவர்கின்றன என்று கருத இடமிருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பின்மைக்கான முக்கிய காரணி, விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான்.
கிராமப்புறங்களில், விவசாயம்தான் 57% வேலைவாய்ப்பு வழங்குகிறது. கட்டுமானத் தொழில் 7.2%, சிறு தொழில் உற்பத்தி 6.7%, ஏனைய சில்லறை வியாபாரங்கள், கைவினைப் பொருள்கள், சேவைத்துறை போன்றவை 6.3% வேலைவாய்ப்பை வழங்குகின்றன. விவசாயம் செழிப்பாகவும், லாபகரமாகவும் நடைபெறாமல் போனால் ஒட்டுமொத்த கிராமப்புற வேலைவாய்ப்புகளும் சுருங்கி விடுகின்றன. விவசாயத்தில் ஏற்படும் பின்னடைவை ஈடுகட்ட கிராமப்புற மக்களுக்கு மாற்று வேலைவாய்ப்புக்கான பயிற்சியும் தரப்படுவதில்லை.
கிராமப்புறத் தொழிலாளிகளுக்கு மாற்றுத் தொழிற்பயிற்சி வழங்குவதன் மூலமும், விவசாயம் பொய்த்தாலும் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வழிகோலுவதன் மூலமும்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் மிகப்பெரிய அளவில், விவசாயத் தேக்கத்தை ஈடுகட்டி வந்த கால்நடை வளர்ப்பு இப்போது இல்லாமல் போனதுகூட, கிராமப்புற வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் என்கிறது அந்த அறிக்கை.
நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்பது கிராமப்புறப் பொருளாதாரத்தை ஆரோக்கியமான வகையில் வளர்க்க உதவாமல், ஊழலுக்கும், ஆக்கபூர்வமான விவசாய மற்றும் கிராமப்புறத் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் அமைந்திருக்கிறது என்கிற உண்மையும் இந்தப் புள்ளிவிவரங்களின் மூலம் தெளிவாகிறது. விவசாயம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதுடன், கிராமப்புறத் தொழிலாளர்களிடம் சேவைத் துறைக்கான திறமைகள் வளர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்தும், பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளாகியும் இன்றும் இந்தியாவில் அரசு வேலைவாய்ப்புக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்பதிலிருந்தே, திறமைகள் வளர்க்கப்பட்டு, தன்னம்பிக்கையுடன் போட்டிபோடத் தயாரான தலைமுறை உருவாக்கப்படவில்லை என்பதுதான் தெளிவாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், விவசாயமும் ஆதரிக்கப்படாமல், கிராமப்புற வளர்ச்சியும் போதிய கவனத்தைப் பெறாமல், தொழில் வளர்ச்சி என்பதும் நகர்ப்புற வளர்ச்சியாக இருப்பது, வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து, சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகக்கூடும் என்பதைத்தான் உணர்த்துகிறது.
சமூகப் பாதுகாப்பு என்பது தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதால் இந்தப் பிரச்னை மேலும் கடுமையாகி மிகப்பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்றுமதி, இறக்குமதி, பொருளாதார வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமது ஆட்சியாளர்களின் முழுமுதல் கவனமும் கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்குவதில் முனைப்புடன் செலுத்தப்படாவிட்டால், ஓர் எரிமலை வெடிக்கத் தயாராகிறது…!

“Shailesh Shah”
Presents:

Changing Thoughts of Girls
(Ladkiyo Ke Andaj Badle Gaye)

1980 – Love Me, But Don’t Touch Me
(Mujhe Pyar Karo, Lekin Mujhe Chuo Nehi)

1990 – Touch Me, But Don’t Kiss Me
(Mujhe Chuo, Lekin Mujhe Chumo Nehi)

2000 – Kiss Me, But Don’t Do Anything Else
(Mujhe Chumo, Lekin Aur Kuch Mat Karna)

2005 – Do Everything with me, But Don’t Tell Anybody
(Mujhse Sab Kuch Kar Lo, Par Kisi Ko Batana Nahi)

2011 – Do Everything with me, Otherwise I Would Tell Everybody That You Are A Novice
(Sub Kuch Karo, Warna Sub Ko Bata Dun Gi Ke Tum Ko Kuch Nahi Aata)

பெங்களூர்: இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிந்து விடும் என்று சொன்னவர்கள் கணிப்பில் டன் கணக்கில் மண் விழுந்தது.

உலகின் எந்தப் பகுதியிலும் மாலை 6 மணிக்கும் அதற்குப் பிறகும் கூட ஒன்றும் நடக்கவில்லை.

டூம்ஸ்டே எனும் பெயரில் இன்று 6 மணியோடு உலகம் அழிந்துவிடும் என்று சொன்னவர் அமெரிக்காவின் ஹரால்ட் கேம்பிங் என்ற கிறிஸ்தவ மதத் தலைவர். இவர் ரேடியோ நிலையத்தில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருபவர்.

இவரது பேச்சு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

89 வயதாகும் கேம்பிங், ஏற்கனவே இதுபோன்ற கணிப்புகளைக் கூறியவர்தான். 1994ம் ஆண்டில் உலகம் அழியும் என்று இவர் கூறியிருந்தார். ஆனால் அது புஸ்வாணமாகிப் போனது. ஆனால் தற்போது மே 21ம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு உலகம் அழிவது உறுதி என்று அவர் கூறினார்.

தான் பணியாற்றும் ரேடியோ நிலையத்தில் நேற்று பணி முடிந்து கிளம்பியபோது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கை குலுக்கிய கேம்பிங், இதுதான் நாம் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்று கூறிய அவர், நாளை மாலையுடன் உலகம் அழியப் போவதால் நாம் மீண்டும் சந்திக்க மாட்டோம். நானும் இருக்க மாட்டேன் என்று கூறி விட்டுக் கிளம்பினார்.

எப்படி உலகம் அழியும் என்று உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேம்பிங்கிடம் கேட்டபோது, நியூசிலாந்தில் மிகப் பயங்கரமான பூகம்பங்கள் 21ம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்படும். இதனால் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும். இந்த பூகம்பங்கள் நியூசிலாந்தோடு நின்று விடாது. அப்படியே ஒவ்வொரு பிராந்தியமாக நகரும். கடைசியில், உலகத்தின் பெரும்பாலான மக்கள் அழிந்து போய் விடுவார்கள். 2 அல்லது 3 சதவீத மக்கள்தான் உயிர் பிழைப்பார்கள். அவர்களையும் கூட கடவுள் தன்னுடன் அழைத்துக் கொண்டு விடுவார்.

எனது கணிப்பு மிகச் சரியானது, துல்லியமானது. நோவாவுக்கு கடவுள் 7 நாள் அவகாசம் கொடுத்தார். மாபெரும் வெள்ள அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த கால அவகாசத்தை அவர் கொடுத்தார். ஆனால் நமக்கு கடவுள் 7000 ஆண்டு காலத்தை அவகாசமாக கொடுத்தார். அந்த காலம் யூத காலண்டர்படி மே 21ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது என்பார் கேம்பிங்.

ஒன்றும் ஆகவில்லை…

ஆனால் மாலை 6 மணியைத் தாண்டிய பிறகும் உலகம் அழியவில்லை. நியூஸிலாந்து மட்டுமல்ல, வேறு எந்தப் பகுதியிலும் சிறு பூகம்பம் கூட நேரவில்லை. 1994-ம் ஆண்டு மட்டுமல்ல, இந்த ஆண்டும் பொய்யாய்ப் போனது கேம்பிங் கணிப்பு.

இனி 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதிக்கு காத்திருக்கிறார்கள் இதுபோன்ற அழிவுச் செய்திகளில் ஆர்வம் கொண்டோர். அது என்ன 21, டிசம்பர் 2012?

அன்றுதான் உலகின் கடைசி தினமாம். அன்றோடு உலகம் அழிந்துவிடுமாம்! இது மாயா இன மக்களின் பழைய கல்வெட்டுப்படி சொல்லப்படும் கணிப்பாம்.

உலகின் ஆயுளை அவ்வப்போது கேள்விக்குறியாக்குபவர்கள்தான் கடைசியில் காணாமல் போயிருக்கிறார்கள். நம்பிக்கையோடு வாழ்க்கையைத் தொடருவோருக்கே இந்த உலகம் இடம் தருகிறது!!

Thanks : http://ping.fm/lFDqm

ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!

ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!

டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, PhD., IPS (R)

ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாச்சாரங்களுடன், மொழிகளுடனும் வேறு பட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர் என்பதினை 2011 வருடம் பிப்ரவரி மாதத்திலிருந்து மே முதல் வாரம் வரை மேற்கொண்ட பயணத்தில் தெரிய வந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன.

30 சதவீத முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். மற்றவர்கள் ஐரோப்பியாவில் இஸ்லாத்தினை தழுவியவர்கள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா, மற்றும் தென் கிழக்கு ஆசியாவிருந்தும் குடி பெயர்ந்தவர்கள் ஆவர். பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் ஆங்கில மொழியினையும், மற்றவர் துருக்கி மற்றும் அரேபிய மொழிகளையும் பேசுகின்றனர்.

ஆஸ்திரேலிய மொத்த ஜனத் தொகை 2.2 கோடியில் இஸ்லாமியர் இரண்டு சதவீதத்தில் உள்ளனர். அதாவது கிட்டத் தட்ட 2,50,000 மக்கள் ஆவர். அதில் பெரும்பாலோர் சிட்னியிலுள்ள அபர்ன், கீரீனேக், பேங்க்ஸ்டன், லக்கம்பி, பஞ்சபவள், மெல்போனிலுள்ள மீடோ ஹெட்ஸ், ரிசர்வான், டல்லாஸ், நோபள் பார்க்இகோபர்க், டாஸ்மானியா, அடிலேடு, கியூன்ஸ்லேண்டு ஆகிய பகுதியில் வசிக்கின்றனர்.

பெரும்பாலோனோர்; பல்வேறு வேலைகளில் உள்ளனர். 27 சதவீதம் மேனேஜர்களாகவும், நிர்வாகிகளாகவும், தொழில் நட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர். அதில் ஆங்கிலம் தெரியாத முஸ்லிம்கள் தான் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர்.

இந்திய நாடு, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்கள் தொழிழ் நட்பவாதிகளாக இருப்பதால் மற்ற தேசிய முஸ்லிம்களை விட வேiலை வாய்ப்பில் சிறந்து விளங்குகின்றனர். பெரும்பாலான முஸ்லிம்கள் சுன்னி மதகினைச் சார்ந்தவர்களாகவும் மிக குறைந்த அளவே ஷியா இனத்தவர் உள்ளனர்.

காலூன்றிய வரலாறு:

இந்தோனேசியாவினைச் சார்ந்த மெக்காசான்ஸ் என்ற மீனவர்கள் வட ஆஸ்திரேலியா கடற்பகுதிகளில் கிடைக்கும் டிரப்பாங்க் என்ற வகை மீன்களைப் பிடிக்க 1750 ஆம் வருடங்களில் காலடி வைத்தனர். அவர்கள் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினருடன் சுகுமமான உறவூ கொண்டனர். ஆனால் மேற்கத்திய நாடுகளின் வருகையால் இந்தோனேஷியா மீனவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானிய முஸ்லிம்கள் தான் முதன் முதலில் குடி பெயர்ந்து அவர்களைத் தொடர்ந்து லெபனான், துருக்கி, போஸ்னியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்தனர். விக்டோரியா மாநிலத்திலுள்ள பாலை வனத்தில் வேகமாக செல்வதிற்காக 1860 ஆம் ஆண்டில் மூன்று பாலை வனக்கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்களை ஆப்கானிஸ்தானின் ஓட்டுனர்களுடன் கொண்டு வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து 1865 ஆம் ஆண்டு தென் ஆஸ்திரேலியாவினைச் சார்ந்த தாமஸ் எல்டர் என்பவர் 124 ஒட்டகங்களை 31 ஆப்கானிஸ்தான் ஓட்டுனர்களுடன் கொண்டு வந்தார்.1901 வரை ஒட்டக வர்த்தகத்தினை ஆப்கானிஸ்தானியர் கையாண்டு 600 ஒட்டகங்கள் அங்கு இருந்தன. ஆனால் 1920 வருடம் இயந்திரத்தில் ஓடும் வாகனங்களை அங்குள்ள அரசு கையாண்டதால் ஒட்டக வர்த்தகம் தடைப்பட்டது.

அப்படி வந்த ஆப்கானிஸ்தானிய முஸ்லிம்கள் எண்ணிக்கை 13000 த்தை 2008ஆம் ஆண்டு தாண்டியது. அவர்கள் சிட்னி, மெல்போர்ன் போன்ற நகரங்களில் தங்கெளுக்கென்ற சமூக அமைப்பினையூம், தொழுகை இடங்களையூம் அமைத்துக் கொண்டனர். அதே போன்று 20ஆம் நூற்றாண்டில் இடம் பெயர்ந்த லெபனான் நாடடு முஸ்லிம்கள் 21ஆம் நூற்றாண்டில் 40000த் தாண்டினர். அவர்கள் வழிபாட்டுத் தளங்கள் அமைப்புகளில் மற்ற முஸ்லிம்களை புறக்கணித்தனர்.

லெபனான் நாட்டு முஸலிம்கள் தங்களுக்கென்ற ஒரு சமுதாய அமைப்பினை ஏற்படுத்தி லக்கம்பீயில் ஒரு இமாம் அலி பள்ளிவாசலினை 1976ஆம் ஆண்டு ஏற்படுத்தினர். அந்தப் பள்ளியில் 9.3.2011 அன்று ‘ஓப்பன் டே” என்ற நிகழ்ச்சியினைக் காணச் சென்றேன். அங்குள்ள சேக இஸ்லாமியர் அல்லாத ஆஸ்திரேலியர் இஸ்லாத்தினைப் பற்றி எழுப்பப்ட்ட சந்தேகங்களுக்கு பதிலளித்தது மிகவும் விழிப்புணர்த்தினை ஏற்படுத்துவதாக இருந்தது. லெபனான் நாட்டு ஷியா இனத்தவர் தனியாக ஒரு பள்ளியினை அர்னாலிப் என்ற இடத்தில் 1983ல் ஏற்படுத்தினர்.

துருக்கியர் வருகை முதல் உலக யுத்தத்திற்க பின்பு கட்டுப்படுத்தப்பட்டது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவும், நியூஜிலாந்து துருக்கிக்கு எதிராக போரிட்டது குறிப்பிடத் தக்கது. அதன் பின்பு 1967ஆம் ஆண்டு அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப் பட்டதால் இன்று அவர்கள் எண்ணிக்கை 30000த் தாண்டும். அவர்களுக்கென்ற ஒரு பிரமாண்டமான பள்ளிவாசலினை அபர்ன் பகுதியில் அமைத்துள்ளனர். அதனை 10.3.2011 அன்று காண வாய்ப்புக் கிடைத்தது.

இரண்டு பெரிய மினாராக்கள், வேலைப்பாடு அமைந்த பளிங்குகளால் மிகவும் நேர்த்தியாக டிசைனில் அந்தப் பள்ளி அமைந்திருந்தது. விக்டோரியா மாநிலம் மெல்போர்னில் விக்டோரிய என்ற இடத்தில் பெரிய பள்ளி வாசலுக்கு 22.4.2011 ஜூம்மா தொழுகைக்குச் சென்றேன். மிகவும் அதிக கூட்டமாக நெரிசலுடன் தொழுதது அல்லாஹ் சுபஹானத்தாலாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஓன்று பட்ட யூகோஸ்லேவியாவில் 1990ஆம் ஏற்பட்ட சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து இன்று 15000த்தை தாண்டியூளளனர். பெரும்பாலான மக்களுக்கு ஆங்கில மொழி தெரியாததால் தொழிற்காலைகளில் கூலி வேலை செய்கின்றனர்.

1947ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்திலிருந்து பாகிஸ்தான் பிரிந்த பின்பு படித்த இஸ்லாமிய இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை 20000த்தை எட்டியுள்ளது. இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்தளவே7000த்தினை எட்டியுள்ளது. ஈரானியர் எண்ணிக்கை 10000 பங்களாதேஷ் நாட்டினர் 10000.

சமூக வாழ்க்கை முஸ்லிம்கள் மைனாரிட்டியாக வாழ்வதால் லோக்கல் கவுன்ஸில் கட்டுப்பாடு இருப்பதினால் பள்ளிவாசல்களில் தொழுகைக்கான பாங்குகளை ஒலி பெருக்கி மூலம் தெரிவிப்பதில்லை. வேலை பார்க்கும் இடங்களிலும், பார்க்கில் தனியான இடத்திலும், வாடகைக் கட்டியங்களிலும் ஜூம்மா தொழுகை நடத்தப்படுகிறது.

1980ஆம் ஆண்டுக்குப் பின்னால் ஆஸ்திரேலியர்கள் இஸ்லாத்திற்கு வருவது அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சூபியிஸத்தின் பால் இழுக்கப்பட்பவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக ஜூம்மா பிரசங்கம் அரேபிய மொழியில் சொல்லப்பட்டு ஆங்கிலம் பயின்றவர்களால் ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது. தொழுகை பள்ளிகளை மூன்று விதமாக பிரிக்கலாம்:

1) தொழுகைப்பள்ளி, மதரஸா மற்றும் லைப்ரரி அடங்கியது.

2) தொழுகைப்பள்ளி தொழுகை நடத்துவதிற்கு மட்டும்

3) கிறித்துவ ஆலயங்களின் மற்றும் லோக்கல் கம்யூனிட்டி செண்டரில் ஒரு பகுதியினை வாடகைக்கு எடுத்து தொழுகை நடத்துவது.

சிட்னி மற்றும் மெல்போர்ன் பகுதிகளில் 100 மேற்கொண்ட பள்ளிகள் உள்ளன.

தமிழ் இஸ்லாமிய அமைப்புகள் சிட்னி, மெல்போர்ன் போன்ற இடங்களில் சிறப்பாக செயல் படுகின்றன.. பெற்றோர்கள் பார்த்து ஒரு தேச முஸ்லிம்களுடன் திருமணம் செய்து கொள்வது மிகவும் குறைவே. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை என்றாலும் பெரும்பாலும் சிறிய குடும்பத்தினையே அங்குள்ள முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். லெபனான் மற்றும துருக்கி நாட்டு சில முஸ்லிம் இளைஞர்கள் கேம்ப்பீல்டு மற்றும் லக்கம்பீ பகுதியில் குற்றச் செயல்கள் ஈடுபடுவதால் ஆஸ்திரேலியரின் வெறுப்புகளை சந்திக்க நேரிடுகிறது.

வயதானவர்களை பாதுகாக்க விக்டோரியா மாநிலத்தில் லஸ்டர்பீல்டு என்ற இடத்தில் ஒரு காப்பகத்தினை ‘இஸ்லாமிக் சொசைட்டி ஆப் மெல்போர்ன் ஈஸ்ட்டர்ன ரீஜன்’ என்ற அமைப்பு நடத்துகிறது. அது போன்று ஒரு காப்பகத்தினை துருக்கியர் பிராடுமீடோஸ் என்ற இடத்திலும், கியூன்லோண்டில் ‘இஸ்லாமிக் பெண்கள் அசோஸியேஸன் ஒரு காப்பகத்தினையும் நடத்துகின்றனர்.

சில முஸ்லிம் தொழிளார்கள் வட்டி வாங்குவதினை விரும்பாததால் வங்கிக்கு தங்கள் சேமிப்பிற்கு வட்டி வேண்டாம் என சொல்லி விடுகின்றனர். லக்கம்வி பெரிய பள்ளியின் அருகில் உள்ள கட்டிடத்தில் ‘கவூஸ் ஆப் ஜக்காத்’ என்ற பலகையினை கண்டேன். ஜக்காத் கொடுப்பவர்கள் அந்த அலுவலகத்திற்கச் சென்று டாலரைக் கொடுத்து விடுகின்றனர். அதனை பயனுள்ள ஏழைகளுக்கு வழங்கப் படுகிறது.

வட்டியினை எதிர்க்கும் இளைஞர்கள் ‘தி முஸ்லிம் கம்யூனிட்டி கார்ப்பரேசன் ஆப் ஆஸ்திரேலியா’ என்று ஆரம்பித்து யாருக்கும் நஷ்டம் யாருக்கும் லாபமில்லாத பைனான்ஷியல் முறை தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐ.டிபி என்ற வட்டியில்லா வங்கியும் இயங்கி வருகிறது.

கல்வி நிலையங்கள்: 1957ஆம் ஆண்டில் தனது 23 ஆவது வயதில் 1957ஆம் ஆண்டு லெபனானைச் சார்ந்த சேக் பகீம் என்ற இளைஞர் ‘இஸ்லாமிக் சொசைட்டி ஆப் விக்டோரியா’ என்ற அமைப்பினை ஏற்படுத்தி வார விடுமுறை நாட்களில் 15 மாணவர்கள் பயிலும் பள்ளியினை ஆரம்பித்தார் அவர் பிற்காலத்தில் வளர்ந்து ஆஸ்திரேலியாவில் உலக மத அமைதி மாநாட்டினை நடத்தும் ஒரு இயக்கினராக சிறப்பாக செயல் பட்டதால் அவருக்கு, ‘ஆஸ்திரேலியாவின் உயர்ந்த விருது’ பாரத் ரத்னா போன்ற விருது வழங்கப்பட்டது

அதன் பின்பு இஸ்லாமிய அமைப்புகளை ஒரே குடையில் கொண்டு வரும் விதத்தில் ‘ஆஸ்திரேலியன் பெடரேசன் ஆப் இஸ்லாமிக் சொரைட்டி” என்ற அமைப்பு 1964 ஆம் ஆண்டு உருவானது. அரேபிய நாட்டு பண உதவியுடன் 198ஆம் ஆண்டு, ‘கிங்க் காலித் இஸ்லாமிக் ஸ்கூல்’ மெல்போர்னில் ஆரம்பிக்ப்பட்டது. அதன் பின்பு ஒவ்வொரு இடத்திலும் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

சிட்னியில் உள்ள, ‘மலக் பகாத் இஸ்லாமிக் பள்ளி” ஆயிரம் மாணவர்களைக் கொண்டது. ‘கிங் காலித் கல்லுரி” ஆண்களும் பெண்களும் பயிலும் கல்லுhரியாக இருக்கிறது. ‘இஸ்லாமிக் காலேஜ்” மெல்போர்னிலும் பிரிஸ்பேனிலும், அடிலேடிலும், கேன்பராவிலும், மற்றும் லாங்க்போர்டு இஸ்லாமிக் ஸ்கூல் பெர்த்திலும் செயல்பட்டு மார்க்க மற்றும் பொது கல்வியினை முஸ்லிம் மாணவர்களுக்குத் தருகின்றனர்.

ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்களுக்கு வாஃபா தாபா என்ற பெண்மணி முன்னோடியாக உள்ளார். அவர் கப்பற் படையில் ‘லெப்டிணன்ட் கமாண்டராக’ உள்ளார். அவர் ஐந்து வேலை தொழுகையினைக் கடைப்பிடித்தும், தன் தலையில் நேவல் தொப்பிக்குக் கீழெ ஹிஜாப் அணிந்துள்ளார். சி7 மற்றும் 9எம்.எம். என்ற தானியங்கி துப்பாக்கி சுடுவதில் வல்லவர். அவர் எகிப்தில் பிறந்த பாலஸ்தீன பெண்மணி ஆவார்.

அவர் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது தான் கப்பல் படையில் பணியாற்றுவதாலும், படித்திருப்பதாலும் பலர் நினைப்பார்கள் குடிப்பழக்கம், மற்றும் பன்றி உணவு சாப்பிடுவேனென்று. ஆனால் நான் அந்தப் பக்கமே தலையெடுத்து பார்த்ததில்லை எனக் கூறுவது பெருமையாக இருக்கிறது. நமது ஊரில் படித்த பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தலையில் முக்காடு போடாமல் ஜீன்ஸ் மற்றும் டி சர்ட் போட்டுக் கொண்டு ஆண்களைப் போல அலையும் காலத்தில் எம்.பி.ஏ படித்து ஆஸ்திரேலியாவின் ராணுவத்தில் உயர்ந்த பதவியினை வகிக்கும் வஃபா தாபா ஒரு இஸ்லாத்தின் நம்பிக்கை நச்சத்திரப் பெண்ணென்றால் மிகையாகாது. அவருடைய படத்தினை முஸ்லிம் அமைப்பகள் வெளியிடுவது தவறில்லை என எண்ணி இத்துடன் இணைத்திருக்கின்றேன.

நியூசவூத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஹான்ஸ்பீ என்ற இடத்திலுள்ள ‘வெஸ்ட்

Muslim MLAs in 5 assemblies: They are now 130

By TCN Staff Writer,
Patna: 50 days ago, TwoCircles.net, in an election “ story ”, had asked if the number of Muslim MLAs will go up in the five assemblies that were going to poll. We had predicted that the number could go up as there is a race among both ruling and opposition parties to capture the Muslim vote to come to power. The results announced yesterday proved us true.

Writer’s building in Kolkata [TCN Photo]
There were 105 Muslim MLAs in the five assemblies (West Bengal, Kerala, Assam, Tamil Nadu and Puducherry) together. Now the number has reached 130 – the big share has come from West Bengal where there was a mad rush for Muslim votes that were shifting from Left.
The major share of 130 Muslim MLAs has come from West Bengal where in all 59 Muslim candidates were elected to the new assembly, that is 13 more from the 2006 assembly poll. West Bengal has been followed by Kerala which will see 36 Muslim MLAs entering the Assembly. There were 25 Muslim MLAs in the outgoing Kerala assembly. Another state which has increased Muslim representation in assembly is Assam. The state had 25 Muslim MLAs in 2006. In the 2011 poll, 28 Muslims have been elected – majority of them are from All India United Democratic Front of Badruddin Ajmal. AIUDF has increased its tally of 10 members in assembly to 18.
However, Tamil Nadu and Puducherry have lost one Muslim MLA each. The former had 7 Muslim MLAs. The new assembly will have 6. Similarly, Puducherry had 2 Muslim MLAs. In this election, only one could win.
State ————–Seats——Muslim MLAs in 2006—–Muslim MLAs in 2011
West Bengal——294————-46——————————-59
Kerala————-140————-25——————————-36
Assam————-126————-25——————————-28
Tamil Nadu——234————–07——————————-06
Puducherry—- —-30————–02——————————01
Full list of Muslim MLAs in new assemblies
West Bengal: 59 Muslim MLAs
Sl. No…Constituency—–Muslim MLA———-Party
1.Amdanga——————-Rafiqur Rahaman——All India Trinamool Congress
2.Baduria———————Abdul Gaffar Quazi—-Indian National Congress
3.Baishnab Nagar———–Isha Khan Choudhury—Indian National Congress
4.Basirhat Uttar————–Mostafa Bin Quasem—-Communist Party Of India (Marxist)
5.Beldanga——————–Safiujjaman Seikh——–Indian National Congress
6.Bhagabangola————–Chand Mohammad—–Samajwadi Party
(Marxist)
7.Bharatpur——————-Id Mohammad——-Revolutionary Socialist Party
8.Canning Purba————-Abdur Razzak Molla——-Communist Party Of India (Marxist)
9.Chakulia——————–Ali Imran Ramz——All India Forward Bloc
10.Champdani—————-Muzaffar Khan——-All India Trinamool Congress
11.Chanchal——————-Asif Mehbub———-Indian National Congress
12.Chapra———————Rukbanur Rahman—-All India Trinamool Congress
13.Chopra———————Hamidul Rahaman—–Independent
14.Deganga——————–Dr. M. Nuruzzaman—-All India Trinamool Congress
15.Domkal——————–Anisur Rahaman———-Communist Party Of India (Marxist)
16.Farakka——————–Mainul Haque————-Indian National Congress
17.Goalpokhar—————Md. Ghulam Rabbani——Indian National Congress
18.Hariharpara—————Insar Ali Biswas————Communist Party Of India (Marxist)
19.Harischandrapur———Tajmul Hossain————–All India Forward Bloc
20.Haroa———————-Julfikar Molla—————All India Trinamool Congress
21.Islampur——————-Abdul Karim Chowdhary—-All India Trinamool Congress
22.Jagatballavpur————Abul Kasem Molla——All India Trinamool Congress
23.Jalangi———————Abdur Razzak———–Communist Party Of India (Marxist)
24.Jamuria——————–Jahanara Khan——Communist Party Of India (Marxist)
25.Jangipur——————-Md. Sohrab——–Indian National Congress
26.Kaliganj——————-Nasiruddin Ahamed(Lal)—–All India Trinamool Congress
27.Kasba———————-Ahmed Javed Khan———–All India Trinamool Congress
28.Ketugram—————–Sekh Sahonawez—————All India Trinamool Congress
29.Khanakul—————–Iqbal Ahmed——————-All India Trinamool Congress
30.Kharagpur—————-Haque Nazmul————–Communist Party Of India (Marxist)
31.Kolkata Port————–Firhad Hakim——-All India Trinamool Congress
32.Kumarganj—————-Begam Mahamuda——–All India Trinamool Congress
33.Labhpur——————-Islam Monirul————–All India Trinamool Congress
34.Lalgola——————–Abu Hena——————-Indian National Congress
35.Magrahat Paschim——–Giasuddin Molla———-All India Trinamool Congress
36.Malatipur——————-Abdur Rahim Boxi——-Revolutionary Socialist Party
37.Memari———————Abul Hasem Mondal——-All India Trinamool Congress
38.Metiaburuz—————–Mamtaj Begam————-All India Trinamool Congress
39.Monteswar———-Chowdhury Md Hedayatullah——Communist Party Of India (Marxist)
40.Mothabari——————-Sabina Yeasmin——-Indian National Congress
41.Murarai———————-Nure Alam Chowdhury——–All India Trinamool Congress
42.Nandigram——————Phiroja Bibi————All India Trinamool Congress
43.Naoda————————Abu Taher Khan——Indian National Congress
44.Pandua———————–Amjad Hossain Sk.——Communist Party Of India (Marxist)
45.Panskura Paschim———-Omar Ali———All India Trinamool Congress
46.Pursurah———————Parvez Rahman———-All India Trinamool Congress
47.Raghunathganj————-Akhruzzaman————Indian National Congress
48.Raniganj——————–Ali Sohrab———–All India Trinamool Congress
49.Raninagar——————-Firoza Begam———Indian National Congress
50.Rejinagar——————–Humayun Kabir————Indian National Congress
51.Samserganj—————–Touab Ali————–Communist Party Of India (Marxist)
52.Sonarpur Uttar————-Firdousi Begum—-All India Trinamool Congress
53.Sujapur———————-Abu Nasar Khan Choudhury—- Indian National Congress
54.Uluberia Purba————-Haider Aziz Safwi—-All India Trinamool Congress
55.Suti————————–Emani Biswas——–Indian National Congress
56.Palashipara——————S.M. Sadi————-Communist Party Of India (Marxist)
57.Panchla———————-Gulsan Mullick——-All India Trinamool Congress
58.Mangalkot——————-Sahajahan Choudhury———-Communist Party Of India (Marxist)
59.Bhangore——————–Badal Jamadar—-Communist Party Of India (Marxist)
Kerala: 36 Muslim MLAs
Sl. No…Constituency———-Muslim MLA——————–Party
1 Manjeshwar—————- PB Abdurazaq———- ———- Muslim League
2 Kasargod——————- NA Nellikkunnu———- ———- Muslim League
3 Azhikode——————- KM Shaji———- ———- Muslim League
4 Kannur——————— AP Abdullakkutty—- ———- Indian National Congress
5 Perambra——————- K Kunhammed Master– ———- CPI (M)
6 Kozhikode—————– South Dr MK Muneer———- —- Muslim League
7 Beypore——————– Elamaram Kareem— ———- CPI (M)
8 Kunnamangalam———- PTA Raheem———- — CPI (M) independent
9 Koduvally—————– VM Ummer Master— — Muslim League
10 Thiruvambadi———– C Moin Kutty—- —- Muslim League
11 Kondotty—————– K Muhammedunni Haji- ———- Muslim League
12 Ernad——————— PK Basheer———- ———- Muslim League
13 Nilambur—————- Aryadan Muhammed— ———- Indian National Congress
14 Manjeri—————— Adv M Ummer———- ———- Muslim League
15 Perinthalmanna——— Manjalamkuzhi Ali— ———- Muslim League
16 Mankada—————- TA Ahmed Kabeer— ———- Muslim League
17 Malappuram———— P Ubaidulla———- ———- Muslim League
18 Vengara—————– PK Kunjalikkutty—- ———- Muslim League
19 Vallikkunnu————-Adv KNA Qader—- ———- Muslim League
20 Tirurangadi———— PK Abdurabb———- ———- Muslim League
21 Tanur——————- Abdurahman Randathani ———- Muslim League
22 Tirur——————– C Mammootty———- ———- Muslim League
23 Kottakkal————– Abdussamad Samadani ———- Muslim League
24 Thavanur————– KT Jaleel———- ———- CPI (M) independent
25 Pattambi————— CP Mohammed———- ——— Indian National Congress
26 Shornur—————- KS Saleekha———- ——— CPI (M)
27 Ottappalam———— M Hamza———- ———- CPI (M)
28 Mannarkkad———– Adv N Shamsudheen– ———- Muslim League
29 Palakkad————— Shafi Parambil———- ——— Indian National Congress
30 Guruvayur————- KV Abdul Khader— ———- CPI (M)
31 Aluva——————- Anvar Sadath———- ———- Indian National Congress
32 Kalamasseri————-VK Ibrahim Kunju– ———- Muslim League
33 Aroor———————Adv AM Ariff———- ——— CPI (M)
34 Eravipuram———— AA Azeez———- ———- RSP
35 Varkala—————- Varkala Kahar———- ——— Indian National Congress
36 Kazhakkoottam——- MA Vaheed———- ———- Indian National Congress
Assam: 28 Muslim MLAs
Sl. No…Constituency———-Muslim MLA——————–Party
1. Algapur————————Sahidul Alam Choudhury——- Asom Gana Parishad
2. Badarpur———————–Jamal Uddin Ahmed————- Indian National Congress
3. Baghbor————————Sherman Ali Ahmed————All India United Democratic Front
4. Barpeta————————-Abdur Rahim Khan————-All India United Democratic Front
5. Bhabanipur——————–Abul Kalam Azad—————All India United Democratic Front
6. Bilasipara East—————-Gul Akhtara Begum————- All India United Democratic Front
7. Bilasipara West—————Hafiz Bashir Ahmed———— All India United Democratic Front
8. Chaygaon———————-Rekibuddin Ahmed————– Indian National Congress
9. Chenga————————-Sukur Ali Ahmed—————– Indian National Congress
10.Dalgaon———————–Ilias Ali—————————– Indian National Congress
11.Dhing————————–Aminul Islam——————–All India United Democratic Front
12.Dhubri————————-Jahan Uddin———————-All India United Democratic Front
13.Goalpara East—————–Monowar Hussain————–All India United Democratic Front
14.Goalpara West—————-Sheikh Shah Alam————-All India United Democratic Front
15.Golakganj———————Abu Taher Bepari—————– Indian National Congress 16.Hailakandi——————–Abdul Muhib Mazumder——— Indian National Congress
17.Jaleswar———————–Moin Uddin Ahmed————All India United Democratic Front
18.Jamunamukh—————–Mohd Sirajuddin Ajmal——–All India United Democratic Front
19.Jania—————————Rafiqul Islam——————–All India United Democratic Front
20.Karimganj South————Siddeque Ahmed——————- Indian National Congress
21.Salmara South—————Abdur Rahman Ajmal———-All India United Democratic Front
22.Katigorah——————–Ataur Rahman Mazarbhuiya—All India United Democratic Front
23.Laharighat——————-Dr. Nazrul Islam——————— Indian National Congress
24.Mankachar——————–Zabed Islam———————-Independent
25.Rupahihat———————Mazibur Rahman—————All India United Democratic Front
26.Samaguri———————-Rockybul Hussain————-Indian National Congress
27.Sarukhetri———————Ali Hossain———————All India United Democratic Front
28.Sonai————————–Anamul Haque—————— Indian National Congress
Tamil Nadu: 6 Muslim MLAs
Sl. No…Constituency—–Muslim MLA—————————Party
1. Palayamkottai —————-T.P.M. Mohideen Khan————DMK
2. Ramanathapuram———– Jawahirullah————————–Manithaneya Makkal Katchi
3. Avadi ————————-Abdul Raheem———————–AIADMK
4. Ambur ————————Aslam Basha A.———————-Manithaneya Makkal Katchi
5. Ranipet ———————–A.Mohammed John—————–AIADMK
6. Tiruchirappalli (West)——Mariam Pitchai———————-AIADMK
Puducherry: 1 Muslim MLA
Sl. No…Constituency—–Muslim MLA—————————Party
1. Karaikal South————- A.M.H. NAZEEM————————-DMK

——
Regards

Y MUNEER AHMED
Contact Mob No:
+9199403-55593

இன்றைய இளைய சமுதாயமே தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் – முனீர் அஹ்மத்
முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.

ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங்கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது.

அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .

அப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது.

இரட்டையாட்சி முறையை ஏற்கவில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.

மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.

1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.

1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.

இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழிலாளர்களுக்கு நலன் விளைவித்தார் ராஜாஜி.

அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக்கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.

மூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகியதால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாணவர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர்.

1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார்.

அண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற் படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனைகளாகும்.

தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள், கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச் சின்னங்களாகும்.

தி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது. மீண்டும் 1989 ல் நடைபெற்ற இடைதேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததது, ஆனால் 1991 ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி ஆட்சி கவிழ்க்கப்பட்டு 1991-ல் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரணமாக இவரது பதவி பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச் சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும்.
1.பொடா சட்டத்தைப் பயன்படுத்தி நக்கீரன்ஆசிரியர் கோபால்,
2. அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை கைது செய்தது,
3. அரசு ஊழியர்கள் மீதான டெஸ்மா, எஸ்மா போன்ற அதிரடி நடவடிக்கைகள்,
4. டான்சி வழக்கில் எதிரானதால் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு,
5. ஆளுநர் மீது தாக்குதல்,
6.மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள்,
7. விவசாயிகளின் பட்டினிச் சாவு,
8. நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம்,
9. வளர்ப்பு மகன் ஆடம்பரத் திருமணம்,
10. முன்னால் தேர்தல் ஆணையர் கார் மீது தாக்குதல்,
11. தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு,
12. டான்சி வழக்கில் சுப்ரமணியசாமி மீது முட்டை வீச்சு, ஆபாச அர்ச்சனை
13. மறைந்த முன்னால் ஆளுநர் சென்னா ரெட்டி மீது அவதூறு,
14. தன்னை விமர்சித்த நீதிபதி மகன் மீது கஞ்சா வழக்கு,
15. மதமாற்று தடைச்சட்டம்,
16. சென்னை சீரணி அரங்கம் இடிக்கப்பட்டது,
17. நிருபர்கள் தாக்கப்பட்டு கண்ணகி ச�

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
பழ. நெடுமாறன்

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.
“எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே’ என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
“பொடா’ சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய “தொல்காப்பியப் பூங்கா’ நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.
1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.
எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய “டெசோ’ அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.
ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.
ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.
இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!
கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.
நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள். 1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.
1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.
பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.
1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.
தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.
அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல்
ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?
நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?
தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?
இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?
முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!
உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.
திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது “மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.
ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.
உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்கள

அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!
சீனர் லியூ ஜியாபோ ஏன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்? மனிதஉரிமைக்காக அவர் என்னசெய்தார்? இக் கேள்விகளுக்கான விடைகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.

கடந்தவருடம் அமைதிக்கான நோபல் பரிசை ஓபாமா பெற்றார். இது நமக்கு மட்டுமல்ல, அவருக்கேக் கூட அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இந்த வருடம் அந்த ’அதிர்ச்சிக்குரிய’ பரிசைப் பெற்றிருப்பவர் சீனத்தைச் சேர்ந்த லியு ஜியாபோ. இவ்விருதைப் பெறுவதற்குமுன் சீனாவிலேயே அவரைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இவ்விருதுக்குப் பின்னரே அவரைப் பெருமளவு மக்கள் தெரிந்துக்கொண்டார்கள். அதன்பின் நிறைய கட்டுரைகளும் செய்திகளும் அவரைப்பற்றி வெளிவந்தன. மனிதஉரிமை போராளி என்று பத்திரிக்கைகள் புகழாரம் சூட்டின. தற்போது அவர் அரசாங்கக் கைதியாக சீனநாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நோபல் பரிசு பெற்ற விவரம் கூட அவருக்குத் தெரியாது என்றும் அவரை அவரது துணைவி கூடசந்திக்க அனுமதி மறுப்பு என்றும் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.

லியுவிற்கு நோபல்பரிசு கிடைத்தது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. நார்வேயிலிருக்கும் பாராளுமன்ற கமிட்டியினால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் மட்டும் லியு நோபல் பரிசை வென்றிடவில்லை. மாறாக, சீனாவுக்கெதிரான அமெரிக்க மேலாதிக்கத்தின் அங்கமாகவே திட்டமிடப்பட்டு லியுவிற்கு கொடுக்கப்பட்டது. சீன நாட்டோடு வலிமையான பொருளாதார பந்தத்தால் அமெரிக்கா பிணைக்கப்பட்டுள்ளது என்றாலும், அரசியல் ரீதியில் அந்நாட்டை அடக்கி வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. வளர்ந்து வரும் சீன பொருளாதரமும் அமெரிக்காவிற்கு இசைவாக இல்லை. எனவே மனித உரிமை என்ற முகாந்திரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சீனாவை குட்டுவதற்கு அமெரிக்கா தயங்கியதில்லை. இப்போது நோபல் பரிசால் குட்டுகிறது.

இந்த அமைதிக்கானநோபல் பரிசை சீனாவை சேர்ந்தவருக்கு அதிலும் லியூ ஜியாபோவுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? மனிதஉரிமைக்காக அவர் என்ன செய்தார்? இந்த கேள்விகளுக்கானவிடைகள் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகின்றன.

அமெரிக்காவின் அத்தனை மேலாதிக்க போர்களுக்கும் அவர் துணைபோயிருக்கிறார் என்ற உண்மைதான் அது. சீனாவில் இருந்து கொண்டே தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். கொரியா மற்றும் வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்பு போர்களையும், ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு போர்களையும் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறார் இந்த லியு. 2004-ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஈராக் போருக்கு ஆதரவாகப் பேசி ஜார்ஜ் புஷ்ஷை புகழ்ந்திருக்கிறார்.

இந்தப் போர்களும் எல்லாம் பச்சையான மேலாதிக்க வெறிக்காக கொடூரமாக நடத்தப்பட்டவை. அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டிக்கொள்ள நிகழ்த்தப்பட்டவை. அவற்றை ஆதரிப்பதே அப்பட்டமான மிகப்பெரும் மனித உரிமை மீறல். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலை நிலைப்பாட்டை ஆதரித்து, பாலஸ்தீனியர்களை குற்றம் சாட்டுகிறார் இந்த ’மனித உரிமை போராளி’ லியு.

அப்படிபட்டவரை மனிதஉரிமைப் போராளி என்று மேலைநாட்டு ஊடகங்கள் அழைப்பது சீனவை மட்டுமல்ல உலக மக்களையே அவமதிப்பதாகும். சீன அரசாங்கத்துக்குள் தங்கள் ஏஜெண்டுகளை நுழைக்க முடியாது என்று கண்டுகொண்ட அமெரிக்க முதலான மேற்கத்திய நாடுகள், இதுபோன்ற நூதன வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றன. சீனஅரசுக்கெதிராகப் பேசியவர் என்பதோடு அமெரிக்காவின் அத்தனை செயல்களுக்கும் கூஜாவாக இருந்தவர் என்பதே இந்த லியூவின் முக்கியமான தகுதிகள். அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் இந்த அயோக்கியருக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பதன் மூலம் சீனாவை மனித உரிமை மீறிய நாடு என்று பிரச்சாரம் செய்வதற்கு தோதாக இருக்கும் என்பதே இந்த அழுகுணியாட்டத்தின் நோக்கம்.

சீனா மனித உரிமையை மீறியதா, பின்பற்றுகிறதா என்பதெல்லாம் அமெரிக்காவின் கவலை அல்ல. அப்படி இருந்திருந்தால் அமெரிக்கா மலிவாக நுகர்வதற்காக சீனத்து தொழிலாளிகள் கசக்கி பிழியப்படுவது குறித்தும், நிலக்கரி சுரங்க விபத்தில் ஆண்டுதோறும் பல நூறு தொழிலாளிகள் இறந்து போவது குறித்தும் அமெரிக்கா பேசியிருக்க வேண்டும். ஆனால் என்றுமே அப்படி பேசியதில்லை.

இந்த நோபல் பரிசின் கண்ணைப் பறிக்கும் விளம்பர ஒளியில் லியு செய்த குற்றம் காணாமல் போய் ஊடகங்கள் சொல்வதே உண்மையென்று மக்கள் நம்பிவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது.

பென் சென்டர் என்ற எழுத்தாளர்கள் அமைப்பின் தலைவராக 2007 வரை லியு இருந்திருக்கிறார். பென் சென்டர், மனிதஉரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான, ஆங்கிலோ- அமெரிக்க தன்னார்வ மற்றும் தனியார் குழுக்களின் முக்கிய அமைப்பு. இந்த அமைப்பிற்கு படியளக்கும் ஸ்பான்சர்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குத்தான் இந்த பென்சென்டரை வைத்திருக்கிறார்கள். லியு தற்போது அவ்வமைப்பின் போர்டு உறுப்பினர்களில் ஒருவர்.

இவ்வமைப்புக்கும், அமெரிக்கா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு வாஷிங்கடனை அடிப்படையாக கொண்டு இயங்கும் மற்றொரு பேச்சுரிமை அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1941-இல் இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க உளவுத்துறையால் கம்யூனிஸ்டுகளுக்கெதிரான பிரச்சாரத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்ட அமைப்பு இந்தஃப்ரீடம் ஹவுஸ்.

திபெத், மியான்மர், உக்ரைன், ஜியார்ஜியா, செர்பியா மற்றும் கிர்கிஸ்தான் போன்றநாடுகளில் முக்கியமான தன்னார்வக் குழுக்களின் மூலமாக அமெரிக்காவின் அதிகாரவர்க்க நபர்களுக்கான கொள்கைகளை திருப்திகரமாக நிறைவேற்றுவது இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளாகும். அவ்வமைப்பைச் சார்ந்து சீனாவில் இயங்கும் அமைப்புதான் பென் சென்டர்.
இதிலிருந்தே லியுவின் நிலைப்பாடும், அவருக்கு நோபல் பரிசு வழங்கியதன் நோக்கத்தையும் புரிந்துக்கொள்ளலாம்.

சீனாவில் தாராளமயமாக்கல் முழுமையாக வரவேண்டும்; சந்தை எல்லோருக்கும் திறந்துவிடப்படவேண்டும் ; வெளிநாட்டு வங்கிகளை வரவேற்கவேண்டும்; அந்நிய முதலீடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும்; மொத்தத்தில் கார்ப்பரேட்டுகளுக்கும், முதலாளிகளுக்கும், வங்கிகளுக்கும் நாட்டை தாரை வார்த்துக்கொடுக்க வேண்டும் என்று அப்பட்டமாக முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்தான் லியு ஜியாபோ. சீனா இன்னும் அதிகமாக முதலாளித்துவப் பாதையில் பயணிக்கவேண்டும், முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வளரவேண்டும் என்பதுதான் லியு மற்றும் அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாடு.

இந்த நோக்கில் சீனா ஏற்கனவே சென்று விட்டது என்பதுதான் உண்மை. அதாவது பொருளாதரத்தில் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட சீனா அரசு அமைப்பில் மட்டும் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை வைத்திருக்கிறது. அதையும் திறந்து விடவேண்டும் என்பதுதான் லியு மற்றும் அமெரிக்காவின் நோக்கம்.

இதனை அவர் 2008-இல் எழுதியசார்ட்டர் 8-இல் மேற்குலகஅரசியல்பாணியை சீனா கடைப்பிடிக்க வேண்டுமென்றும்,அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க வேண்டுமென்றும் நிலங்களை தனியார் கையகப்படுத்தப்படவேண்டுமென்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். முதலாளித்துவத்தில்தான் வளர்ச்சி அடங்கி இருக்கிறது என்று அவர் கருதுகிறார். மறுகாலனியாக்கத்தை ஆதரிக்கிறார். மேலும், அவர் தலைமை தாங்கிய நிறுவனங்களெல்லாம் அமெரிக்காவின் நிதி உதவியைப் பெற்றிருக்கின்றன.
இந்தநிலையில் அவர் நோபல் பரிசு பெற்றிருப்பதை பொருத்தி பார்க்கலாம்.

அதோடு, லியு ஜியாபோவை நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்த நபரையும் கருத்தில் கொள்ளவேண்டும்.லியுவை அமைதிக்கான பரிசுக்கு பரிந்துரைத்தவர் வேறு யாருமல்ல, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தும், சிஐஏவிடமிருந்தும் நீண்ட காலமாக நிதியுதவி பெற்று வரும் தலாய் லாமாதான் அவர். அவரோடு, லியுவை பரிந்துரைத்தவர்கள் பட்டியலில் பல நேட்டோ அதிகாரிகளும் அடங்குவர்.இதிலிருந்தே அந்தபரிசின் அரசியலை விளங்கிக்கொள்ளலாம்.

நோபல் பரிசானது அமைதிக்கானதாகக் கொள்ளாமல் எதற்கானதாக இருக்கிறது ? அமெரிக்காவின் வழிகாட்டுதலின் பேரால், தன்னார்வக் குழுக்களின் வழியாக அமெரிக்காவின் கூஜாக்களுக்கு விளம்பரம் செய்து வழங்கப்படுகிறது. இதற்கு லியு ஜியாபோ ஒரு கருவி. உலகில் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ பேர் அரசாங்கக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நிறவெறிக்கு சான்றாக, முமியா அபு ஜமால் எனும் கறுப்பின பத்திரிக்கையாளர் செய்யாத குற்றத்துக்காக தூக்குதண்டனை கைதியாக நாட்களை பென்சில்வேனியா சிறையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். லியு ஜியாபோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் ஒபாமா முமியா அபு ஜமாலை விடுவிப்பாரா என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கிறார். அதேபோல லியுவின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் அமெரிக்கா இங்கு இந்திய அரசால் சிறையில் வதைக்கப்படும் பினாயக் சென் என்ற உண்மையான மனித உரிமைப் போராளிக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

முதலாளித்துவ நாடுகளில் மக்களின் பொது சொத்துகள் முதல் உழைப்பு வரை எப்படி சுரண்டப்படுகின்றது என்பதற்கும் ஏற்றதாழ்வுகள் எப்படி அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையும் இந்தியாவிலேயே கண்கூடாகக் காணலாம். இதற்கு ஐரோப்பிய நாடுகளும் விதிவிலக்கல்ல. 200 ஆண்டுகளுக்கு மேலாக முதலாளித்துவத்திலிருந்து காலாவதியாகிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே பெரும்பாலான மக்கள் முதலாளித்துவத்தை தூக்கியெறிய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்தஅமைப்பை மாற்றவேண்டும் என்று போராடுகிறார்கள்.தனியார்மயம், உண்மையில் வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை பல லத்தீன் அமெரிக்கநாடுகளில், இந்தியாவில் கண்கூடாகக் காணலாம்.

அமைதிக்கான நோபல் பரிசு என்பது அமெரிக்க மேலாதிக்க அரசியலுக்கான ஒரு கருவிதானே தவிர மனிதஉரிமைகளைப் பற்றியோ அல்லது ஜனநாயகத்தைப் பற்றியோ, அப்பாவி மக்கள் மீதான போர்கள் குறித்தோ அதற்கு எந்தக் கவலைகளுமில்லை என்பதையும் இந்தவருடத்தின் பரிசு பெற்றலியு ஜியாபோ அமெரிக்காவின் போர்களை உற்சாகப்படுத்துபவராகஇருந்திருக்கிறார் என்பதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தாது. நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
____________________________________________________________

நன்றி :- சந்தனமுல்லை, புதிய கலாச்சாரம் – ௨0௧௧,vinavu

மறைந்த அறிஞர் Dr. நுபார் ஃபாரூக் அவர்களின் வீடியோ/ஆடியோ பதிவுகள்
Posted: 24 Apr 2011 01:17 PM PDT
கல்வி (இல்ம்) சில தகவல்கள் பிரிந்து விடாதீர்கள்! முஹம்மத் (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் மற்றும் வம்சாவழி முஸ்லிமாக வாழ்வதின் சிறப்புகள் முக்கியமான செய்தி.. இறையச்சம் இஸ்லாம் முழுமையானது அழைப்புப் பணியின் அடிப்படை -Audio/Video திருக்குர்ஆன் ஒளியில் மனிதன் இஸ்லாமிய குடும்பம் குர்ஆன் போற்றும் கூட்டம் ஸலஃப் ஸாலிஹீன்கள் யார்? ஸலஃபுகளும் அதைச் சூழ உள்ள குழப்பங்களும் இஸ்லாமிய மறுமலர்ச்சியும் ஊடுறுவலும்…

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது http://www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

என் நண்பர் அவருக்கு வந்த மெயிலை எனக்கு அனுப்பியள்ளார் இதில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. அதை உங்ககளிடம் நான் பகிர்ந்து அளிக்கிறேன்.
நாம் படித்து பயனடைவது மட்டும் அல்லாமல் நம்மால் முடிந்த அளவு இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் பயன்பெற ஏதுவாயி இருக்குமென நம்புகின்றேன்.

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே “RED Society” யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://ping.fm/Ieso2

என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

3) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

4) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோஇலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

5) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்… போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!

அதனால் நம்மால் முடிந்த வரை

**மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்

**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!

8) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ping.fm/iEmwr

9) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10) இரத்தப் புற்று நோய்:
“Imitinef Merciliet” என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு
வகை : புற்றுநோய்

முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai – 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 – 24910754, 044-24911526, 044-22350241

Post Navigation

%d bloggers like this: