Karim74's Weblog

my articles

Archive for the month “July, 2009”

மீட்சியைத் தேடி!meeachi theedy

–சௌமியா
அனேகமாக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைப் பற்றி செய்திகள் வெளிவராத நாளே இல்லை எனலாம். ஒவ்வொரு முறையும் பச்சாதாபத்தோடு அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமைக்காக உச்சுக்கொட்டிக் கொட்டி, நாளடைவில்,’இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா?’ என்ற இயலாமை ஏற்படுகிறது. அந்த இயலாமை அல்லது கையாலாகாத்தனத்தின் காரணமாகவே, அனேகருக்கு கோபம் ஏற்படுகிறது. பலர் இது போன்ற செய்திகளைப் படித்து விட்டு பெருமூச்சு விடுவதோடு நிறுத்திக் கொள்வார்கள். வேறு என்ன செய்ய? மிகச் சிறிய விகிதாச்சாரத்தில் இது போன்ற செய்திகளை, தங்களது உள்மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் அரிப்பைத் தீர்த்துக்கொள்வதற்காகப் படிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், உளவியல் கண்ணோட்டத்தின் படி பார்த்தால், இக்கொடுமைக்கு ஆட்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்டிருப்பது வெறும் உடல்சம்பந்தப்பட்ட பாதிப்பல்ல என்பது வெளிப்படும். சொல்லப்போனால், அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் உடல் சம்பந்தப்பட்ட பாதிப்பை எளிதில், விரைவில் எதிர்கொண்டு விடலாம். ஆனால், அவளை மனரீதியாகத் தேற்றி இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதே அவரது உற்றார், உறவினர் மற்றும் மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக அமைகிறது.

பாலியல் பலாத்காரம் விபத்தா? பிற விபத்துக்களோடு ஒப்பிட்டால், பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண்ணுக்கு மருத்துவ உதவியோடு, மனோதத்துவ உதவியும் தேவைப்படுகிறது. முதலில் அந்தப் பெண்ணை வன்புணர்ச்சி என்ற பயங்கரமான அனுபவத்திலிருந்து மீள வைக்கிற முயற்சியே மிக முக்கியமானது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குத் தேவைப்படுகிற மருத்துவ உதவியுடன், அவள் தன்னை சுதாரித்துக்கொள்ள வைக்கிற முயற்சிகளும் ஒருங்கிணைத்தே மேற்கொள்ள வேண்டி வரும்.

அந்தப் பெண்ணுக்கு, திடீரென்று அனைவரின் மீதுள்ள நம்பிக்கையும் மறைந்து போயிருக்கும். அந்தப் பதற்றத்தில் அவளால் எதையும் ஓர்நிலைப் படுத்தி சிந்திக்க முடியாது. அப்போது அவளுக்குள்ளிருக்கும் உணர்வுகள் சந்தேகம், அச்சம் இவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும் என்பதே உண்மை. அவளுக்கு உடனடியாகத் தேவை, சற்று அமைதி! சிறிது தனிமை! நிறைய ஆறுதல்! அவரது அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான நெருங்கிய உறவினர்கள், சினேகிதிகள் உடனிருப்பது மேலும் பயனளிக்கும். பெரும்பாலும் அந்தப் பெண் மருத்துவ சிகிச்சைக்கே முதலில் உடன்பட மாட்டாள். சில பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பகிர்ந்து கொள்ள வெட்கப்பட்டு, உற்றார் உறவினர்கள் குறித்த விபரங்களை அளிக்க மறுப்பதும் உண்டு. இந்த நேரத்தில் அவளுக்குத் தேவை, ஆதுரமான வார்த்தைகள் மட்டுமே!

அப்போதைக்கு அந்தப் பெண்ணுக்குத் தேவை தேற்றித் தோள் கொடுக்க மனப்பக்குவம் கொண்ட நல்லுள்ளங்களின் துணை மட்டுமே! அது தேர்ச்சி பெற்ற ஒரு மருத்துவராகவோ, திறமை வாய்ந்த மனோதத்துவ நிபுணராகவோ,அல்லது அந்தப் பெண்ணின் மீது பாசம் கொண்ட உறவினர், சினேகிதியாகவோ கூட இருக்கலாம். அதே நேரத்தில் தயக்கம், வெட்கம், பயம் காரணமாக மருத்துவ உதவிக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ள விரும்பாத அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தி, அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவன் யாரென்பதைக் கண்டு கொள்ள வேண்டியதும் மிக மிக அவசியம். உடனடியாக நடைபெறாவிட்டாலும், இந்தத் தகவலை அந்தப் பெண்ணிடமிருந்து தெரிந்து கொண்டே தீர வேண்டும். குற்றவாளி தப்பித்துச்செல்ல ஒரு வாய்ப்பை அளித்து விடக் கூடாது.

இத்தனை மனக்குமுறல் மற்றும் கொந்தளிப்புக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு survival-mode என்று சொல்லப்படுகிற மீளுதலுக்கான உந்துதல்கள் மூன்று வகையாகக் காணப்படும். அச்சம், ஆத்திரம், விரக்தி அல்லது சுயபச்சாதாபம் என்பவையே இவை. இவற்றின் காரணத்தால் மருத்துவ உதவி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ள படியால், மனோதத்துவ உதவியும் தேவைப்படலாம்.

அவை பற்றித் தொடர்ந்து எழுதுவேன்.

manam manasu

மனம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புது மனித யுகம் தோன்றியது. அப்போது மொழி (பேச்சு) என்றால் என்னவென்றே மனிதனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அழுகையும், சிரிப்பும், பசியும்தான். பின்னர் வாயசைவின் மூலம் தமது செயல்களுக்கு மொழிவடிவம் கொண்டு வந்தனர், பின்னர் அவற்றைத் தங்கள் அறிவுக்குத் தகுந்தவாறு மாற்றியமைத்தனர். இதைத்தான் நாம் சிந்தித்தல் என்கிறோம். இந்தச் சிந்தனைக்கும், மனதிற்கும் தொடர்பு உண்டா என்றால், புதிய சிந்தனைகளுக்கு நம்முடைய மனமே பிறப்பிடமாகத் திகழ்கின்றது. நம் மனம் ஒருநிலைப்பட்டு இருக்கும்போது புதுப் புதுச் சிந்தனைகள் துளிர் விடுகின்றன. நம்முடைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கெல்லாம் இவ்வகையான ஆற்றல் கொண்ட மனமே காரணமாயிருக்கிறது.

முதலில் மனம் என்றால் என்ன? இதை இரண்டே வரிகளில் விளக்க முயல்வது பெரிய மலையைக் கயிறால் இழுக்க முயல்வதற்குச் சமம். அதனை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்வதற்கே இந்த சிறு பயணம்.

நம் எல்லோருக்கும் ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கும்: ஒரு கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருந்திருப்போம், கிடைத்திருக்காது. அதை விட்டுவிட்டால் கிடைக்காமலே போயிருக்கும். மாறாக அதைத் திரும்பத் திரும்ப எண்ணும்போது திடீரென எப்போதாவது விடை தோன்றும். இவையெல்லாம் நம் உள்மனதிலிருந்து தோன்றியவை, வெளியில் இருந்து வந்தவை அல்ல என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். விவேகானந்தரும் இந்த மன ஆற்றல்களை ஆழ்ந்து ஆராய்ந்திருக்கிறார். ‘எந்த ஒரு செயலும் வெளியில் இருந்த வருவது அன்று; அது உங்களுக்குள் இருந்து வெளிப்படுகிறது’ என்கிறார். பூரணம் அடைந்த ஞானிகள் கூட எதையும் படித்து, கேட்டு அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குள் உள்ள ஞானத்தை உள்ளூர ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்கள்.

நாம் நேசிக்கும் பொருட்களில் மனதை ஒருமுகப் படுத்துகிறோம். இனிய இசையைக் கேட்கும்போது மனம் அதில் லயிக்கிறது. அதிலிருந்து மனதைப் பிரிக்கவே முடிவதில்லை. கர்நாடக சங்கீதத்தில் மனத்தை ஒருமுகப்படுத்துபவர்கள் சாதாரண சங்கீதத்தை ரசிப்பதில்லை. சாதாரண சங்கீதத்தில் மனதைக் குவிப்பவர்கள் கர்நாடக சங்கீதத்தை ரசிப்பதில்லை. இத்தகைய உயிரோட்டமான சங்கீதத்தையே மனம் விரும்புகிறது, இதில் மனம் அலைபாய்வதற்கு வாய்ப்பே இல்லை.

இத்தகைய மன ஒருமைப்பாட்டில் உள்ள பிரச்சனை இதுதான் நாம் மனதை அடக்குவதில்லை, மனம் நம்மை அடக்கி ஆள்கிறது. நமக்கு வெளியிலுள்ள ஏதோ ஒரு பொருள் நமது மனத்தை தன்னிடம் இழுத்து, அது விரும்பும் நேரம்வரை தன்னிடமே வைத்துக்கொள்கிறது. இனிய இசையைக் கேட்கிறோம், அழகிய படத்தைப் பார்க்கிறோம், நமது மனம் அங்கேயே நின்று விடுகிறது. நம்மால் அதை மீட்கமுடிவதில்லை.

அதேபோல், நம் மனம் ஒரு குப்பைத்தொட்டியைப் போல, யார் என்ன சொன்னாலும், அதை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். ஒரு ஊரில் வேதத்திலும், சைவ சித்தாந்தத்திலும் கைதேர்ந்த ஞானி ஒருவர் இருந்தார். ஒருமுறை அவர் சீடர்களுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, அங்கிருந்த பூனை ஒன்று அவர்கள் முன்பு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. இதனால் அந்த ஞானியின் கவனத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் சீடர்களின் கவனம் சிதறியது. ஆகவே பூனையை பக்கத்தில் இருந்த தூணில் கட்டும்படி ஞானி சொல்ல, அதேபோல் பூனை கட்டப்பட்டது. அடுத்தடுத்த நாட்களிலும் பூனை தொந்தரவு தந்ததால் தினமும் பூனை தூணில் கட்டப்பட்டது.

சில வருடங்களில் ஞானி இறந்து விட்டார். சீடர் ஒருவர் ஞானியின் பொறுப்பை ஏற்றார், அவர் பாடம் எடுக்கும்போதும் பூனை தவறாமல் தூணில் கட்டப்பட்டது. சில நாட்களில் பூனை இறந்துவிட, அடுத்தநாள் பாடம் எடுக்க வந்த புது ஞானி, பாடம் எடுக்கும்போது ”தூணிலே பூனை ஒன்று கட்டவேண்டும் என்று தெரியாதா? உடனே போய் புதிய பூனையைக் கொண்டுவந்து கட்டுங்கள்” என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

இந்த ஞானியைப் போன்றுதான், இன்று பலபேர் யார் என்ன சொன்னாலும் அவர்கள் மனம் அதை எற்றுக்கொண்டுவிடுகிறது. அவற்றை விடாமல் மல்லுக்கட்டுகின்றனர். ஆகவேதான் இன்று பல குடும்பங்களில் சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்கின்றன. இவ்வாறில்லாமல் நம் மனதை ஆக்கபூர்வமான செயல்களுக்காக என்று மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

நமது செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எண்ணங்களை அடக்க முடியவில்லை என்று அடிக்கடி நாம் முறையிடுகிறோம். எப்படி அடக்க முடியும்? நம் வீட்டருகில் ஒரு பெரிய செடி வளர்ந்துள்ளது அதை வெட்டியெறிய வேண்டுமென்றால் அதன் கொப்புகளையும், தண்டுகளையுமா வெட்டிக்கொண்டிருப்பீர்கள்?, அதன் மூலமான வேரை அல்லவா வெட்டியெறிவீர்கள். அதேபோல் நமது செயல்களுக்கும், எண்ணங்களுக்கும் மூலம் என்ன என்பதைக் கண்டறியுங்கள், அதற்கு நம் ஆழ்மன உதவியை நாடுங்கள்.

ஹெர்மிஸ்(Hermes) என்ற ஒரு ஞானியின் கல்லறையை மிகுந்த எதிர்பார்ப்புடன் திறந்து பார்த்தார்கள். அவர் பல இரகசியச் செய்திகளை தன்னுடன் புதைத்து வைத்து இருப்பதாக கேள்விப்பட்டு அவரது சமாதி திறக்கப்பட்டது.

அங்கே ‘As within so without, As above so below.’ என்ற வாசகங்கள் மட்டுமே ஒரு கல்லில் பொறிக்கப்பட்டு இருந்தன. இதை விளக்கவேண்டுமென்றால், ‘உன்னுடைய உள்மனதில் என்ன பதிக்கப்பட்டிருக்கிறதோ அது ஆகாயத்திரையில் இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் தத்துவம் ‘ என்று சுருக்கமாக ஹெர்மிஸ் சொல்லிவிட்டார். நம்முடைய ஞானிகளும், ‘நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்கின்றனர். அப்படியென்றால் நாம் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பதுதானே அர்த்தம், ஆனால் நான் நினைப்பது எதுவும் நடப்பதில்லையே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது யூதக் கைதிகளை பிடித்து வைத்துக்கொண்டு ஜெர்மானியர்கள் பல சோதனைகளைச் செய்திருக்கிறார்கள், அதில், “உங்களைப் புதுமையான முறையில் சாகடிக்கப் போகிறோம், உங்களுடைய உடம்பிலுள்ள இரத்தத்தை வெளியேற்றினால் எப்படி துடிதுடித்துச் சாகப்போகிறீகள் என்பதை பார்க்கப்போகிறோம்” என்றனர் ஜெர்மானிய படை வீரர்கள் அந்தக் கைதிகளிடம். அதன்படி இரண்டு கைதிகளை படுக்கவைத்து கால்களைவெட்டி இரத்தத்தை பாட்டிலில் ‘ட்ப்’, ‘டப்’ என விழ வைத்தனர். பின் இரண்டுபேரின் கண்களையும் கறுப்புத் துணியால் கட்டிவிட்டனர். அதன்பிறகு, ஒருவனின் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறுவதை நிறுத்திவிட்டனர், ஆனால் பாட்டிலில் இரத்தம் ‘டப்’, ‘டப்’ என்று விழுமாறு செய்துவிட்டனர். இந்த ‘டப்’, ‘டப்’ சத்தத்திலேயே பீதி அடைந்த கைதி, “ஐயோ இரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கிறதே, இன்னும் சிறிது நேரத்தில் இரத்தம் வற்றிச் சாகப் போகிறோம்” என்று பயத்தில் நடுங்க ஆரம்பித்தான். முடிவில் இரத்தம் வெளியேறிய கைதியும் இறந்து போனான், தன் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறுகிறதே என்ற பிரமையில் இருந்தவனும் இறந்து போனான்.

இரண்டாமவனின் இறப்புக்கு அவனின் ஆழ்மன எண்ண ஒட்டங்களே காரணமாயிற்று. இப்போது புரிகிறதா எப்படி எண்ணினால் அது செயலாக மாறுகிறது என்று!. நம்முடைய எண்ணங்கள் இரண்டு வகையானவை, ஒன்று மேலோட்டமான எண்ணம் இன்னொன்று ஆழ்மன எண்ணம்.

இதில் மேலோட்டமான எண்ணமே நம்மில் எப்பொழுதும் ஓங்கியிருக்கும், ஆழ்மன எண்ணம் என்பது நாம் உணர்வுபூர்வமாக இருக்கும்போது மட்டுமே செயல்படும்.

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு மனஒருமைப்பாட்டு ஆற்றலே. இந்த மனஒருமைப்பாடு என்பதை நாம் ஏதோ சிறிதளவாவது அறிந்துதான் உள்ளோம். மன ஒருமைப்பாட்டின் விளைவுகளை நாம் அன்றாடம் சந்திக்கதான் செய்கிறோம். கலை, சங்கீதம் என்று எதுவாகவிருந்தாலும் வெற்றி என்பது மனஒருமைப்பாட்டிலேயே கிடைக்கிறது.

மிருகங்களுக்கு மன ஒருமைப்பாட்டு ஆற்றல் மிகவும் குறைவு. மிருகங்களுக்கு பயிற்சி அளிப்பவர்களுக்கு ஓர் உண்மை தெளிவாகத் தெரியும், அவை சொன்னதை உடனே மறந்துவிடும். மிருகங்களால் ஒரு பொருளின்மீது நீண்ட நேரம் மனத்தை வைத்திருக்க முடியாது. ஆகவே மனிதன் அதிக ஒருமைப்பாடு உள்ளவன் என்பதிலே மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேறுபாடு உண்டு. ஏன்? சாதாரண மனிதனையும், மிக மேலான மனிதனையும் ஒப்பிட்டுப் பாருங்கள்-ஒருமைப்பாட்டு அளவிலே வேறுபாடு, இது ஒன்றுதான் வித்தியாசம்.

சாலைகள் சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டு உங்களைக் கடந்து செல்பவர்களை கவனியுங்கள். எத்தனை முகங்கள் சந்தோஷமாக இருக்கின்றன? நூறு பேர் கடந்து போனால், அதில் நான்கோ ஐந்தோ பேர் முகங்களில் தான் சந்தோஷம் இருக்கிறது. மற்றவர்கள் ஏதோ வாழ்க்கையைத் தொலைத்து விட்டவர்கள் போல் திரிகின்றார்கள். ஏன் இப்படி?

ஒரு புத்தமடாலய துறவிகள் சிலர் திபெத் மலை வழியாக பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே ஒரு பெண் ஆற்றை கடக்க முடியாமல் நின்றிருந்தாள். அவள் ஒரு புத்தகுருவிடம் தன்னை இந்த ஆற்றை கடந்து விடும்படி கேட்டுக்கொண்டாள். ஆனால் அந்த புத்தகுருவோ காதில் எதுவும் விழாததுபோல் சென்றுவிட்டார்.

அவரைத்தொடர்ந்து அவருடைய சீடர் ஒருவர் வந்து கொண்டிருந்தார், துறவிச்சீடரிடமும் அவள் வேண்டினாள் தன்னை மருகரையில் விடச்சொல்லி. துறவிச்சீடரோ அந்த பெண்ணை தூக்கி தம் தோளில் போட்டு மறுகரையில் விட்டுச் சென்று விட்டார். அனைவரும் புத்தமடாலயத்தை அடைந்தனர். இப்போது துறவிக்குரு சீடரிடம் கேட்டார், “நம்முடைய விதிமுறை தெரியாதா உனக்கு, உண்மையான புத்ததுறவிகள் எந்த பெண்ணையும் தொடவோ, கண்ணால் பார்க்கவோ செய்ய மாட்டார்கள்” என்றார். அதற்கு, “நானோ அந்தப் பெண்ணை அப்போதே ஆற்றங்கரையில் விட்டுவிட்டேன்; ஆனால் நீங்களோ இன்னும் மனதில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்” என்றார் துறவிச்சீடர்.

இந்த புத்த மதகுருவைப் போல்தான் நாமும் இன்று மனதில்தேவையில்லாதவற்றையெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறோம். பின்னே எப்படி முகத்தில் சந்தோஷம் மிளிரமுடியும். உங்களுடைய ஐந்து வயதில் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினீர்களே, ஞாபகம் இருக்கிறதா? அவைகளை தொட்டவுடன் உங்கள் மன சந்தோஷம் பொங்கிப் பொங்கி வழிந்தது அல்லவா. அந்த மகிழ்ச்சி இப்போது எங்கே? அனைத்தையும் மூட்டை கட்டி ஓரங்கட்டி விட்டோம். இனிமேலாவது அந்த மூட்டைகளைக் கட்டவிழ்ப்போமா!

நன்றி
இரா.வெங்கட்ராமன்

Monsoon Beauty And Makeup Tips

Written by wessels09 ricardo
It is again that time of the year when monsoon is approaching. On one side there is a good feeling that the temperature will go down, on the other hand there are fears of how to take care of your skin in humid & wet rainy season. If you are beauty conscious and take a few simple precautions, you can save yourself a lot of trouble over bad skin.

The biggest skin problem during the monsoon is fungal infections. As fungus is born in humid weather, it easily grows and enters the skin throw wet pores. As a result, one develops itchy, circular, reddish, flaking patches on the body, underarms and around the breast in women.

Foundation should be kept as minimal as possible. Using tinted moisturizer is one of this season’s hottest tips. Dot it along your cheeks, your forehead, on your chin and down your nose and blend outward from your nose for a flawless finish. Of course, pick a brand that gives you SPF 15 for extra protection against summer’s high UVA/UVB rays.

Makeup is a girl’s best friend. Some women use a lot and some use a little, whatever your preference, most of us love it and use it on a daily basis. Unfortunately no one ever teaches us how to apply makeup and makeup 101 is not taught in school, so we may not learn good application habits and tricks that can really make a difference in how the cosmetics look on our face.

Women have different needs, at different ages. A woman of 25 will not need the same coverage as one that is 35 years of age or older. Foundation makeup comes in many forms, including age-defying and lighter coverage types. It is important to choose one that fits your needs.

Also, there is skin type, if you have oily skin choose one that is made for oily skin, for dry skin an extra moisturizing one will work best and will help to prevent the problems commonly associated with different types of skin.

(Artificial Intelligence A.I.)

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்ஸும் ஜல்லியடித்தலும்

மோகன்தாஸ்

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence A.I.)

இது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ளக் குறையாமல் விஷயங்கள் வந்து குவியும். நான் கணிணியியல் படிக்கத்தொடங்கியதும் என்னைக் கவர்ந்த ஒரு மிக அற்புதமான பிரிவு இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். இதைப் பற்றியும் கொஞ்சம் ஜல்லியடித்துவிட்டு போகலாமென்றுதான் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

இயந்திரங்களையும் சுயமாக அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைக்க நடக்கும் ஒரு அறிவியல் சார்ந்த முயற்சியே இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். மிக முக்கியமாக கணிணியை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்க முயற்சி என்றே கூறலாம். கணிணி கண்டுபிடித்த தொடக்கத்திலேயே இது சம்மந்தமான ஆராய்சிகளும் தொடங்கிவிட்டது. மனிதனைப்போலவே, இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கவே இந்த முயற்சிகள் பெரிதும் செய்யப்பட்டன.

80 களில், இது சம்மந்தமான முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அதிக அளவில் பொருள் செலவழித்தது. அதைப்போலவே ஜப்பானும் ஐந்தாம் தலைமுறை கணிணி (Fifth Generation Computer) என்ற பெயரில் இது சம்மந்தமான முயற்சிகளை அதிக பொருள்செலவில் ஊக்குவித்தது. ஆனால் இவை அந்த அளவிற்கு வெற்றிகளைக் குவிக்காததால், இதற்கான ஃபண்ட்ஸ்(Funds) விரைவில் குறைத்துக்கொள்ளப்பட்டது.

கணிணிகள் தற்சமயம் வரை நாம் செய்யச் சொன்னது போலச் செய்யுமே ஒழிய தானாக சிந்திக்கவோ இல்லை முடிவுகளை எடுக்கவோ செய்யாது. வேண்டுமானால் ஒரு பிரச்சனை சார்ந்த விஷயத்திற்கு மனிதனைப்போல சிந்திக்க கணிணிகளை பழக்கப்படுத்த முடியும். இதற்கு தற்சமயத்தில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பயன்படும் சில துறைகளையும் அது எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் புரிந்துவிடும்.

தற்பொழுது இருக்கும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் முறைகளில் கணிணி தானே சிந்தப்பது என்பதற்கு அது பிரச்சனை சார்ந்து, அதிகம் தனக்குத்தானே கணக்கிட்டுக்கொண்டு முடிவு எடுக்கிறது எனக் கூறலாம். உதாரணமாக செஸ் ஆட்டத்தை எடுத்துக்கொள்வோம் இதில் கணிணி எப்படி விளையாடுகிறது, எப்படி கணக்கிடுகிறது என்பதைப் பார்த்தோமானால் கணிணி எப்படி தானாய்ச் சிந்திக்கிறது அல்லது தானாய் எப்படிச் சிந்திக்க வைத்தார்கள் என்பதை அறியலாம். முதலில் நாம் 8 குயின் பிராப்ளம் (8 queen problem or n queen problem) என்ற ஒரு முறை உண்டு அதைப்பார்ப்போம்.

செஸ் ஆட்டத்தில் இராணியின் நகர்வுதிறன் உங்களுக்கு தெரிந்திருக்கும், தான் இருக்கும் இடத்திலிருந்து நேராகவும் குறுக்காகவும் நகர முடியும் ராணியால். மொத்தம் 64 கட்டங்கள் கொண்ட செஸ் அட்டையில், ஒரு இராணியின் ஆளுமையை(நேராகவோ, குறுக்காகவோ) மற்றொரு ராணி மறிக்காமல் மொத்தம் எட்டு ராணிகளை வைக்க வேண்டும். இன்னும் சுலபமாக சொல்லவேண்டுமானால் ஒரு செஸ் போர்டில் எட்டி ராணிகளை ஒன்றையொன்று வெட்டாமல் வைக்க வேண்டும்.

இப்படி வைப்பதற்கு கணிணி முறையில் ஒரு கொள்கையை பயன்படுத்துகிறார்கள், அது பேக் டிராக்கிங்(Back Tracking), அதாவது முதலில் ஒரு ராணியை போர்டில் வைத்துவிடுகிறோம் பின்னர், அடுத்த ராணியை வைப்பதற்கான முயற்சியில் கணிணியானது முதலில் தான் எங்கே அந்த ராணியை வைக்க முடியும் என சிந்திக்காமல் எங்கெல்லாம் வைக்க முடியாது என சிந்தப்பதை தான் பேக் டிராக்கிங் என அழைக்கிறார்கள். இதன் காரணமாக அடுத்த ராணியை எங்கு வைப்பது என கண்டுபிடிப்பதில் நமக்கு ஆகும் கணக்கிடுதலின் பணி குறையும். (The backtracking method is based on the systematically inquisition of the possible solutions where through the procedure, set of possible solutions are rejected before even examined so their number is getting a lot smaller. )

கீழே உள்ளதும் இது போன்ற ஒன்றுதான் இது தானாகவே ஒன்றிலிருந்து அடுத்தது என எட்டு ராணிகளை வைக்கும் ஒரு ப்ரோக்கிராமே. நெக்ஸ்ட் ஸொல்யூஸனைக்(Next Solution) கிளிக்கும் பொழுது புதிது புதிதாக எத்தனை முறைகளை (எட்டு ராணிகளை வெட்டாமல் வைக்கும் முறை) பாருங்கள். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுதப்பட்டது கிடையாது.

இதை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸின் முதல் படி எனலாம். இப்படி அடுத்த ராணியை வைப்பதற்கு முன் முறைப்படி நிராகரிக்கவும் பின்னர் அடுத்த வைத்தலைப்பற்றிய கணக்கையிடவும் கணிணிக்கு சொல்லிவிட்டால் கணிணியால், ஒன்றன் பின் ஒன்றாக எட்டு ராணிகளை வைக்க முடியும் இதுதான் முதல் பரிமாணம் கணிணியில் செஸ் ஆட்டத்திற்கு.

இதைப்போலவே உண்மையான செஸ் ஆட்டத்திற்கான கணக்கு முறையும் இப்படித்தான் தொடங்கும் முதலில் எங்கெல்லாம் வைக்க முடியாது எனப்பார்ப்பது. பின்னர். ஏற்கனவே தன் நினைவில் இருக்கும் நகர்த்துதளின் படி அடுத்த நகர்தலை தேர்ந்தெடுப்பது போன்றவைதான் ஒரு தேர்ந்த சதுரங்கக்கணிணியை உருவாக்குகிறது. அதாவது இந்த வகை ஆர்டிபிஷியல் இன்டெலிஜனஸ் கணிணிகள் முன்னால் நடந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும், அதாவது முன்னர் விளையாடிய ஆட்டத்தின் நகர்தலை.

கீழே உள்ளதும் ஒரு சதுரங்கக் கணிணியே இதில் நீங்கள் முதலில் நகர்த்த வேண்டும் பின்னர் கணிணி எவ்வளவு கணக்கிடுகிறது எனப்பார்க்கலாம். தன்னுடையதையும்(பிராஸஸர்) நம்முடையதையும். அது போடும் பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் அது சிந்திக்கும் அடுத்த நகர்த்தல்கள்.இது ஒரு முழுமையான சதுரங்கக்கணிணி கொஞ்சம் சிந்தித்து விளையாடினால் இதை வெல்லலாம். ஆனால் போன பதிவில் சொன்னதைப்போல டீப்புளு போன்ற உலக வல்லுநர்களையே தோற்கடிக்கும் சதுரங்கக்கணிணிகள் புழக்கத்தில் உள்ளன.

கையெழுத்தை உணர்ந்து கொள்வது(handwriting recognition), பேசுவதை உணர்ந்து கொள்வது(speech recognition), முகங்களை உணர்ந்து கொள்வது(speech recognition), இமேஜ் பிராஸஸிங்(Image Processing), பிறகு நம் அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு சம்மந்தமான ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(Game AI).

இந்த ஒவ்வொரு துறையுமே ஒவ்வொரு பெரிய கடலைப்போன்ற ஆராய்ச்சிகளை தன்னுள் அடக்கியது. கையெழுத்தை உணர்வது என்று வைத்துக்கொண்டால், நீங்கள் எழுதும் எழுத்தையோ இல்லை வார்த்தையையோ, தன்னிடம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் வார்த்தைகளஇடம் ஒப்பிட்டு கண்டறிவது. இதைப் போலவே முகங்களை அறிவதும், பேசுவதை அறிவதும் பாட்டர்ன் ரெககனைசிங்(Pattern Recoginition) சொல்லப்படும் இந்த ஒப்பிடுதல் முறைகளால் நடைபெறுகிறது.

இதைப் போலத்தான் இமேஜ் பிராஸஸிங் அதாவது ஒரு இமேஜை இன்புட்டாகக் கொண்டு செய்யப்படும் எல்லா வேலைகளுமே இதில் அடங்கும், இமேஜ்கள் சிக்னல்களாகவோ, புகைப்படங்களாகவோ, இல்லை இரண்டு பரிமாண திரைப்படங்களாகவோ இருக்கும். அந்த இமேஜ்களை இருப்பதை விடப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல், சுழற்றுதல், காணப்படும் வண்ணங்களை மேம்படுத்துதல், ஒப்பிடுதல், ஒலியில் இருக்கும் இரைச்சலைக் குறைத்தல் போன்றவைகள்தான் முக்கியமானது.

இதனால் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது சில அல்லது பல அரிய சூத்திரங்களை கணிதமுறைகளைப் பயன்படுத்தி கணிணியை ஓரளவு சிந்திக்க வைப்பது. ஆனால் மனித அளவுக்குச் சிந்திக்க முடியாததற்கு காரணம் இதுவரை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸில் இருக்கும் முறைகளின் அடிப்படைகளிலேயே பிரச்சனையிருப்பது தான்.

Computability and computational complexity theories are relevant to AI but don’t address the fundamental problems of AI. Intelligence is the computational part of the ability to achieve goals in the world. The problem is that we cannot yet characterize in general what kinds of computational procedures we want to call intelligent.

The ultimate effort is to make computer programs that can solve problems and achieve goals in the world as well as humans. However, many people involved in particular research areas are much less ambitious. A few people think that human-level intelligence can be achieved by writing large numbers of programs of the kind people are now writing and assembling vast knowledge bases of facts in the languages now used for expressing knowledge. However, most AI researchers believe that new fundamental ideas are required, and therefore it cannot be predicted when human level intelligence will be achievedhttp://imohandoss.blogspot.com/2005/11/blog-post_09.html

படுத்தல் பேர்வழியும் பாழாய்ப் போன தொலைபேசியும்!

தெரியாத்தனமாய் யாராவது வில்லங்கமான ஆளுக்குக் கடன் கொடுத்து விட்டால், அதன் பிறகு அவருக்கு போன் போடும்போதெல்லாம் எப்படிப்பட்ட பதில்கள் வரும் என்று அனைவரும் அறிந்து கொள்ளவே, மிகுந்த சமூக அக்கறையோடு இந்தப் பதிவு இடப்பட்டுள்ளது.

அனைவரும் படித்துப் பயன் பெறவும்.
வாங்கிய கடனைத் திருப்பித் தர விரும்பாத நபர்கள் தொலைபேசியில் எப்படியெல்லாம் பேசி கடனளித்தவர்களைப் பைத்தியமாக்குவார்கள் என்று பார்ப்போம்.
ட்ரிங்க்…ட்ரிங்க்…ட்ரிங்க்…ட்ரிங்க்…ட்ரிங்க்…ட்ரிங்க்…ட்ரிங்க்…ட்ரிங்க்…!
அடுத்து வரப்போவது இதில் ஏதாவது ஒரு பதிலாக இருக்கலாம்……..
1. வணக்கம்! மென்டல் ஆஸ்பத்திரி தான்! எப்போ வர்றீங்க?
2. நன்றி! உங்களது பெயர்,முகவரி, கிரெடிட் கார்டு விவரங்களைத் தெரிவிக்கவும்.
3. மன்னிக்கவும்! இது போனே கிடையாது.
4. நீங்கள் டயல் செய்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை.
5. சொல்லுங்க, எவ்வளவு கிலோ புண்ணாக்கு வேணும்?
6. நான் சுவாமி பிரேமானந்தா பேசறேன்!
7. நீங்களா? போன மாசம் ஆக்ஸிடெண்டுலே செத்தது நீங்களா உங்க அண்ணனா?
8. அவர் குளிச்சிட்டிருக்காரு! ரெண்டு நாள் கழிச்சுத் திரும்பக் கூப்பிடறீங்களா?
9. இந்த நம்பர் எப்படிக் கிடைச்சது? இது எனக்கே தெரியாதே!
10.மூணு ப்ளேட் இட்டிலி, ரெண்டு மசாலா தோசை அனுப்புங்க!
11.வீட்டுலே யாருமே இல்லை!
12.இப்போது ஹாங்-காங் நேரம் இரவு 12 மணி 47 நிமிடம்
13.எனக்குப் பன்றிக்காய்ச்சல்! ஒரு மாசம் கழிச்சுக் கூப்பிடுங்க!
14.உங்களது ராசிக்கான பலன்! எதிர்பாராத விபத்து!
15.நான் ஒசாமா பின் லேடன் பேசறேன்! யார் வேணும்?
16.மன்னிக்கவும்! நான் செத்துப்போய் ரெண்டு நாளாச்சு!
17.வணக்கம்! இது நரகம்! கும்பீபாகமா அந்தகூபமா? எதுக்கு ரிசர்வ் பண்ணனும்?
18.ஒரு செகண்ட் ஹோல்ட் பண்ணுங்க! ஒரு மணி நேரத்திலே வந்து பேசறேன்.
19.வணக்கம்! இது மாநகராட்சி!! காய்ச்சிய தண்ணீரையே குடிக்கவும்!
20.முனியாண்டி விலாஸ்! எத்தனை ப்ளேட் வேணுங்க?
21.நீங்கள் டயல் செய்த எண்ணை தொடர்ந்து மறுடயல் செய்யவும்.
22.ஆண்கள் அழகு நிலையம்! நீங்கள் வழுக்கையா சொட்டையா?
23.உங்கள் தொலைபேசி கண்காணிக்கப்படுகிறது!
24.தமிழில் உரையாட எண் ஒன்றை அழுத்தவும்! ஆங்கிலத்தில் உரையாட….
25.அட, நான் அமெரிக்காவிலே இருக்கேன்னு உனக்கு எப்படித் தெரியும்?
26.எங்களிடம் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் இன்னொன்று இலவசம்.
27.பில் கேட்ஸ் கிட்டேயிருந்து ஒரு ஐ.எஸ்.டி வரும்! அப்புறமாக் கூப்புடுறியா?
28.சிலிண்டர் சப்ளை இல்லீங்க! உங்க சர்வீஸ் நம்பர் சொல்லுங்க!
29.நான் குதிருக்குள்ளே இருக்கேன்! எதுவுமே காதிலே விழலை!
30.கடனா? நான் முன்னே பின்னே தெரியாதவங்களுக்குக் கொடுக்கிறது கிடையாது!
இடுகையிட்டது தமிழன் வேணு நேரம் 9:53 AM

kingdom of Saudi Arabia Ministry of Health

kingdom of Saudi Arabia
Ministry of Health
King Abdullah Medical City in Holy Capital
Human Resource Department
المملكة العربية السعودية
وزارة الصحة
مدينة الملك عبدالله الطبية بالعاصمة المقدسة
إدارة الموارد البشرية
Tel. No: +966 2 566 4475 Fax No: +966 2 566 4663 E-mail address: kamc-rec@kamc.med.sa
Page 1 of 1
To whom it may concern:
List below are the Positions needed by King Abdullah Medical City in Holy Makkah, Saudi Arabia.
• Clinical Instructors/ Charge Nurse/ Supervisors
• Staff Nurses (Male/Female)
o Oncology
o Medical
o Endoscopy
o Surgical
o ICU
o Day Care
o Operating Theatre
o Opthalmology/ ENT
o Out Patient Clinics
• Pharmacist
• Physiotherapist
• Respiratory Tech.
• Anesthesia Tech
• OR Technician
• EEG /EMG Tech
• MRI Tech.
• Radiotherapy Tech.
• Optometrist
• X-Ray Technicians
• EMT
• Endoscopy Tech.
• Audiology Tech
• Med. Lab. Tech.
• Dietician/ Nutritionist
• Echo Cardiographer
• CSSD Supervisor/ Technicians
• Nuclear Medicine Tech.
• Med. Photographer
• Med. Secretary
• Med. Records Tech
• Med. Transcriptionist
• Statistician
• Data Encoder
Note: Exclusively Muslims Only
Thank you!

URGENTLY REQUIRED FOR KING ABDULLAH MEDICAL CITY MECCA / MADINA ( HOLY CITIES ) IN K.S.A.

URGENTLY REQUIRED FOR KING ABDULLAH MEDICAL CITY MECCA / MADINA ( HOLY CITIES ) IN K.S.A.

FREE & DIRECT RECRUITMENT FOR MINISTRY OF HEALTH

CONSULTANTS / SPECIALISTS / RESIDENTS FOR FOLLOWING SPECIALITY

● chemotherapy

● breast and endocrine surgery

● retinal surgery

● chest and mamography

● pediatric oncology

● intensive care

● neuro opthalmalogy

● endocrinology

● haematology

● chest and mammography

● glaucoma

● nephrology

● nuclear medicine

● endocrinology

● uveitis

● ophthalmology

● radiotherapy

● general medicine

● paranasal sinus surgery

● cardiology

● advanced laparoscopic

surgery

● emergency medicine

● head and neck oncolgy

surgery

● general surgery

● upper gastrointestinal

and hepatobiliary surgey

● radiology (invasive/gen)

● ent surgery

● anesthesia

● lower gastrointestinal

surgery

● occulo plastic surgery

● communication disorders

● gastroenterology

● invasive gastroenterology

● pain management

● audiology

● histopathology

● infectious diseases

QUALIFICATION / EXPERIENCE – WESTERN / FELLOWSHIP/ EQUALANT INDIAN QUALIFICATION WITH MINIMUM 3YRS EXPERIENCE AFTER SUB SPECIALITY

ALLIED MEDICAL TECHNOLOGIST

● blood bank

● hematology

● mycology

● physio therapy

● immunology and serology

● microbiology

● virology

● clinical nutrition

● clinical chemistry and Hormones

● parasitology

● medical physicist

clinical pharmacist

SPECIALIST

● dosimetrist

● occulo plastic

● infection control

● specialist physio therapy

● optometrist

● radiology specialist I

● specialist I sterilization

● senior paramedic

● echo grapher

● radiology specialist

● specialist I physio therapy

● paramedic specialist I

QUALIFICATION + EXP. – Ph.D WITH 5 YRS EXP FOR CONSULTANTS AND MASTERS DEGREE WITH 2-3 YRS FOR SPECIALISTS

TECHNICIAN

● nuclear medicine

● photographer

● laboratory tech

● operating thearter Tech

● endoscopy technician

● audiology

● paramedic tech

● sterilization tech I

● respiratory technician

● speech language pathology

● senior anesthesia Tech

● nutrition tech I

● radiology Tech

● anesthesia Tech

● physio therapy tech I

● senior clinical pharmacist

● pharmacist assistant

● clinical pharmacist

● senior pharmacist

●pharmacist

QUALIFINCATION : Ph.D. / MASTERS / BACHELORS DEGREE / GOVT. RECOGNISED 2 YEARS DIPLOMA + 2 TO 5 YRS EXPERIENCE IN RESPECTIVE AREA

NURSING

● NURSE EDUCATORS (M.Sc. Nsg), ● NURSE CLINICIANS (M.Sc. Nsg) ● NURSE MANAGERS (M.Sc. / B.Sc. Nsg. FOR VARIOUS WARDS / DEPTS.)

● CHARGE NURSES (M.Sc. / B.Sc. Nsg FOR VARIOUS WARDS / DEPTS ) ● STAFF NURSES – I (M.Sc. Nsg). + 1YR EXPERIENCE IN VARIOUS WARDS / DEPTS .

● STAFF NURSES – 2 (B.Sc. Nsg. + 1 YR EXPERIENCE IN VARIOUS WARDS / DEPTS) ● STAFF NURSES – 3 (DIPLOMA + 2 YR EXPERIENCE IN VARIOUS WARD / DEPTS)

QUALITY MANAGEMENT

consultant

specialist non medical

specialist health care management

medical specialist

specialist medical management

specialist documents management

data management specialist

specialist environmental risk management

specialist medical coding

QUALIFICATION : MD / MBBS / BDS/ M.Sc / B.Sc.(Nsg) / NURSING + DIPLOMA IN TOTAL QUALITY MANAGEMENT, QUALITY, SAFETY , RISK ETC. WITH MIN 3 YRS EXPERIENCE

QUALIFICATION : MD / MBBS / BDS/ M.Sc / B.Sc.(Nsg) / NURSING + DIPLOMA IN TOTAL QUALITY MANAGEMENT, QUALITY, SAFETY , RISK ETC. WITH MIN 3 YRS EXPERIENCE

● SHORTLISTING IN PROGRESS FOR CLIENT FINAL INTERVIEW DURING JULY’ 2009 3RD / 4TH WEEK. ● INTERESTED CANDIDATES MAY

CONTACT WITH THE DETAILED CV, SUPPORTED WITH TESTIMONIALS / 2 RECENT REFERENCE LETTERS, PHOTOGRAPHS, COPY

OF PASSPORT ETC. TO :

Contact Person : JERRY VARGHESE CONSULTANTS

Ms. Prabha /Tabitha

C/o. 496, Ground Floor, 15th Cross, IInd Stage, BDA-Park,

Indira Nagar, Bangalore – 38

Tel : 080 – 25286250 / 25256640

prabha@jvi-global.com

MORE OTHER HEALTHCARE RELATED VACANCIES IN GULF COUNTRIES EXPECTED SOON……….

CHECK OUR WEBSITE : http://www.jerryvarghese.com, more existing and future jobs register with http://www.jerryvarghese.com/applyonline

Veiled Women in the White House

Veiled Women in the White House
By Maryam Bachmeier
Psychologist, Counselor, Writer – U.S

What if the women in the White House were veiled?

Can you imagine if women in the U.S White House all decided to veil themselves? What would the world think? What would Muslim countries think? For those of you who are old enough, there was a saying in the 1960’s when feminists decided to make a statement. They all got together and burned their bras. It certainly made a statement, but to this day, I am not quite sure what that statement was. I don’t see how it helped women get women’s rights…or even the equal rights that they claimed to want. We do know that the feminists want “Equal Rights”. And what does that do for women? I guess this means we have the right to have all the responsibilities that a man used to have, and of course, we are not able to let go of the women’s responsibility. Even our very nature won’t let us. We love our children and our families, and we are very relationship oriented. We are not like men. Now we spend our energies surviving the harshness of a man’s world while still trying to hold on to community building a relationship, and nurturing the “women’s” work. Would veiling ourselves send a message to the world? Would it suggest the idea of women’s rights, instead of equal rights? The Shari`ah gives women their rights. Let’s analyze the possible pros and cons and just imagine.

Pros:
Women would have role models, and be exposed and open to Islam
Being veiled would become an “acceptable behavior” in western culture and society

.

Veiled women would not be considered as inferior, or “subservient” with their inability to think for themselves. This stigma and false belief would be removed.

Women might even be given the queenly status that they deserve… a veiled woman is a Lady

The message that women interns who are interested in politics, would not be used as sexual objects, and their actual intellectual abilities might be noticed.

The West might consider that there is a God after all, and that morality might be important, after all, there are women in the White House who seem to insist this is true.

Women in high positions might actually be given more respect. As I just mentioned, a veiled woman is a Lady… and a Lady in a position of power is a “Queen”.

Political positions would not longer be won based on feminist issues, but, the voters would rather pay more attention to the candidate’s actual policies.
Women in the White House would not be in beauty competitions (whether by choice or by force). Look at what is happening between Lady Obama and Super Star Oprah! They are having an outright cat fight, how embarrassing for the American who wishes to appear dignified!

.

If women perceived veiling as a sign of dignity, self worth, and respect, and saw this modeled in the White house, their own self image would change. We would expect more from our men, and we would be silently sending a powerful message to our men to treat us as ladies, rather than be encouraged to be sexual objects in the name of feminism. We would have a new generation of American Ladies.

Cons:

Ok, you know I am biased. I am a religious Muslimah. I must give you my disclaimer, and admit that this article is bent on encouraging women to cover up. But even still, I am sure that if we began to veil ourselves in the White House, initially, there would be some problems.

Many political groups across America would protest and claim that we are now a fascist country trying to force everyone to join the religion of Islam

This would likely evolve into rioting and possibly worse, and may even increase terrorism

The very strong feminist/political population would be extremely opposed to it, and might even try to make legislation against women being veiled. This would take the Muslims’ legal freedom to wear hijab away.
The can of worms relating to the religion’s teaching that a woman is supposed to obey her husband would be open. This would lead to the religion of Islam being attacked vehemently by those who are opposed to such notions.

.

I hate to admit this, but I fear that if political women, and women in the White House openly wore hijab or were veiled, that Muslim women might be in life threatening danger. I believe that some fanatics might actually murder some of us to make a point. Those of us who are just ordinary Muslimas here in the US are wearing hijab out of choice, and are often criticized, and we are threatened, and even I am sometimes afraid. If these were in the political and public arena, it might even be worse.

The women might be accused of sneaking weapons or bombs and be stripped searched.

Ok, it is highly unlikely that women in the U.S. White House are going be veiled any time soon. But sisters, we do need to raise the consciousness of the world. One sister at a time. The more of us who are brave enough to cover properly, the more it will become the norm and accepted within the U.S. culture. Please, I do encourage all of you to wear hijab and read the Qur`an and dress exactly as it suggests women dress. We will no longer appear strange to others in our communities, and we will be treated as the ordinary individuals that we are. It won’t happen, unless we do it. And who know? Maybe one day, women will veil in the White house!

When you take a look, since Obama’s presidency has increased the acceptance of people dressed in Islamic clothing in public. The American awareness that Islam does not equal terrorism, and that it is actually a Religion of Peace is increasing. Given this hopeful development, there are still many people and groups of people who have islamaphobia, and many Muslims, both men and women are afraid to dress Islamically in public.

Additionally, many women worldwide are “unveiling. Some of this behavior is a reaction to unjust and oppressive civil and/or governmental situations and these sisters believe they are fighting for their right as women. They could not be more misguided for they are discarding the right of a woman to be protected. The hijab is protective both literally, and symbolically. It shows that she is a religious woman, and that she has a strong Imam, and the Power of Allah is with her. In other words “don’t mess with a veiled woman!” The sister who do not wear hijab for political reasons, have generalized unfair practices and twisted interpretations of the Shari`ah to their Islamic modesty and the laws about that that were put their for the woman’s good. The political propaganda has caused the practice of covering to be a symbol of subjugation to maltreatment of men. Women veiling in the White House could change this perception!

Oh I forgot, Dalia Mogahed… We do have a veiled woman in the Whitehouse!

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!
நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை
மட்டுமே உள்ளது என்பதை
மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS
HOPKINS) சொல்கிறார். இங்கே
உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண
டெஸ்டில் தெரிய வராது, அவை
சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர்
சிகிச்சைக்குப் பின், டாக்டர்
நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான
அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில்
உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று
மட்டுமே எடுத்துக் கொள்ள
வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான
செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக
இருக்கும்போது கேன்சருக்கான செல்
அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்
(tumors) ஏற்படுவதற்கான
வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து
குறைபாடு (nutritional
deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு
மற்றும் வாழ்க்கை முறை
காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து
குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான
சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை
மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை
போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும்
குடல், கிட்னி, இதயம்,
மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான
செல்கள், உறுப்புகள்,
திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின்
(tumor) அளவைக் குறைக்க
செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை
கேன்சர் கட்டியினை அழிக்க
பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு
மூலம் நோய் எதிர்ப்பு
சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது
அழிக்கப் பட்துவிடும். இதனால்
மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள்
எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில்
அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள்
மற்ற இடங்களில் பரவ ஒரு
காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள்
பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை
நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக
நேரமும் எடுத்துக்
கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது.
ஜீரணமாகாத இறைச்சியானது
குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே
இறைச்சி சாப்பிடுவதை
தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது
சக்தியை கேன்சர் செல்லின்
கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body’s own killer
cells) கேன்சர் செல்லை
அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs
etc, போன்றவை
நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body’s
own killer cells) மூலம்
கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள
பாதிக்கப்பட்ட, தேவையற்ற
செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like
vitamin E are known to
cause apoptosis, or programmed cell death, the body’s normal method of disposing
of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit)
நோயே! நேர்மறையான,
ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை
அளிக்கிறது. கோபம், மன்னிக்கும்
மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின்
அமிலத்தன்மையையும்
அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,
ஆசுவாசப்படுத்திகொள்ளவும்,
வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை.
தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த
சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது.
மூச்சுப் பயிற்சியானது
(Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை
தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு
தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள
NutraSweet, Equal,
Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும்
பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை
எடுத்துக் கொள்ளலாம். Table
Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக
Bragg’s amino or sea salt
போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல்
(gastro-intestinal)
பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக
இனிப்பில்லாத சோயாப் பாலை
எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான
உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.
எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு
சிக்கன் போன்றவற்றை எடுத்துக்
கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள்,
ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது,
இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு
தானியங்கள், விதைகள்,
பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில்
வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக
இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள
நொதிகளை அளிக்கிறது, இவை 15
நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர
உதவுகிறது. ஆரோக்கியமான
செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ்
மற்றும் ஒரு நாளைக்கு 2
அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes)
104 degrees F (40
degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை
தவிர்த்து விடவும். இதற்கு
மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர்
செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல்
உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக
கலவை அதிகமுள்ள குழாய் நீரை
தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்

கொடுங்கள்.. பெறுவீர்கள்!…

கொடுங்கள்.. பெறுவீர்கள்!….

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள்!!

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

Post Navigation

%d bloggers like this: