Karim74's Weblog

my articles

Archive for the month “February, 2011”

உலகில் ஆதிக்க வர்கத்தால் உருவாக்கப்படும் அனைத்து விதமான அடிமைத்தனத்திலிருக்கும் மக்களை விடுதலை செய்யும் ஆற்றலும் வல்லமையும் இணையற்ற வாழ்வியல் நெறியான இஸ்லாம் ஒன்றுக்கு மட்டுமே உள்ளது.

இஸ்லாத்தின் வீரியமிக்க அனைத்து கருவிகளும் எல்லா காலத்திலும் உயிர்ப்புடன் இயங்க வைக்கப்பட்டால் உலகில் எந்த ஒரு மனிதனையும் யாராலும் அடிமைப்படுத்திட இயலாது.

ஆனால் இஸ்லாத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கக் கடமையுடைய முஸ்லிம்கள் அதன் வீரியம் அறியாமல் வீணாக்கி வரும் அவலத்தை உலகம் முழுவதும் கண்டு வருகிறோம்.

இஸ்லாமானது வணக்க வழிபாடுகளுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் மட்டுமே பொருந்தும். வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வல்லமை இஸ்லாத்திற்கு இல்லை என்ற மடமைத்தனம் முஸ்லிம்களிடம் மண்டிக் கிடக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்களிடம் தான் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது.

இதனால் முஸ்லிம் சமுதாயம் பல நிலைகளிலும் சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். வழிகாட்டுவோர், மீட்டெடுப்போர் தன்னிலை மறந்து அலட்சியமாக கிடக்கின்றனர்.

இன்றைய முஸ்லிம்கள் சந்தித்து வரும் சோதனைகளில் மிக அடிப்படையானது தான் உடல்நலம்.

கடந்த 20 ஆண்டுகளில் விவசாயம், உணவு, சுகாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற மனிதனின் அன்றாட வாழ்வோடு தொடர்புடைய துறைகளில் அரசு அறிமுகப்படுத்திய தாராளமயம், உலகமயம் என்ற முதலாளித்துவத்தின் சுரண்டல் நிறைந்த வழிமுறைகளால் இந்தியச் சமூகமே சிக்கிச் சீரழிந்து வருகிறது. அதில் முஸ்லிம் சமுதாயமும் தனது வழிமுறை மறந்த காரணத்தால் சிக்குண்டு சீரழிந்து கிடக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக விவசாயத்தில் நமது பாரம்பர்ய வழிமுறைகள் பின்பற்றப் படாமல் மேற்கத்தியவாதிகளின் இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் நமது நிலங்களில் அதிகம் கொட்டி அதில் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்களை உண்டதினால் மக்கள் அனைவரும் பெரும் வியாதியுடையவர்களாக மாறிவிட்டனர். இந்த நஞ்சு மிகுந்த உணவை உட்கொள்வதால் மக்களின் சேமிப்பும் பரம்பரை சொத்துக்களும் மருத்துவதிற்காக கரைந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் சிறுகச் சிறுக சேமித்த சொத்துக்கள், குழந்தை குட்டிகளை பிரிந்து வாழ்நாளெல்லாம் அரபு மண்ணில் இரத்தம் சிந்தி உருவாக்கிய செல்வம் எல்லாம் மருத்துவத்திற்காக கரைந்து கொண்டிருக்கிறது.

விவசாயத்தில் விஷத்தைக் கொட்டி உணவை நஞ்சாக்கி மக்களை நோயாளிகளாக்கி அந்த நோய்க்கு மருந்தையும் புதிது புதிதாக அவர்களே உருவாக்கி அதைக் கொண்டு வந்து நமது தலையிலேயே கொட்டுகின்றனர். டன் கணக்கில் கொட்டப்படும் இராசாயனங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் மக்களுக்கு புதுப்புது வியாதிகள் முளைக்கின்றன.
இவற்றிற்கு வைத்தியம் பார்ப்பதற்கு என்று புதிய புதிய பகாசுர மருத்துவமனைகள் முளைத்து மக்களை ஓட்டாண்டிகளாக்கி வருகின்றனர் இந்த படுபாவிகள் அடிக்கும் பகல் கொள்ளையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று அனைவருக்கும் பங்கு.

போதாக் குறைக்கு அந்த நவீன மருந்துகளிலும் போலி மருந்துகள் வேறு மக்களிடத்தில் புழக்கத்தில் விடப்பட்டு அதிலும் கொள்ளை.

முஸ்லிம்களைப் பொறுத்த வரை விவசாயத்தில் குறைவானவர்களே ஈடுபடுகின்றனர். பிற மக்களைப் பார்த்து முஸ்லிம்களும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ள இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர்.

பெரும்பான்மையான முஸ்லிம்கள் விவசாயம் என்றால் என்னவென்று கூட அறியாத மக்களாக வியாபாரிகளாகத் தான் இருக்கின்றோம். இதன் காரணமாக விவசாயத்தில் செய்யப்படுகின்ற இந்த படுபாதகச் செயலை நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை.

உணவில் நஞ்சு. தாய்ப்பாலில் கூட நஞ்சு. நிலத்தடிநீர் மறைந்து வருகிறது. குளம், குட்டைகள் மாசடைந்து போய் மறைந்தும்விட்டன. கடலில் கொட்டப்படும் இரசாயனக் கழிவுகளால் கடலோர கிராம மக்களும் கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன.

தமிழக கடலோர கிராமங்களில் குடிநீரில் ஏற்பட்ட அமிலத் தன்மையின் காரணமாக பெருவாரியான மக்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். இத்தனைக்குப் பிறகும் இவை ஏன் நடக்கிறது. யார் காரணம். இதற்கு என்ன செய்வது என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் மக்கள் தொலைக்காட்சி தொடர்களிலும் டாஸ்மாக் உற்சாகத்திலும் மூழ்கி கிடக்கின்றனர்.

மக்களின் உடல்நலம், சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை வாழ்வியல் வழிமுறைகளில் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாமிய நடைமுறைகள் குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிகாட்ட வேண்டிய ஆலிம்கள், ஜமாஅத் நிர்வாகம், சமூக அமைப்புகள் இந்த சீரழிவுகள் குறித்து எந்த அக்கறையும் இன்றி அறியாமையில் இருக்கின்றனர்.

இனியும் இந்த அக்கிரமங்கள் குறித்து மக்களிடம் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையென்றால் பிறகு ஜமாஅத் நிர்வாகத்தின் பெயர் மட்டும் தான் பலகையில் இருக்கும். ஜமாஅத்தார்களான மக்கள் அனைவரும் நோயாளிகளாக மாறிவிடும் சூழல் ஏற்படும்.

அதேபோல அமைப்புகள் இருக்கும். ஆனால் கொடிபிடிக்கவோ கோஷம் போடவோ நிதிதிரட்டவோ தொண்டர்களிடம் வலிமை இல்லாமல் நோயாளிகளாக மாறிவிடுவார்கள்.

என்ன செய்வது?

முஸ்லிம்களுக்கு பொறுப்பேற்றுள்ள அனைவரும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு களம் இறங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மதரஸாக்களிலிருந்து பணியை தொடங்க வேண்டும். மதராஸாக்கள் விழித்துக் கொண்டு மக்களை சுற்றி வளைக்கும் இந்த விபரீதத்திலிருந்து அவர்களை பாதுகாத்திட முயற்சி எடுக்க வேண்டும்.

மதரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு இன்றைய விவசாய முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சொல்லி விவசாயம், உணவு உற்பத்தி, சுகாதாரம், சுற்றுச்சூழல் தொடர்புடைய விவகாரங்களில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் செயல்திட்டங்கள் குறித்து மிக நுட்பமாக போதிக்கப்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட பயிற்றுவிக்க வேண்டும்.

ஜும்ஆ மேடைகள்

இன்றைய நவீன உலகில் மக்களின் வாழ்க்கை முறையை பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையோடு ஒப்பீடு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

வெறுமனே வானத்திற்கு மேல் உள்ளதையும் பூமிக்கு கீழ் உள்ளதையும் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருந்தால் முஸ்லிம்கள் அனைவரையும் நோயாளிகளாக மாற்றிய பெருமை தான் ஆலிம்களுக்கு கிடைக்கும்.

கோபப்படாதீர்கள்! நிலைமை அவ்வளவு மோசமாகிக் கொண்டிருக்கிறது.

ஜமாஅத்

ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களிலும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. 30, 40 இலட்சம் செலவு செய்து பெருமைக்கு வீட்டை கட்டி கழிவுநீர் வாய்க்காலை வீட்டின் முன்பக்கம் ஓடவிடும் “சிறந்த” பழக்கம் முஸ்லிம்களிடம் நிலவுகிறது.

கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி கேந்திரமாக காட்சியளிக்கிறது. அரசை எதிர்பாராமல் ஜமாஅத் நிர்வாகம் தலையிட்டு மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு ஊரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமையும் ஜமாஅத்திற்கு இருக்கிறது.

இது மார்க்கச் சட்டமாகவும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

“அசுத்தங்களை வெறுத்துவிடுங்கள் அல்லாஹ் தூய்மையாக இருப்போரை நேசிக்கின்றான்” -அல்குர் ஆன் – 2:222.

மருத்துவம்

நோய்களினால் தங்களது சொத்துக்களை இழந்து வரும் மக்களை மீட்டிட தயவு கூர்ந்து ஜமாஅத் நிர்வாகமும் ஆலிம்களும் சேர்ந்து பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உணவு, மருத்துவம் ஆகியவற்றை மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.

பெண்கள்

மாறிப்போன இந்த உணவு மற்றும் வாழ்க்கை முறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெண்கள் தான். இன்றைய தலைமுறை பெண்கள் ஏறக்குறைய 80 விழுக்காட்டினருக்கு இரத்த சோகை நோய் பிடித்துள்ளது.

17, 18 வயது நிரம்பிய பெண்களை மருத்துவத்திற்கு அழைத்துச் சென்றால் உடலில் இரத்தம் இல்லை என்று தான் மருத்துவர் கூறுகிறார். முதல் பிரசவத்திற்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. தாய்ப்பாலும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தை இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. இது மிகமிக ஆபத்தானது. நாளடைவில் முஸ்லிம் மக்கள் தொகை குறைவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமையும்.
இதுகுறித்து அந்த அந்த ஜமாஅத் நிர்வாகமும் ஆலிம்களும் கடுமையாக விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த வேண்டும்.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருத்துவ முறைகளோடு ஒன்றிப் போகக்கூடிய சித்தா, ஆயுர்வேதம், யூனானி போன்ற மருத்துவமுறை பயின்ற மருத்துவரை பள்ளிவாசல் வளாகத்தில் வைத்தே இலவசமாக மக்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும். இதற்கு பெரிதாக ஒன்றும் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது.

இதுபோன்ற சேவைகளைச் செய்யும் போது முஸ்லிம் அல்லாத மக்களிடம் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் நல்ல புரிதல் எற்படும் என்பதில் ஐயமில்லை.

100-150 ஆண்டுகளுக்கு முன்பாக மதரஸாக்களில் படித்து பட்டம் பெறும் அனைவரும் மார்க்கத்தோடு மாநபியின் மருத்துவத்தையும் கற்று மக்களுக்குச் சேவை செய்துள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது. அது தான் இஸ்லாமிய கலாச்சாரம்.

ஆங்கில வழி மருந்துகள் இந்த மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்ட 50-60 ஆண்டுகளிலேயே மக்கள் அனைவரும் தலைமுறை நோயாளிகளாக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

எல்லாவற்றிக்கும் சரியான, முறையான, நேர்த்தியான தீர்வை தந்துள்ள இறைவனையும் இறைத்தூதரையும் பின்பற்றாமல், நடைமுறைப் படுத்தாமல் இருந்தது நமது குற்றம்.

காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து நாம் பணியாற்ற வேண்டும்.

சுற்றுச் சூழல்

மனிதன் தனது சுயநலத்தின் காரணமாக மனித இனத்திற்கும் இந்த பூமிக்கும் நன்மை பயக்கும் மரங்களை வரைமுறையற்று வெட்டிச் சாய்க்கின்றான். இறைவனுடைய அருள் என்ற மழையை பெய்வித்து பூமியை குளிரச் செய்யும் மரங்களை அவசியமில்லாமல் வெட்டுவதை இஸ்லாம் தடுக்கிறது என்பதை முஸ்லிம்களுக்கு உணர்த்த வேண்டும்.

அதைத் தான் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நாளையே உலகம் அழியப் போகிறது” என்று தெரிந்தாலும் இன்று மரம் நடுவதை ஒரு மனிதர் நிறுத்திவிடக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

ஊர் முழுவதும் கிடைக்கின்ற இடத்தில் எல்லாம் மரங்களை நட்டு வளர்ப்பதில் ஜமாஅத் நிர்வாகமும் ஆலிம்களும் ஆர்வம் காட்ட வேண்டும். குறிப்பாக மருத்துவ குணம் நிறைந்த வேப்பம், வேம்பு, இலுப்பை மரங்களோடு விலைமதிப்புள்ள தேக்கு செம்மரம் போன்றவைகளை வளர்த்திடும் போது வாழ்க்கை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பயனுள்ளதாக அமையும்.

அதேபோல பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை நிறுத்திட ஜும்மா மேடைகளை ஆலிம்கள் அதிகமதிகம் பயன்படுத்திட வேண்டும். விழிப்புணர்வு இல்லாத சமுதாயத்தில் எவ்வித வழிகாட்டுதலும் வெற்றி அடையாது. முஸ்லிம்களின் வாழ்வாதாரத்திற்கான முழு பொறுப்பும் கடமையும் ஜமாஅத் நிர்வாகத்திற்குத்தான் உள்ளது.
ஜமாஅத் நிர்வாகத்திடம் மாற்றம் ஏற்படாமல் முஸ்லிம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது.

– சமூக நீதி முரசு

http://ping.fm/OGBiD

—————-

Advertisements

மன ஊனமில்லா மணமகன் தேவை!!!
From: imtheyaz@gmail.com

‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’ (அல்குர்ஆன் : 4:4)

வல்ல அல்லாஹ் மணமகளுக்கு
மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல
நீ கொடுக்க வேண்டிய மஹரை
பெண்ணான என்னிடம் கேட்க
நீ கேட்ட மஹரை கொடுக்க
என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்
தன் அனைத்து சுகங்களையும் இழந்து!

என்னைப் பார்க்க வந்த
உன் தாயும், உன் சகோதரியும்
பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்
என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்
வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து
எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்
நீங்கள் தெளிவாக சொன்னால்தான்
அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!

உன்தாயின் பட்டியல் தொடங்கியது
லட்சத்துடன் – பால்குடம், தயிர்குடம்
பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து
ஒரு வருட விதவிதமான சீர், நகை பின்
எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய
எத்தனை பேருக்கு பசியாற தருவிய!
(சாப்பாட்டையே பார்க்காத மாதிரி)

மனை உள்ளது வீட்டை
கட்டி கொடுத்து விடுங்கள்!
(தற்பொழுது குடிசைதான் வீடாம்)
என் குடும்ப சூழ்நிலையில்
இந்த சம்பந்தம் அமையுமா
மணமேடையில் அமருவோமா
என்று மனதுக்குள் அழ!

என் தந்தையோ நோயின்
வாசல்படியை தட்ட
நானோ வீட்டின் நிலைப்படியில்!
எத்தனையோ பேர் என்னை
பெண் பார்த்து சென்ற பிறகும்
இன்னும் முதிர் கன்னியாக
உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!
ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!

பெண் பார்க்க
வந்தவர்களில் சிலர்
என் பையன் சிகப்பு பெண்தான்
பார்க்க சொல்கிறான்
பெண் கருப்புதான்
இருந்தாலும் நாங்கள் கேட்பதை
(வரதட்சனையை) தந்து விட்டால்
என் பையனை
சம்மதிக்க வைத்து விடுகிறோம்!
பணம் படைத்தவர்களின்
கருப்பு நிற பெண் கரையேறி விடும்!
பணம் இல்லா குடும்பத்து
கருப்பு நிற பெண்களை
கடலில் தள்ளி விடலாமா?

பெண்ணை பெற்றவன்
ஜமாத்தில் லட்டர் வாங்கி
ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம்
என்று முகம் தெரியா ஊரில்
பள்ளியில் தொழுகை முடிந்தவுடன்
பாவா குமராளி வந்திருக்கிறேன்
திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது
உதவி செய்யுங்கள் என்று
துண்டை ஏந்தி நிற்பதை
பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன்
கோபம் வரவில்லையா?
என்ன செய்தாய் நீ?
என் தாய் தந்தை மனம்
கோணாமல் நடப்பேன் என்றாய்!

இளைஞனே திருமணம் முடிக்கும்
நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில்
மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால்
இதுநாள்வரை தாய், தந்தை
பேச்சைகேட்காத நீ கூட திருமண
பேச்சு வார்த்தையில் மட்டும்
என் தாய் தந்தையின் மனம்
நோக நடக்கமாட்டேன் என்கிறாய்!

இளைஞனே உன் தெருவில்
திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க
நீயோ பணம் படைத்த வீட்டில்
பெண்ணை தேட!
அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு
வேற வழி இல்லை என்று
பிறமத பையனோடு ஓட!
இப்பொழு வருகிறது உனக்கு கோபம்
என் தெரு பெண்எப்படி ஓடலாம்!
அவளை கண்டால் வெட்டுவேன் என்று!
அவள் ஓடியதற்கு நீயும்
உன்னை போன்றவர்களும்
காரணம் இல்லையா?

முகமூடி திருடன் இரவில் திருடுகிறான்
நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு
பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு
கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை
என்ற பெயரில் மணமகள் வீட்டில்
மனசாட்சியும் இல்லை!
மறுமை பயமும் இல்லை உனக்கு!

மணமகனே நான்
உன்னிடம் கேட்கிறேன்
நீ என்ன மஹர் தருவாய்
எனக்கு – எதற்காக என்கிறாயா?
உன் வீட்டில் வந்து
ஆயுள் முழுவதும் உனக்கும்
உன் குடும்பத்திற்கும்
சேவை செய்வதற்கும்!
குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!
உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்
நானும் தகப்பன் என்று
பெருமிதம் அடைவதற்காக!
என் தாய் தந்தையை
என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை
நான் வாழ்ந்த இடத்தையே
விட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்
வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு
வருவதற்கு! – எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?

இளைஞர்களே! இன்னுமா உறக்கம்!
உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும்
விழித்தெழுங்கள்!
இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்
நாளை மஹ்ஷர் பெருவெளியில்
இறுதி தீர்ப்பின் நாளின்
அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம்
என்ன பதில் சொல்வாய்
தாய் தந்தையை கை காட்டுவாயா?
முடியாது இளைஞர்களே!

நீங்கள் மட்டும்தான் உங்களின்
காரியத்திற்கு பதில் சொல்வீர்கள்
வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து
நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்
இந்த வரதட்சனை என்னும் கொடுமையை
அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு
மஹர் கொடுத்து மணமுடியுங்கள்!
இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.

எஸ். அலாவுதீன்
நன்றி : அதிரை நிருபர்

மனைவியிடம் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர் (must read A very Good Article)

பிஸ்மில்லஹீர் ரஹ்மானிர் ரஹீம்

மனைவியெனில்படுக்கையில்பாலுணர்வைப்பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட
இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது?
இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச்
சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று சிலர் எண்ணுகின்றனர்.

ஆனால் மனைவியின் உணவு,உடை,அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்பது இஸ்லாம் நமக்கு கற்றுத்தரும் பாடம்.

”இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை
நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள்மனைவியரிடம்
நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் :அபூஹுரைரா ரளியல்லாஹு
அன்ஹு, நூல் : திர்மிதி எண்: 1082)

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம்.ஆனால் வீட்டுக்கு
நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள். இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக்
கொண்டிருக்கின்றோம்.

இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம்
முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட
வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி
எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன்
எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக்
கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.

மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன?

ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய
வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது,
”நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை
கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே
தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக்
காட்டக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
பதிலளித்தார்கள்.

(அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ரளியல்லாஹு
அன்ஹு, நூல் : அபூதாவூத் 1830)

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில்
தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும்
என்று உத்தரவிடுகின்றார்கள்.

உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு அத்துடன் மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி
விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப்
பார்க்கிறோம்.

”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர்.
உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள
உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ்
ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 56)

மனைவியருக்கும் சுயமரியாதை உண்டு சுய மரியாதையைப்
போற்றுதல் மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.
அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

”நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல்
அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 4942, 5204)

மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய்
படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?
என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது
மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும். அடுத்ததாக ”பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.

இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள்.
அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில்
திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல
பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து
எறிந்து விட வேண்டும்.

மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு
இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது. பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல்
அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல்கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும்
காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத்
தொடர்கின்றது.

மனைவியின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்
இதோ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையைப்
பாருங்கள்! ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த
தமது மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா
அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு
அன்ஹா உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம்
சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃலிக்கு செல்கின்றார்கள்.
உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா எழுந்து, நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பகீஃ
வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு
முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள்.

மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக
சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு
உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.

உடனே ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நடந்த நிகழ்வைக்
கூறுகின்றார்கள். ”பகீஃலிக்கு சென்று பாவமன்னிப்பு
தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து
என்னிடம் கூறினார்கள்.

அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய்
என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்” என்று
தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது
மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள்.
(ஹதீஸின் சுருக்கம்) (நூல் : முஸ்லிம் 1619)

இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும்
எழுப்பவில்லை. அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ
”பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி” என்று பதிகம் பாடிக்
கொண்டிருக்கின்றார்கள். தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட
வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ்
உணர்த்துகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது
அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர்
ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக்கொண்டிருந்தால்என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால்
அவர்களும் படுத்துவிடுவார்கள்.

(அறிவிப்பவர் : ஆயிஷா
ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1119)

மனைவியின் ரசனைக்கு மதிப்பளியுங்கள் ஒரு
பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து
விளையாடினார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள்தாமாகவோ அல்லது நான்
கேட்டுக்கொண்டதற்காகவோ, ”நீபார்க்கஆசைப்படுகின்றாயா?”
என்று கேட்டார்கள்.நான் ஆம் என்றேன்.அவர்கள் என்னைத்
தமக்குப் பின்புறமாகஎன் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறுநிற்க வைத்தனர்.
(பிறகுஅவர்களைநோக்கி)”அர்பிதாவின்
மக்களே! விளையாட்டைத்தொடருங்கள்” என்றுகூறினார்கள். நான்பார்த்துச் சலித்த போது, ”உனக்குப் போதுமா?” என்று
கேட்டார்கள். நான் ஆம் என்றேன்.”அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.(அறிவிப்பவர் :ஆயிஷா ரளியல்லாஹு
அன்ஹா, நூல் : புகாரி950)

ஏகஇறைவனின் திருப்பெயரால்….
வீண் விரயம் செய்யாதீர்கள்.
படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒரிலவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான்.
அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப் போதுமான அளவு உண்டுப் புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்றன.
மனிதர்களாகிய நாமும் இறைவன் நமக்கு அளித்த பொருள் வளத்திலிருந்து போதுமான அளவு உண்டுப் புசித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் ஸகாத் எனும் ஏழை நிதியை பொருளீட்ட முடியாத வறிய நிலையிலுள்ளோருக்கு மனமுவந்து வழங்குவதுடன் எஞ்சி இருக்கும் பொருளாதாராத்தை வீண் விரயம் செய்யக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.
தேவைக்கு மீறி சமைப்பதும், மிஞ்சுவதைக் கொட்டுவதும்.
மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்கு சுவையானத் தீணிப் போடுவது வரை எல்லா நிலைகளிலும் எல்லை இல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச் செய்வது ஷைத்தானின் வேலையாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். திருக்குர்ஆன் 4:36
உள்ளத்திற்கு கடிவாளமிட்டு எந்த தேவைக்கும் குறிப்பிட்ட அளவை நிர்ணயித்தக் கொண்டு போதுமென்ற சிந்தனையை யார் உருவாக்கிக் கொள்வாரோ அவரே இறைவனின் திருப்பொருத்தத்திற்கு உகந்த அடியாராவார் இறைவனின் அடியானின் பக்கம் ஷைத்தான் நெருங்க மாட்டான். …உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்” என்று கூறினான். திருக்குர்ஆன் 15:40
இன்றுப் பார்க்கின்றோம்.
எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.
யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறு
வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் கொட்டுவது என்பது வேறு.
இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் ( முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீமல்லாதோராக இருந்தாலும் ) சிறிதை சேர்த்து சமைக்கச் சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம். அபூதர்ரே ! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.
அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி (ஸல்)அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள் ஆதார நூல்: திர்மிதீ
உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதி சமையலறையிலேயே சிறிதை பக்கத்து வீட்டாருக்காக ஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப் போய் கைகளால் புறட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய் விடுகிறது.
விருந்துகளிலும் இதே நிலை.
ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானி உணவில் இறைச்சி இட்டு சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக சேர்த்து கொள்வார்கள்.
அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றம் அடைந்து முட்டை சேர்க்கப்பட்டது,
இன்று அதுவும் முன்னேற்றம் அடைந்து அவைகளுடன் சிக்கன் ஃப்ரை, அல்லது சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் சேர்க்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் அதனுடன் காடை, கொக்கு ஃப்ரை ஐட்டங்களும் சேர்க்கப்படலாம்.
பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவதால் வெரைட்டிகளை அதிகப்படுத்துகின்றனர் விருந்தினர் அதிலொன்றும், இதிலொன்றுமாக கை வைத்து விட்டு அப்படியே விட்டு விடுகின்றனர் அவைகளும் பெருமளவில் குப்பைகளுக்கே செல்கின்றன.
இஸ்லாம் தடை செய்கிறது.
இவ்வாறு செய்வதை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது எந்தளவுக்கென்றால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறுத் துண்டு உணவைக் கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச் சொல்கிறது இஸ்லாம் …உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம் என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அறிவுருத்தினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி.
ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில் தட்டை, தட்டையாக கொண்டுப் போய் குப்பையில் தட்டலாமா ? சிந்தித்தால் சீர் பெறலாம்
விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய இஸ்லாம் வலியுருத்துவதுடன் ஏழைகள் அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது இஸ்லாம். வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைi(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்
ஏழைகள் என்பவர்கள் எங்கிருந்தோ தேடிக் கண்டுப் பிடித்து அழைத்து வரப்படுபவர்கள் அல்ல மாறாக ஒவ்வொரு பணக்காரர்களின் குடும்பத்திலும் ஏழைகள் இருக்கின்றனர் அவர்களும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதிகபட்சம் உணவுகள் குப்பைக்குப் போகாது.
ஆனால் விருந்துகளில் கலந்து கொள்ள வரும் பிரபலங்கள் இந்த ஏழைகளைக் கண்டால் முகம் சுளிக்கலாம் என்றுக் கருதியேப் பெரும்பாலும் இரத்த உறவுகளாகிய ஏழைகள் அழைப்பதில்ல. அழைத்தாலும் இவர்களுடன் அல்லாமல் வேரொறு ஹாலுக்கு அனுப்பப்படுவார்கள் அதனால் அவர்களது உணவுகளை குப்பையில் கொட்ட வைத்து அல்லாஹ் அவர்களை ஷைத்தானின் தோழர்களாக்கி விடுகின்றான்.
அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!

திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.

திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.

”நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்” என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً
”நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.
அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்” (அல்குர்ஆன் 4:19)

இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.

திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.

இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் – மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன?

அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். ‘நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்’ என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.

எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.

”இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.

பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

”பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது – அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.

இதுபோல் தான், பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.

இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.

இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல உள்ளன. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான்.

மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்…
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…
· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது…
· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது…
· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது …இப்படியே பல காரணங்கள் உள்ளன.
ஒருவன் நம்மைப் பார்த்து “கழுதை” என்று திட்டும்போது நாம் “குரங்கு” என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.
ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.
கோபம் தன்னையே அழித்து விடும்
மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து – பாராட்டி – உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.
ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்…
· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)
· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.
· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.
· மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.
· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது….கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.
· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.
· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.
· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்
7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.
10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.

டாக்டர்களுடன் ஒரு சாட்டிங்
தமிழக அரசின் குடும்ப நலத்துறை இணைய தளம் மூலம் நமக்குத் தேவையான துறை
சார்ந்த மருத்துவ நிபுணருடன் இணையம் வழி சாட் செய்து ஆலோசனைகள் பெறலாம்.
முகவரி இதோ http://www.tnhealth.org/chat.htm
இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும் ,இரத்தம் அவசரமாக
தேவைப்படுவோர்களும் இந்த அருமையான தளத்தை பயன் படுத்தலாம். Indian Blood
Donors.com
SMS மூலம் இரத்தம் பெறலாம்
இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள்
செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலை பேசியிலிருந்து “BLOOD”
டைப் செய்து 96000 97000 என்ற
எண்ணுக்கு அனுப்பவும்.
உதாரணமாக “BLOOD B+” .
உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.

WARNING……..CFL LIGHT BULB .. urgent

From China with love? 😦
…….CFL LIGHT BULB

Below is a picture of a CFL light bulb from my bathroom. I turned it on the other day and then smelled smoke after a few minutes. Four inch flames were spewing out of the side of the ballast like a blow torch! I immediately turned off the lights. But I’m sure it would have caused a fire if I was not right there. Imagine if the kids had left the lights on as usual when they were not in the room.

I took the bulb to the Fire Department to report the incident. The Fireman wasn’t at all surprised and said that it was not an uncommon occurrence. Apparently, sometimes when the bulb burns out there is a chance that the ballast can start a fire. He told me that the Fire Marshall had issued reports about the dangers of these bulbs.

Upon doing some Internet research, it seems that bulbs made by Globe in China seem to have the lions share of problems. Lots of fires have been blamed on misuse of CFL bulbs, like using them in recessed lighting, pot lights, dimmers or in track lighting. Mine was installed in a normal light socket.

I bought these at Wal-Mart. I will be removing all the Globe bulbs from my house. CFL bulbs are a great energy saver but make sure you buy a name brand like Sylvania , Phillips or GE and not the ones from China .

PASS THIS ON TO YOUR FRIENDS………….

“ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியல்ல; வெறும் 22 ஆயிரம் கோடி ரூபாய்தான் ” அருண் ஷோரி

நீதியரசர் சிவராஜ் பாட்டீல்
2ஜி அலைக்கற்றை முறைகேடு குறித்து 2003ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்திட நீதியரசர் சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட அறிவிப்பு வந்தாலும் வந்தது பா.ஜ.க., வட்டாரத்தின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டது.
அவருடைய அறிக்கை வெளியாயிற்று. இந்தக் கால கட்டத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகப் பதவியில் இருந்தவர்கள் தவறான முடிவு எடுத்துச் செயல்பட்டுள்ளனர் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
தன்னுடைய வேடம் அம்பலமாகி விட்டதே என்ற ஆத்திரத்தில் திரு அருண்ஷோரி படபடக்கிறார்; பதை பதைக்கிறார்.

நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அறிக்கையே தவறானது – உண்மையைத் திரித்துக் கூறுகிறது – மத்திய அரசைக் காப்பாற்றும் தன்மையில் அமைந்துள்ளது என்று குற்றப் பத்திரிகைப் படிக்கிறார்.

அருண்ஷோரி

அது என்ன தணிக்கைத் துறை அறிக்கை என்றால் அசல் நெய்யில் பொரித்தது; சிவராஜ்பாட்டீல் ஆணையத்தின் கருத்து என்றால் கலப்பட எண்ணெய்யில் பொரித்ததா?
தங்களுக்கு சாதகமாக இருந்தால், அரசியலில் துருப்புச் சீட்டாகப் பயன்பட்டால் அது சரியானது; தங்களுக்குப் பாதகமாக இருந்தால் அது தவறுடையது என்று கூறும் ஒரு மட்டக் கோலைத் தயாராக வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ!

பா.ஜ.க., ஆட்சிக் காலத்தில் 2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன?

யூகத்தின் – அனுமானத்தின் அடிப்படையில் அல்லாமல், இழப்பு என்ற கண்ணோட்டத்தையும் கடந்து உண்மையிலே ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்றெல்லாம் ஆதாரப் பூர்வமாகத் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

1999ஆம் ஆண்டு வாஜ்பேயி தலைமையில் அமைந்த அரசில்தான் இந்தப் பிரச்சினைக்காக கால்கோள் விழா நடத்தப்பட்டது. புதிய தேசியக் கொள்கையை இந்தத் துறையில் வகுத்தது வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தானே – இல்லை என்று மறுக்க முடியுமா?

பல தனியார் நிறுவனங்கள் வாஜ்பேயி காலத்தில் பெரும்பலன் பெற்றனர். அந்த நிறுவனங்கள் சிலரோடு பிரதமர் வாஜ்பேயின் வளர்ப்பு மகளின் கணவனுக்குத் தொடர்பு இருந்தது என்ற உண்மை அப்பொழுது வெளிப்படவில்லையா!

நிராராடியா
நிராராடியாவின் டேப் விவகாரத்தில் அந்தப் பெயர் இடம் பெற்றுள்ளதே – அதைப்பற்றி ஏன் வாயைத் திறப்ப தில்லை? உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப் பனத்தி கதையாக பா.ஜ.க. வட்டாரம் விழி பிதுங்குகிறதே!

தனியார் நிறுவனங்கள் நட்டப்பட்டன என்று கூறி அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் முதல் கட்டமாகத் தள்ளுபடி செய்யப்பட்டதா – இல்லையா?

ஆ. இராசா அவர்கள்மீது இவர்கள் கூறும் குற்றச் சாற்று என்பது அனுமானத்தின் அடிப்படையிலானது. ஆனால் வாஜ்பேயி காலத்தில் நடைபெற்றதோ – அரசுக்கு வர வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதாகும்.

பா.ஜ.க., ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. சோலை அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று நக்கீரன் இதழில் (2011 சனவரி (1-4) விரிவாக வெளிவந்ததே!

அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சர் ஜக்மோகன் கண்டிப்பானவர். தனியார்துறை முதலாளிகளுக்கு ஆதரவாக லைசென்சு வழங்கும் முறையில் திருத்தங்கள் செய்யப்பட்டதை அவர் எதிர்த்தார். தொலைத் தொடர்புத் துறை லாபத்தில் இயங்க என்ன செய்யவேண்டும் என்று அவர் வாஜ்பேய்க்கு ஒரு பட்டியலையே அளித்தார். தனியார்த்துறை தொழில் அதிபர்களுக்குக் கடிவாளம் போடவில்லையென்றால், அவர்கள் செல்வம் கொழிக்கும் இந்தத் துறையையே சீரழித்து விடுவார்கள் என்றார்.

சுனில்மிட்டல்
ஆனால் ஏர்செல் கம்பெனி நிறுவனர் சுனில்மிட்டல் என்ன சொன்னார் தெரியுமா? இன்னும் சில மணி நேரங்களில் ஜக்மோகன் தூக்கி அடிக்கப்படுவார் என்றார். வருவாயைப் பெருக்க ஜக்மோகன் தந்த குறிப்பு கள் குப்பைக் கூடைக்குப் போயின. சுனில்மிட்டல் சொன்ன படி ஜக்மோகன் வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார்.

அப்போதுதான் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றது. ஊழல் என்றால் வருமானத்தில் இழப்பு அல்ல. உண்மையிலேயே தனியார் துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றது.

ஊழல் என்றால் வருமானத்தில் இழப்பு அல்ல. உண்மையிலேயே தனியார் துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. அந்த ஊழலைத்தான் மத்திய அமைச்சர் கபில்சிபல் அம்பலப்படுத்தினார் என்று மூத்த பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு அவர்கள் தரப்பிலிருந்து மறுப்பு வரவில்லையே – ஏன்?

நீதியரசர் சிவராஜ்பாட்டீல் அறிக்கை வெளிவந்ததும் வராததுமாகத் தாண்டிக் குதிக்கும் திருவாளர் அருண்ஷோரி சென்னைக்கு வந்தபோது என்ன கூறினார்? ஆ. இராசாவால் ஏற்பட்ட இழப்பு என்பது ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியல்ல; வெறும் 22 ஆயிரம் கோடி ரூபாய்தான் – தவறாகச் சொல்லாதீர்கள் என்று சொன்னாரா – இல்லையா?

வாஜ்பேயி காலத்தில் மிகவும் வெளிப்படையாக தனியார் துறைகளிலிருந்து அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய ரூபாய் 50 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டதைக் கணக்கில் கொண்டால், ஆ. இராசா காலத்தில் ஏற்பட்ட இழப்பு மிக மிகச் சாதாரணமானதாகும்.

அதே நேரத்தில் இந்த இழப்பு என்பதுகூட பொது மக்களுக்குக் குறைந்த செலவில் தொலைப்பேசி வசதி கிடைத்த இலாபத்தோடு இணைத்துப் பார்த்தால் அவ்வாறு கூறுவதுகூடத் தவறானதாகும்.

இவர்கள் துடியாய்த் துடிப்பதிலிருந்தே நீதியரசர் சிவராஜ் பாட்டில் ஆணையத்தின் அறிக்கை பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்திருக்கிறது. அது பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழிக்கும் என்று தெரிகிறது.

விடுதலை தலையங்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – ஒரு அவசர வேண்டுகோள்!
பொதுநலன் கருதி வெளியிடப்படுகின்றது…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

இன்று முதல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சரியான விவரங்களை வழங்குமாறு அனைவரையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம்களை பொருத்தவரை மதம் என்னவென்ற கேள்விக்கு முஸ்லிம் என்றே பதிலளித்து பதிவுச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதங்கள் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்று குறிப்பிடப்படாமல் முஸ்லிம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்த தவறாகும். இது குறித்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் புகார் தெரிவித்தும் இது சரி செய்யப்படவில்லை. தற்போது நீதிமன்றம் சென்று முறையிடுவதற்கும் கால அவகாசம் இல்லை.

எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாம் என்று குறிப்பிட்டால் அது முஸ்லிம் என்ற கணக்கில் சேர்க்கப்படாமல் இதர மதத்தினர் பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளது.
எனவே கவனமாக மதம் என்ற கேள்விக்கு முஸ்லிம் என்ற பதிலை மட்டும் அளிக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேன்.

இது பற்றிய விழிப்புணர்வை துண்டு பிரசுரங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள், பள்ளிவாசல் அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டு்க் கொள்கிறேன்.
கண்ணியத்திற்குரிய இமாம்கள் இது குறித்து ஜுமஆவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்

Post Navigation

%d bloggers like this: