Karim74's Weblog

my articles

ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நா

ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ்‏

பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் பேச்லர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடி கள். அந்தவகையில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ் போன்றவற்றை தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். நன்கு சமைக்க தெரிந்த பெண்கள், இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’ என்று கூறுகிறார் கோவை பீளமேடு பாவை மசாலா நிறுவன உரிமையாளர் சாவித்திரி (49). அவர் கூறியதாவது:

கணவர் மற்றும் மகன் ஷார்ஜாவில் பணிபுரிகின்றனர். இங்கு பெற்றோருடன் வசிக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் கணவர் மற்றும் மகனுக்கு பாரம்பரிய உணவுகள் பிடிக்கும். அவற்றை சமைக்க தேவையான பொருட்கள் அங்கு கிடைக்காது. தேடிப்பிடித்து வாங்கினாலும் விலை அதிகம். எளிய முறையில் அவர்கள் சமைக்க ரெடிமேடு சாம்பார், ரசப் பொடி, பாயசம் மிக்ஸ்,வெஜிடேரியன், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து கொடுத்து வந்தேன். கணவர்,மகனின் வருமானத்தை சார்ந்து இருக்காமல் சுயமாய் சம்பாதிக்க, தொழில் துவங்க எண்ணினேன். தெரிந்ததை தொழிலாக செய்தால் எளிதில் வெற்றியடையலாம் என்பதால் முதலில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி, சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து விற்றேன்.

பேச்லர்கள், குடும்ப பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பாயசம் மிக்ஸ், சாம்பார், மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகுத்தூள் தயாரித்து விற்றேன். ஒவ்வொரு முறையும் ருசி, தரம் பரிசோதித்த பின்னரே விற்க அனுப்புகிறேன். சுவை, ஆரோக்கியம்,குறைந்த லாபம் ஆகியவற்றை லட்சியமாக கொண்டுள்ளதால் நிரந்தர விற்பனை உள்ளது. பெண்கள் தங்கள் சமையல் திறமையை தொழிலாக மாற்றினால் நமது பாரம்பரிய உணவுப் பழக்கம் பல தலைமுறைக் கும் தொடரும். தொழிலும் லாபகரமாக இருக்கும்.

முதலீடு: அரிசி மற்றும் தானிய மசாலா பொருட்களை கல், மண் இல்லாமல் சுத்தம் செய்ய கிளீனிங் மெஷின் ரூ.25 ஆயிரம், மசாலா பொருட்களை வறுக்க பிரையிங் மெஷின் ரூ.75ஆயிரம். அவற்றை பொடியாக்க கிரைண்டிங் மெஷின் ரூ.20 ஆயிரம், அவற்றை பாக்கெட் போட பேக்கிங் மெஷின் ரூ.1 லட்சம் என ரூ.2.2 லட்சம் தேவை.

கட்டமைப்பு : மெஷின்கள் அமைக்க 30க்கு 20 அடி இடமும், பொருள்களை இருப்பு வைக்க ஒரு அறையும், அலுவலக தொடர்புக்கு ஒரு அறையும் போதும்.
மூலப்பொருட்கள் : சீரகசம்பா அரிசி, சேமியா, மல்லி, மிளகாய், மிளகு, மஞ்சள் மற்றும் வாசனைப்பொருள்கள். பலசரக்கு பொருள் கள் விருதுநகரிலும், வாசனைப்பொருட்கள் மதுரையிலும், மிளகு நீலகிரி, கூடலூரிலும் குறைந்த விலையில் கிடைக்கும். அவ்வப்போது நிலவும் விலை நிலவரத்துக்கேற்ப மற்ற இடங்களிலும் இந்த பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

உற்பத்தி செலவு: மாதம் தலா அரை கிலோ கொண்ட 2 ஆயிரம் வெஜிடேரியன் மிக்ஸ், 2ஆயிரம் சிக்கன், மட்டன் பிரியாணி பாக்கெட், ஆயிரம் பாயசம் மிக்ஸ் பாக்கெட்கள் மற்றும் தலா500 கிலோ மஞ்சள் தூள், மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, 300 கிலோ மிளகாய் தூள் பாக்கெட்கள் தயாரிக்கலாம். இதற்கு மூலப்பொருட்கள் செலவு,6 வேலையாட்கள் சம்பளம்,மின்கட்டணம், வாடகை, போக்குவரத்து உள்பட உற்பத்தி செலவுக்கு ரூ.5.7 லட்சம் தேவை.

மாதம் ரூ.85 ஆயிரம் லாபம்

மாதம் உற்பத்தியாகும் ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பொருளுக்கு, உற்பத்தியாளருக்கான லாபம்10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கிடைக்கும். இதன் மூலம் ரூ.57 ஆயிரம் முதல் ரூ.85ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். விற்பனை செய்யப்படும் பாக்கெட்கள் ஸ்டாக்கிஸ்ட்கள் மூலம், டிஸ்ட்ரிபியூட்டர்கள் வழியாக சில்லரை கடைகளுக்கு சென்றடைகிறது. 3 பேருக்கும் தலா 15 சதவீதம் லாபம் வரும் வகையில் கொடுக்கப்படுவதால் மார்க்கெட்டிங் எளிதாகிறது.

10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்கலாம்

சமையல் சுத்தமாய் தெரியாதவர்கள்கூட பேச்லர் பிரியாணி மிக்ஸ் மூலம் எளிதில் 10நிமிடத்தில் பிரியாணி தயாரிக்க முடியும். அரை கிலோ பிரியாணி மிக்ஸ் உடன் அரை கிலோ சிக்கனோ, மட்டனோ சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கிவிடவும். இவை 10 நிமிடத்தில் முடிந்துவிடும். பின்னர் நெய் ஊற்றி கிளறினால் சுவையான பிரியாணி ரெடி. சிக்கன், மட்டனுக்கு பதில் காய்கறிகள் (கேரட், பட்டாணி, பீன்ஸ்) பயன்படுத்தினால் வெஜிடேரியன் பிரியாணி தயாராகிவிடும். ரெடிமேடு பிரியாணி மிக்ஸ் சமைப்பதற்கு எளிதாக உள்ளதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.

தயாரிப்பது எப்படி?

வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ், பாயசம், சாம்பார் தூள்,மல்லித்தூள், மிளகுத்தூள் ஆகியவை தயாரிக்கலாம். ஒவ்வொரு பொருள் தயாரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களின் அளவுகள், ஒவ்வொருவரின்…

Fwd: Fw: Fwd: Preparing for Exams-1930s

Fwd: Fw: Fwd: Preparing for Exams-1930s – karim74@gmail.com – Gmail http://ow.ly/ljEBO ^AK

ஜி.டி.நாயுடு கண்டிப்புக்கு பெயர் பெற்றவர

ஜி.டி.நாயுடு கண்டிப்புக்கு பெயர் பெற்றவர். அவரது பஸ் கம்பெனி நிர்வாகிகளில் ஒருவராக பணியாற்றினேன். அவரது பஸ் ஸ்டாண்டில், சட்ட திட்டங்கள் குறித்து எழுதி வைத்திருந்த போர்டுகள் வினோதமானவை…’ என்று அவர் கூறியதாவது:
* உள்ளே போகும் வழி!
* ஒவ்வொரு பயணியும் டிக்கெட் வாங்கிய பின், எந்த பஸ்சுக்கு வாங்கி இருக்கின்றனரோ, அந்த பஸ் புறப்படுவதை ஜாக்கிரதையாகக் கவனித்து, அந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும். அவ்விதம் அந்த பஸ்சை தவறவிட்டு விட்டால், யாதொரு காரணத்தைக் கொண்டும் டிக்கெட் பணம் வாபஸ் கொடுக்கப்பட மாட்டாது.
* சில்லரை கொடுப்பதில்லை.
* பயணம் செய்பவர்கள் மாத்திரம் இவ்விடம் தங்க வேண்டும்; பயணம் செய்யாதவர்களை இவ்விடம் கண்டால், போலீசாரிடம் ஒப்புவிக்கப்படும்.
* கான்டீன்-இங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டும்.
* கை கழுவும் தண்ணீர்.
* குடிக்கும் தண்ணீர்.
* எந்த விதமான காரணத்தைக் கொண்டும், இவ்விடம் எச்சில் துப்பவோ, வாய் கொப்பளிக்கவோ கூடாது.
* இங்கு எங்காவது எச்சில் துப்பினால், அதை நீங்களே சுத்தம் செய்ய வேண்டும்.
* இங்கே சைக்கிள் நிறுத்தக் கூடாது; வேண்டுமானால் பின்னால் ஸ்டாண்டில் நிறுத்தவும்.
* எந்த வேலையும் காலி இல்லை.
* இன்று முதல் யாருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட மாட்டாது.
* ஒரு பொய் உன்னை வெளியேற்றி வீட்டுக்கு அனுப்பும்; ஒரு திருட்டு உன்னை ஜெயிலுக்கு அனுப்பும்.
* அஜாக்கிரதை, சோம்பேறித்தனம், சுத்தமாக செய்யாத வேலை, உன்னை பட்டினிக்கு இழுக்கும் அல்லது உன்னை வெளியில் போகச் செய்யும்.
* வெளியே போகும் வழி.
— இவற்றில் சிலவற்றையாவது தெற்கு ஆசியாவிலேயே பெரிய, பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் எழுதி வைக்கலாம்

ஐயா… கோர்ட்ட காணோமுங்க…’ கைதியுடன்

ஐயா… கோர்ட்ட காணோமுங்க…’ கைதியுடன் அலைந்த போலீசார்!
கோவை:ஐகோர்ட் நீதிபதிகள் முன்னிலையில், தமிழக அமைச்சர்களால் திறக்கப்பட்ட நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் தனிக்கோர்ட் ஆக மாற்றப்பட்டதால், நிலமோசடி வழக்கில் கைதானவரை ஆஜர்படுத்த முடியாமல் போலீசார் அலைந்தனர்.அ.தி.மு.க.,அரசு பொறுப்பேற்றதும் தி.மு.க.,ஆட்சி காலத்தில் நடந்த நில அபகரிப்பு வழக்குகளை விசாரித்து, அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தனிக்கோர்ட், தனி போலீஸ் பிரிவுகள் துவக்கப்பட்டன.
கோவையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக தி.மு.க.,உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். மோசடி பற்றி தனிக்கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரிக்க கோவையில் நில அபகரிப்பு மற்றும் நில மோசடி வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட் துவக்கப்பட்டது.ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவின்படி, தமிழக அமைச்சர்கள், ஐகோர்ட் நீதிபதிகள் முன்னிலையில் இக்கோர்ட் திறக்கப்பட்டது. வழக்குகளை விசாரிக்க நீதிபதி நியமிக்கப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான வழக்குகளை போலீசார் தாக்கல் செய்தனர். ஆனால், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராக, அரசு வக்கீல்கள் நியமிக்கப்படவில்லை. இச்சூழலில், நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் கோர்ட்கள் துவக்கப்பட்டது, சட்டத்துக்கு புறம்பானது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, இக்கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து, கோவை கோர்ட்டில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளும், தனிப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையும் நின்று போனது. பல மாதங்களுக்கு பிறகு, இக்கோர்ட்டில் பணியாற்றிய ஒட்டுமொத்த ஊழியர்களும் வெவ்வேறு கோர்ட்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.கோர்ட்டில் தலைமை ஊழியர் மட்டும் பணியில் இருந்தார். இச்சந்தர்ப்பத்தில் நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் கோர்ட் இடமாற்றம் செய்யப்பட்டு, இக்கட்டடம் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டாக மாற்றப்பட்டது.இதனால்,கோர்ட் தலைமை அலுவலரும் வேறு இடத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோவை கோர்ட் வளாகத்தில் நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் கோர்ட் செயல்படும் இடமே தெரியாமல் போனது.இச்சூழலில், நெருங்கிய உறவினருக்கு சொந்தமான 11 சென்ட் நிலத்தை தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டதாக கூறப்படும் புகார் தொடர்பாக, பட்டணம், மாருதிநகரை சேர்ந்த கோபால்செட்டியாரின் மகன் கிஷோர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இவரது உறவினர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

விசாரணைக்குப்பின், கிஷோரை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்த போலீசார், கோர்ட் வளாகத்துக்கு அழைத்து வந்தனர். நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் தனிக்கோர்ட் கட்டடத்துக்கு அழைத்து சென்றனர். அக்கட்டட சுவற்றில் தொங்கிய பெயர் பலகையை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்தவர்களை விசாரித்தனர். அவர்களும் நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் கோர்ட் எங்கு சென்றது என தெரியவில்லை என பதில் அளித்தனர்.குழப்பமடைந்த போலீசார், கோர்ட் வளாகத்தில் ஒவ்வொரு அறையாக தேடினர். இறுதியில் மகளிர் கோர்ட் அலுவலகத்தின் அருகில் ஒரு சிறிய அறையில் இரண்டு ஊழியர்களுடன் செயல்படும் கோர்ட் அலுவலகத்தை கண்டு பிடித்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், பெண் வக்கீல்கள் சங்கத்தின் கூட்டரங்கம் அருகில் மிகச் சிறிய அறையில்(மொபைல் கோர்ட் அலுவலகம் செயல்பட்ட) இருந்த நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தற்போதுதான் இக்கோர்ட்டின் பெயரை துண்டு சீட்டில் அச்சடித்து கதவில் ஒட்டியுள்ளனர்.புகாரை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இக்கோர்ட்டுக்கு இதுவரை அரசு வக்கீல் நியமிக்கப்படாததால், இதுபற்றி அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.டூ போலீசார், கோர்ட் வளாகத்தில் ஒவ்வொரு அறையாக தேடினர். இறுதியில் மகளிர் கோர்ட் அலுவலகத்தின் அருகில் ஒரு சிறிய அறையில் இரண்டு ஊழியர்களுடன் செயல்படும் கோர்ட் அலுவலகத்தை கண்டு பிடித்தனர்.

கசப்பு அமுதம் பாகற்காய் பாகற்காயின் கசப்

கசப்பு அமுதம் பாகற்காய்

பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறாக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும்.
இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.

பாகற்காய் எளிதில் ஜPரணமாகாது என்றாலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும். கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்குவது இதன் இயல்பாகும்.

பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை சிறிது உரைத்து சிரங்கின் மேல் நல்ல தடிப்பாக தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்று சிரங்கு உதிர்ந்து விடும். பாகற் காய் வேரை சந்தனம் போல அரைத்து நல்லெண்ணெய் – யில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும் புறமும் தடவி வந்தால் பெண்களுக்கு கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்குப் பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கண்கண்ட மருந்து.

கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும். பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும். பாகல் இலையை உலர்த்தி பீடி போல சுற்றிக் கொண்டு அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடி விடும்.

பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 1_2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நிரந்தரமாக குணம் ஆகும்.

அதுபோல 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் அதே அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்த முடியும்.
Net Sources……….
Engr.Sulthan

Fwd: FW: மாயமாகி வரும் மருத்துவ உலகம் -

Fwd: FW: மாயமாகி வரும் மருத்துவ உலகம் – karim74@gmail.com – Gmail http://ow.ly/lfndW ^AK

இதில் எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள்..

Infact this is otherwise in corporate hospitals! Doctors cut is a law rather than exception. It is their duty to fill up rooms, to engage all support devices like dialysis machines, scan centres etc, to keep all operation theatres engaged , so on and so forth and in return they receive commission. I heard of a kidney scan centre which charges 1000 Rs more to add stones in the report of a healthy person having no stones. Hospitals pay brokers who bring unsuspecting patients from rural areas.
Recently I was discussing this unethical practice with the trustee of a large hospital running a medical college. He was aware of these practices and said that one can expect these practices from a doctor who pays more than a crore of rupees during his study period of about 7 years, since he has to return his debts. The management has to be blind to these practices as otherwise doctors migrate to other adjustable hospitals! (AH to BH)
Select an MD General medicine, who has studied under government scholarship, aged above 50 and serves in a government hospital and make him your family doctor!
I used to go to such a doctor around 75 years old and belonging to a family of good doctors who never asked me to get any scan etc except simple blood tests.
One day I suggested him to refer me for a scan. He looked at my eyes for a few moments, and asked me whether I needed to throw away large amounts of money! He said that the body check he made on my tummy with his fingers under a lying position, the stethoscope test, the BP test, the hits he made on my legs near the feet, the deep look through my eyes etc made him decide 80 % of my disease; 15% came from the past history he was maintaining and from the blood tests. The last 5 % was in the realms of the Almighty. Since now he is not consulting (retired), I have switched over to a homeopath who did his homeopathy course after his MBBS and aged above 75. NO regrets!.

K A Rahiman
Coimbatore

———- Forwarded message ———-
From: Kizer Omar
Date: 2013/5/21
Subject: FW: மாயமாகி வரும் மருத்துவ உலகம்
To: Kaniyur Abdulrahman

மாயமாகி வரும் மருத்துவ உலகம்.By வாணிஸ்ரீ சிவகுமார்

First Published : 20 May 2013 01:57 AM IST

.எதுவும் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று கேட்கக் கூட முடியாத நிலைக்கு நோயாளிகளைத் தள்ளும் மாய உலகமாக, மருத்துவ உலகம் மாறி வருகிறது. இதில் எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள்.

பொதுவாக ஸ்கேன் என்பது இருவகைப்படும். சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். மற்றொன்று சி.டி. ஸ்கேன் (கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன்) என்பதாகும். இதில் முதல் வகை ஸ்கேனுக்கு குறைந்தது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது வகையான சி.டி. ஸ்கேன் என்பது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதற்கு என்ன காரணம் – சி.டி. ஸ்கேன் எடுக்கும் இயந்திரத்தின் விலை அதிகமோ, இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரம் என்பதாலோ, அதனை பராமரிப்பது கடினம் என்றெல்லாமோ நாம் கருதலாம். ஆனால் உண்மையில், சி.டி. ஸ்கேன்களின் விலை பல ஆயிரங்களைத் தொட்டதற்கு “ஒரு சில மருத்துவர்கள்’ மட்டுமே காரணம்.

ஒரு சி.டி. ஸ்கேன் எடுத்தால், அதற்கு 6 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் அதிகபட்சமாக 4 ஆயிரம் வரை சி.டி. ஸ்கேன் மையத்தால், மருத்துவர்களுக்குக் கமிஷனாக அளிக்கப்படுகிறதாம்! உண்மையிலேயே ஒரு சி.டி. ஸ்கேன் செய்ய வெறும் 1,500 ரூபாய் கூட போதுமாம். ஆனால், சி.டி. ஸ்கேனுக்கு பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கு அளிக்க வேண்டிய கமிஷன் தொகையுடன் சேர்த்துத்தான் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிக்கப்படுகிறது.

சி.டி. ஸ்கேன் மையங்களுக்கு கட்டணத் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே செல்கிறது. அதில்தான் மையத்தின் அனைத்துச் செலவுகளையும் நிர்வாகிகள் சமாளிக்க வேண்டும். நோயாளிகளிடம் இருந்து பறிக்கப்படும் கட்டணம், அதனைப் பரிந்துரைக்கும்…

Education in India. Most ‘First Class’

Education in India.

Most ‘First Class’ students get technical seats, some become Doctors and some Engineers.

* The ‘Second Class’ pass, and then get MBA, become Administrators and control the ‘First Class’.

* The ‘Third Class’ pass, enter politics and
Become Ministers and control both.

* Last, but not the least,
The ‘Failures’ join the underworld and
control all the above.

And those who do not attend any school, become
Swamis and Gurus and Everyone goes to them.

Career Path Finder…….GREATLY PRESENT

Career Path Finder…….GREATLY PRESENTED – very useful http://ow.ly/i/27lYO

முஸ்லிம்களின் கொள்கை இஸ்லாமா? தவ்ஹீதா? P

முஸ்லிம்களின் கொள்கை இஸ்லாமா? தவ்ஹீதா?
Posted: 13 May 2013 03:33 AM PDT
உலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை,

A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்)
B) இறைவன் இல்லை (நாத்திகர்)

இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும் இரு பிரிவினராகப் பிரிக்கலாம். அவை,

A-1 ஒரே கடவுள் நம்பிக்கை கொண்ட இந்து, முஸ்லிம், கிறித்துவர்கள், etc.
A-2 ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களில் நம்பிக்கை கொண்ட இந்து, கிறித்துவர்கள், etc.

ஒரே இறைவன் – படைத்தவனை ஒருமைப்படுத்துதல் – ஏக இறைவன் – என்ற கொள்கையினையே “ஏகத்துவம்/தௌஹீத்” என்ற பெயரில் முஸ்லிம்களாகிய நாம் பெரும்பாலும் அறியப் படுகிறோம்.

அதாவது “ஏகத்துவவாதிகள்” அல்லது “தௌஹீதுவாதிகள்” என்றதுமே அவர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான்; அவர்களின் கொள்கை இஸ்லாம் என்று முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம். இது சரியா என்பதே, இக் கட்டுரையின் கேள்விக்கு அடிப்படை.

இப்போது, “இறைவன் ஒருவனே” என்போரைக் குறித்து பார்ப்போம். இறைவன் ஒருவனே என்ற கொள்கை கொண்டோர் முஸ்லிம்கள் மட்டும் அல்ல; உலகில் வேறு சில மதத்தவரும் உள்ளனர் என்பதை நாம் மறுக்க இயலாது.

எளிய உதாரணம், நம் தமிழகத்தில் முன்னர் வாழ்ந்திருந்த, இப்போதும் காடு மலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள். இவர்களின் தெய்வ நம்பிக்கை என்பது, சக்தி ஒன்றுதான் என்பதே. தமிழிலேயே, “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்றொரு சொல் உண்டு. இந்தச் சொல்வழக்கு உருவானது சித்தர்களிலிருந்தே. எனில், இந்தச் சித்தர்களும் ஏகத்துவவாதிகள் தானே? இதுபோல், இறைவன் ஒருவன்தான் என்பதில் மிக உறுதியான நம்பிக்கை கொண்டு வேறு பலரும் உள்ளனர். உதாரணமாக, கிறிஸ்த்தவத்தில் “ஜெகோவா” பிரிவினர். இவர்கள், கர்த்தரை-இறைவனை ஜெகோவா என்ற பெயரில் அழைக்கின்றனர். அவர்கள், இயேசுவைத் தூதர் என்றே கூறுகின்றனர். எனில், இவர்களும் ஏகத்துவவாதிகள் தானே? உதாரணங்கள் இன்னும் பல சொல்லலாம். சுருக்கமாக, “ஏகத்துவம்-இறைவன் ஒருவனே” சிந்தனை கொண்டோர் எல்லோரையுமே முஸ்லிம்கள்தான் என்று நாம் சொல்வதற்கு இயலாது. அதனை அல்லாஹ்தான் தீர்மானிக்க வேண்டும். அடிப்படையில் இஸ்லாமிய கொள்கைக்கும் ஏகத்துவ கொள்கைக்கும் வித்தியாசம் உண்டு. அதனை இப்படி சொல்லலாம்: ஏகத்துவ கொள்கை இஸ்லாமிய கொள்கையின் உள்ளே அடங்கும். அதாவது, இஸ்லாமியக் கொள்கையின் ஒரு அம்சமே ஏகத்துவம். ஆனால், ஏகத்துவம் மட்டுமே முழுமையான இஸ்லாமியக் கொள்கையாக ஆகி விடாது.

அப்படி எனில், இஸ்லாமியக் கொள்கை தான் என்ன?

இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படை என்பது “ஏகத்துவம்+தூதுத்துவம்” ஆகிய இரண்டும் உள்ளடக்கியதாகும். “ஏகத்துவம் – லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை” – இதனை மட்டும் ஒருவர் உளமார முன் மொழிந்துவிட்டால் அவர் முஸ்லிமாகிவிடுவார் என்று நாம் ஒருபோதும் கூறுவதில்லை. “லா இலாஹ இல்லல்லாஹ் – ஏகத்துவம்” + “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – தூதுத்துவம்” ஆகிய இரண்டையும் சேர்த்து மொழிந்தால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாக முடியும். இதுதான் இஸ்லாமிய கொள்கை! ஒவ்வொரு நபிமாரின் சமூகமும் இறைவன் ஒருவன் என்று நம்புவதோடு, அவன் அனுப்பிய தூதர்தான் அந்த நபி என்பதையும் நம்பவேண்டும். அப்படி நம்பினாலே அவர்கள் முஸ்லிம்கள் ஆவார்கள்.

ஆக, இஸ்லாமியக் கொள்கை என்பது “ஏகத்துவம்+தூதுத்துவம்” ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

முன் சென்ற பத்தியில் குறிப்பிட்ட ஏகத்துவச் சிந்தனை கொண்ட சித்தர்கள், இஸ்லாத்தின் அடிப்படை கூறான “ரிஸாலத்” (தூதுத்துவம்) என்பதை ஏற்காதவர்கள். இவர்கள் தமது ஆன்மீகத் தேடுதல்+ மனக் கட்டுப்பாடு (தியானம்) மூலம் இறைவனை அறிந்துகொள்ளலாம், இறைவனை அடைந்து கொள்ள முடியும் (முக்தி நிலை) என்ற எண்ணங்களோடு ஓரிறைக் கொள்கையை நிலை நிறுத்தியுள்ளவர்களாவர்.

வரலாற்றை நோக்கினால், தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் தமக்கு நபித்துவம் கிடைக்கும் முன்னர் இந் நிலையிலேயே இருந்தார்கள். அதாவது, சமூகத்தின் சீரழிவான போக்கினைக் கண்டு மனம் நொந்து, நிச்சயமாக இறைவன் இத்தகைய மோசமான விசயங்களை ஏற்றுக்கொள்பவனாக இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையோடு தனிமையில் சென்று இறை எண்ணங்களில், தியானங்களில் அமர்ந்தார்கள்.

தொடர்ந்து நபியவர்களைத் தம் தூதுவராக தேர்வு செய்த ஏக இறைவனான அல்லாஹ், மக்களிடம் சரியான இறை கொள்கையை எடுத்துரைக்கும் பொறுப்பைக் கொடுத்தான். நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு விட்ட நிமிடத்திலிருந்து, “ஒரே இறைவன் – ஏகத்துவம்” என்பதோடு நில்லாமல், முஹம்மது(ஸல்) அவர்களே இறைத்தூதர், என்பதையும் சேர்த்து நம்பினால் மட்டுமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

அதே சமயம், ஒரே இறைவன் – ஏகத்துவக் கொள்கை கொண்ட ஒருவர், முஹம்மது(ஸல்) அவர்களை தூதரென ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி விடுவாரேயானால்…

Illegal expats win major concessions · A

Illegal expats win major concessions

·

Adel Fakeih
JEDDAH: ARAB NEWS

Saturday 11 May 2013

Last Update 11 May 2013 1:05 am

Hundreds of thousands of Haj and Umrah overstayers who arrived in Saudi Arabia before July 3, 2008, can work as domestic workers or for private companies as part of wide-ranging concessions announced yesterday by the ministries of Labor and Interior.
The concessions are perhaps the most far-reaching changes in the Kingdom’s labor law history that will now include allowing illegal workers to leave the country during the grace period without paying penalties. In addition, Huroob (runaway workers) will be allowed to return to their current sponsors or transfer to another.
In a joint statement, the ministries said any expatriate who wishes to leave the country during the three-month grace period, who had violated residence and labor regulations, will be exempted from all stipulated penalties.
The statement added that violators who leave the country voluntarily on a final exit visa during the grace period would be fingerprinted. However, this would not hinder them from returning to the Kingdom in future on a different work visa. This was a major worry for illegal workers and had stopped them from going home. Diplomats have welcomed the move.
Another major concession is that runaway workers charged with the Huroob violation, or those who stay in the country after the expiry of their residency and labor permits, are permitted to rectify their status either by returning to their current sponsor or transferring to another sponsor without the permission of the current sponsor. “Any dispute on rights and claims between such a worker and his previous sponsor will be settled by special legal departments,” the statement said.
Workers who entered the country illegally will not benefit from these concessions.
But the most significant concession will permit Haj and Umrah overstayers to obtain permission from the Passport Department and Labor Office to work as household workers or for private companies. Recruitment of such workers should not result in a company losing its green category status, and in the case of an employing family, it should not have more than four workers.
The ministries also called on all private establishments and expatriate workers to speed up their efforts to rectify their residential and labor status before July 3 when the grace period ends.
“Inspection campaigns will resume soon after the deadline to enforce labor and immigration laws on both employers and employees,” the joint statement said.
The statement also warned that anyone transporting or sheltering an expatriate violator would be punished with a two-year jail term and fined up to SR 100,000 for each violator. The illegal expatriate who does not leave the country will be jailed and fined.
Another condition of such transfers is that no more than four expatriate workers are allowed to transfer to a very small green firm with nine workers or less. The labor office will process their transfers.
Both domestic and non-domestic expatriate workers are entitled to change their professions without paying any fees during the grace period.
Runaway domestic workers or those who stay in the country after the expiry of their residence and labor permits are also permitted to rectify their status. They can go back to their existing sponsors if both parties agree. Or else he or she can get a transfer to any other sponsor’s domestic service with the help of the Passport Department; or any private firm may employ them without the permission of the current sponsor. The formalities would be processed at the labor office.
The conditions for the transfer of domestic workers specify that the new family where he or she wants to be transferred should not have more than four workers after the transfer.
It is also stipulated that a house worker’s transfer to a private firm should not result in it falling out of its green category. This condition has to…

Post Navigation

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers