Karim74's Weblog

my articles

Archive for the month “September, 2009”

adlof hilter

அடால்ஃப் ஹிட்லர் (1889-1945)

இந்த நூலில் வேண்டா வெறுப்புடன்தான் அடால்ஃப் ஹிட்லரைச் சேர்த்தேன் என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். அவருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு விளைவிப்பதாகவே இருந்தது. சுமார் 3.5 கோடி மக்களுக்கு மரணத்தை விளைவித்தவர் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ள ஹிட்லரைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. எனினும், மிகப் பெருமளவு எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஹிட்லர் ஏற்படுத்தினார் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது.

ஆஸ்திரியாவிலுள்ள பிரானாவ் என்ற நகரில் 1889 ஆம் ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இளமையில் ஓர் ஓவியராக முயன்று தோல்வி கண்டார். இந்த இளமைப் பருவத்தில் தான் எப்போதோ இவர் ஒரு தீவிர ஜெர்மன் தேசியவாதியாக மாறினார். முதல் உலகப் போரின்போது இவர் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றி காயமடைந்து, இருமுறை வீரச் செயலுக்கான விருதுகளைப் பெற்றார்.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது கண்டு ஹிட்லர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். 1819 ஆம் ஆண்டில், தமது 30 ஆம் வயதில், முனீக்கில் ஒரு குட்டி வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சி தனது பெயரை விரைவிலேயே “தேசியச் சமதரும் ஜெர்மன் தொழிலாளர் கட்சி” (National Socialist German Worker’s Party) என்று மாற்றிக் கொண்டது. இக்கட்சியைச் சுருக்கமாக “நாஜிக் கட்சி” என்று அழைத்தனர். இரண்டு ஆண்டுகளில் ஹிட்லர் இக்கட்சியின் எதிர்ப்பில்லாத தலைவர் (Fuehrer) ஆனார்.

ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி மிக விரைவாக வலுவடைந்தது. 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இக்கட்சி அரசைக் கவிழ்க்க முயன்றது. இந்த முயற்சியை “முநீனக் பீர் மண்டபப் புரட்சி” (Munich Beer Hall Putsch) என்று அழைப்பர். ஆனால், இப்புரட்சி தோல்வியடைந்தது. ஹிட்லர் கைது செய்யப்பட்டு, அரசுத் துரோகக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டார். எனினும், ஓராண்டுச் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு ஹிட்லர் விடுதலையானார்.

1928 ஆம் ஆண்டில் நாஜிக் கட்சி இன்னும் ஒரு சிறிய கட்சியாகவே இருந்தது. அப்போது ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஜெர்மனியிலிருந்து அரசியல் கட்சிகளிடம் மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்தது. அதே சமயம் நாஜிக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்தது. 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஹிட்லர் தமது 44 வது வயதில் ஜெர்மனியில் தலைமை அமைச்சர் (Chancellor) ஆனார்.

ஹிட்லர் தலைமை அமைச்சரான பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி எதிர்காட்சிகள் அனைத்தையும் ஒழித்துகூ கட்டிவிட்டு, விரைவிலேயே ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். குடியியல் உரிமைகளுக்கு, தற்காப்பு உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு இந்த சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டதாகக் கருதிவிடலாகாது. குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவது மிகத் துரிதமாக நடைபெற்றது. விசாரணைகள் நடத்துவது குறித்து நாஜிகள் கவலைப் படவே இல்லை. பெரும்பாலான அரசியல் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அல்லது படுகொலை செய்யப்பட்டனர். அப்படியிருந்தும் இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்தார். பொருளாதார மீட்சிக்கும் ஓரளவு வழி வகுத்தார். இதனால், பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர்.

ஹிட்லர் இதன் பின்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக இருந்த படையெடுப்புகளில் இறங்கினார். சில நிலப்பகுதிகள் போரிடாமலே அவருக்குக் கிடைத்தன. இங்கிலாந்தும், ஃபிரான்சும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. அவை யாருடனும் போரிடும் மனப்போக்கில் இல்லை. வர்சேல்ஸ் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் ஜெர்மன் இராணுவத்தைப் பெருக்கியபோதும், அவருடைய படைகள் ரைன்லாந்தைக் கைப்பற்றி (1936 மார்ச்) அதை வலுப்படுத்தியபோதுமூ, ஆஸ்திரியாவை அவர் வல்லந்தமாகத் தன் வசப்படுத்திக் கொண்டபோதும் (1938 மார்ச்) இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் அதைக் கண்டு கொள்ளாமலிந்தன. அரண்காப்பு செய்யப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் எல்லைப் பகுதியாகிய சூடட்டன்லாந்தை ஹிட்லர் இணைத்துக் கொண்ட போது கூட (1938 செப்டம்பர்) இந்த நாடுகள் அந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஹிட்லருடன் சமரசம் செய்து கொள்வதற்காக பிரிட்டனும், ஃபிரான்சும் “முனீக் ஒப்பந்தம்” என்ற பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின்படி, சூடட்டன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டதை இவ்விருநாடுகள் ஏற்றுக் கொண்டன. செக்கோல்லா வாக்கிய செயலற்று நின்றது. இந்த உடன்படிக்கை கையெழுத்தான சில மாதங்களுக்குப் பிறகு செக்கோஸ்லாவாக்கியாவின் மற்ற பகுதி முழுவதையும் ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டார். ஒவ்வொரு கட்டத்திலும் ஹிட்லர் மிகத் தந்திரமான வாதங்களைக் கூறினார். தம்முடைய நடவடிக்கைகளுக்குத் தடங்கல் விளைவிப்பவர்களுடன் போரிடப் போவதாக மிரட்டினார். ஒவ்வொரு கட்டத்திலுமூ அவருடைய மிரட்டல்களுக்கு மேலைநாட்டு மக்களாட்சிகள் கோழைத்தனமாக அடிபணிந்தன.

எனினும் போலந்து நாடு ஹிட்லரின் அடுத்தத் தாக்குதலுக்கு இலக்கானபோது, இங்கிலாந்தும், ஃபிரான்சும் போலந்தைப் பாதுகாக்க உறுதி பூண்டன. ஹிட்லர் முதலில் ரஷியச் சர்வாதிகாரி ஸ்டாலினுடன் ஓர் “ஆக்கிரமிப்பு தவிர்ப்பு” ஒப்பந்தம் செய்து கொண்டார். (உண்மையில் இது ஓர் ஆக்கிரமிப்புக் கூட்டணி ஒப்பந்தமேயாகும். இந்த ஒப்பந்தப்படி, போலந்து நாட்டைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள இரு சசர்வாதிகாரிகளும் இரகசிய உடன்பாடு செய்து கொண்டனர்) இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹிட்லர் முதலில் தமக்கு தற்காப்புத் தேடிக் கொண்டார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு போலந்தை ஹிட்லர் தாக்கினார்.

அதற்கு 16 நாட்களுக்குப் பின்பு சோவியத் ரஷியாவும் போலந்து மீது படையெடுத்தது- ஜெர்மனி மீது இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் போர்ப் பிரகடனம் செய்த போதிலும், போலந்து விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டது.

ஹிட்லருக்குப் பெருதூத வெற்றிகள் கிடைத்து 1940 ஆம் ஆண்டில் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹிட்லரின் இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் விழுங்கியது. மே மாதத்தில், ஹாலந்து, பெல்ஜியம், வக்சம்பர்க் ஆகிய நாடுகள் அதன் வசமாயின. ஜூன் மாதத்தில் ஃபிரான்ஸ் சமரசம் செய்து கொண்டு சரணடைந்தது- அதே ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் மீது ஜெர்மனி தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களைத் தொகுத்தது. “பிரிட்டன் சண்டை” (Battle of Britain) எனப் பெயர் பெற்ற இந்தப் போரைப் பிரிட்டன் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துபூ சமாளித்தது. அதன் பின் இங்கிலாந்து மீது ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுக்க ஹிட்லர் இயலாமலே போயிற்று.

1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிரீசையும் யூகோஸ்லாவியாவையும் ஹிட்லரின் படைகள் வெற்றி கொண்டன. ரஷியாவுடன் செய்து கொண்ட “ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ” ஒப்பந்தத்தை ஹிட்லர் கிழித்தெறிந்து விட்டு ரஷியாவையும் தாக்கினார். சோவியத் ரஷியாவின் பெருமளவுப் பகுதியை ஹிட்லரின் இராணுவம் கைப்பற்றியது. ஆனால், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் ரஷியப் படைகளை முற்றிலுமாகத் தோற்கடிக்க ஹிட்லரின் இராணுவத்தால் முடியவில்லை. ஹிட்லர் இப்போது இங்கிலாந்து, ரஷியா ஆகிய இரு நாடுகளுடன் ஒரே சமயத்தில் போர் புரிந்து கொண்டே 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான “முத்துத் துறைமுகம்” (Peart Harbour) என்னும் கடற்படைத் தளத்தை ஜப்பானியர் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க மீது போர்ப் பிரகடனம் செய்தார்.

1942 ஆம் ஆண்டு மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெருமளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆஃப்ரிக்கா முழுவதிலுமூ அது ஆட்சி செலுத்தியது. 1942 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் நடந்த எல் அலமைன் போரிலும், ரஷியாவில் ஸ்டாலின் கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. —4ர்மனிக்கு ஏற்பட்ட தோல்விகள், உலகப் போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தன. இத்தோல்விகளுக்குப் பிறகு ஜெர்மன் இராணுவத்தின் வெற்றி வாய்ப்புக்கள் படிப்படியாகச் சரியலாயின. ஜெர்மனியின் இறுதித் தோல்வி உறுதியாயிற்று. எனினும், ஹிட்லர் சரணடையத் தயாராக இல்லை. ஸ்டாலின்கிராடுத் தோல்விக்குப் பறிகு ஜெர்மன் படைகளுக்குப் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்ட போதிலும், மேலும் ஈராண்டுகள் ஜெர்மனி தொடர்நத் சண்டையை நீடித்தது. 1945 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கசப்பான முடிவு ஏற்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று பெர்லினின் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஏழு நாட்களுக்குப் பிறகு, ஜெர்மனி சரணடைந்தது.

ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்து கொண்டார். உலகிலுள்ள யூதர் ஒவ்வொருவரையும் கொல்வதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது ஆட்சியின்போது, பெரிய நச்சுவாயு அறைகளைக் கொண்ட ஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூட ஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்த நச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டு உந்துகளில் அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளிலேயே இந்த முறையில் 60,00,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஹிட்லர் பலி வாங்கியது யூதர்களை மட்டுமன்று, அவரது ஆட்சிக் காலத்தின்போது கண்க்கற்ற ரஷியர்களும், நாடோடிகளும்கூடப் படுகொலை செய்யப் பட்டனர். இவர்கள் தவிர தாழ்ந்த இனத்தவர் என்றோ, அரசுக்கு எதிரிகள் என்றோ கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் வெறும் ஆத்திர உணர்ச்சியாலோ, போரில் ஏற்பட்ட மனக் குமுறலினாலோ செய்யப்பட்டவை என எண்ணிவிடலாகாது. ஹிட்லரின் மரணமுகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று, கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. கொலை செய்யப்படுபவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிருணயிக்கப்பட்டன. கொலையுண்டவர்களின் உடல்கள் சோதனையிடப்பட்டு அவற்றின் தங்கப்பற்களும், திருமண மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டன. பலியானவர்களில் பலருடைய உடல்கள் சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் படுகொலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஹிட்லர் எத்துணை தீவிரம் காட்டினார் என்பதற்கு ஒரு சான்று கூறலாம். போரின் இறுதி நாட்களில் ஜெர்மனியில் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கும், இராணுவத்தின் பயன் பாட்டுக்கும் எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும், மரண முகாம்களுக்கு ஆட்களை மாட்டு உந்துகளில் கொண்டு செல்வது தடங்கலின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஹிட்லர் ஆணையிட்டிருந்தார்.

பல காரணங்களுக்காக, ஹிட்லரின் புகழ் நீடிக்கும் எனத் தோன்றுகிறது. முதலாவதாக, உலக வரலாற்றிலே மிகக் கொடிய மனிதராக ஹிட்லர் கருதப்படுகிறார். ஹிட்லரின் கொடுஞ்செயல்களுடன் ஒப்பிடும்போது, ரோமப் பேரரசன் நீரோ, ரலிகுலா போன்ற கொடியவர்களின் கொடுமை மிக அற்பமானதேயாகும். எனினும், அவர்கள் கொடுமையல் சின்னங்களாக 20 நூற்றாண்டுகளாக நினைவு கூறப்படுகிறார்கள். அப்படியானால், உலக வரலாற்றில் மகாக் கொடியவனாக ஒருமனதாக் கருதப்படும் ஹிட்லர் மேலும் பலப்பல நூற்றாண்டுகள்

super singers juniors – the truth behind

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !

அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார். ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’ எனத் தன் மழலைக் குரலில் பாடத் தொடங்கியது அது.

மேடையில் வைத்து இன்னுமொரு குழந்தையிடம் தொகுப்பாளினி கேட்கிறார்.
‘ நீங்க கண்டிப்பா செலக்ட் ஆகிடுவீங்களா?’
‘ஆமாம். ஆவேன். கண்டிப்பாக’
‘அப்படி ஒரு வேளை ஆகலைன்னா நடுவர்களை என்ன செய்வீங்க?’
‘ஆவேன்’ எனக் கோபமாகவும் உறுதியாகவும் சொல்கிறது அந்தக் குழந்தை. அதைத் தொடர்ந்த தொகுப்பாளினியின் சமாதானப் பேச்சில் சிரிக்கிறது குழந்தை. அதுதான் குழந்தை. குழந்தைகள்.

இன்னுமொரு பெண்குழந்தை, தனக்குத் தரப்பட்ட வாய்ப்பில் சரியாகப் பாடவில்லை. அவர் அடுத்த சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லையென நடுவர் சொன்னதும் உதடுகள் பிதுக்கிக் கண்ணீர் வழிய அழத் தொடங்குகிறது. நடுவருக்குத் தாங்க முடியவில்லை. ‘இன்னுமொரு வாய்ப்புத் தருகிறேன். அழாமல் பாடிக் காட்டுகிறாயா?’ எனக் கேட்டு, அந்தக் குழந்தையைச் சிரிக்கச் செய்து திரும்ப பாடவைக்கிறார். அதுவும் பாதிப் பாட்டில் மீளவும் அழத் தொடங்குகிறது. நடுவர் அவரை அழைத்து, ‘அழாதே’ என அன்பாகச் சொல்லச் சொல்லக் கண்ணீர் வழிகிறது குழந்தைக்கு. ‘அழக் கூடாது. வெளியேயும் போய் அழக் கூடாது. அம்மாப்பாக்கிட்டப் போய் அழக் கூடாது’ என்ற நடுவரின் குரலுக்குச் சரியெனச் சொல்லிவிட்டு வந்த குழந்தை திரும்ப வாசலில் வந்து அழுகிறது. நடுவரும், இன்னுமொரு பெண்ணும் வந்து சமாதானப்படுத்துகிறார்கள்.

இன்னும் இரட்டைக்குழந்தைகள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாகப் பாட வருகின்றனர். முதல் குழந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. இரண்டாவது தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒரே மாதிரி இருக்கும் இருவரும் இரட்டையர்கள் என்பது நடுவருக்கு பின்னர்தான் புரிகிறது. இருவரில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்படக் கூடாது என இறுதியில் இருவரையுமே தேர்வு செய்துவிடுகிறார் நடுவர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என் நேரத்தைத் திருடுவது குறைவு. நேரம் கிடைக்கும்போது குழந்தைகளின், சிறுவர்களின் நிகழ்ச்சிகளை மட்டும் விரும்பிப் பார்ப்பேன். அப்படித்தான் நேற்று விஜய் டீவியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்’ போட்டிக்கான தேர்வு நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அதிலிருந்த சில அபத்தக் காட்சிகள் சில தான் நான் மேற்சொன்னவை.

தேர்வு நடக்கும் முன்பு தொகுப்பாளினி ஒரு வண்டியில், குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கே போய் அவர்களை அழைத்துக் கொண்டு எல்லோருடனும் வெகு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் தேர்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார். அது விஜய் தொலைக்காட்சியின் விளம்பர யுக்தியாக இருக்கும். எனினும் போட்டிக்காக உற்சாகத்துடன் கூக்குரலிட்டபடியும், பாடியபடியும் தொகுப்பாளினியுடன் வரும் குழந்தைகள் அப் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி வாடிப்போவார்களென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் உணரவேயில்லையா? வீட்டுக்கு வந்து எல்லாக் குழந்தைகளோடும் சேர்த்து அழைத்துப் போகும்போது இருக்கும் மகிழ்ச்சி, தேர்வில் தோற்றுத் தனது பெற்றோருடன் திரும்பத் தனியே வரும்போது கண்ணீராக மாறியிருக்கும்.

போட்டித்தேர்வில் தோற்று அழுத அந்தப் பெண்குழந்தைக்கு அருகில் போய் முகத்தை சமீபமாக பதிவு செய்து உலகம் முழுக்கக் காட்டியாயிற்று. இந்தச் சாதாரண தோல்வியையே தாங்கிக் கொள்ளமுடியாத குழந்தை , நாளை அதன் வகுப்பறையில் ‘டீவியில் அழுதவள்’ எனக் கேலி, கிண்டலுக்காளாக்கப்படும்போது எந்தளவுக்கு மனம் உடைந்து போகும்? இன்னும் அந்தத் தாங்கமுடியாத வடு அதன் மனதில் முழு வாழ்நாளுக்கும் நீடித்திருக்கும். தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு மனதுக்குள் ஒளிந்திருக்கும். இன்னும் ஏதேனும் போட்டிகளில் கலந்துகொள்ள முனையும்போது ஒரு பெரும் சுவர் போல இந்த வடு கண்முன்னே வந்து நிற்கும். எதற்காக அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன? அவசியமென்ன?

‘இத் தேர்வில் இவர் தோற்றுவிட்டார். தோற்று விம்மி விம்மி அழுதார்’ என உலகுக்கே பிரசித்தப்படுத்தத் தேவையில்லையே. நீங்கள் நடத்திய போட்டியில் கலந்துகொள்ள அந்தக் குழந்தை வந்தது. கலந்துகொண்டது. தேர்ந்தெடுக்கப்படவில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குமவமறியாக் குழந்தை அழுதது. அது குழந்தை. அழத்தான் செய்யும். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர்களே, இயக்குனர்களே.. நீங்கள் குழந்தைகள் அல்லவே? அந்த அழுகையின் நிகழ்வைக் காட்சிப்படுத்தி எல்லோருக்கும் ஒளிபரப்பிக் காட்டவேண்டியதன் அவசியம் என்ன? அதனால் நீங்கள் எதிர்பார்த்தது என்ன? ஏதோ குற்றவாளியைக் காட்டுவது போல அதன் முகத்துக்கு அருகாமையில் கேமராவை வைத்தும், அதன் அழுகையையும் ஒவ்வொரு அசைவையும் மெதுவான இயக்கத்தில் (ஸ்லோமோஷன்) படம்பிடித்தும், பிண்ணனிக் குரலொன்று அது பற்றி விபரித்தும் காட்டச் செய்ததால் உங்களுக்குக் கிடைத்தது என்ன? ஏன் இந்த மனவிகாரம் உங்களுக்கு ?

போட்டிகள் நடத்தலாம். சிறுவர்களை ஊக்குவிக்க அவை அவசியம்தான். ஆனால் அதன் வயதெல்லையை பத்திலிருந்து பதினான்கு என்பது போல அதிகரித்திருக்கலாம். தற்பொழுது பத்தாம் வகுப்புத் தேர்வையே மாணவர்களுக்குச் சுமையெனக் கருதி, அது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது இது போன்ற போட்டிகள் சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு அவசியமா? இந்தப் போட்டிக்கான வயதெல்லை ஆறு முதல் பதினான்கு என்கிறார்கள். பத்துவயதுக்குக் குறைந்த பல குழந்தைகளுக்கு ‘போட்டி ஏன்? எதற்காக நடத்தப்படுகிறது? இதில் வென்றால் என்ன பரிசு கிடைக்கும்?’ போன்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் சொல்லக் கூடத் தெரிந்திருக்காது. பெற்றோரின் தூண்டுதலால் ஒரு விளையாட்டுக்குச் செல்வதைப் போல பாடவந்திருக்கக் கூடும். முதல் தோல்வி முற்றும் தோல்வியல்ல எனப் பக்குவமாக உணரும் பருவம், சின்னஞ் சிறு குழந்தைகளுக்கானதல்ல. பிரபலமான முதல் தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

குழந்தைகள் எப்பொழுதும் தேடல்மிக்கவர்கள். தங்களது ஒவ்வொரு கணப்பொழுதிலும் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டவர்கள் அவர்கள். அக் கணங்களில் மனதில் பதிபவற்றைக் கொண்டே அவர்களது வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. குழந்தைகளை வேலைக்கமர்த்திப் பணம் சம்பாதிப்பது எப்படிக் குற்றமோ, அது போலவே தானே அவர்களை வைத்து நீங்கள் பணம் சம்பாதிப்பதுவும்? குழந்தைகள் வெகு இயல்பாக ‘வாடா மாப்பிளே.. வாழப்பழத் தோப்புல..வாலிபால் ஆடலாமா’ எனப் பாடுவதுவும், உங்கள் விளம்பர யுத்திகளும், குழந்தைகளுக்கான அபத்தப் போட்டிகளும் உங்கள் பணப்பெட்டியை நிரப்பக் கூடும். எனினும் குழந்தைகளின் வாழ்வின் வேரில் விஷத்தினைப் பாய்ச்சுவதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

– எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி – உயிர்மை

self respect is

இடிச்சத்தம் ஏதுமில்லாமல் பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை தரக்கூடியது தங்கள் பிள்ளைகளின் காதல். வகைவகையான காதல் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை வீணடிக்கிறது. பருவ வயதில் தோன்றும் மின்சாரக் காதல், நரம்பு நுனிகளில் வெடித்து மலரும் உணர்ச்சிக் காதல், விழித்துக் கொண்டே கனவு காண்கிற கற்பனைக் காதல், தனக் குள்ளேயே பேசிக்கொள்கிற பைத்தியக் காதல், இணையதளத்தில் சிக்கிய இமெயில் காதல், பேசிப் பேசியே கழிக்கிற செல்போன் காதல்’ என்று காதலில் பல ரகம்.

எது காதல் என்று தெரியாமலேயே அதன் மாய வலைக்குள் இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஒரு சில திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இளைஞர்களை திசை மாறிப் போகச் செய்கின்றன. சினிமா நாயகனாக தன்னைப் பாவித்து இளைஞன் காதல் கடிதம் எழுதுகிறான். காதல் குறுஞ்செய்தி அனுப்புகிறான். துரத்தித் துரத்தி காதலிக்கிறான். படிப்பை மறந்து ஊர் சுற்றுகிறான்.

கல்லூரி மாணவன் ஒருவனைச் சந்தித்தேன். முழங்கைக்குக் கீழ் புள்ளிபுள்ளியாய் தீப்புண்கள். விசாரித்ததில் தெரிந்த உண்மை மிகுந்த வேதனை அளித்தது. அது அவன் காதலியின் பெயராம். அவள் பெயரை தன் கையில் சிகரெட் நெருப்பு கொண்டு பச்சை குத்துவது போல் பதித்து இருக்கிறான்.

பாறையில் எழுதுவது, மரத்தில் எழுதுவது, இரத்தம் கொண்டு எழுதுவது, பச்சை குத்திக் கொள்வது போன்ற எல்லாம் போய் நெருப்பைக் கொண்டு எழுதியிருக்கிறானே என்பதை அறிந்த போது ‘நெஞ்சு பொறுக்கு தில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்’ என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

சில இளைஞர்கள் திடீரென்று தாடி வளர்த்துக் கொண்டு, சிகரெட் புகைத்துக் கொண்டு சரியாக சாப்பிடாமல், சரியாக உடை உடுத்தாமல், வேதாந்தம் பேசத் தொடங்குவர். கேட்டால் ‘காதல் தோல்வி’ என்று கூறுவர். தான் கொண்டுள்ளது காதல்தானா என்று கூட சரியாகத் தெரியாத நிலையில் ஒரு பெண் எப்போதோ ஏதோ இரண்டு வார்த்தைகள் பேசியதை வைத்துக் கொண்டு அவள் தன்னைத்தான் விரும்புகிறாள் என்றும், இவன் இருக்கும் திசை பக்கம் பார்த்தாலே தன்னைத் தான் பார்க்கிறாள் என்றும் தவறாக எண்ணிக் கொண்டு காதல் மயக்கத்தில் கிடப்பர்.

மேலும், நண்பர்களிடம் இதைப் பற்றி இட்டுக்கட்டி பேசுவது, தனிமையில் அமர்ந்து அந்தப் பெண்ணையும், அவள் பேசிய வார்த்தைகளையும் மனதிற்குள் மீண்டும் மீண்டும் ‘ரீ பிளே’ செய்து பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. தப்பித் தவறி அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி விட்டால் இவரது காதல் கோட்டை இடிந்து தரைமட்டமாகி, ஒரு சாம்ராஜ்யமே அழிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு, கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிவதும் உண்டு.

தேசத்துக்காக உயிரைத் துறப்பது, உயர்ந்த நோக்கத்துக்காக உடலை வருத்திக் கொள்வது இவை யாவும் அறிவுடைமை. ஆனால் அற்ப காரணங்களுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அறிவீனம். இப்படிப் பட்டவர்களால் அவர்களுக்கும் பயனில்லை. மற்றவர்களுக்கும் பலனில்லை. காட்டில் எரியும் தீயால் யாருக்கு என்ன பயன்? அது வீட்டு அடுப்பில் எரிந்தாலாவது சமையலுக்குப் பயன்படும்.

தங்கள் பிள்ளை உலகைச் சுமக்கும் கவலையோடு இருந்தால், நேரம் தவறி வீட்டிற்கு வந்தால், தேவைக்கு அதிகமாகப் பணம் கேட்டால், ரகசியமாக செல்போன் வைத்திருந் தால், போனில் நீண்ட நேரம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு காதல் வைரஸ் பிடித்திருக்கலாம். காதல் என்னும் மாயக்குரங்கை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

காதல் என்கிற பெயரில் வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுகிறார்கள் பிள்ளைகள். பெற்றோரின் கனவுகளைச் சிதைத்து கூடவே தங்கள் லட்சியத்தையும் வருங்காலத்தையும் தொலைத்து விடுகிறார்கள்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று மனம் போன போக்கெல்லாம் போகக் கூடாது என்பதற்கு ஒரு கதை சொல்வார்கள். விடுதலை என்ற பெயரில் தறுதலைகளாக ஒரு மண்ணாங்கட்டியும் ஒரு இலையும் காதலர் களாயின. ஒருவரை ஒருவர் கடைசிவரை இணைபிரியாது காப்பாற்றுவது என உறுதி எடுத்துக் கொண்டன.

காற்றடித்தது ஒரு நாள். இலையை அடித்துச் செல்லாமல் அதன் மீது உட்கார்ந்து கொண்டு இலையைக் காப்பாற்றியது மண்ணாங் கட்டி. மழைபெய்தது மறுநாள். மண்ணாங்கட்டி மீது இலை அமர்ந்து கொண்டு அதனைக் கரையாமல் காத்தது. ஒரு நாள் காற்றும் மழையும் சேர்ந்து அடித்தன. மழையில் கரைந்து காணாமல் போனது மண்ணாங்கட்டி. காற்றில் சிக்குண்டு சிதறிப் போனது இலை. மதியாதவர்களுக்கும், மதியைக் கொள்ளாதவர்களுக்கும் தொடக்கம் இனித்தாலும் முடிவு இதுதான்.

‘காதலுக்கு கண் இல்லை’ என்பதை தங்களுக்கு சாதகமாக புரிந்து கொண்டு இளம் உள்ளங்கள் காதலில் திளைப்பதாக எண்ணி மகிழ்கிறார்கள். கனவு உலகத்திற்குள் உலா வரும் வரை இவர்களுக்கு உள்ள காதலுக்குக் கண் இல்லைதான். ஆனால், கனவு உலகைக் கடந்து நடைமுறை வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் போது காதலுக்குக் கண் வந்துவிடும்.

காதல் அரும்பும்போது சாதி, மதம், அந்தஸ்து, படிப்பு எல்லாம் தடையாக இருப்பதில்லை. ஆனால் அது கல்யாணத்தில் நிறைவேறத் துடிக்கும்போதுதான் காதலுக்கு சாதி மதம் உள்ளிட்ட அனைத்தும் தடையாக நிற்பது தெரிய வரும். குடும்பத்திற்குள் தீர்க்க முடியாத குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படும். காதலிக்கும்போது இருந்த பூரிப்பு, மகிழ்ச்சி, வியப்பு எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு காணாமல் போய்விடும். கல்யாணத்திற்கு பிறகு காதலே நின்று விடும்.

அறியாப் பருவத்தில் இனித்த காதல், வாழ்க்கை ஓட்டத்தில் வேம்பாய்க் கசக்கத் தொடங்குகிறது. வழிகாட்ட பெற்றோரோ, உற்றாரோ இல்லாத நிலையில் தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.

‘காதலுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார்’ என்று வீர வசனம் பேசலாம். ‘சாதி, மதம், பணம், அந்தஸ்து அனைத்தையும் தூக்கி எறியத் தயார்’ என்று உறுதி மொழி கொடுக்கலாம். ‘பணமும், சொத்தும் எங்களுக்குத் தேவை யில்லை. நாங்களும் எங்களின் காதலும்தான் விலை மதிக்க முடியாத சொத்து’ என்று உள்ளத்தை உருகும் பொன் மொழிகளைக் கூறலாம்.

ஆனால் வாழ்க்கை என்பது வெறும் கற்பனையில் குடும்பம் நடத்துவது அன்று, நடைமுறையில் வாழ்ந்து காட்டுவது என்பதை உணர வேண்டும். காதல் வயப்பட்ட இருவர் காதலன்-காதலியாக இருக்கும்வரை காதல் சந்தனக் கட்டையாக மணம் வீசும். கணவன்-மனைவி என்று ஆகிவிட்டால் எரிந்து போன விறகுக்கட்டையாக புகை வீசும்.

காதல் என்பது அகராதியிலிருந்து நீக்கப்பட வேண்டிய கெட்ட வார்த்தையோ, உச்சரிக்கக்கூடாத பாவச் சொல்லோ அல்ல லட்சியங்களைப் பொசுக்கி விட்டுத் துளிர்க்கும் இளம் பருவக் காதல் தேவையா? என்பதே கேள்வி. பெரும்பாலும் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் ஏற்படுவது வெறும் இனக்கவர்ச்சியே அன்றி, வேறெதுவும் இல்லை.

‘இளமையில் காதலிக்காமல் முதுமையிலா காதலிப்பார்கள்’ என்பதை ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும் காதலிப்பதற்கு மட்டும்தானா இளமை என்றகேள்வியும் எழுகிறது. உள்ளத்தில் பொங்கி வரும் உற்சாகமும், முறுக்கேறிய வலிமையும், இளமைக்கே உரிய புதிய சிந்தனைகளும் இளம் பருவக் காதல் என்றமாய வலைக்குள் சிக்கி மறைந்து போவது சரியா? என்பதை யோசிக்க வேண்டும்.

இளமை என்பது சாதனைகளுக்கான களம். இளமையில் தொலைத்து விட்ட லட்சியங்களைப் பிற்காலத்தில் மீட்டெடுக்க நினைத்தாலும் அது முடியாது. சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் குறிக் கோளும், புதுமை படைக்க விரும்பும் ஒருமுகச் சிந்தனையுமே இன்றைய இளைஞனின் இலக்காக இருக்க வேண்டும்.

யாரும் பார்த்து விடக்கூடாது, யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்றெல்லாம் பயந்து பயந்து மனசுக்குள் பொத்திப் பொத்திக் காதலை மலர வைத்தது நேற்றைய காதல். கண்டதும் காதல், பார்த்ததும் உருகல், தொட்டதும் ஊர்விட்டு ஓடல் என்பதே இன்றைய காதல். ஊடகங்கள் காதலுக்கு பின் நேரக்கூடிய வலி, வேதனை, ரணம் என அனைத்தையும் படைப்பு நேர்மையுடன் வெளியிட்டால் இளைய மனங்கள் தெளிவடையும்.

வாழ்க்கை மொட்டவிழும் பருவம் இளமைப் பருவம். இந்தப் பருவம் லட்சியங்களைத் தேடிப் பிடிப்பதற்கான பருவம். காதலுக்கு ஒருவரை தேடிப் பிடிக்கும் பருவம் அல்ல. இப்பருவத்தில் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும், கண்ணாடி கைநழுவி கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கி விடுவது போல் வாழ்க்கையும் நொறுங்கி விடும்.

இளமைப் பருவம் ஒற்றைக் கண் சிமிட்டலில் முடிந்து போய் விடும். அதற்குள் நம் சுய அடையாளத்தை அமைத்துக் கொள்வது மிகமிக முக்கியம். காதல் நங்கூரம் சரியான இடத்தில், சரியான பருவத்தில் பாய்ச்சப்பட வேண்டும். காதலில் புறப்பாதுகாப்பை விட மனக்கட்டுப்பாடாகிய அகப்பாதுகாப்பு தான் உன்னதமானது.
லட்சியங்களுக்காக காதலைக் கொஞ்ச காலம் காக்க வைக்கலாம். தவறில்லை. காத்திருக்கும் காதலுக்கே வலிமையும், மதிப்பும் அதிகம். காதல் வெறும் பொழுதுபோக்கல்ல, வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கண்ணியமும் கட்டுப் பாடும் காதலுக்கும் உரியது.

(எதையோ தேடியபோது இது கிடைத்தது. அன்பர்களுக்கும் சுவாரசியமளிக்கும் என்று நம்புகிறேன்.)

தண்டபாணி

right and left

இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

இடதுசாரிகள், வலதுசாரிகள் என்ற சொற்கள் ஒரு பொது பிம்பத்தை
கட்டமைக்கும் அளவிற்க்கு மிகவும் பரவலாக உபயோகிக்கபடுகின்றன.
இடதுசாரி என்றால் அவர் ஒரு ஏழை பங்காளன், ஏற்ற தாழ்வுகளை
அகற்றப் பாடுபடுபவர், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர், மதவாதத்தை
எதிர்ப்பவர் ; வலதுசாரி என்றால் அவர் பணக்கார்களின் ஆதாரவாளர்,
ஏழைகளின் எதிரி, தொழிலாளர்களை “சுரண்டுபவர்”, ஏகாதிபத்திய
ஆதரவாளர், ஃபாசிசவாதி, மதவாதி, கொடூர நெஞ்சம் படைத்தவர்,
இப்படி சில முன்முடிவுகளை இந்த “லேபில்கள்” மூலம், ஒருவரை
பற்றி முத்திரை குத்த பயன்படுத்தப்படுகிறது.

இவை எல்லாம் வெறும் முத்திரைகள். அர்த்தமற்றவை. ஆழமற்ற
லேபில்கள். வாதங்களை எளிமைபடுத்த உபயோகப்படும் சொல்லாடல்கள்.
அவ்வளவுதான்.

வலதுசாரி என்றால் அவன் ஒரு ஃபாசிஸ்ட் அல்ல. இடதுசாரி என்றால்
அவன் ஒரு ஃபாசிச எதிர்ப்பளரும் அல்ல. ஃபாசிசத்தை முன் மொழிந்த
சர்வாதிகாரியான முசோலனியும் வலதுசாரிதான். லிபரல் ஜனனாயகத்தை,
மக்களாட்சியை முன்மொழிந்த எர்கார்ட் (ஜெர்மன் அதிபர்) போன்றவர்களும்
அதே வலதுசாரி என்ற லேபில் / முத்திரையின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள்.

சே குவாராவும் இடதுசாரிதான், நேருவும் இடதுசாரிதான். முன்னவர்
பாரளுமன்ற ஜனனாயகத்தில் நம்பிக்கை இல்லாத போராளி, பின்னவர்
ஜனனாயகவாதி. எனவே, இந்த வலது / இடது லேபில்கள், முன்முடிவுகளை
அளித்து, ஒருவரை பற்றிய சரியான எடைபோடுதலை செய்யவிடாமல்
குழப்பும்.

வலதுசாரிகள் என்றால் அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல. எந்த
வகை அடிப்படைவாதமும் ஃபாசிமே ஆகும். எனவே சரியான
சொல்லாடல்கள் : ஃபாசிசவாதி / ஜனனாயகவாதி. அடிப்படை மனித
உரிமைகளை மதிப்பவர் ஜனனாயகவாதி. மறுப்பவர் ஃபாசிசவாதி.

அடிப்படை ஜனனாயக உரிமைகளில் சொத்துரிமையும் அடக்கம். அதை
ஜனனாயக வழியில் முன்மொழிதலே வலதுசாரி சிந்தனைகள் எனலாம்.
(அப்படித்தான் எம்மை கருதுகிறேன்). ஆனால் ஃபாசிச முறையில் எதை
முன்மொழிந்தாலும் அது ஏற்க்கமுடியாது. ஃபாசிஸ்டுகள் இடது / வலது
இரு தளங்களிலும் உள்ளனர். எனவே மேலும் குழப்பம்.

உதாரணமாக இடி அமின், சதாம் ஹுசைன் போன்றவர்கள் ஃபாசிஸ்டுகள்
என்பதை சுலபமாக உணரலாம். ஆனால் மாவோ, ஜோஸஃப் ஸ்டாலின்
போன்றவர்களை ஒரு ஃபாஸிஸ்ட் என்று உணர்வது கடினம். அவர்கள்
சித்தாந்தரீதியாக “இடதுசாரிகள்” ; பொது உடைமைவாதிகள், பாட்டாளி
வர்கத்தின் ரட்சகர்கள் என்று இன்றும் சில தீவிர மார்க்சியவாதிகளால்
கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் செய்த
செயல்கள் பற்றிய முழுவிபரமும் தெரியாமல், அல்லது தெரிந்தும்,
அதை “வரலாற்று கட்டாயங்கள்” என்று நியாயபடுத்திக்கொண்டு
கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள்.

வலதுசாரிகள் என்றால் ஏழைகளின் எதிரிகள் என்று ஒரு பிம்பம்.
ஆனால் அது முற்றிலும் தவறான கட்டமைப்பு. சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகள் மூலம், வளர்ந்த நாடுகள் அனைத்தும்
(முக்கியமாக இரண்டாம் உலகபோரில் அழிந்த ஜெர்மனி, ஜப்பான்,
தென் கொரியா, மலேயா போன்ற நாடுகள்) ஏழ்மையை பெருவாரியாக
குறைத்த வரலாறு பெரிதாக அறியப்படவில்லை. ஆனால் அந்நாடுகள்
பின்பற்றும் கொள்கைகள் “வலதுசாரி” கொள்கைகள். நேர் எதிராக
“இடதுசாரி” கொள்கைகளை (பல பாணிகளில்) பின் பற்றிய சுதந்திர
இந்தியா போன்ற நாடுகளும், சோவியத் ரஸ்ஸிய, வட கொரியா
போன்றவை வறுமையை பரவலாக்கி, ஊழல் மிகுந்து, ஏறக்குறைய
ஃபாசித்தை உருவாக்கி சீரழந்தன. இதிலிருந்தே வலதுசாரிகள் என்றால்
ஏழைகளின் எதிர்கள், ஏழைகளை ஏழைகளாகவே இருக்க செய்யும்
பிற்போக்காளர்கள் என்ற பிம்பம் உடைகிறது.

30 வருடங்களுக்கு முன்பு வரை இந்திய அரசியலில் சரளமாக
சில‌ சொற்கள் பிரயோகிக்கப்பட்டன : ‘சோசியலிஸ்டுகள், ஏழை
பங்காளர்கள், முற்போக்காளர் / பிற்போக்காளர்’, இன்னபிற. முக்கியமாக
இந்த முற்போக்காளர் / பிற்போக்காளர் என்ற முத்திரைகள் விளைவித்த
நாசம் மிக அதிகம். வலதுசாரிகள் எல்லாம் பிற்போக்காளர்கள்,
இடதுசாரிகள் எல்லாம் முற்போக்காளர்களாம். அதனால வலதுசாரி
என்று முத்திரை குத்தப்பட்ட அனைவரும் ஓரங்கட்டப்பட்டனர்.
அம்முத்திரையை கண்டு அனைவரும் பயந்தனர். முற்போக்காளர்
என்ற முத்திரையை விரும்பினர். இது அறிவுஜீவிகள் மத்தியில்
மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகள் வட்டத்திலும் நிலவியது.
முக்கியமாக அன்றைய ஆளும் கட்சியாக, பலமாக, பல காலம்
ஆண்ட காங்கிரஸ் தலைவர்களிடம் மிகுதியாக இருந்தது. இந்திரா
காந்தியின் சர்வாதிகார போக்கை எதிர்க்க துணிந்தவர்களுக்கு
இந்த வலதுசாரி பட்டம் கிடைக்கும் என்பதாலேயே பலரும்
“இடதுசாரி முற்போக்குவாதி” என்ற முத்திரை பெற துடித்து,
இந்திரா காந்தியின் ஃபாசிதற்க்கு துணை போயினர்.
நல்லவேளையாக இது போன்ற லேபில்கள் இன்று அரசியல்
சூழலில் இல்லாமல் ஆனாது. ஊழல் மட்டும்தான் இன்று பரவலாக உள்ளது

Athiyaman Karur R

alexander flemming

அலெக்சாண்டர் ஃபிளமிங் (1881-1955)

சில நோய் நுண்மங்களின் வளர்ச்சியைத் தடை செய்யப் பயன்படும் “பென்சிலின்” என்ற மருந்தைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் ஃபிளமிங் ஆவார். இவர் ஸ்காட்லாந்திலுள்ள லாக்ஃபீல்டு என்னும் ஊரில் 1881 ஆம் ஆண்டு பிறந்தார். லண்டனிலுள்ள புனித மேரி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்ற பின்பு, இவர் தொற்று நோய்த் தடைக்காப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பின்னர், முதல் உலகப் போரில், காயத்தினால் உண்டாகும் தொற்று நோய்கள் பற்றி பல, நோய் நுண்மங்களுக்கு (Microbes) தீங்கு செய்வதைவிட மிகுதியாக உடலின் உயிரணுக்களுக்கு (Body Cells) தீங்கு விளைவிக்கின்றன என்பதை இவர் கண்டறிந்தார். நோய் நுண்மங்களுக்குத் தீங்கு செய்கிற, ஆனால் மனித உயிரணுக்களுக்குத் தீங்கு செய்யாத பொருள் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தை இவர் உணர்ந்தார்.

முதல் உலகப் போர் முடிவுற்ற பின்பு ஃபிளமிங் மீண்டும் புனித மேரி மருத்துவமனையின் பணிக்குத் திரும்பினார். அங்கு இவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது 1922 ஆம் ஆண்டில் “லைசோசைம்” (Lysozyme) என்னும் பொருளை இவர் கண்டுபிடித்தார். இந்தப் பொருளை மனித உடல் உற்பத்தி செய்கிறது. அது சளியும், (Mucus) கண் ரும் அடங்கிய ஒரு பொருளாகும். இப்பொருள், மனித உயிரணுக்களுக்குத் தீங்கு செய்வதில்லை. இது சில நோய் நுண்மங்களை அழிக்கிறது. ஆனால், முக்கியமாக மனிதனக்குத் தீங்கு செய்யக்கூடிய நோய் நுண்மங்களை இது ஒன்றும் செய்வதில்லை. எனவே இந்தக் கண்டுபிடிப்பு தனிச் சிறப்புடையதாக இருந்த போதிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவில்லை.

ஃபிளமிங் தமது மிகப் பெரிய கண்டுபிடிப்பை 1928 ஆம் ஆண்டில் செய்தார். இவருடைய ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்ட நோய் நுண்ணுயிர்கள் (Staphylococcus Bacteria) மீது காற்றுப்பட்டு, ஒருவகைப் பூஞ்சக் காளானால் மாசுபட்டன. பூஞ்சக் காளானைச் சுற்றியிருந்த வளர்ச்சிப் பகுதியில் நோய் நுண்ணுயிர்கள் கரைந்து போயிருப்பதை ஃபிளமிங் கண்டார். நோய் நுண்ணுயிர்களுக்கு நஞ்சாக இருக்கக்கூடிய ஏதோ ஒரு பொருளை பூஞ்சக் காளான் உற்பத்திச் செய்கிறது என்பதை ஃபிளமிங் மிகவும் சரியாக ஊகித்தார். அதே பொருள், தீங்கு செய்யக் கூடியவேறு பலவகை நோய் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடை செய்வதையும் இவர் விரைவிலேயே மெய்பித்துக் காட்டினார். அந்தப் பொருளுக்குப் பூஞ்சக் காளானின் (Pencillium notatum) பெயரைக் கொண்டே “பென்சிலின்” (Penicillin) எனப் பெயரிட்டார். இந்தப் பொருள், மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ நஞ்சாக இருக்கவில்லை என்பதையும் இவர் கண்டறிந்தார்.

ஃபிளமிங்கின் ஆராய்ச்சி முடிவுகள் 1929 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. ஆனால், முதலில் இவை மிகுதியாகக் கவனத்தைக் கவரவில்லை. பென்சிலினை முக்கிய மருந்துப் பொருளாகப் பயன்படுத்தலாம் என ஃபிளமிங் கருதினார். ஆனால், பென்சிலினைத் தூய்மைப் படுத்தும் ஒரு முறையை உருவாக்க அவரால் கூட இயலவில்லை. அதனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அற்புத மருந்துப் பொருள் பயன்படுத்தப்படாமலே இருந்தது.

இறுதியில் 1930 களில் ஹோவர்டு வால்ட்டர் ஃபுளோரி, எர்னஸ்ட் போரிஸ் செயின் என்ற இரு பிரிட்டிஷ் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஃபிளமிங் எழுதிய கட்டுரையைப் படித்தார்கள். ஃபிளமிங் செய்த அதே ஆராய்ச்சியை அவர்களும் செய்து பார்த்தார்கள். அவருடைய முடிவுகளைச் சரி பார்த்தார்கள். பின்னர், அவர்கள் பென்சிலினைத் தூய்மைப்படுத்தினார்கள். அவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்ட பொருளை ஆய்வுக்கூட விலங்குகளிடம் சோதனை செய்தார்கள். 1841 ஆம் ஆண்டில், பென்சிலினை நோயுற்ற மனிதர்களிடம் பரிசோதனை செய்தார்கள். புதிய மருந்துப் பொருள் வியக்கத்தக்க வகையில் நோய்த் தடுப்பாற்றல் வாய்ந்ததாக இருப்பதை அவர்கள் தெளிவாகக் காட்டினார்கள்.

பிரிட்டிஷ் அரசும், அமெரிக்க அரசும் அளித்த ஊக்கம் காரணமாக, மருந்து நிறுவனங்கள் இத்துறையில் இறங்கி, பேரளவில் பென்சிலினை உற்பத்தி செய்யும் முறைகளை விரைவிலேயே கண்டுபிடித்தன. முதலில் போரில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காகவே பென்சிலின் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 1944 ஆம் ஆண்டுவாக்கில், பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் குடிமக்களின் நோய்களை குணப்படுத்துவதற்கும் பென்சிலின் கிடைகக்லாயிற்று. இரண்டாம் உலகப் போர் 1945 ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகு, பெனிசிலினைப் பயன் படுத்துவது உலகெங்கும் பரவியது.

பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, மற்ற வகை நோய் நுண்மத் தடை மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாயின. அந்த ஆராய்ச்சிகளின் பலனாக வேறுபல “அதிசய மருந்துப் பொருட்களும்” கண்டுபிடிக்கப் பட்டன. எனினும், பெனிசிலின், மிகப் பெருமளவில் பயன் படுத்தப்படும் நோய் நுண்மத் தடை மருந்தாக இன்றும் இருந்து வருகிறது.

மிகப் பலவகை தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களுக்கு (Microorganisms) எதிராகப் பென்சிலின் செயல் விளைவுடையதாக இருப்பதே, இது தொடர்ந்து தலையாய நோய் நுண்மத்தடை மருந்தாகப் பயன்பட்டு வருவதற்குக் காரணமாகும்.

மேக நோய் (Syphilis), மேக வெட்டை நோய் (Gonorrhea), செம்புள்ளி நச்சுக்காய்ச்சல் (Scarlet Fever), தொண்டை அழற்சி நோய் (Diphtheria), சில வகை மூட்டு வீக்கம் (Arthritis), மார்புச் சளி நோய் (Bronchitis), தண்டு மூளைக் கவிகைச் சவ்வு அழற்சி (Mennigitis), இரத்தம் நஞ்சாதல், கொப்புளங்கள்,எலும்பு நோய்கள், சீதசன்னி (Pneumonia), தசையழுகல் நோய் (Gangrene) ஆகிய நோய்களுக்கும் வேறு பல நோய்களுக்கும் சிகிச்சையளிப்பதற்குப் பென்சிலின் மருந்து பயன்படுகிறது.

பென்சிலினைப் பயன்படுத்துவதால் பெருமளவு பாதுகாப்பு ஏற்படுவது மற்றொரு முக்கியமான நன்மையாகும். சில தொற்று நோய்களுக்கு எதிராகப் பெனிசிலின் மருந்தின் 50,000 அலகுகள் செயல் விளைவுடையதாக இருக்கின்றன. எனினும், ஓர் நாளில் 10 கோடி அலகு பெனிசிலின் கூட எவ்விதத் தீய விளைவுகளுமின்றி ஊசி மருந்தாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த விழுக்காட்டு மக்களுக்குப் பென்சிலின் ஒவ்வாதிருந்த (Allergic) போதிலும் பெரும்பாலான மக்களுக்கு நோய்த் தடுப்பாற்றலும், பாதுகாப்பும் வாய்ந்த உன்னத மருந்தாகப் பென்சிலின் விளங்குகிறது.

பெனிசிலின் இதுகாறும் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. எதிர்காலத்தில் அது இன்னும் பல கோடி மக்களைக் காப்பாற்றும் என்பது உறுதி. எனவே ஃபிளமிங்கின் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்க முடியாது. ஆயினும், ஃபிளோரி, செயின் ஆகிய இருவரின் பணிக்கு எத்துணை மதிப்பு அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் இந்தப் பட்டியலில் ஃபிளமிங்குக்கு அளிக்கப்படும் இடம் அமையும். இன்றியமையாத கண்டுபிடிப்பினைச் செய்தவர் ஃபிளமிங் தான் என்பதால், அவருக்கே இந்தப் பெருமையின் பெரும் பகுதி சேர வேண்டும் என நான் கருதுகிறேன். அவர் மட்டும் இல்லாதிருந்தால் பென்சிலினைக் கண்டு பிடிக்க இன்னும் பல ஆண்டுகள் பிடித்திருக்கும். அவர் தமது முடிவுகளை வெளியிட்ட பிறகுதான் பென்சிலின் உற்பத்தி செய்வதற்கும், தூய்மைப்படுத்துவதற்கும் சீர்திருந்திய முறைகளைக் கண்டுபிடிக்க முடிந்தது.

ஃபிளமிங் மகிழ்ச்சிகரமாக இல்லற வாழ்க்கை நடத்தினார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. இவரது கண்டுபிடிப்புக்காக இவருக்கும், ஃபுளோரி, செயின் ஆகியோருக்கும் சேர்த்து 1945 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப் பட்டது. ஃபிளமிங் 1955 ஆம் ஆண்டில் காலமானார்.

நன்றி : http://ping.fm/O1hKX

the great alexander bc.356-323

மகா அலெக்சாந்தர் (கி.மு.356-323)

பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார். மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர், அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இந்தப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார். அந்தக் கூட்டாட்சிக்குத் தாமே தலைவரானார். கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். கி.மு. 336 ஆம் ஆண்டில் அந்தப் படையெடுப்புத் தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தந்தை இறந்த போது அலெக்சாந்தருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும், அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாந்தருக்குத் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாந்தர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும், ஃபிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி, அலெக்சாந்தருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.

கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாந்தர், தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே, இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார்.

மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ந்த, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது.

அலெக்சாந்தர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாந்தர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக இருந்தது. அலெக்சாந்தரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருந்தபோதிலும், அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது. அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக, ஃபிலிப் மன்னர் விட்டுச் சென்ற இராணுவம், பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இரண்டாவதாக, அலெக்சாந்தர் மகத்தான இராணுவத் திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத் திகழ்ந்தார் என்றுகூடக் கூறலாம். மூன்றாவதாக, அலெக்சாந்தர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக் கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாந்தரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்குத் தாமே நேரடியாகத் தலைமைத் தாங்கிப் போரிடுவதைத் தமது கொள்கையாகக் கொண்டிருந்தார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால், அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால், அவரது படையினர், தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற் கொள்ளத் தயங்கும் அபாயத்தை ஏற்கும் படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது.

அலெக்சாந்தர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். பிறகு, வடக்குச் சிரியாவுக்குள் நுழைந்து, இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் படையைப் படுதோல்வியடையச் செய்தார். அதன் பின்பு, அலெக்சாந்தர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப் படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக் கடினமான ஏழுமாத முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாந்தர் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோதே, அலெக்சாந்தருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாந்தருக்கு தூது அனுப்பினார். இந்தச் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவராகிய பார்மீனியோ கருதினார். நான் அலெக்சாந்தராக இருந்தால், இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்வேன், என்று பார்மீனியோ கூறினார். அதற்கு அலெக்சாந்தர் பார்மீனியோவாக இருந்தால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன் என்று விடையளித்தார்.

டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாந்தர் தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றார். இருமாத கால முற்றுக்கைக்குப் பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர், அலெக்சாந்தர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருந்த அலெக்சாந்தர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக் கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் தம் படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு. 331 ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரு பெரிய பாரசீகப் படையை அவர் முற்றிலுமாகத் தோற்கடித்தார்.

ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு அலெக்சாந்தர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாந்ரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330 ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும், அலெக்சாந்தர் டரையசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப் படுத்தினார். பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார்.

இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாந்தருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார். அங்கிருந்து, அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க விழைந்தார். ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டுக் களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்து செல்ல மறுத்தனர். அதனால், அலெக்சாந்தர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார்.

பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச் செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப் பணியாக விளங்கியது. கிரேக்கப் பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாந்தர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக் கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாந்தர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள், தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனால், அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிகக் கூட்டுப் பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராகத் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக் கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார். கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசியப் பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாந்தர் கூட, தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்தபோதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.

மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாந்தர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாந்தர் திடீரெனக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை.

அலெக்சாந்தர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறந்ததும், அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாந்தரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.

அலெக்சாந்தர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால், அவர் உணிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருந்தால், அவர் பெரும்பாலும் வெற்றியடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரீ

why i throw show, on Bush?

நான் ஏன் புஷ் ஷின் மீது செருப்பை வீசினேன் ?

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

முன்தாஜர் அல் ஜெய்தி
நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன..
எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.

வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.
ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.
என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”
குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.
ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.

எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்

நன்றி . .போராட்டம் வலைப்பதிவு

New Year’s tradition and customs around the world

New Year’s tradition and customs around the world

With New Year’s upon us, here’s a look at some of the good luck rituals from around the world. They are believed to bring good fortune and prosperity in the coming year.

BABYLONIA

The people of Mesopotamia celebrate the New Year festival known as Akitu in the springtime. At this time they celebrate the arrival of the spring rains and the renewal of nature, as well as the renewal of the community.

At the festival the story of the creation is read out to remind people of the order of the universe and how it had risen out of the struggle between Marduck the god of heaven and Tiamut goddess of the powers of chaos.

BELGIUM

In Belgium New Year’s Eve is called Sint Sylvester Vooranvond or Saint Sylvester Eve. The réveillon or New Year’s Eve family parties are thrown. At midnight everyone kisses, exchanges good luck greetings, and drinks toasts to absent relatives and friends.

The cities and restaurants are crowded with people who bid farewell to the Old Year. New Year’s Day is called Nieuwjaarsdag at this time of the year the children save money to buy decorated paper for writing holiday greetings to parents and god parents.

BENGALI

In Bengali they celebrate New Year on the 13th or 14th of April, which is the first day of the month that they call Baisakh. They clean and decorate their houses in preparation for the New Year.

They use flour to paint patterns on the ground out the front of their houses, in the middle of the design they place an earthenware pot, decorated with a red and white swastika which is a religious symbol, and filled with holy water and vermilion.

Also inside the pot they place a mango tree branch, which must consist of five twigs and a number of leaves. The pot symbolizes good fortune for the family.

BRAZIL

In Brazil the lentil is believed to signify wealth, so on the first day of the New Year they serve lentil soup or lentils and rice. In Brazil on New Year’s Eve priestesses of the local macumba voodoo cult dress in blue skirts and white blouses for a ceremony dedicated to the goddess of water, Yemanja.

A sacrificial boat laden with flowers, candles and jewelry is pushed out to sea from Brazil’s famous Ipenama beach in Rio de Janeiro.

BURMA

The Burmese New Year, which is based on the Fixed Zodiac system, falls on or around April 16. In Burma there is a three day New Year festival called Maha Thingyan, which is celebrated with prayers, fasting and fun.

During the festivities, buildings and temples are washed, and people throw water over each other. This is partly to welcome the heavy rains of the coming monsoon season. The Burmese New Year festival is held to celebrate the New Year, by performing meritorious deeds and spraying one another with Thingyan water.

CAMBODIA

The people of Cambodia use the Indian Calendar to calculate the start of the New Year festival. The festival starts on the 12, 13 or 14 April according to the Gregorian calendar and lasts for three days.

Cambodian New Year’s Eve is the day before whichever date it is and it lasts three days. It is called Chaul Chnam Thmey, which means entering the New Year.

DENMARK

In Denmark it is a good sign to find your door heaped with a pile of broken dishes at New Years. Old dishes are saved year around to throw them at the homes where their friends live on New Years Eve. Many broken dishes were a symbol that you have many friends.

New Year’s Eve is framed by two important items broadcast on television and radio, respectively the monarch’s New Year Speech at 6pm and the striking of midnight by the Town Hall Clock in Copenhagen, which marks the start of the new year.

CHINA

The Chinese New Year “”Yuan Tan”” takes place between January 21 and February 20. The exact date is fixed by the lunar calendar, in which a new moon marks the beginning of each new month.

For the Chinese New Year, every front door is adorned with a fresh coat of red paint, red being a symbol of good luck and happiness. Although the whole family prepares a feast for the New Year, all knives are put away for 24 hours to keep anyone from cutting themselves, which is thought to cut the family’s good luck for the next year.

ENGLAND

The British place their fortunes for the coming year in the hands of their first guest. They believe the first visitor of each year should be male and bearing gifts. Traditional gifts are coal for the fire, a loaf for the table and a drink for the master.

For good luck, the guest should enter through the front door and leave through the back. Guests who are empty-handed or unwanted are not allowed to enter first.

GERMAN

In Germany people would drop molten lead into cold water and try to tell the future from the shape it made. A heart or ring shape meant a wedding, a ship a journey, and a pig plenty of food in the year ahead.

People also would leave a bit of every food eaten on New Year’s Eve on their plate until after Midnight as a way of ensuring a well-stocked larder. Carp was included as it was thought to bring wealth.

VIETNAM

The more popular name for the Vietnamese New Year is Tet, where as the formal name is Nguyen-dan. Tet is a very important festival because it provides one of the few breaks in the agricultural year, as it falls between the harvesting of the crops and the sowing of the new crops.

The Vietnamese prepare well in advance for the New Year by cleaning their houses, polishing their copper and silverware and paying off all their debts.

WALES

At the first toll of midnight, the back door is opened and then shut to release the old year and lock out all of its bad luck. Then at the twelfth stroke of the clock, the front door is opened and the New Year is welcomed with all of its luck.

HAITI

In Haiti, New Year’s Day is a sign of the year to come. Haitians wear new clothing and exchange gifts in the hope that it will bode well for the new year.

SICILY

An old Sicilian tradition says good luck will come to those who eat lasagna on New Year’s Day, but woe if you dine on macaroni, for any other noodle will bring bad luck.

SPAIN

In Spain, when the clock strikes midnight, the Spanish eat 12 grapes, one with every toll, to bring good luck for the 12 months ahead.

PERU

The Peruvian New Year’s custom is a spin on the Spanish tradition of eating 12 grapes at the turn of the year. But in Peru, a 13th grape must be eaten to assure good luck.

ISLAM The Muslims have their own calendar which is based on the cycles of the moon. The calendar consists of twelve months but, only has 354 days unlike other calendars such as the Gregorian or Jewish calendar etc.

For this reason the Islamic New Year moves eleven days backwards through the seasons each year. Muharram is the first month of the Muslim year its first day is celebrated as New Year’s Day. The Islamic New Year throughout the world is held quietly, without the festive atmosphere of other New Year celebrations.

KOREA

The first day of the lunar New Year is called Sol-nal. This is for families to renew ties and prepare for the new year. New Year’s Eve: People place straw scoopers, rakes or sieves on their doors and walls to protect their families from evil spirit sin the new year.

Everyone dresses in new clothes, the following morning, symbolizing a fresh beginning, and gathers at the home of the eldest male family member. Ancestral memorial rites are held, then the younger generation bows to elders in the family. They wish them good health and prosperity in the coming year.

JAPAN

The Japanese New Year Oshogatsu is an important time for family celebrations, when all the shops, factories and offices are closed. The Japanese decorate their homes in tribute to lucky gods.

One tradition, kadomatsu, consists of a pine branch symbolizing longevity, a bamboo stalk symbolizing prosperity, and a plum blossom showing nobility.

POLAND

In Poland New Year’s Eve is known as St Sylvester’s Eve. This name according to legends arose from Pope Sylvester I who was supposed to have imprisoned a dragon called Leviathan who was supposedly able to escape on the first day of the year 1000, devour the land and the people, and was suppose to have set fire to the heavens.

On New Year’s Day, when the world did not come to an end, there was great rejoicing and from then on this day was called St Sylvester’s Eve.

PORTUGAL

The Portuguese pick and eat twelve grapes from a bunch as the clock strikes twelve on New Year’s Eve. This is done to ensure twelve happy months in the coming year. In Northern Portugal children go caroling from home to home and are given treats and coins. They sing old songs or Janeiro’s which is said to bring good luck.

ROME

Romans prepare for the New Year festival which is known as January Kalends by decorating their houses with lights and greenery. The festival lasts for three days, during this time they hold feasts and exchange gifts which were carefully chosen for their luck-bringing properties these include such things as sweets or honey to ensure sweetness and peace as well as Gold, Silver or money for prosperity. Lamps for a year filled with light.

SOUTH AFRICA

In South Africa they ring in the New Year with church bells ringing and gunshots being fired. For those in the Cape Province New Year’s Day and Second New Year’s Day are full of a carnival atmosphere as there are carnivals where people dress in colorful costumes and dance in streets to the sound of drums.

SPAIN

When the clock strikes midnight they eat 12 grapes one with every toll to bring good luck for the next 12 months of the New Year. Sometimes the grapes are washed down with wine. Theater productions and movies are interrupted to carry out this custom.

SWAZILAND

In Swaziland the harvest festival is called Newala or “”first fruits”” ceremony and takes place at the end of the year.

It is a celebration of kingship, traditional has it that the king of Swaziland, the Ngwenyama or “”Lion””, has powers that are mystical and is believed to embody the Swaziland prosperity and fertility, and therefore it is said that he must have many wives and father many children.

THAILAND

The Thai New Year festival is called Songkran and lasts for three days from 13 to 15 April according the Gregorian calendar.

The customs are many such as people throw water over one another, under the guise of that it will bring good rains in the coming year and all the Buddha statues or images are washed. They visit the monastery to pray and offer gifts of rice, fruit, sweets and other foods for the monks.

UNITED STATES

The kiss shared at the stroke of midnight in the United States is derived from masked balls that have been common throughout history. As tradition has it, the masks symbolize evil spirits from the old year and the kiss is the purification into the new year.

PAKISTAN

New Year in Pakistan is known as Nowrooz or New Day. This day begins in March and traditionally represents the rebirth of nature after the long winter. The New Year begins the instant the sun is no longer in the astrological sign of Pisces and enters Aries.

It is celebrated as a time of renewal. One of the customs of Nawrooz is the practice of burning piles of wood. The bonfires are a symbol to destroy any remaining evil from the previous year.

NORWAY

Norwegians make rice pudding at New Year’s and hide one whole almond within. Guaranteed wealth goes to the person whose serving holds the lucky almond.

arcimidies

ஆர்க்கிமிடீஸ் (கி.மு. 287 – கி.மு. 212)

பண்டைய உலகின் தலைசிறந்த கணித மேதையாகவும் விஞ்ஞானியாகவும் போற்றப்படுபவர். ஆர்க்கிமிடீஸ் ஆவார். நெம்புகோலின் தத்துவத்தையும் வீத எடைமான (specific Gravity) கோட்பாட்டையும் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ் தான் என்பர். எனினும், உண்மையில் ஆர்க்கிமிடீசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நெம்புகோல் அறியப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. நெம்புகோலின் செயல் விளைவை விவரிக்கும் சூத்திரத்தை முதன் முதலில் வகுத்துரைத்தவர் ஆர்க்கமிடீஸ் தான் என்று தெரிகிறது. ஆனால், ஆர்க்கிமிடீசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே, எகிப்தியப் பொறியியல் வல்லுநர்கள் நெம்புகோல்களைப் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதே போன்று, ஒரு பொருளின் மொத்த எடைக்கு மாறான அப்பொருளின் அடர்த்தி (கன அளவுடன் எடை மானத்துக்குள்ள விகிதம்) பற்றிய கோட்பாடு ஆர்க்கிமிடீசுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது. ஆர்க்கிமிடீசும், மணி முடியும் பற்றி வழங்கும் புகழ்பெற்ற கதை (”கண்டுபிடித்து விட்டேன்” என்று கூவிக்கொண்டே ஆர்க்கிமிடிஸ் குளிக்கும் தொட்டியிலிருந்து குதித்துத் தெருக்களில் ஆடையின்றி ஓடியதாக இக்கதை முடிகிறது). ஆர்க்கிமிடீஸ் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் கோட்பாடும், ஒரு புதிய கோட்பாடு அன்று. ஏற்கெனவே நிலவிய ஒரு கொள்கையை, அவர் குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண வெற்றிகரமாகக் கையாண்டார்.

கணித வல்லுநர் என்ற முறையில் ஆர்க்கிமிடீஸ் தலை சிறந்தவராக விளங்கினார் என்பதில் ஐயமில்லை. முழுமைத் தொகையீட்டுக் கலன கணிதத்தை (Integral Calculus) ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு 8 நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆர்க்கிமிடிஸ் அக்கணிதத்திற்கு மிக அருகில் நெருங்கி விட்டார் எனலாம். ஆனால், தீவினைப் பயனாக அவருடைய காலத்தில் வசதியான கணிதக் குறிமான முறை (Mathematical Notation) இல்லாதிருந்தது. அதுபோலவே, அவருக்கு அடுத்து வந்த கணித அறிஞர்களில் எவரும் அவரைப் போன்று முதல்தரக் கணித மேதையாக விளங்கவில்லை. அதன் விளைவாக ஆர்க்கிமிடீசின் அற்புதமான கணித நுண்ணறிவுத் திறனுக்கு அதற்குரிய நற்பலன் கிடைக்காமற் போயிற்று. எனவே. ஆர்க்கிமிடீசின் திறமை தன்னேரிலாததாக இருந்தபோதிலும், உள்ளபடிக்கு அவருடைய செல்வாக்கு, இந்நூறு பேரில் அவரைச் சேர்க்கும் அளவுக்கு அதிகமாக இருக்கவில்லை.

நன்றி : http://ping.fm/LfUe5

leaving office after a hectic day will be back at tomorrow

Post Navigation

%d bloggers like this: